நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, October 13, 2009

புன்னகையென்னும் கடவுச் சொல்....

புன்னகையென்னும் கடவுச் சொல்தான் உறவுக் கணக்கை நேர்ப் படுத்தும் எனத் தெரிந்திருந்தும் வேலைப்பளுவின் காரணமாக புன்னகைக்க மறந்தே போயிருந்தேன்...........

அதுவேதான் சண்டையின் ஆரம்ப காரணமாயிருந்திருக்கலாம்...அது வலுப்பெற்று பெரும் சண்டையாக மாறியிருந்தது.....
அவளிடம் அதிபயங்கரமாக சண்டை போட்ட அந்த அதிகாலை திடீரென்று ஒரு அதிசயமான உணர்வு..அத்தனை கடவுச் சொற்களும் மறந்து போயின....மறந்தே போயின.... ஜிமெயில்,யாஹூ...வலைப்பூ...ஃபேஸ் புக், டவிட்டர்.....இப்பிடி எல்லாமே மறந்து போயிருந்தது......அதுவா...இதுவா.என்று குத்துமதிப்பாக நிறைய வார்த்தைகளைப் போட்டுப் பார்த்தாயிற்று....ஒன்றும் வேலைக்காகவில்லை......கடவுச் சொற்கள் இல்லாமல் இன்னிக்கு வேலைக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போறேன்?....வீட்டிலிருந்தும்தான் என்னத்தைக் கிழிக்கப் போறேன்ன்?...எங்கேயாவது பத்திரப் படுத்தியிருக்கேனா என்று கணினியத் தலைகுப்புறப்போட்டுத் தேடியாயிற்று...ஊஹூம்....மனம் முழுவதும்....கடவுச் சொல்....கடவுச் சொல்....கடவுச் சொல்....

"கணக்கு ஆரம்பிப்பதென்பதுஒரு நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது.....
இந்தக் கடவுச் சொல்தான்
அவ்வப்போது காலை வாரி விடுகிறது.....
எத்தனை கடவுச் சொல்தான் நினைவில் வைத்துக் கொள்வது...???"

இப்படித்தான் இவள் கூடச் சண்டைபோட்டாலே ஏதாவது ஏடாகூடமாகிப் போய் விடுகிறது....அது சரியாகினால்தான் எல்லாம் சரியாகும்........எபபடிச் சமாளிப்பது?எப்படிச் சமாதானப் படுத்துவது?????

என் மகள் தன் சினேகிதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்....
அவளின் சினேகிதி கேட்டாள்.....
" அந்த சிடுமூஞ்சிய எப்படிடீ சமாளிச்சே????"

என் பெண் சொன்னாள்....."I Just used my password!...........Everything was alright!"

கொஞ்சமும் நாகரீகமில்லாமல் நான் குறுககிட்டேன்....." அதென்னம்மா ஸ்பெஷல் பாஸ்வோர்ட்????"
"Just Smile Dad"
"ஆமா அங்கிள் ....எங்க பாஷையிலே பாஸ்வோர்ட்னா புன்னகைன்னு அர்த்தம்"

நான் புரிந்தது போல புன்னகைத்தேன்..............
என் கடவுச் சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது போலிருந்தது....!!!

25 comments:

தமிழ் அமுதன் said...

;;))(password);;))

R.Gopi said...

//புன்னகையென்னும் கடவுச் சொல்தான் உறவுக் கணக்கை நேர்ப் படுத்தும் எனத் தெரிந்திருந்தும் வேலைப்பளுவின் காரணமாக புன்னகைக்க மறந்தே போயிருந்தேன்...........//

இது ப‌ர‌வாயில்லையே... அட்லீஸ்ட் வேலைப்ப‌ளு... நிறைய‌ பேர் இப்போ நேரில் பார்த்து புன்ன‌கைத்தால் கூட‌ ப‌திலுக்கு புன்ன‌கைப்ப‌தில்லையே..

//அதுவேதான் சண்டையின் ஆரம்ப காரணமாயிருந்திருக்கலாம்...அது வலுப்பெற்று பெரும் சண்டையாக மாறியிருந்தது.....
அவளிடம் அதிபயங்கரமாக சண்டை போட்ட அந்த அதிகாலை திடீரென்று ஒரு அதிசயமான உணர்வு..அத்தனை கடவுச் சொற்களும் மறந்து போயின//

ச‌ண்டை ம‌ற்றும் அத‌ன் உண‌ர்வே ம‌ன‌மெங்கும் ஆக்ர‌மித்து இருக்க‌... எல்லாம் மறந்து போன‌தில் ஆச்ச‌ரிய‌ம் என்ன‌... அவ‌ர‌வ‌ர்க‌ள் ச‌ண்டையின் போது, உல‌கில் நிலையையே ம‌ற‌க்கும் போது...

//கடவுச் சொற்கள் இல்லாமல் இன்னிக்கு வேலைக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போறேன்?....வீட்டிலிருந்தும்தான் என்னத்தைக் கிழிக்கப் போறேன்ன்?..//

ஹா...ஹா....

//"கணக்கு ஆரம்பிப்பதென்பதுஒரு நிமிடத்துக்குள் முடிந்து விடுகிறது.....
இந்தக் கடவுச் சொல்தான்
அவ்வப்போது காலை வாரி விடுகிறது.....
எத்தனை கடவுச் சொல்தான் நினைவில் வைத்துக் கொள்வது...???"//

அதானே... ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்... எங்கேயாவ‌து நோட் ப‌ண்ணி வைத்து கொள்ள‌க்கூடாது??

//இப்படித்தான் இவள் கூடச் சண்டைபோட்டாலே ஏதாவது ஏடாகூடமாகிப் போய் விடுகிறது....அது சரியாகினால்தான் எல்லாம் சரியாகும்........எபபடிச் சமாளிப்பது?எப்படிச் சமாதானப் படுத்துவது?????//

க‌ஷ்ட‌ம்தான் மேட‌ம்... கோப‌ம் குறைப்ப‌தை த‌விர‌ வேறு உபாய‌ம் இல்லை... இதுவே ந‌ம் உட‌லின் அனைத்து கோளாறுக‌ளுக்கும் கார‌ண‌ம்...

//என் பெண் சொன்னாள்....."I Just used my password!...........Everything was alrigஹ்ட்!" "Just Smile டட்"..."ஆமா அங்கிள் ....எங்க பாஷையிலே பாஸ்வோர்ட்னா புன்னகைன்னு அர்த்தம்"//

வாவ்...ஃபென்டாஸ்டிக்... ந‌ல்ல‌ முய‌ற்சி... எல்லோரும் செய்து பார்க்க‌லாமே

//நான் புரிந்தது போல புன்னகைத்தேன்..............
என் கடவுச் சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது போலிருந்தது....!!! //

என‌க்கும் புரிந்த‌து... ப‌டிக்கும் அனைவ‌ருக்கும் புரிந்தால் உல‌குக்கு ந‌ல்ல‌து...

வாழ்த்துக்க‌ள் அருணா மேட‌ம்...

த‌ங்க‌ளுக்கும், த‌ங்க‌ள் குடும்ப‌த்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவ‌ருக்கும் என் ம‌ன‌ம் கனிந்த‌ இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

நானும் என் வ‌லையில் தீபாவ‌ளி வாழ்த்து எழுதி உள்ளேன்... வந்து பார்க்க‌வும்... ப‌திவின் முடிவில் உங்க‌ளுக்கு ஒரு ஸ்பெஷ‌ல் ச‌ர்ப்ரைஸ் கிஃப்ட் உள்ள‌து... ம‌றுக்காம‌ல் பெற்றுக்கொள்ள‌வும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவ‌ருக்கு இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

கார்க்கிபவா said...

:))))))))))))))))))))

Karthik said...

I'm smiling ma'am... :)

சி தயாளன் said...

வாவ்.....அழகான ஒப்பிடல்..

கல்யாணி சுரேஷ் said...

புன்னகை அனைவருக்குமான மொழி. பல சமயங்களில் உபயோகிக்கத்தான் மறந்து போகிறோம்.

அன்புடன் நான் said...

நல்ல பதிவுங்க... இந்தாங்க என் கடவுச்சொல். "பாராட்டுக்கள்"

பாராட்டுக்கள்தான் என் கடவுச்சொல்.

சென்ஷி said...

அருமை! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

பூங்கொத்து

அன்புடன் அருணா said...

நனறி ஜீவன்,கார்க்கி,டி.வி.ராதாகிருஷ்ணன்!

ஆரூரன் விசுவநாதன் said...

அந்த கடவுச் சொல்லை நான் கூட மறந்து திரிந்திருக்கின்றேன்.

நல்ல பதிவு

kamaraj said...

திமுதிமுக்கிற வாடிக்கையாளர் கூட்டத்தில் அப்படிப்போய் உட்காருங்கள் என்று சொன்னாலும் சண்டை வரும். சிரித்துக்கொண்டே எதுக்க நின்னா இருபது நிமிசம் ஒக்காந்தா ஒரு நிமிசத்துல வேலை முடியும் எப்படி வசதி என்று சொன்னவுடன் பதிலுக்குச் சிரித்துக்கொண்டே உட்கார்ந்துவிடுவார்கள். என்ன அதிகப்படியா ரெண்டு கௌண்டர் சேர்த்து பாக்கனும்.
மேடம் இந்த கடவுச்சொல் ரொம்ப அலாதியான காயினேஜ். புன்னகையோடு எதையுயும் சேர்த்துக்கொள்ளலாம். அருமையா இருக்கு அருணாமேடம். பூந்தோட்டம்.

அன்புடன் அருணா said...

கோபி உங்க பின்னூட்டம் பார்த்து இவ்வ்ளோ எழுத எப்படி நேரம் கிடைக்குது என்பதைப் பற்றி வியந்து கொணடேயிருக்கிறேன்!!!

அன்புடன் அருணா said...

Smile karthik!...let that be your watchword!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா...

சூப்பர்ப்...பிரின்ஸ்...

அ.மு.செய்யது said...

அழகான பதிவு அருணா !!!! சூப்பரா சொல்லிட்டீங்க..

உங்கள் பூங்கொத்து என்ன ?? ஒரு ஃபிளவர் பொக்கே ஷாப்பே பரிசளிக்கலாம் !!!

Just Smile !!!

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருந்தது. சிறு குழந்தைகளின் வார்த்தைகள் சில சமயம் ஆயிரம் உண்மைகளை கொண்டு இருக்கும்.
இது அப்ப அப்ப கோபம் வரும் எனக்கும் நல்ல அறிவுரை.

நான் சமையல் பதிவுகளில் பல வித்தியாசமான வகைகளை கூறி இருக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது படித்து செய்து பார்க்கவும். நன்றி.

விஜய் said...

மிக அழகு

அன்புடன் அருணா said...

நன்றி டோன்'லீ!

அன்புடன் அருணா said...

உண்மைதான் கல்யாணி!

Bala said...

Smile... a single key that will help us to unlock many things in our life... Thanks for reminding it Aruna...

BTW, gud writing!!!

அன்புடன் அருணா said...

அட....பாராட்டுக்கள் கூட நல்ல கடவுச் சொல்தான் சி. கருணாகரசு !

அன்புடன் அருணா said...

அந்த கடவுச் சொல்லை மறந்து போனதால் வந்த வினைதான்....இந்தப் பதிவு ஆரூரன் விசுவநாதன்

இன்றைய கவிதை said...

இறக்கப் போகும் அருணாவை,
இருக்கச் சொல்லும் பதிவு...!

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும்
ஒவ்வொரு நொடியும் செய்ய வேண்டிய ஒன்று!

அருமை! வாழ்க வளமுடன்!

-கேயார்

ரவி said...

:))))))

இந்தாங்க பாஸ்வேர்ட் !!! புன்னகை கடவுச்சொல் என்றால் பயனர் பெயர் என்ன ?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா