நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 9, 2009

இது அம்மாவுக்கு.......


வருடம் ஒருமுறை
பூக்கும் விடுமுறைப் பூக்கள்........
செடியைச் சேரும் இந்தப் பூ.......
நீண்ட ரயில் பயணம்..........
ஜன்னலில் ஓடி மறையும்
காட்சி போல ஓடி வரும்
அம்மா வீட்டு நினைவலைகள்....

அம்மா செய்யும் ஆப்பம்
அம்மா செய்யும் அவியல்
அம்மா செய்யும் கேப்பஞ்சோறு
அம்மா செய்யும் மீன் குழம்பு...

அம்மா தலை முடிக்கு
செய்யும் சேவகம்
அம்மா மடியில் தலை
சாயும் அந்த நேரம்.....

தேக்கி வைத்திருக்கும்
வருடக் கதைகளின்
நேரம் தெரியாமல் பேசும்
அந்தக் கணக்கு வழக்குகள்.......

ஒரு வருடம் சேமித்து வைத்த
சண்டைகளைப் பத்து நாட்களில்
தீர்த்துக் கொள்ளும் வேகம்.....

இந்த வருடமும் பூக்கும்
விடுமுறைப் பூக்கள்....
செடியைத்தான் சேராது இந்தப் பூ!
இந்த வருடம்.....

ம்ம்ம்ம் .......
அம்மா கத்தாரில்.......
நான் இந்தியாவில்!!!

51 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட் வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

அழற மாதிரி பாப்பா படம் பார்த்து ஃபீலிங்க்ஸ் ஃபீலிங்க்ஸா வருது :((

ஆயில்யன் said...

//ஒரு வருடம் சேமித்து வைத்த
சண்டைகளைப் பத்து நாட்களில்
தீர்த்துக் கொள்ளும் வேகம்...///

ஆனால் இந்த விசயத்தில பெண் பிள்ளைகளை அடிச்சுக்க முடியாது வரும் போது பாசம் அப்பறம் கொஞ்சம் ஃபைட்டிங்க் போறப்ப ஃபீலிங்கோ பீலிங்க்ஸ்!

கோபிநாத் said...

;-)

உங்க நிலைமையும் என்னோட நிலைமையும் ஒரே நிலைமை தான் ;)

அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)

ராமலக்ஷ்மி said...

அருணா, கவிதையை வாசித்து விட்டு அந்தப் படத்தைப் பார்க்கையில் இன்னும் பாவமாக இருக்கிறதே:(! அடுத்த வருடமும் பூத்திடும் விடுமுறைப் பூக்கள்:)! வாழ்த்துக்கள்!!

பிரியமுடன்.........வசந்த் said...

ம்ம்ம்ம் .......
அம்மா கத்தாரில்.......
நான் இந்தியாவில்!!!

நல்லாயிருக்குங்க

அப்பிடியே உல்டாங்க நம்ம கதை
ம்ம்ம்ம் .......
அம்மா இந்தியாவில்.......
நான் கத்தாரில்!!!

KParthasarathi said...

உங்கள் ஏக்கம் புரிகின்றது. கவிதை மிகவும் அழகாக இருக்கிற்து.சந்தொஷகரமான மதர்'ஸ் நாள் வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

வாங்க ஆயில்யன்...உங்களுக்கு படம் பார்த்துத்தான் ஃபீலிங்க்ஸ்.....எனக்கு அம்மாவை நினைச்சாலே ஃபீலிங்க்ஸ்!!

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//ஆனால் இந்த விசயத்தில பெண் பிள்ளைகளை அடிச்சுக்க முடியாது வரும் போது பாசம் அப்பறம் கொஞ்சம் ஃபைட்டிங்க் போறப்ப ஃபீலிங்கோ பீலிங்க்ஸ்!//
100% உண்மை!!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//;-)
உங்க நிலைமையும் என்னோட நிலைமையும் ஒரே நிலைமை தான் ;)//
:((

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//:(! அடுத்த வருடமும் பூத்திடும் விடுமுறைப் பூக்கள்:)! //

ம்ம்ம்...இன்று முதல் அதற்கான காத்திருப்புதான்!!!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//அப்பிடியே உல்டாங்க நம்ம கதை
ம்ம்ம்ம் .......
அம்மா இந்தியாவில்.......
நான் கத்தாரில்!!!//

:((

sakthi said...

alagana kavithai aruna ma

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//உங்கள் ஏக்கம் புரிகின்றது. கவிதை மிகவும் அழகாக இருக்கிற்து.சந்தொஷகரமான மதர்'ஸ் நாள் வாழ்த்துகள்//

நன்றி Sir....

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

வாவ்.. நிஜமாவே ரொம்ப உணர்வுப் பூர்வமான கவிதை. இது பாப்பா எழுதின கவிதைன்னு நினைச்சேன். கடைசி வரிகள் படிச்சி தான் உங்களோடதுன்னு தெரிஞ்சது. சூப்பர்க்கா. :)

.... ஆயில்யா, உங்க ஆபிஸ்க்கு ஒரு மொட்ட கடுதாசி போட்டு உங்க இண்டெர்னெட் கனெக்‌ஷனுக்கு ஆப்பு வைக்கிறது தான் என் லட்சியமே.. :(

தமிழ்நெஞ்சம் said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

SUREஷ் said...

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

ஆயில்யன் said...

//ஆயில்யா, உங்க ஆபிஸ்க்கு ஒரு மொட்ட கடுதாசி போட்டு உங்க இண்டெர்னெட் கனெக்‌ஷனுக்கு ஆப்பு வைக்கிறது தான் என் லட்சியமே.. :(///

நல்லா சடை மாதிரி முடி வளர்த்துக்கிட்டே கடுதாசி போட்டாலும் கூட அதுக்கு ஒர்த் இல்லல்லோ...! :)))

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//வாவ்.. நிஜமாவே ரொம்ப உணர்வுப் பூர்வமான கவிதை. இது பாப்பா எழுதின கவிதைன்னு நினைச்சேன். கடைசி வரிகள் படிச்சி தான் உங்களோடதுன்னு தெரிஞ்சது. சூப்பர்க்கா. :)//
வாப்பா சஞ்செய்...எப்போவாது வர்றே!!! நன்றி!!!

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//.... ஆயில்யா, உங்க ஆபிஸ்க்கு ஒரு மொட்ட கடுதாசி போட்டு உங்க இண்டெர்னெட் கனெக்‌ஷனுக்கு ஆப்பு வைக்கிறது தான் என் லட்சியமே.. :(//

அடப் பாவி ஏம்பா இந்தக் கொலை வெறி? இப்பொதான் முதல் முதலா மூணு கமென்ட் போட்டிருக்கார்...ஆயில்யன்....நீதான் சோம்பேறின்னா கமென்ட் போடறவங்கள் கனெக்‌ஷனுக்கு ஆப்பு ஏன் வைககிறே????

வழிப்போக்கன் said...

பாவம் நீங்க...
:(((
கவிதை நல்லாருக்கு...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//வாப்பா சஞ்செய்...எப்போவாது வர்றே!!! நன்றி!!! //

டூ மச்சா பேசறிங்க அக்கா. எப்போவாச்சும் தானே நீங்க பதிவு போடறிங்க? அதுக்கு எப்போவாச்சும் தானே கமெண்ட் போட முடியும்? :(

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//நீதான் சோம்பேறின்னா கமென்ட் போடறவங்கள் கனெக்‌ஷனுக்கு ஆப்பு ஏன் வைககிறே????//

பின்ன என்னக்கா.. எங்க போனாலும் இவரு மொத கமெண்ட் போட்டுடறார்.. :((

தாரணி பிரியா said...

இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அருணா மேடம்

Karthik said...

சூப்பர்ப் கவிதை மேம்!

//ராமலக்ஷ்மி said...
அடுத்த வருடமும் பூத்திடும் விடுமுறைப் பூக்கள்:)!

இதை ரிப்பீட்டிக்கிறேன். வாழ்த்துக்கள்!

sakthi said...

manasai thottuduchunga

unga kavithai

Really superb Aruna

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//நல்லா சடை மாதிரி முடி வளர்த்துக்கிட்டே கடுதாசி போட்டாலும் கூட அதுக்கு ஒர்த் இல்லல்லோ...! :)))//
ஹஹாஹஹ..சூப்பர் ஜோக்!!!

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//டூ மச்சா பேசறிங்க அக்கா. எப்போவாச்சும் தானே நீங்க பதிவு போடறிங்க? அதுக்கு எப்போவாச்சும் தானே கமெண்ட் போட முடியும்? :(//

அடப் பாவி...வாரம் ஒண்ணு போ்டறேம்பா!!!

அன்புடன் அருணா said...

நன்றி தாரணி!!!

அன்புடன் அருணா said...

sakthi said...
//manasai thottuduchunga //
நன்றி சக்தி!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

டச்சிங் கவிதை

Srivats said...

Hmm I am feeling homesick now :(
No matter what we do , what we earn or how are tasts are . Amma pasam mattum ellarukkum onnu dhaan, And for people like me who live away from home it futhur more .
Nicely expressed in words with a twist at the end, I love it !!

ஆயில்யன் said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//நீதான் சோம்பேறின்னா கமென்ட் போடறவங்கள் கனெக்‌ஷனுக்கு ஆப்பு ஏன் வைககிறே????//

பின்ன என்னக்கா.. எங்க போனாலும் இவரு மொத கமெண்ட் போட்டுடறார்.. :((
//

ஐய்ய....!

நான் எங்க அப்படி போட்டேன் அக்கா இவுரு பொய் சொல்றாரு நான் எப்பவும் மீ த பர்ஸ்ட்டுன்னு தான் கமெண்ட் போடுவேனாக்கும்!

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//ஐய்ய....!

நான் எங்க அப்படி போட்டேன் அக்கா இவுரு பொய் சொல்றாரு நான் எப்பவும் மீ த பர்ஸ்ட்டுன்னு தான் கமெண்ட் போடுவேனாக்கும்!//

அடப் பாவிகளா...கொஞ்ச நேரமாவது வேலை பாருங்கப்பா!!!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//அடப் பாவிகளா...கொஞ்ச நேரமாவது வேலை பாருங்கப்பா!!! //

ஆயில்யா.. இப்டி ஒரு அக்கா நமக்குத் தேவையா?

Rajeswari said...

அருணா!கலக்கிட்டீங்க.. அனைத்தும் அருமையான வரிகள்

skaamaraj said...

கவிதை அல்ல இது பிரிவின் வலி.
ரொம்ப நல்லாருக்குங்க
அன்னையர் தின வாழ்த்துக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

நீ அக்கரையில்!....
நான் இக்கரையில்......
நம் நினைவு இப்பதிவில்!......
முடியுமானால் இதயவறையில்
முடிந்திடுவோம் பாச அறையை.....
உனதானதும், எனதானதும்..........

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அருணா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.. ஆனால் கவிதைஇன்னு சொன்னா நான் அழுதுடுவேன்.

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//ஆயில்யா.. இப்டி ஒரு அக்கா நமக்குத் தேவையா?//

ஆமா இதுக்கெல்லாம் சாலமன் பாப்பையாவைக் கூப்பிட்டு பட்டிமன்றம் வைங்க!!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//அருணா!கலக்கிட்டீங்க.. //
நன்றி ராஜேஸ்வரி...

அன்புடன் அருணா said...

skaamaraj said...
//கவிதை அல்ல இது பிரிவின் வலி.//
நிஜம்!

அன்புடன் அருணா said...

வாங்க சப்ராஸ் அபூ பக்கர்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....

அன்புடன் அருணா said...

Srivats said...
//Nicely expressed in words with a twist at the end, I love it !!//
thanx Srivats for that lovely comment!!!

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//டச்சிங் கவிதை//
நிஜம்மாவே பிரிவு மனதை டச் பண்ணுது.....அதனாலேதான் டச்சிங்க் கவிதை!

Anonymous said...

Arunama....... padithean da unn kavithaya...... manasukku romba kastmaga irrundhathu.......intha murai Quarterly vedumuraiel unnai ethirparkirrean da
kandippaga varavum....nee ketta annaithum panni tharukirean........ok va......Anbudun Amma.....

Anonymous said...

Anbulla Acca.....ungal kavithai arumai.....
migavum nanraga irrukirathu...
pin kuripu- Ammavukku keppanshorru panna theriyadhu...vendumanal kammmanshorru panna sollattuma??... paravaaillayaa?????
nee yeppodhu oru vuruda sandaya 10 naal-a theerthu irrukka??? yen santhegam??ok byee...Anbu thambi madrum Vicks

அன்புடன் அருணா said...

//Arunama....... padithean da unn kavithaya...... manasukku romba kastmaga irrundhathu.......intha murai Quarterly vedumuraiel unnai ethirparkirrean da
kandippaga varavum....nee ketta annaithum panni tharukirean........ok va......Anbudun Amma.....//
அட அம்மா!!! ok ok!!!

அன்புடன் அருணா said...

//Anbulla Acca.....ungal kavithai arumai.....
migavum nanraga irrukirathu...
pin kuripu- Ammavukku keppanshorru panna theriyadhu...vendumanal kammmanshorru panna sollattuma??... paravaaillayaa?????
nee yeppodhu oru vuruda sandaya 10 naal-a theerthu irrukka??? yen santhegam??ok byee...Anbu thambi madrum Vicks//

அட தம்பி!!!ஆமாமா கம்மஞ்சோறு ...பேர் மறந்து
விட்டது....அதான் சண்டை 10 நாளில் தீராதே...இருந்தாலும் கிடைக்கிற நாளுக்குள் போட முடிந்த அளவு போட்டுக் கொள்கிறேன்...

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//ஆனால் கவிதைஇன்னு சொன்னா நான் அழுதுடுவேன்.//

நான் எங்கேப்பா கவிதைன்னு சொன்னேன்???நீங்களா கவிதைன்னு நினைச்சுக்கிட்டா நான் பொறுப்பல்ல!!!

மாய உலகம் said...

பிரிவு என்பது கொடுமை... அதுவும் அம்மாவை பிரிவது என்பது அதனினும் கொடுமை. வரிகள் வருடுகிறது மனதை.....

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா