நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, October 28, 2009

நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம்........

"குட்டிம்மா...பார்த்து ஏறு"
"அம்மா....இதைப் பிடிங்க"
"ஏங்க இதைக் கொஞ்சம் பிடிங்க நான் குட்டிம்மாவை ஏற்றி விடுகிறேன்.."
மூவருமாய் ரயிலில் தங்கள் இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.
குட்டிம்மாவுக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கலாம்.. துரு துருவென்றிருந்தது.
கண்கள் நிலவு போல பளபளத்தது.அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே மனதுக்குள் மழையடிப்பது போலிருந்தது.
குட்டிம்மா "தண்ணீ" தண்ணீ " என்று கத்தியது.
"என்னங்க தண்ணீர் பாட்டில் வாங்கிட்டு வர்றீங்களா?"
"இல்லம்மா சிக்னல் போட்டாச்சு.....கொஞ்ச நேரத்திலே ட்ரெயினிலேயே கொண்டு வருவான் வாங்கிடலாம்."
"தண்ணீ தண்ணீ ...".குட்டிம்மா கத்த ஆரம்பித்தது........

"இரும்மா....அப்பா....."ஏன ஏதேதோ சொல்லி அதைச் சமாதானப் படுத்திக்கொண்டிருந்தாள் அம்மா.. ரயில் நகர ஆரம்பித்தது....
குட்டிம்மா அழுது கொண்டே திடீரென தன் கால் ஷூ வைக் கழற்றி வெளியே ப்ளாட்ஃபார்மில் வீசியெறிந்தது..இதை எதிர்பார்க்காத அம்மா சுளீரென்று முதுகில் வைத்தாள்...

"நானூறு ரூபாய்..........போச்சு...இப்போ என்ன பண்றது?"
"ஏங்க இறங்கிப் போய் எடுத்துட்டு வர்றீங்களா.."
"ட்ரெயின் மூவ் ஆயிடுச்சேமமா....நேற்றுதான் வாங்கினது...."
"ட்ரெயின் மெதுவாதான் போகுதுங்க....எடுத்துட்டு அடுத்த கோச்லே ஏறிடுங்க..."
"செயினைப் பிடித்து இழுக்கலாமா?"
"அட நீங்க வேற நானூறு ரூபாய் செருப்புககு ஐநூறு ரூபாய் தண்டம் அழப் போறீங்க...."
இப்பிடி ஆளாளுக்கு செருப்பைத் திரும்ப எடுக்க ஐடியா இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
"யாருக்காவது கிடைக்கட்டும்மா" என்றவாறு தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா.

40 comments:

Rajan said...

மீ த பர்ஸ்ட்!


சூப்பர் மேடம் ! உங்க டச் !.... நல்லா இருக்கு

Anonymous said...

Good story.....

சந்தனமுல்லை said...

அசத்தல்!! kids do the earnest things!! :-)

கார்க்கிபவா said...

ஹாஹாஹா

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

கண்மணி/kanmani said...

மகாத்மா காந்தியும் இப்படிச் செய்ததாக படித்திருக்கிறேன்.

KParthasarathi said...

romba nannaa irukku

ஹேமா said...

புத்திசாலிக் குட்டிம்மா.

ஆ.ஞானசேகரன் said...

//"யாருக்காவது கிடைக்கட்டும்மா" என்றவாறு தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா.//

நல்ல குட்டியம்மா>..

பெரியார் தன்னை அடித்த ஒற்றை செறுப்பை வைத்துக்கொண்டு இன்னொன்றை தேடியதாக படித்துள்ளேன்

அன்புடன் அருணா said...

Ya you the first!rajan RADHAMANALAN .Thank You!

ராம்குமார் - அமுதன் said...

நல்லா இருக்குங்க உங்க கதை.... குட்டிம்மா... அந்த வார்த்தையால பெண் குழந்தைகளை கொஞ்சுவதற்கு தமிழில் இத விட வேற நல்ல வார்த்தை இல்லைன்னு நெனக்கிறேன்...

R.Gopi said...

குட்டிம்மா....

என் மனசுல சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டார்....

வாழ்த்துக்கள் அருணா மேடம்....

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ Good story...../
பெயரோட சொல்லிருக்கலாமே Anonymous! Anyways thanx!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/kids do the earnest things!! :-)/
Rightly said mullai!

க.பாலாசி said...

//தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா.//

குழந்தைங்க ஞானமே ஞானம்...

Karthik said...

superb.. :)

காமராஜ் said...

அருணா மேடம் குட்டீம்மா படு சுட்டி.
நிறய்ய நேரங்களில் அசல் புரட்சிகளை
பெரியவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறவர்கள் அவர்களே.

Unknown said...

சூப்பர்!குட்டிமா கலக்கிட்டாள்.வாழ்த்துக்கள் மேடம்....

அன்புடன் நான் said...

குழந்தை மனம் சில நேரங்களில் ஞானியை போல வள்ளது...என்பதை உங்க சிந்தனை வெளிப்படுத்தியுள்ளது.

sri said...

as usual unusual post :) super!

sri said...

Kuttima thanikkaga azudhaalum, seruppai thukki pottadhu romba matured aa erukku :)

கோபிநாத் said...

அருமை ;)

காலப் பறவை said...

அருமை

pudugaithendral said...

சூப்பர், கை நிறைய்ய பூங்கொத்துக்கள்

அன்புடன் அருணா said...

வருகைக்கு நன்றி கண்மணி, பார்ததசாரதி Sir!

அன்புடன் அருணா said...

ராம்குமார் - அமுதன் said...
/ குட்டிம்மா... அந்த வார்த்தையால பெண் குழந்தைகளை கொஞ்சுவதற்கு தமிழில் இத விட வேற நல்ல வார்த்தை இல்லைன்னு நெனக்கிறேன்.../
எனக்கும் கூட ரொம்பப் பிடித்த வார்த்தை குட்டிம்மா.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி ஹேமா,கார்த்திக்!

sri said...

Sometimes truth is bitter Aruna, unfortunately I wasnt even clear in my whining.

அன்புடன் அருணா said...

நன்றி ஆ.ஞானசேகரன்

/R.Gopi
குட்டிம்மா....என் மனசுல சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டார்..../
நன்றி கோபி!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/நிறய்ய நேரங்களில் அசல் புரட்சிகளை
பெரியவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறவர்கள் அவர்களே./
அதே காமராஜ்!

anto said...
/சூப்பர்!குட்டிமா கலக்கிட்டாள்.வாழ்த்துக்கள் மேடம்..../
நன்றி Anto!

புலவன் புலிகேசி said...

குட்டிமா கலக்கிருக்கா......இந்த மாதிரி எல்லாம் குழந்தைகளுக்கு மட்டும் தான் தோணும்...

அன்புடன் அருணா said...

க.பாலாசி said...
/குழந்தைங்க ஞானமே ஞானம்.../
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாசி!

அன்புடன் அருணா said...

நன்றி கருணாகரசு,காலப்பறவை,கோபிநாத்!

அன்புடன் அருணா said...

Srivats said...
/as usual unusual post :) super!/
Thanx for that nice comment Sri!

/Sometimes truth is bitter Aruna, unfortunately I wasnt even clear in my whining./
Understood Sri!don't bother!

Thamira said...

அழகான கதை.!

பித்தனின் வாக்கு said...

// "யாருக்காவது கிடைக்கட்டும்மா" என்றவாறு தன் இன்னொரு ஷூவையும் கழற்றி அநத ஷூவுக்குப் பக்கததில் தூககி எறிந்தாள் குட்டிம்மா. //
கோபத்தில் எறிந்த குழந்தை அடுத்த நிமிடம் யதார்த்ததில் கழற்றி எறிந்தது நல்ல செயல். ஆனால் அம்மா அடித்தது எனக்கு புடிக்கவில்லை.
நானா இருந்தா ரைட் எறிஞ்சுட்டியா சமர்த்து, உனக்கு சூவும் போச்சு, எறிந்ததால் தண்ணியும் கிடையாது என்று கூறி ஒரு பத்து நிமிடத்தில் குழந்தையின் தவறை புரிந்து கொள்ளவைத்துருப்பேன். தயவுசெய்து குழந்தையை அடிக்காதீர்கள். ஒருமுறை எங்க அண்ணி அவர்கள் தவமிருந்து (17 வருடம்) பெற்ற குழந்தையை அடிக்க நான் என் அண்ணா முன்னாடியே அவர்களை அடிக்கப் போய்விட்டேன். நல்ல வேளை கொஞ்சம் தள்ளி நின்றுருந்தால் தப்பித்தார்கள். குழந்தையை நாம் அடிப்பது நம் மனதின் ஆற்றாமையின், அல்லது மனதின் கோபத்தின் வன்மம். அது கண்டிப்பு அல்ல. குட்டிம்மா நல்ல பெயர். நான் கூப்பிடுவது " குட்டிலூ "

Yousufa said...

அருணா, அழகா எழுதியிருக்கீங்க. படிக்க நல்லாருக்கு.

இங்க செருப்பு, ஓ.கே. நம் வீட்டுக் குழந்தை இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் தங்கக் காதணி அல்லது வெள்ளிக் கொலுசை வீசி எறிந்திருந்தால்...

Princess said...

இது தான் குட்டீஸ் மனசு :D

(Mis)Chief Editor said...

நிகழ்வுகளை நம் கற்பனைக்கேற்ப கருக்குலையாமல் மாற்றி எழுதும்போது நிறைவாகத்தான் இருக்கிறது!

இருந்தாலும் 'மூல'த்திற்கு நன்றி சொல்வதும் பொருத்தமாயிருக்கும்!

அன்புடன் அருணா said...

(Mis)Chief Editor said...
/நிகழ்வுகளை நம் கற்பனைக்கேற்ப கருக்குலையாமல் மாற்றி எழுதும்போது நிறைவாகத்தான் இருக்கிறது!

இருந்தாலும் 'மூல'த்திற்கு நன்றி சொல்வதும் பொருத்தமாயிருக்கும்!/
எந்த "மூல"த்திற்கு எடிட்டர் சார்???? செருப்பைத் தூக்கிப் போட்டது...இது எங்க வீட்டுக் குட்டி செய்தது சார்!வேறெங்காவது நடந்திருந்தா சொல்லுங்க..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா