நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 10, 2009

மழை பொழிந்தது இங்கே!நவீன விருட்சம் அது
தலைகீழாய் முளைத்திருந்தது....
பூவும் இலைகளும் வானம் நோக்கி
உதிர்ந்து வீழ்ந்தது..........
பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!

33 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா. படம் எங்கிருந்து எடுக்கிறீர்கள் பொருத்தமாய்? வழக்கம் போல அதுவும் அசத்துகிறது.

S.A. நவாஸுதீன் said...

//பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே!//

ரொம்ப நல்லா இருக்குங்க.

KParthasarathi said...

A very good imagination.
Ingayaum mazhai kottugiradhu

R.Gopi said...

பெய்து வரும் மழையை தான் நாம் பிடித்து வைப்பதில்லை... பின்னாளில் தண்ணீருக்க்காக அலைகிறோம்...

குறைந்த பட்சம், பறந்து வரும் இந்த அட்டகாசமான பூக்களையாவது பிடித்து, ஒரு கோர்வையாக்கி வைத்து கொள்கிறேன்...

நல்லா இருக்கு அருணா...

இந்த பூக்களை பிடித்தே, ஒரு பூங்கொத்து தயாராக்கி, உங்களுக்கு அளிக்கலாம் என்றிருக்கிறேன்...

ஜீவன் said...

பூங்கொத்து...!

அனுபவம் said...

அருமை!

பா.ராஜாராம் said...

மிக அருமை அருணா!

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கவிதை அருணா madam. ஒரு மழைக் sorry பூங்கொத்து.

ஆ.ஞானசேகரன் said...

படமும் வரிகளும் பேசிக்கொள்கின்றது... நல்லாயிருக்குங்க அருணா

மணி said...

பூக்களைப் பிடிக்கமாட்டேன்
என்று கைவிரித்தது வானம் ............
மழை பொழிந்தது இங்கே

அருமையான வரிகள் மழைகாலத்திற்கேற்ற

காமராஜ் said...

நல்ல கவிதை மேடம்- தலைகீழ் விருட்சம்- அசத்தல் உவமை.

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி S.A. நவாஸுதீன்!
நன்றி அனுபவம்!
நன்றி ராஜாராம்!

அன்புடன் அருணா said...

அழகான பூங்கொத்தை வாங்கிக் கொண்டேன் கோபி!

Srivats said...
This comment has been removed by the author.
Srivats said...

Arumayana kavidhai, adhukku sariyana padam :) romba nalla erukku , Mahai kalam kavidhai ezudha etha kalam dhaan! :)

SanjaiGandhi™ said...

பின் நவீனத்துவ சூறாவளி..!

தாரணி பிரியா said...

சூப்பர் இனி மழை வரும் போது எல்லாம் தலைகீழ் விருட்சம் அப்படின்ற வார்த்தையும் ஞாபகம் வரும் அருணா மேடம்

சந்ரு said...

மிக, மிக அருமை. நல்ல வரிகள்

க.பாலாசி said...

மழைச்சாரலான கவிதையை ரசித்தேன்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்தை வாங்கிக் கொண்டேன் ஜீவன்!

அன்புடன் அருணா said...

கல்யாணி சுரேஷ் said...
/ ஒரு மழைக் sorry பூங்கொத்து./
மழைக் கொத்து கூட எனக்குப் பிடிக்கும் கல்யாணி!

அன்புடன் அருணா said...

நன்றி ஞானசேகரன்,மணி

அன்புடன் அருணா said...

நன்றி காமராஜ்,சந்ரு,பாலாசி

சுந்தரா said...

சின்னதாய்ச் சாரல் போல அழகான கவிதை!

புலவன் புலிகேசி said...

என்னே உங்கள் சிந்தனை...அருமை அருணா

Princess said...

அழகா இருக்கு கவிதை வரிகளும்
கற்பனை நயமும்

-பதுமை.

Karthik said...

பின்நவீனத்துவமா மேம்? ஆவ்வ்.. :)

அன்புடன் அருணா said...

Srivats said...
/Mahai kalam kavidhai ezudha etha kalam dhaan! :)/
அதை அனுபவித்ததின் விளைவுதான் ஸ்ரீ!

அன்புடன் அருணா said...

SanjaiGandhi™ said...
/ பின் நவீனத்துவ சூறாவளி..!/
அட.பின்னுறீங்கப்பா பின்னூட்டத்துலே கூட!

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
/சூப்பர் இனி மழை வரும் போது எல்லாம் தலைகீழ் விருட்சம் அப்படின்ற வார்த்தையும் ஞாபகம் வரும் அருணா மேடம்/
அச்சோ ...அவ்வளவா நல்லாயிருக்கு?????

அன்புடன் அருணா said...

நன்றி..சுந்தரா
நன்றி..புலவன் புலிகேசி
நன்றி..Princess

அன்புடன் அருணா said...

அச்சச்சோ அதெல்லாம் நமக்கு வராதுப்பா கார்த்திக்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா