நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 12, 2009

சூரியன் குடிக்கலாம் வாங்க!

கொஞ்சம் சூரியன் குடிக்க
கைகளை நீட்டிக்
கையில் எடுக்கக்
கையிடுக்கில் நிற்காமல்
நழுவி ஓடியது சூரியன்.........

வெயில் மினு மினுக்கும்
ஆற்று நீரைச் சொன்னேன்!

35 comments:

V.N.Thangamani said...

அருமையான கவிதைகள் அருணா. பிடியுங்கள் பூங்கொத்தை.

சந்தனமுல்லை said...

அசத்துங்க மேடம்!! :))

+Ve Anthony Muthu said...

மிக மிக அழகான அற்புதமான, அருமையான கவிதை. வாழ்த்துக்கள்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதை

S.A. நவாஸுதீன் said...

அருமை, பூங்கொத்து

சத்ரியன் said...

கவிதை....!

Princess said...

அழகு சூரியன் :D

-பதுமை.

எம்.எம்.அப்துல்லா said...

ஹை :)

R.Gopi said...

என்னடா தலைப்பே ஒரு வித்தியாசமா இருக்கேன்னு வந்து படிச்சேன்...

பலே கற்பனை...

சும்மாவா சொன்னார்கள்... கவிஞர்களின் கற்பனைக்கு எல்லை ஏதென்று??

பிடியுங்கள் ஒரு பூங்கொத்து... அருணா மேடம்...

ராமலக்ஷ்மி said...

சூரியனைக் குடிக்கிறதா என வந்தேன்:)! கற்பனை அழகு அருணா.

Jawahar said...

அந்த சூரியனைத்தான் கையில புடிச்சீங்க, உங்க ராசாவுக்காக! புகைப்படம் அற்புதம்.

http://kgjawarlal.wordpress.com

தமிழ் அமுதன் said...

சூரிய நீர் ...! படம் அருமை ..!

KParthasarathi said...

Nalla karpanai, azhagaana sollatral

கல்யாணி சுரேஷ் said...

பூங்கொத்து. :)

ராசு said...

Nice kavitahi

http://surakovai.blogspot.com

காமராஜ் said...

சரி குடிக்கலாம்,
ஒரு குவளைக்கு
ஒரு பூங்கொத்து
மட்டும் தான்.
அதுக்குமேல வேண்ணா
ஒரு வாழ்த்து தரலாம்.

லெமூரியன்... said...

அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்செங்க்ற மாதிரி நீங்க சூரியன புடிச்சீங்களா? :-)

sri said...

soaking up to the sun nnu solreengalonnu nenachen :) , plus andha nilavathaan naan kaila pidichen..paatu dhaan gyaabagam varudhu

ப்ரியமுடன் வசந்த் said...

சூரிய ஒளி கையிடுக்கில் தெரியும் இளஞ்சிவப்பு நிறம் ஞாபகத்தில் வந்து போனது...

கவித கவித....

தமயந்தி said...

க‌டைசி 2 வ‌ரிக‌ள் தேவையில்லையோ அருணா..

Karthik said...

கலக்கல்! :)

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வி.என்.தங்கமணி,

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை
நன்றி +VE Anthony Muthu
நன்றி T.V.Radhakrishnan
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி சத்ரியன்
நன்றி பதுமை.

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
/ஹை :)/
ஹை அப்துல்லா!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன் கோபி!

அன்புடன் அருணா said...

நன்றி ஜவஹர்,ராமலக்ஷ்மி,Parthasarathi sir,

balavasakan said...

அருமை........

பா.ராஜாராம் said...

அருமை அருணா!அருமையான பூங்கொத்தும்!

ஆ.ஞானசேகரன் said...

படமும். வரிகளும் அழகு

அன்புடன் அருணா said...

வாங்க லெமூரியன்!நன்றி!

அன்புடன் அருணா said...

Srivats said...
/ plus andha nilavathaan naan kaila pidichen..paatu dhaan gyaabagam varudhu/
எல்லாருக்கு் அந்தப் பாட்டு நினைவுக்கு வந்துருக்கு!எனக்கு எழுதும்போது வர்லியே!

அன்புடன் அருணா said...

வாங்க வசந்த்!
நன்றி கார்த்திக்!
நன்றி Balavasakan!
நன்றி ஆ.ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

தமயந்தி said...
/ க‌டைசி 2 வ‌ரிக‌ள் தேவையில்லையோ அருணா../
நானும் கூட அப்பிடியே நினைத்தேன் தமயந்தி!

(Mis)Chief Editor said...

தங்களது 'சூரிய' கவிதையும், 'மழை' கவிதையும்
தண்ணீரின் பிம்பங்கள் வைத்தே எழுதியதைக்
காண நேர்ந்தபோது 'கற்பனை வறட்சி'யோ
என நினைக்கத் தூண்டியது!

-பருப்பு ஆசிரியர்

அன்புடன் அருணா said...

(Mis)Chief Editor said...
/தங்களது 'சூரிய' கவிதையும், 'மழை' கவிதையும்
தண்ணீரின் பிம்பங்கள் வைத்தே எழுதியதைக்
காண நேர்ந்தபோது 'கற்பனை வறட்சி'யோ
என நினைக்கத் தூண்டியது!
-பருப்பு ஆசிரியர்/
தாங்கள் நினைத்தது 100% உண்மை...பருப்பு ஆசிரியரே!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா