நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 26, 2009

பசங்க எப்பவுமே இப்பிடித்தானா?

"ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து கொஞ்சமாய் மேகம் பிய்த்துக் கொண்டு வந்து ஷோ கேசில் வைத்திருக்கிறேன்......ஜன்னல் திறக்கும் போது ஐஸ் மழைக்கட்டி உள்ளே வந்து விழுந்ததாக்கும்"அம்மா திட்டினாங்க இல்லாட்டி உனக்கும் கொஞ்சம் மேகம் கொண்டு வந்திருப்பேன்"

சின்ன வயதில் ஏரோப்ளேனில் முதல்முறையாய் பயணம் செய்த மூர்த்தி சொன்ன அண்டப் புளுகு கேட்டு வாய் பிளந்து நின்றிருக்கிறேன்........

"எங்க மாமா செத்துப் போனாங்க .......இன்னிக்குக் காலைலேதான் வயித்து வலியாலெ......... வயிறு வெடிச்சு....இன்னிக்குக் காலையில் சாப்ட தோசை கூடத் தெரிஞ்சுது தெரியுமா"

அப்பிடீன்னு கூடப் படித்த சிவா அரை நாள் லீவ் ஏண்டா எடுத்தேன்னு கேட்டப்பொ சொன்ன ஆகாசப் புளுகுக்குக் கூட வாய் பிளந்துதான் போனேன்....

அப்புறம்...........

நான் எது சொன்னாலும்.........
"ஜஸ்ட் நானும் அதேதான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க மேடம்"
அப்படீன்னு ரீல் விடும் கோ-ஆர்டினேடர் ஷர்மாவின் புளுகு மூட்டைகளைப் பார்த்து அப்பப்போ வாய் பிளந்து கொண்டிருந்தாலும்.........

இது டாப்பு!

"117 டிக்ரீ காய்ச்சல் மேடம் "
நேற்று ஏண்டா வரல்லைன்னு +2 படிக்கும் அபிஷேக்கைக் கேட்டதுக்கு சொன்ன அணுகுண்டுப் புளுகுக்கு நான் "ஙே" வாகாமல் என்னா பண்ண?
????

54 comments:

மேவி... said...

ha ha ha ha

nanga ellam itharku melaiye poi solli irukkom....

gandhi death kkunnu... train puncher... food poison nnu niraiya solli irukkom

எம்.எம்.அப்துல்லா said...

ஹா...ஹா..ஹா....

117 டிகிரி இருந்திருக்கும்,அவங்க வீட்டு அடுப்புல :)

Rajeswari said...

ம்..நல்லா ஜாலியா லைப் போயிகிட்டு இருக்கு போல..என்ஜாய்...ஆனா அந்த 117 எங்கேயோ போயிடுச்சு போங்க!!

Unknown said...

இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்...

தமிழ் உதயம் said...

வேணாம்... அழுதுடுவேன்.

காமராஜ் said...

தோசைக்கு என்ன தொட்டுக்கிட்டாராம் சொல்லல.
117 டிகிரின்னா ஙே...வே தான்.
இறுக்கத்தை லகுவாக்குகிறது அருணா, இந்த இடுகை.

சந்தனமுல்லை said...

:))))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

அன்புடன் அருணா said...

என்னா சந்தனமுல்லை ,முத்துலெட்சுமி வெறும் :) தானா???

kiramatthu kallan said...

paditthen rasitthen printhen.....namma eppavume ippadithaan madam 117 super

அன்புடன் அருணா said...

ha ha ha ha
/nanga ellam itharku melaiye poi solli irukkom..../
அது தெரிஞ்சுதானேப்பா பதிவே!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
/117 டிகிரி இருந்திருக்கும்,அவங்க வீட்டு அடுப்புல :)/
இருந்திருக்கும்...இருந்திருக்கும்!

kiramatthu kallan said...

athukulla kandupudicheeteengala ha ha ha!!!
namma padikka pidkka so nice.......

அ.மு.செய்யது said...

ஙே !!!!!!!!!!!!!!!!!!!!

லெமூரியன்... said...

ஆயிரம்தான் நாங்க பொய் சொன்னாலும் ஙே இன்னு அழகா கண்ணா விரிச்சி கதை கேக்க புள்ளைங்க ரெடியா இருக்காங்களே....! அந்த ஒரே நம்பிக்கைலா தான் எங்க காலம் இன்னும் ஓடுது...!
:-) :-)

காற்றில் எந்தன் கீதம் said...

சூப்பர் டீச்சர்........பசங்க எப்பவுமே இப்பிடித்தான் டீச்சர்
:)))))))))) சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திரிச்சு.........
நாங்க அப்போ சொன்ன பொய்க்கு எல்லாம் நம்ம டீசெர்ஸ் எப்பிடி "ஙே" ஆகியிருப்பங்கன்னு நெனச்சா பாவமா இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

உங்களைப்போன்ற ஆசிரியை கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்ம்....

கண்மணி/kanmani said...

பசங்க மட்டும்தாங்க இப்படி..
பொண்ணுங்க நம்புற மாதிரி கண்ணீரோடு இல்ல கதை விடுங்க.:))

Thamira said...

ரொம்ப ரொம்ப சுவார்சியமான பொய்கள். :-))

பின்னோக்கி said...

நல்லா ஏமாத்தியிருக்காங்க உங்களை. சிரிப்பு

செ.சரவணக்குமார் said...

எது சொன்னாலும் நம்புற அப்பாவி டீச்சர்னு நெனச்சிருப்பாங்க.

//நாங்க அப்போ சொன்ன பொய்க்கு எல்லாம் நம்ம டீசெர்ஸ் எப்பிடி "ஙே" ஆகியிருப்பங்கன்னு நெனச்சா பாவமா இருக்கு//

pudugaithendral said...

:)))

Magia da Inês said...

Oi amiga,
Voltei porque fique com saudade do seu cantinho.
Sucesso sempre!!!
Beijinhos.
Itabira - Brasil

வல்லிசிம்ஹன் said...

பூங்கொத்துகள் அருணா.:)

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/ம்..நல்லா ஜாலியா லைப் போயிகிட்டு இருக்கு போல/
ஆமாமா...நீங்க எப்பிடி இருக்கீங்க!?

அன்புடன் அருணா said...

tamiluthayam said...
/வேணாம்... அழுதுடுவேன்/
அச்சோ இதுக்கெல்லாம் அழலாமா????

அன்புடன் அருணா said...

வாங்க கிராமத்துக் கள்ளன்....முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ இறுக்கத்தை லகுவாக்குகிறது அருணா, இந்த இடுகை./
அப்பபோ இறுக்கத்தை லகுவாக்கத்தான் இதுமாதிரி இடுகை காமராஜ்!

அன்புடன் அருணா said...

பேநா மூடி said...
/ இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்.../
அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா பேநா?????

லெமூரியன்... said...
/ஆயிரம்தான் நாங்க பொய் சொன்னாலும் ஙே இன்னு அழகா கண்ணா விரிச்சி கதை கேக்க புள்ளைங்க ரெடியா இருக்காங்களே/
அட...இது வேற நினைப்பு இருக்கா???

கனவுகள் said...

ஜால்ரா அடிக்கிற கோ -ஆர்டிநேட்டர் -ஐ முதல்ல டிஸ்மிஸ் பண்ணுங்க ......
பசங்க எப்பவுமே இப்படி தான் கண்டுக்காதீங்க......

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ உங்களைப்போன்ற ஆசிரியை கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும்ம்..../
ஆஹா...நன்றி வசந்த்!

சிநேகிதன் அக்பர் said...

ஏங்க இப்படியெல்லாமா பொய் சொல்வாங்க.

ஆனாலும் அந்த முதல் மேட்டர் ரொம்ப அழகு.

அன்புடன் அருணா said...

நன்றி காற்றில் எந்தன் கீதம் !

கண்மணி said...
/பசங்க மட்டும்தாங்க இப்படி..
பொண்ணுங்க நம்புற மாதிரி கண்ணீரோடு இல்ல கதை விடுங்க.:))/
அச்சோ பொண்ணுங்களுமா?

பின்னோக்கி said...
/நல்லா ஏமாத்தியிருக்காங்க உங்களை. /
அப்பப்போ ஏமாறுற மாதிரி நடிச்சுட்டும்தான் இருக்கோம் பின்னோக்கி!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ரொம்ப ரொம்ப சுவார்சியமான பொய்கள். :-))/
சுவாரஸ்யமா இருந்தா சரி!

அபி அப்பா said...

\\கண்மணி said...
/பசங்க மட்டும்தாங்க இப்படி..
பொண்ணுங்க நம்புற மாதிரி கண்ணீரோடு இல்ல கதை விடுங்க.:))/
அச்சோ பொண்ணுங்களுமா?\\

என்ன பொண்ணுங்களுமா! டீச்சரே சொன்னா சரியாத்தான் இருக்கும். எத்தனை கண்ணீர் காவியம் பார்த்திருப்பாங்க.

அடுத்து எங்க வீட்டுல கூஉட இன்னிக்கு 117 டிகிரி இருந்துச்சு. டீ இன்னும் கொஞ்சம் சூடா இர்ருந்தா 120க்கு போயிருக்கும்:-))

மாதேவி said...

ஆகா! காலம் ஏற ஏற டிகிரிகளும் ஏறிகிட்டே போகுது.

ரிஷபன் said...

ரெண்டு தெர்மா மீட்டர் வச்சு ஜுரம் பார்த்தாங்க தெரியுமா - இதுதான் எனக்கு என் நண்பன் சொன்ன முதல் 'ஆ' ! ஆனா இந்த மாதிரி சுவாரசியமா கேட்கலன்னா நமக்கே லைப்ல டேஸ்ட் இருக்காது இல்லியா?!

அன்புடன் அருணா said...

கனவுகள் said...
/ ஜால்ரா அடிக்கிற கோ -ஆர்டிநேட்டர் -ஐ முதல்ல டிஸ்மிஸ் பண்ணுங்க ....../
அச்சோ....வேலை நல்லா பார்ப்பாருங்க கனவுகள்!

அன்புடன் அருணா said...

செ.சரவணக்குமார் said...
/எது சொன்னாலும் நம்புற அப்பாவி டீச்சர்னு நெனச்சிருப்பாங்க. /
அப்படித்தான் எல்லாரையும் நினைககிறாங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணக்குமார் !

அக்பர் said.../ஏங்க இப்படியெல்லாமா பொய் சொல்வாங்க./
இதை விட அசத்துவாங்க!!முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்பர்!

அன்புடன் அருணா said...

அபி அப்பா said...
/ அடுத்து எங்க வீட்டுல கூஉட இன்னிக்கு 117 டிகிரி இருந்துச்சு. டீ இன்னும் கொஞ்சம் சூடா இர்ருந்தா 120க்கு போயிருக்கும்:-))/
அது சரி!
மாதேவி said.../ஆகா! காலம் ஏற ஏற டிகிரிகளும் ஏறிகிட்டே போகுது./
ரைட்டு!

அன்புடன் அருணா said...

ரிஷபன் said...
/ ஆனா இந்த மாதிரி சுவாரசியமா கேட்கலன்னா நமக்கே லைப்ல டேஸ்ட் இருக்காது இல்லியா?!/
உண்மைதான் ரிஷபன்!

ஆ.ஞானசேகரன் said...

நீங்க நெசமாவே நம்பிட்டீங்களா! ... நாங்க சும்மாதான் சொன்னோம்... நல்லாயிருக்குங்க

பூங்குன்றன்.வே said...

ரசிக்கும்படியான பதிவு.அந்த சிறுவர்கள் காலம் திரும்ப கிடைக்குமா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது.

அன்புடன் அருணா said...

நன்றி புதுகைத் தென்றல்

/Magia da Inês said...

Oi amiga,
Voltei porque fique com saudade do seu cantinho.
Sucesso sempre!!!
Beijinhos.
Itabira - Brasil/
ஏதோ நல்லது சொல்றீங்கன்னு தெரியுது....என்னான்னுதான் புரியலை!

வல்லிசிம்ஹன் said...
/பூங்கொத்துகள் அருணா.:)/
வாங்கீட்டேன் வல்லிம்மா!

Tech Shankar said...

தமிழ்நெஞ்சம்.ORG ஐ அதிக நேரம் பார்த்தவர்கள் உங்கள் இந்த தளத்திலிருந்து வந்த ரெஃபரலில் இருந்து வந்தவர்களே. ஒருவரே 77 பதிவுகளை 38 நிமிடங்கள் பார்த்துள்ளார். அது நீங்களா? மிக்க நன்றி.

வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்
த.நெ.

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
/நீங்க நெசமாவே நம்பிட்டீங்களா! ... நாங்க சும்மாதான் சொன்னோம்... /
ஆ...நாங்க கூட சும்மாதான் நம்பினோம்!

அன்புடன் அருணா said...

பூங்குன்றன்.வே said...
/ ரசிக்கும்படியான பதிவு.அந்த சிறுவர்கள் காலம் திரும்ப கிடைக்குமா என்கிற ஏக்கம் வரத்தான் செய்கிறது./
அதேதான் எனக்கும்!

thiyaa said...

அருமையான பதிவு
நல்ல பதிவுக்கு நன்றி

Karthik said...

ஹிஹி :)

+Ve அந்தோணி முத்து said...

ha! ha! ha!

sri said...

LOL :P Naanum epdi ellam poi kettu nambi emandhurukken, eppo kuda sila per solraanga hehe :P appodhaikku thalaia attitu keppen then I will think LOL

அன்புடன் அருணா said...

நன்றி தியாவின் பேனா
நன்றி Karthik

அன்புடன் அருணா said...

Thanx Antony!
Thanx Sri...Same here!

கல்யாணி சுரேஷ் said...

:)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா