நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, October 21, 2009

இந்தியா எப்படி உருப்படும்???? [சர்வேசன்500 - 'நச்'னு ஒரு கதை 2009 - போட்டிக்கு]

"ஏங்க உங்க பிங்க் டீ ஷர்ட் எடுத்து வைங்க.அது நீங்க போடறதே இல்லை"

"குட்டிம்மாவோட பட்டுப் பாவாடையை எடுத்து வைங்க...சின்னதாப் போச்சு"

"கிழிஞ்சுருக்கும்மா...இது வேண்டாம்"
"அட...பட்டுப் பாவாடைங்க..தைத்துப் போட்டுக் கொள்வார்கள்....சும்மா வைங்க"

"இந்தாங்க இந்த பொம்மையெல்லாம் எடுத்து வைங்க.........."
"இதெல்லாம் வேண்டாம்மா........இங்கே பாரு உடைஞ்சுருக்கு"

"அட...நீங்க வேற...இதுமாதிரி பொம்மையெல்லாம் அந்தக் குழந்தைங்க பார்த்திருக்கக் கூட மாட்டாங்க...........லேசாதானே உடைஞ்சுருக்கு... கொடுக்கலாம்"

"ஹலோ சுதா...இன்னிக்கு எங்க கல்யாண நாள்..ஊஹும்...கொண்டாட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லை......எப்பவும் போல அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்...அதுதான் ப்ரோக்ராம்."

"மீனாம்மா...அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்......வீட்டைப் பார்த்துக்கோங்க......"

"ரெஜிம்மா....நீங்க எங்களுக்கும் சேர்த்து பால் வாங்கி வைச்சுருங்க....அனாதை இல்லம் போய் ட்ரெஸ் கொடுத்துட்டு சாப்பாடு போட்டுட்டு வரப் போறோம்"

அப்பாடா...ஏந்தான் இப்படி தம்பட்டம் அடிக்கிறளோ???....ஒருவழியா காரில் ஏறியாகி விட்டாயிற்று.......
சிக்னலில் கார் நின்றது ..........."அம்மா...பசிக்குது.......சாப்பிட்டு ரெண்டு நாள் ஆவுதும்மா.........ஒரு ரூபாய் கொடும்மா" ஒரு சிறுவன் கிழிந்த ஆடைகளுடன்...............பார்க்கவே பரிதாபமாய்.......கையில் ஒரு குழந்தையுடன்................

"ம்ம்ம்...இந்தப் ப்ரச்னை எப்போதான் தீருமோ??? இப்படிச் சோம்பேறியாய் உழைக்காமல் திரிந்தால் இந்தியா எப்படி உருப்படும்............போடா அந்தப் பக்கம்" எனறபடி கார் கண்ணாடியை ஏற்றி விட்டாள்.....
துணிப் பைகளைப் போலவே மனமும் கனத்தது..........

53 comments:

pudugaithendral said...

ம்ம் இப்படி பட்டவங்க இருக்கறவரை இந்தியா சத்தியமா உருப்படாது.

Suresh Kumar said...

பிடிச்சிருக்கு பூக்கொத்து இல்லியே

கௌதமன் said...

Flowers!!

Rajan said...

மனமும் கனத்தது..........

anbin

rajan RADHAMANALAN

வால்பையன் said...

ஒவ்வொரு துணி, பொருளிலும் ”உபயம்”னு போட்டு பேர் போட்டிருக்கா பாருங்க!

பித்தனின் வாக்கு said...

உண்மைகளைத்தான் பதிவாக இட்டுருக்கின்றிர்கள்.நல்ல நடையில் கதை சொல்லியிருக்கின்றிர்கள். விளம்பரத்திற்க்காகவும் சுய தம்பட்டற்த்திற்காகவும் தானம் செய்பவர்கள் அதிகம்.

R.Gopi said...

ந‌ல்லா இருக்கு அருணா மேட‌ம்...

வ‌லி ஜாஸ்தியா இருக்கு...

// கார்க் கண்ணாடியை //

ந‌டுவில‌ இருக்க‌ற‌ "க்" எடுத்துட‌லாமே மேட‌ம்...

கார்க்கிபவா said...

:)

kamaraj said...

சௌஜன்யாமாகப் பேசிக்கொண்டே போய் சப்புன்னு ஒரு அறை அறைஞ்சுட்றீங்களே மேடம்.
பூந்தோட்டம்தான். வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

இந்தாங்க பூக்கூடை!

தாரணி பிரியா said...

உண்மையை உள்ளபடியே சொல்லி இருக்கிங்க.பிடிங்க பூங்கொத்துகள்

+Ve Anthony Muthu said...

சமீபமாக படித்தவற்றில் மிகவும் மனம் தொட்டது இது. வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
/ம்ம் இப்படி பட்டவங்க இருக்கறவரை இந்தியா சத்தியமா உருப்படாது.//
அதே புதுகை!

Suresh Kumar said...

/பிடிச்சிருக்கு பூக்கொத்து இல்லியே/
அட..பூங்கொத்துன்னு எழுதினாப் போதுமே!

Anonymous said...

பிடீங்க பூங்கொத்து.

சத்ரியன் said...

//இப்படிச் சோம்பேறியாய் உழைக்காமல் திரிந்தால் இந்தியா எப்படி உருப்படும்............போடா அந்தப் பக்கம்" //

அருணா,

எனக்கும் கூட இந்தக் கூற்றில் உடன்பாடு உண்டு.சமூகத்தின் மீது உள்ள அக்கரை கூட காரணமாயிருக்கலாம். (குழந்தைப்பருவத்தில் பிச்சையெடுக்க ஆரம்பித்தால் அவர்களின் எதிர்க்காலம்...? நம் எதிர்க்காலச் சமூகம்...?)

(ஆனால், உங்கள் கதா நாயகியின் குணத்திற்கு என் கூற்று பொருந்தாது

கோபிநாத் said...

இது ஏதாச்சும் போட்டிக்கு எழுதிய கதையா!!

நல்லாயிருக்கு ;)

Anbu said...

பிடீங்க பூங்கொத்து.

velji said...

ரொம்பச் சரி! உணர்வேயில்லாமல் அனாதையில்லங்களுக்கு போய் வருவது இன்றைக்கு நடைமுறை ஆகிவிட்டது.

Karauthu Kandasamy said...

It is not wrong to show off others that they are going to spend day at a Ashram. Surely it would induce others to participate when they get a chance. In my view she is in right path. Kids should not beg. So many org are there to take care. I personally seen a old lady who begs in my area signal use to lend money to my complex watch men. Anything should organised else it will lead to trouble

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

Unknown said...

கார் கண்ணாடியோட முடிச்சிட்டீங்க....
அநாதை இல்லம்..
போய் பார்த்து மனம் திருந்தியவங்க இருக்காங்க...
எப்போடியோ அவங்க தானம் செய்யபோறாங்க...
அந்த பொருள்களை பாத்திரகாரனுக்கு போடலயே...???

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனமும் கனத்தது..........

Anonymous said...

நல்லா இருக்கு, மனிதர்கள் திருந்த வேண்டும்

அன்புடன் அருணா said...

நன்றி kggouthaman ,rajan RADHAMANALAN ,கார்க்கி,கருணாகரசு

கிறுக்கன் said...

பூங்கொத்து!!!

உதவிய உதவி உதவாது உய்த்திடும்
உதவியதை ஓயாது உரைத்திட்டால்.

-
கிறுக்கன்

அன்புடன் அருணா said...

மற்றுமொரு பூநதோட்டத்துக்கு நன்றி காமராஜ்!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
// கார்க் கண்ணாடியை //
/ந‌டுவில‌ இருக்க‌ற‌ "க்" எடுத்துட‌லாமே மேட‌ம்.../
எடுத்துட்டேன் கோபி!!!நன்றி!

அன்புடன் அருணா said...

வாங்க வால்.....டியூப் லைட் உபயம் நினைவுக்கு வருகிறது!

அன்புடன் அருணா said...

நன்றி +VE Anthony Muthu

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
அருணா,
/எனக்கும் கூட இந்தக் கூற்றில் உடன்பாடு உண்டு./
எனக்கும் கூட உண்டு சத்ரியன்....கொஞ்சம் நடைமுறையில் யோசித்தால் திடீர் உழைப்பு அனாதைச் சிறுவர்களுக்கு எப்படி சாத்தியம்??அதைப் பற்றிக் கூட ஒரு கதையிருக்கு

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
/இது ஏதாச்சும் போட்டிக்கு எழுதிய கதையா!!/
நல்லவேளை நினைவபடுத்தினீர்கள்.....அனுப்பலாம் போலிருக்கே!

sri said...

oh using firefox I can post comments great :)

Very well said, charity these days have become like a hobby or fashion, and more often used as exhibition item to tell between friends. I have been there myself so I understand it. but there are people who wants to donate but often feared that they might get cheated, I myself have found few guys from singal side or beach to be smoking or cheating the passerby people to earn extra pocket money.

I always tell to myself no matter what they do they aint gonna be rich ,its only matter of survuval for them, but I am wrong. Its not that, its the attitude that matters, and its much better if its given to NGO's that work properly, again discretion is needed here, as always. To see which is doing the right thing and which is not.

Well said Aruna, Ur writing always makes a effect like a ripple across the lake, it may be feeble but it would defn reach the other end.
God bless
Sri

ஆ.ஞானசேகரன் said...

///"ம்ம்ம்...இந்தப் ப்ரச்னை எப்போதான் தீருமோ??? இப்படிச் சோம்பேறியாய் உழைக்காமல் திரிந்தால் இந்தியா எப்படி உருப்படும்............போடா அந்தப் பக்கம்" எனறபடி கார் கண்ணாடியை ஏற்றி விட்டாள்.....
துணிப் பைகளைப் போலவே மனமும் கனத்தது..........////


ம்ம்ம்ம் நல்ல கதைங்க

Anonymous said...

from your topic i can see, u are comparing both orphans and beggers. but i think u knw well, they both are not same..
orphans will grow and study. work for someone.. gain some money.. they wont beg..

but beggers are not the same kind.. they are really the lazy peoplez.. "innum sollanum na.. avanga laala than intha naadu innum kevalama poguthu.. "

i agree they need some help.. but if u attempted to say what that lady done is wrong.. i wont agree..

becoz.. i will never give money to any begger or begging kids.. but am donating some money to orphans. i know that.. :) no flower for u unfortunaetly.. :(

அன்புடன் அருணா said...

/from your topic i can see, u are comparing both orphans and beggers. but i think u knw well, they both are not same../

Oh come on federrer.... …How can I and will I compare orphans with beggars?100% true both are not same. Remember one thing ..federrer…not all orphans get a home to live in or an organization to adopt them.The left outs????? Think about the immediate next meal for a poor kid with a brother without parents ….He is an orphan converted to a beggar.

/but beggers are not the same kind.. they are really the lazy peoplez../

You say a 10 yr old boy with his brother go to work????If he is not working he is considered lazy!!!.If you say the same about an adult ..I will agree with you.
/"innum sollanum na.. avanga laala than intha naadu innum kevalama poguthu.. "/
Its so easy to tell all these things……….Ya I do agree beggars spoil the country but not the kids like one in my story.

/i agree they need some help.. but if u attempted to say what that lady done is wrong.. i wont agree.. /
My point here is one who is ready to give the old clothes to the unknown orphans and boast about her kindness can always help out the boy by giving 1 rupee to him instead of asking him to go away….

/becoz.. i will never give money to any begger or begging kids.. but am donating some money to orphans. i know that.. :) no flower for u unfortunaetly.. :(/

Even I don’t give money to beggars(adults) but I do give to kids.
A flower bouquet to you for such a long comment and for donating money to orphans.

அன்புடன் அருணா said...

நன்றி அனபு....நர்சிம்...முதல் வருகைக்கும் கருத்துக்கும்

அன்புடன் அருணா said...

Karauthu Kandasamy said.../I personally seen a old lady who begs in my area signal use to lend money to my complex watch men/
I thought these kind of scenes can be seen only in films!!

Sanjai Gandhi said...

:(

ISR Selvakumar said...

மனம் கனத்த நேரத்தில், நீங்கள் கண்ணாடிக் கதவை இறக்கி, உதவி செய்திருந்தால், இந்தப் பதிவுக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

அன்புடன் அருணா said...

Srivats said...
/"It's the attitude that matters!"/
I use these words often!
Thanx Sri for understanding.........

அன்புடன் அருணா said...

நன்றி கிறுக்கன்,பதுமை,T.V.Rdhakrishnan!

Thamira said...

நல்லதொரு விகடன் ஒருபக்கக்கதை.! வட போச்சே.!

அன்புடன் அருணா said...

அதே Velji!

அன்புடன் அருணா said...

ஆகாயமனிதன்.. said...
/ கார் கண்ணாடியோட முடிச்சிட்டீங்க....
அநாதை இல்லம்..
போய் பார்த்து மனம் திருந்தியவங்க இருக்காங்க.../
திருந்தினா சரிதான்!ஆகாய மனிதன்.முத்ல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ நல்லதொரு விகடன் ஒருபக்கக்கதை.! வட போச்சே.!/
அச்சோ......நிஜம்மாவா????

அன்புடன் அருணா said...

நன்றி ஞானசேகரன்!

அபி அப்பா said...

யதார்தம்! நல்லா இருக்கு கதை!

Karthik said...

:((

அமிர்தவர்ஷினி அம்மா said...

மேடம் பூங்கொத்துக்கே இன்னொரு பூங்கொத்து : கொஞ்சம் நம்ம கடைப் பக்கம் வாங்க:)))))))

அன்புடன் அருணா said...

r.selvakkumar said...
/ மனம் கனத்த நேரத்தில், நீங்கள் கண்ணாடிக் கதவை இறக்கி, உதவி செய்திருந்தால், இந்தப் பதிவுக்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்./
ஒவ்வொரு கதையிலும் முடிவுக்கு அப்புறமும் ஏதாவது நடந்திருக்கும்.....இஙகும் அப்படி ஒன்று நடந்திருக்கலாம்.......selvakkumar

அன்புடன் அருணா said...

நன்றி அபி அப்பா,கார்ததிக்...
எனனா கார்த்தி்க் கடைசியா வநதிருக்கே???

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
/மேடம் பூங்கொத்துக்கே இன்னொரு பூங்கொத்து : கொஞ்சம் நம்ம கடைப் பக்கம் வாங்க:)))))))/
வந்தாச்சு...பூங்கொத்தையும் விருதையும் வாங்கியாச்சு!

Anonymous said...

SABASH..........

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா