நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, May 28, 2009

ரயில் பயணங்களில்.............1


இந்தக் கதை யூத்ஃபுல் விகடனில்.....
ம்ம்ம்...டாக்ஸி வந்தாச்சு...நகரு..நான் கொண்டு போறேன்.
பெரிய பெட்டியை இப்படி வை...தண்ணி கேம்பர் எங்கே?
பூட்டை எங்கே??.....சாவி எங்க????.....ஏறுங்க.....கதவை அடித்து மூடுங்க..
கேள்விகளும் ...அறிவுரைகளுமாய் ஒருவழியாய் ஏறியாயிற்று...

"என்னங்க? பூட்டை வெளிலே போட்டீங்களா? உள்ளேயுள்ள கொக்கியில் போட்டீங்களா?"
"ஆரம்பிச்சிட்டியா?"
சரி விடுங்க!"

இரண்டு தெரு தாண்டியதும் "ஏங்க "வெளி லைட் போட்டீங்களா??"
இப்போ போட்டேன்னு சொல்லவா??..போடலைன்னு சொல்லவான்னு குழம்பியதிலே போட்டேனா போடலையான்னே குழப்பம்....


அடுத்த 10 நிமிடம் சுமுகமாக.நகர்ந்தது...
"என்னங்க கேஸ் கீழே உள்ள ஸ்விட்சை மூடினீங்களா?"
ஆமாம்மா...

அடுத்த ஐந்தாவது நிமிடம்
"ஏங்க.."
"என்னம்மா?"
"கிச்சன்லே குழாயை மூடினீங்களா??"
இப்படிக் கேல்வி மேல கேள்வி கேட்டாலே பதிலைப் பற்றிய குழப்பமும் கை நடுக்கமும் ஆரம்பிச்சுடுதே எனக்கு....


இல்லைங்க.....பாத்ரூம்லே யார் கடைசியா போனது?

குழாயை மூடினீங்களா?
லைட் ஆஃப் செய்தீங்களா?
ஹாலில் ஃபேன் ஆஃப் செய்தீங்களா?


இந்தக் கேள்விக் கொண்டாட்டத்தையெல்லாம் வீட்டிலேயே கேட்டுக் கொண்டாடியிருக்கக் கூடாதா???

கொலை வெறியுடன் ஆனால் பரிதாபமாகப் பார்த்தேன்...


நிறைய தடவை என்னுடைய குழப்பமான பதில்களால் வீட்டுக்குத் திரும்பிப் போய்ச் சரிபார்த்த அனுபவம் கூட உண்டு எனக்கு...


அப்பாடா!! ஸ்டேஷன் வந்தாச்சு...இனிமேல் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்...

ரொம்ப நம்பிக்கையுடன் ட்ரெயினிலும் ஏறியாச்சு.


"சாவியைக் கொண்டா.....பெட்டிக்கெல்லாம் சங்கிலி போட்டுரலாம்...."

"அச்சோஓஓஓஓஓஓ"

"என்னம்மா...சாவி கொண்டு வரலியா???

ஒண்ணும் பிரச்னையில்லை...பூட்டு சாவி ரிப்பேர் பண்றவன் வருவான் திறந்திடலாம்..."

நான் வீட்டுக்குப் போவதைத் தடுப்பதிலேயே குறியாயிருந்தேன்...


"இல்லைங்க டிக்கெட்டை வீட்டிலேயே விட்டுட்டு வந்துட்டேன்....

சரி சரி இறங்குங்க....ஒரு நடை போய் டிக்கெட்டை எடுத்திட்டு அப்பிடியே கேஸ் திறந்திருக்கான்னு செக் பண்ணிட்டு, பாத்ரூம்,கிச்சன் குழாயைத் திறந்திருக்கான்னு பார்த்துட்டு, ஃபேனை அணைத்து விட்டு,வெளி லைட்டைப் போட்டுட்டு....வீட்டை உள்ளேயுள்ள கொக்கியில் பூட்டைப் போட்டுப் பூட்டிட்டு வாங்க...

பதறாதீங்க...இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.."


"கிராதகி...இப்படி எல்லாத்தையும் செக் பண்ணுவதற்கே டிக்கெட்டை வீட்டில் விட்டு வந்தாளோ????" மூஞ்சைத் தொங்கப் போட்டுக் கொண்டே இரண்டடி வைத்திருப்பேன்.

"என்னாங்க???? வீட்டுச் சாவி எடுத்துக்கிட்டீங்களாஆஆஆஆஆஆ??????"

நான்......ஙே!!!!!!!!

44 comments:

naadodi ilakkiyan said...

arumai.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

அன்புடன் அருணா said...

Tank You naadodi ilakkiyan!!

ராமலக்ஷ்மி said...

ரசித்துச் சிரித்தேன்:))))!

Rajeswari said...

அடடா..என்ன ஒரு அழகான ரயில் பயணம்.(அனுபவம் ஏதும் இல்லையே)

Bleachingpowder said...

பொதுவா எல்லா வீட்டுலையும் கணவன் முத ஆளா டிரஸ் பண்ணிட்டு வாசல்ல நின்னுட்டு, இன்னும் கிளம்பளையா கேட்டுட்டே சும்மாவே இருப்பாங்க. ஆனா பொண்ணுங்க நிஜமாவே பாவம், பெட்டியில எல்லா துணியும் எடுத்து வைக்கிறதுல இருந்து, லெமன் சாதம் தயிர் சாதம் பேக் பண்ற வேலை வரைக்கும் எல்லா வேலையும் கடைசி நிமிசம் வரைக்கும் பண்ணிட்டு அவசர அவசரமா புறபட்டு கூட வருவாங்க. ஆட்டோவுல ஏறுன உடன தான் அவங்களுக்கு cross check நியாபகம் வரும்.

எல்லார் வீட்டுலையும் நடக்கிறதை ரொம்ப யதார்தமாகவும், சுவையாகவும் எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள் :)

நட்புடன் ஜமால் said...

ஙே!

வழிப்போக்கன் said...

உங்களுக்கு ஒரு வேளை வச்சிருக்கேன்...

வந்து பாருங்க...
http://jspraveen.blogspot.com/2009/05/blog-post_28.html

வா(வ)ரம் said...

”புது இணைய இதழ் “
இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து
நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

அன்புடன் அருணா said...

நன்றி அமித்து அம்மா!!!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//ரசித்துச் சிரித்தேன்:))))!/
இதுக்குத்தானே கஷ்டப் படறோம் ராமலக்ஷ்மி!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/(அனுபவம் ஏதும் இல்லையே)/

எல்லா கதையும் கொஞ்சம் அனுபவம் கலந்துதானே ராஜேஸ்வரி!!!

அன்புடன் அருணா said...

வாங்க ப்லீச்சிங்க் பௌடர், முதல் வருகை,விரிவான பின்னூட்டம்...நன்றி

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//ஙே!//

என்னா ஙே???

அன்புடன் அருணா said...

வழிப்போக்கன் said...
//உங்களுக்கு ஒரு வேளை வச்சிருக்கேன்...//

வேலைதானே????!!! செய்துடலாமே!!

பாஸ்கர் said...

எல்லோர் வாழ்க்கையிலும் இந்த மாதிரி அனுபவம் நிச்சியம் இருந்திருக்கும்.நன்றாக உள்ளது.

கோபிநாத் said...

இது கதையா!!! ;))

எங்க ரயில் பயணம் அதான் பாதியிலேயே அனுப்பிட்டிங்களே!! ;))

நல்லாயிருக்கு

KParthasarathi said...

very humourous and nice post.thanks

கார்க்கி said...

கலக்கல் போங்கோ

அன்புடன் அருணா said...

பாஸ்கர் said...
//எல்லோர் வாழ்க்கையிலும் இந்த மாதிரி அனுபவம் நிச்சியம் இருந்திருக்கும்.நன்றாக உள்ளது.//

ஆமாமா பாஸ்கர்!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//இது கதையா!!! ;))//

முழுவதும் கதையில்லே!!!!

$anjaiGandh! said...

உங்க அழிச்சாட்டியதுக்கு ஒரு அளவே இல்லையா? :))

நல்ல வேளை.. ஏற வேண்டிய ரயில் இதானான்னு கேட்டு முன்னாடி போய் இருக்கிற போர்ட் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லாம விட்டிங்களே.. :))

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//very humourous and nice post.thanks//
Tank U ! Tank U!

அமுதா said...

:-)
இப்படிதான் ஒரு தடவை டிக்கட்டை வீட்ல விட்டுட்டோம். நாங்க திரும்பிப் போகலை... ஓடி ஓடி...தேடி தேடி பெட்டியைக் கண்டுபிடிச்சு ஏறிட்டோம்ல..டி.டி...அவர் கால்லயும் விழுந்த்துட்டோம் :-))

வாழவந்தான் said...

//ரயில் பயணங்களில்.............1//
அப்ப 2,3.. எல்லாம் உண்டா?தொடர் பதிவா?டிரைன்ல எறினீங்களா இல்லையா

’டொன்’ லீ said...

ஹாஹாஹா....

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//கலக்கல் போங்கோ//

சரிங்கோ கார்க்கி!!!

அன்புடன் அருணா said...

$anjaiGandh! said...
//நல்ல வேளை.. ஏற வேண்டிய ரயில் இதானான்னு கேட்டு முன்னாடி போய் இருக்கிற போர்ட் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லாம விட்டிங்களே.. :))//

அச்சச்சோ இது நடந்துதே!! எழுதாமல் விட்டுட்டேனே!!!

அன்புடன் அருணா said...

அமுதா said...
//..டி.டி...அவர் கால்லயும் விழுந்த்துட்டோம் :-))
//
அவ்வ்ளொதானா??கால்ல விழுந்துட்டா டிக்கெட்டே இல்லாம போலாமா??? இது தெரியாம சே! எவ்வ்ளோ தடவை டிக்கெட் எடுத்துட்டேனே!!!

தமிழ்நெஞ்சம் said...

நான் இறக்கப் போகிறேன் அருணா - I am not going to DIE now.. sorry..

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//ஹாஹாஹா....//

வாங்க டோன்'லீ!!!

தமிழர்ஸ் - Tamilers said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

மணிநரேன் said...

//நான்......ஙே!!!!!!!!//

ஹா ஹா ஹா...பாவம்ங்க அவரு......

நாகை சிவா said...

:)))

மோட்டார் சுவிட்ச் ஆப் செய்தோமா? என்பது தான் எங்க வீட்டின் பெரிய பிரச்சனை :)

அன்புடன் அருணா said...

தமிழர்ஸ் - Tamilers said...
//வாழ்த்துகள்!உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.//
நன்றி தமிழர்ஸ்

அன்புடன் அருணா said...

மணிநரேன் said...
//நான்......ஙே!!!!!!!!// ஹா ஹா ஹா...பாவம்ங்க அவரு......//
நான் கூட அதேதாங்க சொல்றேன்!

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
// மோட்டார் சுவிட்ச் ஆப் செய்தோமா? என்பது தான் எங்க வீட்டின் பெரிய பிரச்சனை :)//

அதே! அதே!

தமிழ்நெஞ்சம் said...

//தொலைவில் உள்ளவர்களுடன் உரையாடல் = தொல்லாடல்

எப்படி நம்ம ட்ரான்ஸ்லேசன். @#$@#$@#$

தமிழை இப்படியெல்லாம் வளர்க்க வேண்டியிருக்கிறது. 6ம் விவரம் தெரிஞ்சவங்க தப்பு அப்படின்னு சொல்லும் வரை நான் மாற்ற மாட்டேன்.

தமிழில் புதுப்புது வார்த்தைகளை உருவாக்க வேண்டியதில்லை. இருக்கும் வார்த்தைகளை அப்படியெ சுருக்கினாலே போதும்.

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூடமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ்(லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

Gowripriya said...

ha ha ha :))))))))))

அன்புடன் அருணா said...

நன்றி கௌரி!!!

அன்புடன் அருணா said...

ஓ உங்க பதிவுக்கான பதிலை இங்கே போட்டுட்டீங்களா??.....
நீங்க சொல்றது சரிதான்..தமிழை வேற எப்படி வளர்க்கிறது???

அன்புடன் அருணா said...

வாழவந்தான் said...
//ரயில் பயணங்களில்.............1//
அப்ப 2,3.. எல்லாம் உண்டா?தொடர் பதிவா?//டிரைன்ல எறினீங்களா இல்லையா//

ஆமாமா....தொடர்வண்டிதான்!!!
கடைசியிலெ ட்ரயின்லெ ஏறிட்டோமில்லெ!

கல்கி said...

யதார்த்தமான கதை... எல்லா குடும்பத்தலைவிகளும் இப்படித்தான் :-)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா