நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 16, 2009

ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணி!!!


இப்போ கொஞ்ச நாளாவே இப்படித்தான் மண்டைக்குள் அடிக்கடி பல்ப் எரிகிறது....அன்னிக்கு இப்படித்தான் பைக்கில் போயிட்டிருக்கும் போது திடீர்னு மண்டைக்குள் பல்ப்......அவசர அவசரமாய் ஓரங்கட்டி பேப்பர் பேனா எடுத்து குறிச்சுக்கிட்டேன்........

அப்புறம் எங்க டேமேஜர் கிட்டே பேசிக்கிடிருக்கும் போது இப்படித்தான் பளிச்ச்னு பல்ப்....நான் பதறிப்போய் உடனே குறிச்சுக்கிட்டேன்........டேமேஜர் பதறிப் போய் ஆம்புலன்ஸ் கூப்பிட்டது தனிக் கதை!!!!

இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பளீர்னு பல்ப்.....வாயில் வைத்ததை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் ஓடிப் போய்க் குறிச்சுக்கிட்டேன்........தங்கமணி தூக்கமுடியாத உடம்பைத் தூக்கிட்டு ஓடிப்போய் டாக்டரக் கூட்டிட்டு வந்துட்டாங்க!!!

நேற்று டி.வி பார்த்துக்கிட்டிருக்கும்போது எரிஞ்ச பல்புக்கு நான் துள்ளிக் குதித்து எழுந்துவிட்டேன்...பக்கத்திலிருந்த பசங்க ஒரு தினுசாப் பார்த்துக்கிட்டு ஒதுங்கிப் போயிட்டாங்க........

சரின்னு வெறுத்துப் போய் தூங்கப் போனால் ஒரு பின்னிரவின் முன்னிரவில் மீண்டும் இந்தப் பல்ப் பளீர்னு எரிந்து ......நான் படுக்கையில் இருந்து துள்ளிக் கீழே விழுந்து மண்டை உடைஞ்சதுதான் மிச்சம்..........

இது என்ன வியாதின்னு தெரிலியே??? உட்கார்ந்தால் பல்ப்...நின்னா பல்ப்...நடந்தா பல்ப்னு.....பல்ப் எரிஞ்சு எரிஞ்சு மண்டையில் வலது பக்க மூலை எரிந்தே போச்சுங்க.........

ம்ம்ம்ம்...எப்போருந்து இப்படீன்னு யோசிச்சதிலே ஒரு விபரம் புரிஞ்சுதுங்கோ.....வலைப்பூ ஆரம்பிச்சதிலிருந்துதாங்க இப்படி!!!! வலைப்பூவுக்கு மேட்டர் தேடித் தேடிக் கிடைச்சவுடன் பல்ப் எரிய ஆரம்பிச்சு இப்போ இப்படி ஆயிரம் பல்ப் வாங்கிய அபூர்வ சிந்தாமணியாகிட்டேனே!!!!

52 comments:

ஆயில்யன் said...

குட்!

ஒரு பிளாக்கருக்கு இந்த அளவுக்கு ஒரு தீவிரம் ஈடுபாடு எல்லாம் இருக்கணும் !

கண்டினியூ!

கண்டினியூ :)))

sakthi said...

இங்கே தான் இப்படின்னா
அங்கேயும் அப்படிதானா???
குட் குட்
வாழ்க
ஆயிரம் பல்ப் வாங்கிய
அபூர்வ சிந்தாமணியே

கோபிநாத் said...

இந்த பதிவுக்கு காண பல்பு எப்போ எரிஞ்சது ;))

நிஜமா நல்லவன் said...

/ஆயில்யன் said...

குட்!

ஒரு பிளாக்கருக்கு இந்த அளவுக்கு ஒரு தீவிரம் ஈடுபாடு எல்லாம் இருக்கணும் !

கண்டினியூ!

கண்டினியூ :)))
/

Repeattuuuuuuu

சி தயாளன் said...

ஹையோ ஹையோ....

KParthasarathi said...

வேடிக்கையாக இருந்தாலும் ஓரளவு உண்மைதான்.
நானும் தினம் அனுபவிக்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

மொழி படத்துல வர்ற மாதிரி பல்ப் எரிஞ்சுச்சா இல்லயா? இல்ல இனிமேல்தான் எரியனுமா?

Karthik said...

அடடே, நம்ம கட்சி!!

//பின்னிரவின் முன்னிரவில்

அய்யய்யோ, இங்கேயும் பின்னிரவா?? எஸ்கேப்ப்ப்ப்!! ;)

மேவி... said...

நான் எல்லாம் பதிவு போட மேட்டர் பற்றி எல்லாம் யோசிப்பதே இல்லை ....
மேட்டர் பற்றி எல்லாம் கவலை இல்லை ....
லேப்டாப்யோடு அமர்ந்தால் ...
அப்படியே டைப் பண்ணறது தான் ....


பிறகு
எனக்கு இந்த உலகத்தில் பிடிக்காத ஒரே வார்த்தை "யோசிக்கிறது" தான்

vadivelmurugan said...

நானும் நிறைய சப்ஜெக்ட் வைத்துக்கொண்டு ப்ளாக் எழுதணும் என்று பார்க்கிறேன். ஒரு வாரமாக எரியும் நான்கு பல்ப்களை இன்னும் அணைக்க முடியலை.
சகாதேவன்

Gowripriya said...

ஹா ஹா ஹா...நல்லா இருக்கு...
அது சரி.. அந்த எறும்பை அடக்கம் பண்ணும் போது கூட பல்பு எரிஞ்சதே... அதப் பாத்து கூடப் பாசக் காரப் பசங்க பயப்படலியா??

கார்க்கிபவா said...

என்னமோ போங்க.. ட்யூப் லைட் ஆகாம் இருந்தா சரி

சென்ஷி said...

:-))

ஆஹா.. அப்ப இந்நேரம் 1000 பதிவுக்கு மேல வந்திருக்கணுமே.. இங்க ஒண்ணு இருக்குது. மீதி எங்க?? :-)))

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//குட்!
ஒரு பிளாக்கருக்கு இந்த அளவுக்கு ஒரு தீவிரம் ஈடுபாடு எல்லாம் இருக்கணும் !
கண்டினியூ!
கண்டினியூ :)))//
ஆனாலும் உங்களுக்கு பின்னூட்டம் போடறதிலே உங்களுக்கு இரூகற ஈடுபாட்டை விடவா???கண்டினியூ!
கண்டினியூ :)))

அன்புடன் அருணா said...

sakthi said...
//இங்கே தான் இப்படின்னா
அங்கேயும் அப்படிதானா???//

அடஅங்கேயும் அப்படிதானா???நன்றி சக்தி!

அன்புடன் அருணா said...

MayVee said...
//பிறகு
எனக்கு இந்த உலகத்தில் பிடிக்காத ஒரே வார்த்தை "யோசிக்கிறது" தான்//
அட அதானே பார்த்தேன்....இது சூப்பர்!!!

அன்புடன் அருணா said...

vadivelmurugan said...
// ஒரு வாரமாக எரியும் நான்கு பல்ப்களை இன்னும் அணைக்க முடியலை.
சகாதேவன்//
டக்கென்று எழுதி பல்பை ஸ்விச் ஆஃப் பண்ணுங்க!!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//இந்த பதிவுக்கு காண பல்பு எப்போ எரிஞ்சது ;))//

ஜஸ்ட் காலையிலேதான்!!!

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//ஹையோ ஹையோ....//
என்னா இவ்வ்ளோ நாளைக்கு அப்புறம் வந்துட்டு அதிலே ஹையோ ஹையோ வேறா???

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//நானும் தினம் அனுபவிக்கிறேன்.//

அதே! அதே!!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//மொழி படத்துல வர்ற மாதிரி பல்ப் எரிஞ்சுச்சா இல்லயா?//

இல்லை இது வேற மாதிரி எரிஞ்சுது!!!!

அன்புடன் அருணா said...

Karthik said...
//அடடே, நம்ம கட்சி!! //

அட நீங்களுமா???

//பின்னிரவின் முன்னிரவில்
அய்யய்யோ, இங்கேயும் பின்னிரவா?? எஸ்கேப்ப்ப்ப்!! ;)//

அட அது ஜாலிக்காக சேர்த்துக்கிட்டது!!!அதுக்காக எஸ்கேப்பா???? வேண்டாம்...வேண்டாம்!!!

அன்புடன் அருணா said...

நிஜமா நல்லவன் said...
//Repeattuuuuuuu//

வெறும் ரிப்பீட்தானா!!!???

ers said...

உங்களுக்கு எனக்கு ரோட்ல வண்டில போனக்கூட பல்ப் எரியுதுங்க... பல நேரங்களில் கண்ணுக்கு முன்னால மின்னுது.

kamaraj said...

எல்லா இடத்திலும் " அவர் '' டேமேஜர் தானா.
நாங்கள் இப்போது புலிகேசி எனப்பெயர் மாற்றிவிட்டோம்.
உண்மத்தம் என்று பாரதி சொல்லுவார். ( க்ரேஸி ) நீங்கள்
பல்ப் எனப்பெயர் மாற்றியிருக்கிறீர்கள். அருமையான பதிவு.
பதிவர்களின் பதிவு.

கார்க்கிபவா said...

ட்யூப் லைட் ஆகாம் இருந்தா சரிதான்னு ஒரு கமென்ட்டு போட்டதா ஞாபகம். காணோமே?

Poornima Saravana kumar said...

அடடே!
நாம ஒரே குட்டையில ஊரின மட்டைகள் போல!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் நகைச் சுவையை ரசித்தேன்

அன்புடன் அருணா said...

GOWRI said...
//அது சரி.. அந்த எறும்பை அடக்கம் பண்ணும் போது கூட பல்பு எரிஞ்சதே... அதப் பாத்து கூடப் பாசக் காரப் பசங்க பயப்படலியா??//
ம்ம்ம்...பல்ப் எரிந்தது எனக்கு மட்டும்தானே தெரிஞ்சுது கௌரி!!!

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//என்னமோ போங்க.. ட்யூப் லைட் ஆகாம் இருந்தா சரி//
ம்ம்ம்....அது ட்யூப் லைட் ஆகாம நீங்கல்லாம் ஓட்டுப் போட்டுப் பார்த்துக்கணும்பா!!

அன்புடன் அருணா said...

சென்ஷி said...
//ஆஹா.. அப்ப இந்நேரம் 1000 பதிவுக்கு மேல வந்திருக்கணுமே.. இங்க ஒண்ணு இருக்குது. மீதி எங்க?? :-)))//

மீதி 999 பின்னாலே வந்துக்கிட்டே இருக்கு....பாவம் நீங்கல்லாம்!!!!

அன்புடன் அருணா said...

நெல்லைத்தமிழ் said...
//உங்களுக்கு எனக்கு ரோட்ல வண்டில போனக்கூட பல்ப் எரியுதுங்க... பல நேரங்களில் கண்ணுக்கு முன்னால மின்னுது.//
அடப் பார்த்துப் போங்க!!ஆக்சிடென்ட்...ஆகப் போகுது.....

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//ட்யூப் லைட் ஆகாம் இருந்தா சரிதான்னு ஒரு கமென்ட்டு போட்டதா ஞாபகம். காணோமே?//

கிடைச்சுருச்சு!!! கிடைச்சுருச்சு!

சுரேகா.. said...

அது சரி...

எல்லா பல்பையும் , பதிவா ஆக்கியாச்சா?

பாதி பல்பு விக்கிறதே இல்லையே..அதான் கேட்டேன்.
:)

சென்ஷி said...

புகைப்படத்தை பார்த்ததும் உதித்த பல்பு..சாரி கவுஜ..

ஒரு பல்புக்கே
பல்பு
எரிகிறதே..
!!
(ஆச்சரியக்குறி)

Unknown said...

அடிக்கடி பல்பு எறிஞ்ச ‘Pulp” Fiction எழுதலாம்.
இப்படி அடிக்கடி எரிவதால் நீங்கள் அன்புடன் அருணா
இல்லை ”பல்பு”டன் அருணா ஆகி விடுவீர்கள்.

மேடம் நம்ம கவிதை(இந்த வாரம்) ஆனந்த விகடன்ல படிச்சீங்களா? (கொடுமைடா கோவிந்தா நம்ம trumphet நாமளே ஊத வேண்டியிருக்கு)

தீப்பெட்டி said...

அப்போ நீங்க பிரபல பதிவராய்ட்டு இருக்கீங்கனு அர்த்தம்....

அன்புடன் அருணா said...

டேமேஜர்... புலிகேசி ...என்ன பெயரா இருந்தாலும் வேலை நம்மைக் கவுக்கிறதுதானே காமராஜ் சார்!!!!

//பதிவர்களின் பதிவு.//

ம்ம்ம்...இது எனக்குப் பிடித்திருக்கிறது!!!

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...
//அடடே!
நாம ஒரே குட்டையில ஊரின மட்டைகள் போல!//

என்ன பூர்ணிமா இப்படிச் சொல்லிட்டீங்க???ஒரே ஜீராலெ ஊறின குலாப்ஜாமூன் போலன்னு சொல்லிருக்கலாமே கொஞ்சம் இனிப்பாய்!!!

அன்புடன் அருணா said...

ஜெஸ்வந்தி said...
//உங்கள் நகைச் சுவையை ரசித்தேன்//

ரசிங்க...ரசிங்க...அதுக்குத்தானே எழுதறேன்..உங்க பேர் நல்லாருக்கு ஜெஸ்வந்தி!!

அன்புடன் அருணா said...

சுரேகா.. said...
//அது சரி...
எல்லா பல்பையும் , பதிவா ஆக்கியாச்சா?
பாதி பல்பு விக்கிறதே இல்லையே..அதான் கேட்டேன்.
:)//

ஆயிரம் பல்புலெ இப்பொதான் ஒண்ணு வித்திருக்கு......கொஞ்சம் பொறுங்க..!!!ஒண்ணொண்ணா வரும்...

அன்புடன் அருணா said...

சென்ஷி said...
//ஒரு பல்புக்கே
பல்பு
எரிகிறதே..
!!
(ஆச்சரியக்குறி)//

ஏதும் உள்குத்து இல்லியே???

அன்புடன் அருணா said...

கே.ரவிஷங்கர் said...
//நீங்கள் அன்புடன் அருணா
இல்லை ”பல்பு”டன் அருணா ஆகி விடுவீர்கள்.//
அச்சச்சோ அப்படிப் பேர் மாத்தீராதீங்க!!!

//மேடம் நம்ம கவிதை(இந்த வாரம்) ஆனந்த விகடன்ல படிச்சீங்களா? (கொடுமைடா கோவிந்தா நம்ம trumphet நாமளே ஊத வேண்டியிருக்கு)//

இங்க ஆவி..லேட்டாத்தான் வரும் வந்தவுடன் படித்தவுடன்...சொல்றேன்..ரவிஷங்கர்

sri said...

Ungalukkum adhey problem dhaana :)

மண்குதிரை said...

"குறிப்பு எடுக்க
காகிதம் தேடுவதற்குள்
தொலைந்து விடுகின்றன
மூன்றுவரிகள்."
இந்தக்கவிதை ஞாபத்திற்கு வருது.
நல்ல சுவாரஷ்யமா இருக்கு. ரசித்தேன்

அன்புடன் அருணா said...

Srivats said...
//Ungalukkum adhey problem dhaana :)//
அட!! உங்களுக்குமா???!!

Revathyrkrishnan said...

வாழ்த்துக்கள் அருணா... ஆயிரம் பல்புக்கு;))

அன்புடன் அருணா said...

reena said...
//வாழ்த்துக்கள் அருணா... ஆயிரம் பல்புக்கு;))//

நன்றி ரீனா!!!

அன்புடன் அருணா said...

மண்குதிரை said...
//"குறிப்பு எடுக்க
காகிதம் தேடுவதற்குள்
தொலைந்து விடுகின்றன
மூன்றுவரிகள்."//
அதே!! அதே!!

ராமலக்ஷ்மி said...

வலைப்பூவால் பல்புகள் ஆயிரமே கணக்கா,
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்....
என் வீட்டில் நூறு வாட்ஸ்
அங்கே ஐநூறு வாட்ஸா, இல்லை ஆயிரம் வாட்ஸா, எல்லோருக்குமே கிறக்கம்..... :)))!

Sanjai Gandhi said...

அக்கா ஆர் யூ ஆல் ரைட்? :(

Anonymous said...

அன்புள்ள அருணா, எனது முதல் வருகை இது.
இதைப்போல ஒரு வலைப்பதிவு படிக்கும்போது இனி அடிக்கடி வரவேண்டும் என்று எனக்குள் ஒரு பல்ப் எரியும். உடனே குறித்து வைத்துக் கொள்ளுவேன். இன்றும் எரிந்தது. என் வருகை தொடரும்!
ஆக மொத்தத்தில் எல்லோரையும் ‘பல்ப் பற்றிப் பேச வைத்துவிட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்!
அன்புடன்,
ரஞ்சனி

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா