நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, November 16, 2009

காணும் காட்சியில் தெய்வம் கண்டேன்!

மழை ஊரை உருட்டித் தள்ளியது. பனி உடம்பை உருக்கியது. போயே ஆகவேண்டுமா? காலையிலிருந்து வேலை கையைக் காலை
அசத்தியது...அடாது மழை பெய்தாலும் போயே ஆகவேண்டும் மனம் அடம்
பிடித்தது. அப்படித்தான் போனேன்.
அது ஒரு கல்வியாளர்களுக்கான தனிப்பட்ட அழைப்பிதழ்.
Ability unlimited......differently abled. அப்படித்தான் சொல்லிக் கொண்டார்கள்..


ஷோ பார்த்து முடிந்ததும் ...........
நான் தூசியானேன்
இதயம் காலியானது.
சக்கர நாற்காலியில்
ராமாயணம்
மஹாபாரதம்
பரதநாட்டியம்
கதகளி,மார்ஷல் ஆர்ட்
யோகா சூஃபி ....என்று.........

அவர்கள் ஆடினார்கள்
அவர்கள் ஓடினார்கள்
அவர்கள் பாடினார்கள்
அவர்கள் சண்டையிட்டார்கள்
அவர்கள் நடித்தார்கள்
அந்த அரங்கம் அமைதியில்
அலறியது..................
அத்தனை விழிகளும்
குளித்திருந்தன..............
யாருக்கும் யாரிடமும்
பேச எதுவுமில்லை.........
தெரிந்தவர்களுடன் புன்னகை
கூட பாரமாகிப் போனது...

MAGICAL MOMENT!!

உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் .........

இந்தக் கடவுளின் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்த
குரு சையது சலாலுதீன் பாஷாவுக்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்........
இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களைப் பார்க்க..............இங்கே

50 comments:

சந்தனமுல்லை said...

அருமை!! படங்களை ரசித்தேன்!!

வி.என்.தங்கமணி, said...

///உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் .........///
உண்மையான வரிகள். உணர்வுகளை ஒருபோதும் எழுத்துக்கள் தொட்டுவிட முடியாது.....
பதிவுக்கு நன்றி அம்மா.
அன்புடன் வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com

புதுகைத் தென்றல் said...

differently abled//

ஒரு கதவை சாற்றிய இறைவன் எப்போதும் மறுகதவை திறந்து வைத்து சில வரங்களையும் கொடுப்பான்.

அருமையான பகிர்வுக்கு நன்றி அருணா. படங்கள் பார்த்து வியப்பாத்தான் இருந்தது.

Savitha said...

Arumaiyana padangal,Aruna!!Siram thaalthukiraen,ivarkalukum,ivarkaludaiya guruvukkum

Rajeswari said...

really superb!!!

சங்கர் said...

இரண்டு நிமிடங்கள் பார்த்த என்னிடமே வார்த்தை இல்லை எனும்போது, நிகழ்வு முழுதும் நேரில் பார்த்த உங்கள் உணர்வுகளை எழுத்தில் சொல்ல இயலாதுதான்

S.A. நவாஸுதீன் said...

//அந்த அரங்கம் அமைதியில்
அலறியது..................//

நல்ல பகிர்வு. நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

அருமையக்கா! அருமை !

கோபிநாத் said...

அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ;)

ஹுஸைனம்மா said...

மனது கனத்தது. நன்றி பகிர்வுக்கு.

அன்புடன் அருணா said...

நன்றி சந்தன்முல்லை!

rajan RADHAMANALAN said...

உங்களுக்கு ஆட்டோ இல்ல .... லாரிலதான் அனுப்ப போறோம் !

பூங்கொத்தை ~!

ஹேமா said...

அருணா,அழகான பகிர்வு.அருமையான உணர்வு.

Srivats said...

Romba nalla vishayam, I wish i could attend such show. arumaya ezudhi erukeenga, ungaloda wordsla power erukku ! neenga endha maari samugam sambandha patta vishayangal neraya ezudhunga. Thanks a lot for the pics and videos! its fantastic show, god bless them!

காமராஜ் said...

ரொம்ப அபாரம் அருணா. பரவசமளிக்கிறது உங்கள் எழுத்து. கவனிகப்படாதவற்றைக் கவனப்படுத்துகிறபோது எல்லாவற்றிற்கும் மேல் போய் நிற்கிறீகள். தெருவில் தபலா வைத்துப்பாடுகிறவர்களே உறுக்குகிறபோது ? நிழற்படங்கள் அசைகிறது.

அன்புடன் அருணா said...

நன்றி தங்கமணி!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
/ ஒரு கதவை சாற்றிய இறைவன் எப்போதும் மறுகதவை திறந்து வைத்து சில வரங்களையும் கொடுப்பான்./
என் எண்ணமும் அதுவே!

அன்புடன் அருணா said...

நன்றி சவிதா,ராஜேஸ்வரி!

R.Gopi said...

அருமையான அனுபவம் கிடைத்திருக்கிறது உங்களுக்கு...

அதை எங்களுடன் சிரத்தையாக ப்கிர்ந்து கொண்டமைக்கு இதோ பிடியுங்கள் அருணா மேடம் ஒரு பூக்கூடை...

அன்புடன் அருணா said...

நன்றி நவாஸுதீன்,அப்துல்லா!

அன்புடன் அருணா said...

நன்றி ஹுஸைனம்மா...முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

அன்புடன் அருணா said...

லாரி நிறைய பூங்கொத்தை வாங்கிவிட்டேன் ராஜாராதா...எங்கே வைப்பதென்றுதான் தெரியவில்லை...நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி ஹேமா!

ஆ.ஞானசேகரன் said...

நன்றிங்க அருணா,... அருமையான பகிர்வு

ஆ.ஞானசேகரன் said...

காணொளி நல்ல பகிர்வு

கல்யாணி சுரேஷ் said...

//அந்த அரங்கம் அமைதியில்
அலறியது..................//

அருமை. நல்ல பகிர்வுக்கு பூங்கொத்து ஆயிரம்.

பேநா மூடி said...

உங்கள் வார்த்தைகளால் விளக்க முடியாததை படங்கள் விளக்கிவிட்டது...

பாராட்டுகள்...

அன்புடன் அருணா said...

Srivats said...
/ ungaloda wordsla power erukku ! neenga endha maari samugam sambandha patta vishayangal neraya ezudhunga. /
முயற்சி அதை நோக்கித்தான் ஸ்ரீ......ஆனால் இனிப்புத் தோல் இல்லாத மாத்திரைகளை மக்கள் விரும்புவதில்லையே ......அதனால் அப்பப்போ lighter mood posts!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ரொம்ப அபாரம் அருணா. பரவசமளிக்கிறது உங்கள் எழுத்து. /
இந்த மாதிரிப் பின்னூட்டங்கள் boost மாதிரி!
BOOST IS THE SECRET OF MY ENERGY!

அன்புடன் அருணா said...

அடடா....பூக்கூடையா.....வாங்கிட்டேன் கோபி!

rajan RADHAMANALAN said...

அதுக்கென்ன லாரியோடவே வெச்சுக்குங்க !

அன்புடன் அருணா said...

நன்றி ஞானசேகரன்.

அன்புடன் அருணா said...

ஆயிரம் பூங்கொத்துக்கு கோடி நன்றி கல்யாணி.

Viswanathan B said...

என் அன்பான அம்மா,

படித்தேன், பார்த்தேன். சாய்ராம்..............

மிக நல்ல, பயன்மிக்க பதிவு. இது போன்ற பதிவுகள் இடுகையில், இன்று போன்றே என்றும் மறக்காமல் சொல்லவும்.

love all serve all

மிக்க பணிவன்புடன்
விஸ்வநாதன்

"Do all the good you can, By all the means you can, In all the ways you can, In all the places you can, At all the times you can, To all the people you can, As long as ever you can" - John Wesley

ராமலக்ஷ்மி said...

//
உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் //

உண்மைதான் அருணா. இந்த அற்புதமான இடுகைக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
/அதுக்கென்ன லாரியோடவே வெச்சுக்குங்க !/
அச்சோ லாரியோடவா?????இப்போ லாரியை எங்க வைக்க ராஜன்ராதா??????????

அன்புடன் அருணா said...

Viswanathan B said...
என் அன்பான அம்மா,
/மிக நல்ல, பயன்மிக்க பதிவு. இது போன்ற பதிவுகள் இடுகையில், இன்று போன்றே என்றும் மறக்காமல் சொல்லவும். /
ஆஹா....விஷியிடமிருந்து பின்னூட்டமா?
கண்டிப்பா சொல்றேம்பா!

சே.குமார் said...

//உணர்வுகளை எழுத்துக்கள்
விவரிக்க முடியாது என்பதை
முதன்முறையாக ஒத்துக் கொள்கிறேன் //

உணர்வுப்பூர்வமான எழுத்துக்கள்

anto said...

அருணா மேடம்!

உங்கள் உன்னதமான பகிர்வுக்கு நன்றி!

People call me "Paul"... said...

அதுவென்னவோ உண்மை தான்.. எல்லா உணர்வுகளையும் எழுத்துக்களில் பதிப்பதென்பது சில நேரங்களில் இயலாத காரியமே.. அத்தகைய உணர்வுகள் பலவற்றை சந்தித்தவன் என்பதால் இந்த பதிவில் உள்ள உணர்வுகளை என்னால் எழுதப்படாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது..

rajan RADHAMANALAN said...

லாரி சினிமா நடிகை சொப்பன சுந்தரியோடது !

அத எங்க வெக்கறது யாரு வெக்கறதுன்னு நான் சொல்ல முடியாதுங்க !

பூவை எடுத்துட்டு லாரிய கவுண்டமணி வீட்டுக்கு அனுப்பிடுங்க .... மத்தத அவர் பாத்துப்பார்

அன்புடன் அருணா said...

நன்றி அன்டோ!

அன்புடன் அருணா said...

நன்றி குமார்...முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

புரிதலுக்கு நன்றி People call me "Paul"...

இரசிகை said...

!!.....

லதானந்த் said...

நல்லதொரு பதிவு!
“அரங்கம் அமைதியில் அலறியது” - எப்போதாவதுதான் இது போன்ற சொல்லாடல்களைப் படிக்க முடிகிறது! வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி.!

அன்புடன் அருணா said...

நன்றி ரசிகை!!

அன்புடன் அருணா said...

வாங்க லதானந்த்...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

யாழினி said...

அருமை அருணா! சொல்லுவதற்கு வார்த்தைகளே இல்லை...!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா