நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, November 22, 2009

சுய விலாசமிட்ட தபால் கார்டு...........


எப்போதுமே எப்பவுமே தபால்காரர்களிடம் ஒரு தனி ஈர்ப்பு உண்டு எனக்கு.......புது தகவல் கொண்டு வருவதனாலா...அல்லது எதுவென்று தெரியாது....தினமும் எனக்கு ஏதாவது கடிதம் வரவேண்டும் என எதிர்பார்ப்பவள் நான்...

ஆனால் அந்த வயதில் அத்தனை கடிதம் போடும் நட்புகள் அறிமுகம் இல்லாததால்.............புத்தகங்கள் பத்திரிக்கையில் ஏதாவதில் சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்புங்கள் என்றால் போதும் அனுப்புவதுதான் முதல் வேலை.....அது தோட்டக் கலை கற்றுத் தருவதாயிருந்தாலும் சரி....ட்ரான்சிஸ்டர் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொள்ளச் சொல்லித் தருவதாயிருந்தாலும் சரி சுய விலாசமிட்ட தபால் கார்டு அனுப்பி விட்டுத்தான் மறுவேலை......

இப்பிடி அனுப்புவதோடு மட்டுமல்லாமல்....தினமும் பதில் வந்துவிட்டதா....என்று காத்துக் கிடப்பதும் உண்டு.........12:35க்கு தபால்காரர் வருவார் .....வந்துட்டாரா...வந்துட்டாரா...ன்னு தெருமுனையை எட்டி எட்டிப் பார்த்தே காலும் தரையும் தேய்ஞ்சுருக்கும்....இதுக்காக அம்மாகிட்டே வாங்காத திட்டு இல்லை....அப்படி இப்ப்படீன்னு வந்தவைகளை அது என்ன குப்பையாக இருந்தாலும் ஒண்ணு விடாமல் படித்து முடிப்பதுமில்லாமல்.....அதைப் பற்றி அடுத்தவங்களுக்கு சொல்லி அறுப்பதிலும் மன்னி நான்......

திருமணமாகி ஆஹமதாபாத் வந்த பின் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம் வந்து சேர எட்டு நாட்கள் ஆகும்.....எட்டாவது நாள் கடிதம் வரல்லைன்னா அவ்வ்ளோதான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கொண்டாடீருவேன்.......
இப்போ தபால்காரரை தீபாவளி ஹோலிக்குப் பார்க்கிறதோட சரி..............

அதே தான்....அந்த எதிர்பார்ப்புதான்....இந்த வலைப்பூவை நான் விரும்புவதற்கு முக்கிய காரணமாகக் கூட இருக்கலாம்.........இப்பவும் அதே ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது......

இப்பவும் அதைத்தானங்க பண்றேன்....சுய விலாசமிட்ட தபால் கார்டு........பதிவு..... போட்டுட்டு உங்க கமென்ட் .....தபால்காரர் எப்போ வரும்னு காத்துக்கிட்டே இருக்கிறதுதானே வேலை!.......அப்படியும் இப்படியுமா 200 சுய விலாசமிட்ட தபால் கார்டு போட்டாச்சு ...போட்டாச்சு!!!!!!

51 comments:

பா.ராஜாராம் said...

நெகிழ்வான பதிவு அருணா...உண்மையில் எவ்வளவு காலங்கள் போய்விட்டது இப்படி.

பிரியமுடன்...வசந்த் said...
This comment has been removed by the author.
பிரியமுடன்...வசந்த் said...

200 சுய விலாச தபாலா?

விரைவில் 300,400 அனுப்ப வாழ்த்துக்கள் பிரின்ஸ்

ராமலக்ஷ்மி said...

ஆகா, இருநூறுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அருணா. அதை நீங்க சொல்லியிருக்கும் விதம் வெகு அருமை!

R.Gopi said...

பழைய நாட்களை மீண்டும் ரீவைண்ட வைத்ததற்காக உங்களுக்கு ஒரு “ஸ்பெஷல் ஷொட்டு”...

இப்போல்லாம், யார் லெட்டர் போடறாங்க?? எல்லாம் ஈ-மெயில் டெலிவரிதான்...

நினைவுகளை கிளறிய பதிவு... கூடவே ஒரு அட்டகாசமான படம்...

பிடியுங்கள் பூங்கொத்து அருணா மேடம்....

இராயர் அமிர்தலிங்கம் said...

உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.
ஈ மெயில்,மொபைல் போனில் பேசுவதை விட கடித பரிமாற்றம் ஒரு வகையான அனுபவம் தான்.

புதுகைத் தென்றல் said...

200க்கு வாழ்த்துக்கள். 200ஆவது பதிவா நீங்க எடுத்துக்கிட்ட சப்ஜெக்ட் சிம்பிளி சூப்பர் அருணா.

வி.என்.தங்கமணி, said...

அடக்கம் வேண்டுவதுதான் அதற்காக 200 வது பதிவை இவ்வளவு அடக்கமாகவா சொல்லுவது.
அருமைங்க... பதிவுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.

savitha said...

First, CONGRATULATIONS!!

Aana, intha post manku wait pannina days-those are still memorable!!

ஆ.ஞானசேகரன் said...

//அப்படியும் இப்படியுமா 200 சுய விலாசமிட்ட தபால் கார்டு போட்டாச்சு ...போட்டாச்சு!!!!!!//

வாழ்த்துகள் அருணா,... கலக்குங்கோ! இன்னும் கலக்கலாம்

ஹுஸைனம்மா said...

அம்மா, போஸ்ட்!! ;-)

வாழ்த்துக்கள் அருணா!! இருநூறாவது பதிவை அழகாகப் பதிந்துள்ளீர்கள். அந்தக் காத்திருத்தலில்தான் என்ன சுகம்!!

S.A. நவாஸுதீன் said...

200-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஒரு ஸ்பெசல் பூங்கொத்தும்

அ.மு.செய்யது said...

200க்கு வாழ்த்துக்கள் அக்கா !!!

நெருங்கிய உறவினர்களின்,நட்புக்களின் அன்பைச் சுமந்து வரும் கடிதங்களை கொண்டு வரும் தபால்காரர்கள் இப்போதும் வெறும்
வங்கி கிரெடிட் கார்டு,டெலிபோன் பில்,பேங்க் ஸ்டேட்மென்ட்
என்று வெத்து கடிதங்களை கொண்டு வர ஆரம்பித்து விட்டதால்
அந்த சுவாரஸியமெல்லாம் மலையேறி விட்டது.

நெகிழ வைத்த நல்ல இடுகைக்கு வாழ்த்துகள் !!! பூங்கொத்து !!!

பேநா மூடி said...

ஒரு அழகான விஷயத்தை மிக சாதரணமாக சொல்லிவிட்டிர்கள்.. டிராவிட் போல் 11000 அடிக்க வாழ்த்துக்கள்...

கிரி said...

200 க்கு வாழ்த்துக்கள் அருணா, நீங்க முதலில் கூறியதை வைத்து நான் பின்னூட்டத்தை உதாரணம் காட்டலாம் என்று நினைத்தால் கடைசியில் நீங்களே கூறி விட்டீர்கள் :-)

சத்ரியன் said...

//இப்பவும் அதைத்தானங்க பண்றேன்....சுய விலாசமிட்ட தபால் கார்டு........பதிவு..... போட்டுட்டு உங்க கமென்ட் .....தபால்காரர் எப்போ வரும்னு காத்துக்கிட்டே இருக்கிறதுதானே வேலை!.......அப்படியும் இப்படியுமா 200 சுய விலாசமிட்ட தபால் கார்டு போட்டாச்சு ...போட்டாச்சு!!!!!!//

அருணா,

அப்பவே ஆரம்பிச்சாச்சா...? அப்ப சர்தான். நடத்துங்க..!
(அறுப்பதில் மன்னியாவீங்கன்னு தெரிஞ்சே...அருணா-'ன்னு பேர் வெச்சாங்களோ?)

மணிநரேன் said...

200-க்கு வாழ்த்துக்கள்.
அதனை கூறிய விதம் 200-வது பதிவை மேலும் அழகுபடுத்திவிட்டது...:)

அன்புடன் அருணா said...

நன்றி ராஜாராம்,
நன்றி ராமலக்ஷ்மி!

Srivats said...

Congradulations!! :) 200 !! ovvoru postum muthu mutha! :) attagasma erundhuchu, ungalukku ezhudina thabal ellam ungalekkey bathiram vandhu sera vazthukal :)

அன்புடன் அருணா said...

வாழ்த்துககு நன்றி வசந்த்!
வாழ்த்துககு நன்றி ஞானசேகரன்!
வாழ்த்துககு நன்றி தென்றல்!

காமராஜ் said...

அன்புச் சகோதரி அருணா.
இந்த 200 வது பதிவு பாரா சொன்னது போல மிகமிக நெகிழ்வு.
இந்த எதிர்பார்ப்பும், ஆதரவும் புழங்கும் வலைச் சுற்றம் அலாதி அருணா.
நாங்கள்ளாம் இருக்கோம்ல. வாழ்த்துக்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

200 க்கு பூங்கொத்தும் வாழ்த்துக்களும் . :)

அன்புடன் அருணா said...

R.Gopi said...

/ இப்போல்லாம், யார் லெட்டர் போடறாங்க?? /
அதே கவலைதான் எனக்கு....

/பிடியுங்கள் பூங்கொத்து அருணா மேடம்..../
வாங்கீட்டேன்!நன்றி!

அன்புடன் அருணா said...

இராயர் அமிர்தலிங்கம் said..
/ ஈ மெயில்,மொபைல் போனில் பேசுவதை விட கடித பரிமாற்றம் ஒரு வகையான அனுபவம் தான்./
ஆமா ஒரு நல்ல அனுபவம்!

அன்புடன் அருணா said...

savitha said...
/First, CONGRATULATIONS!!/
thanx Savitha

/ Aana, intha post manku wait pannina days-those are still memorable!!/
right savitha!

கலகலப்ரியா said...

intha vishayam antha postmen ellaarukkum theriyumaa.. =))...

kaditham kanavaa pochchi... ini museum lathaan parkka mudiyum handwriting ellam..

லெமூரியன்... said...

இரட்டை சதம் அடித்த அருணாவிற்கு வாழ்த்துக்கள்.!

Maddy said...

இரு நூற்றில் இன்றுவரை எத்தனை வாசித்தேன் என்று தெரியவில்லை. முதல் முதலில் உங்கள் குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்று நினைக்கிறேன். அது இன்று வரை தொடர்கிறது.

தபால் கொண்டு வராவிட்டாலும் வீதி வழி போகும் தபால் காரன் போல. தொடரட்டும் உங்கள் சுய விலாசமிட்ட தபால்கள்

அன்புடன் அருணா said...

வி.என்.தங்கமணி, said...
/அடக்கம் வேண்டுவதுதான் அதற்காக 200 வது பதிவை இவ்வளவு அடக்கமாகவா சொல்லுவது./
அடடே இதுவா அடக்கம்?! பதிவே போட்டாச்சு!

அன்புடன் அருணா said...

நன்றி கிரி,மணி நரேன்,ஹுஸைனம்மா,நவாசுதீன்

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன்....நிஜம்தான் வெற்றுக் காகிதங்கள் சுவாரசியங்கள் குறைந்துவிட்டதுதான்...அ.மு.செய்யது .

அன்புடன் அருணா said...

பேநா மூடி said...
/டிராவிட் போல் 11000 அடிக்க வாழ்த்துக்கள்.../
ஆஹா...11000மா?????..நன்றி பேனாமூடி!

காற்றில் எந்தன் கீதம் said...

பள்ளிக்காலங்களை நினைவு படுத்தினிர்கள் நன்றி டீச்சர்
பிடியுங்கள் பூங்கொத்து

அன்புடன் அருணா said...

Thanx Sri for those nice wishes!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/நாங்கள்ளாம் இருக்கோம்ல. /
அந்த தைரியத்துலேதானே எழுதறது!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi !
லெமூரியன்... !

நாமக்கல் சிபி said...

:)

என்னோட லெட்டர் வந்துடுச்சா?

People call me "Paul"... said...

வாழ்த்துக்கள் அருணா.. இருநூறு என்பது இரண்டாயிரம், இருபதாயிரமென்று நீண்டுக் கொண்டே போகட்டும்!!

பேனாமுனை said...

இரட்டை சதம் அடித்த அருணாவிற்கு வாழ்த்துக்கள்.!

மணிப்பக்கம் said...

நைஸ், :)

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
/(அறுப்பதில் மன்னியாவீங்கன்னு தெரிஞ்சே...அருணா-'ன்னு பேர் வெச்சாங்களோ?)/
அடப்பாவமே 200ம் அறுவையா?

அன்புடன் அருணா said...

கலகலப்ரியா said...
/intha vishayam antha postmen ellaarukkum theriyumaa.. =))... /
அடடா...இதை விசாரிக்காம விட்டுட்டேனே கலகலப்ரியா!

அன்புடன் அருணா said...

Maddy said...
/ முதல் முதலில் உங்கள் குழந்தைக்கு வாழ்த்து சொல்ல வந்தேன் என்று நினைக்கிறேன். அது இன்று வரை தொடர்கிறது./
தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி Maddy!

அன்புடன் அருணா said...

வாங்க காற்றில் எந்தன் கீதம் !நன்றி முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

அன்புடன் அருணா said...

நாமக்கல் சிபி said...
/:)என்னோட லெட்டர் வந்துடுச்சா?/
அட இதெப்ப சிபி???!!!

அன்புடன் அருணா said...

அழகான வாழ்த்துக்கு நன்றி People call me "Paul"!
நன்றி மணிப்பக்கம் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்!
நன்றி பேனாமுனை!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழகழகான உணர்வுகளை சின்னச்சின்ன பதிவுகளில் அழகாக பதிகிறீர்கள்.! 200 க்கு வாழ்த்துகள்.!

சி. கருணாகரசு said...

தபால் எழுதுவதும்.... அதன் வருகைக்கு காத்திருத்தலும் ஒரு சுகம்.
எவ்வளவு நவீனங்கள் நம்மை சூழ்ந்தாலும்.... கடிதத்திலிருந்த உயிரோட்டம் எதிலும் இல்லைங்க .....
பழமைக்கு வண்ணம் ஏற்றிய உங்களுக்கு வாழ்த்துகள்.

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/அழகழகான உணர்வுகளை சின்னச்சின்ன பதிவுகளில் அழகாக பதிகிறீர்கள்./
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

அன்புடன் அருணா said...

சி. கருணாகரசு said...
/எவ்வளவு நவீனங்கள் நம்மை சூழ்ந்தாலும்.... கடிதத்திலிருந்த உயிரோட்டம் எதிலும் இல்லைங்க ...../
உண்மைதாங்க!

Princess said...

தபாலுக்குரிய வசீகரம் என்றும் குறையாது..
தபாலுக்கான வழிகள் மாறலாம் அதன் நோக்கம் மாறாது, அது அன்பை சொல்லும் தொழில் அல்லவா!

-பதுமை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா