நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, May 14, 2009

இரவல் உறவுகள்......

வீடு அமைதியாய் இருந்தது....ராம் லேப்டாப்பில் முகம் நுழைந்திருந்தான்...ராஷி டி.வியில் மூழ்கி அழுது கொண்டிருந்தாள்....சின்னு வீடியோ கேமில் எதிரியைக் கொலைவெறியோடு துரத்திக் கொண்டிருந்தான்........
முகம் கழுவி வந்தமர்ந்த போதும் யாரும் கவனிப்பதாயில்லை....இந்த இரவல் உறவுகளாலும் உணர்வுகளாலும் நிஜ உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் அர்த்தம் இல்லாமல் போய் விட்டதாக நினைத்தேன்...

ராமின் முகமறியா நட்புடனான சத்தமான சிரிப்பு....
ராஷியின் உண்மையில்லாத உறவுகளுக்கான அழுகை....
சின்னுவின் எதிரியைத் துரத்தித் துரத்திக் கொல்லும் ஆவேசம்......

இந்த இரவல் உறவுகள் நிஜ அப்பாவை மறக்கச் செய்து விட்டதுதானே???

கண்ணாடி தம்ளரைக் கோபத்துடன் கீழே போட்டு உடைத்தேன்....ஒரு கண்ணாடிச் சில்லு காலின் பெருவிரலைப் பதம் பார்த்தது......ரத்தம் கொட்டியது...

அய்யோஓஓஓஓஓஓ........என்றலறினான் ராம்
அச்சச்சோ .................என்றலறினாள் ராஷி
அடச்சே! ..........என்றலறினான் சின்னு
சந்தோஷமாக இவர்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்ட வெற்றியுடன் திரும்பிப் பார்த்தேன்........
ம்ம்ம்ம்
முகமறியா நட்பின் கடி ஜோக்குக்காக ராமும்,


டி.வியின் உண்மையில்லாத உறவின் இறப்புக்காக ராஷியும்...


தப்பித்து விட்ட வீடியோ கேம் எதிரிக்காக சின்னுவும்


அலறி விட்டு அவரவர் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.......

நான் கோபம்,வருத்தம்,அழுகை,இயலாமை கலந்த ஒரு விசித்திர உணர்வுக் கலவையுடன் யாருமற்ற அனாதை போல கொட்டும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

38 comments:

நட்புடன் ஜமால் said...

கொட்டும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.... \\


ஏன்?

ஆயில்யன் said...

//நான் கோபம்,வருத்தம்,அழுகை,இயலாமை கலந்த ஒரு விசித்திர உணர்வுக் கலவையுடன் யாருமற்ற அனாதை போல //

அருமை!


உணர்ந்தவன் நான் !

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
/கொட்டும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.... \\
ஏன்?//

அதானே ஏன்?

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//உணர்ந்தவன் நான் !//

அப்பிடியா???நன்றி ஆயில்யன்!!

ஆ.முத்துராமலிங்கம் said...

தவறி விழும் உணர்வுகளையும் உறவுகளையும் நல்ல நயத்தோடு எழுதியிருக்கீங்க. நல்லா இருக்குங்க

Karthik said...

வாவ், நல்லா இருக்கு.. :))

//கண்ணாடி தம்ளரைக் கோபத்துடன் கீழே போட்டு உடைத்தான்....

உடைத்தேன் ந்னு இருக்கனுமா மேம்??

புதியவன் said...

யதார்த்தமான வரிகளில் இரவல் உறவுகள் நல்லா இருக்கு மேடம்...

இரசிகை said...

pidinga oru punnagai pooch chendai..:)

sakthi said...

நான் கோபம்,வருத்தம்,அழுகை,இயலாமை கலந்த ஒரு விசித்திர உணர்வுக் கலவையுடன் யாருமற்ற அனாதை போல கொட்டும் ரத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்....

valikindrathu

KParthasarathi said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.இந்த அவல நிலை எங்கும் உள்ளது.சிறிய கதையில் நல்ல பாடத்தை எடுத்து
உணர்த்தி உள்ளீர்கள்.ரொம்ப பிடித்தது கதை

அன்புடன் அருணா said...

நன்றி முத்துராமலிங்கம்!!!!

அன்புடன் அருணா said...

Karthik said...
//உடைத்தேன் ந்னு இருக்கனுமா மேம்??//
U r right Karthik!!!...I've corrected..Thanx Karthik...

கோபிநாத் said...

உண்மை..

அன்புடன் அருணா said...

நன்றி புதியவன்!!!

அன்புடன் அருணா said...

இரசிகை said...
//pidinga oru punnagai pooch chendai..:)//
வாங்கிட்டேன் புன்னகையுடன்.....

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//.ரொம்ப பிடித்தது கதை//
பிடிச்சுருக்கா??? நன்றி!!!

Mighty Maverick said...

நமக்கு நாமே அன்னியமாகி விட்ட பொழுதினில் நீங்கள் அன்னியமாகி விட்ட உறவுகளை பற்றியும் சிந்தித்திருக்கிறீர்களே... உங்களுக்கு ஒரு ஷொட்டு...

ராமலக்ஷ்மி said...

சிந்திக்க வைக்கும் சிறுகதை!

அன்புடன் அருணா said...

sakthi said...
//valikindrathu//
ம்ம்ம்...வலிக்கத்தான் செய்கிறது....ஆனால் இன்றைய யதார்த்த நிலை இதுதான் சக்தி!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//உண்மை....//
:)) நன்றி கோபிநாத்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்லாருந்தது. ஆனா கவிதைன்னு சொன்னா அழுதுடுவேன்..

Srivats said...

Well said aruna, I read somewhere
we need to use the things and cherish the people , but we cherish the things and use the people

life is getting to be very robotic these days all because we are going further and further away from our true human self , the basic nature - connectint with one another.

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//நல்லாருந்தது. ஆனா கவிதைன்னு சொன்னா அழுதுடுவேன்..//
அச்சச்சோ இதென்ன எனக்கான பின்னூட்ட டெம்ப்ளேட்டா??? இதையும் நான் கவிதைன்னு சொல்லலியேப்பா!!!!

அன்புடன் அருணா said...

Thanx Srivats for that detailed comment!

reena said...

இரவல் உறவுகள்... நல்லாருக்குங்க அருணா...

SUBBU said...

ஒன்னியிம் பிரியில :((((((((((

அன்புடன் அருணா said...

reena said...
//இரவல் உறவுகள்... நல்லாருக்குங்க அருணா...//

நன்றி ரீனா!!

அன்புடன் அருணா said...

SUBBU said...
//ஒன்னியிம் பிரியில :((((((((((//

அதுக்கு ஏன் அழுவுறீங்க??
விடுங்க!

Radha Ramaswamy said...

I will soon reply in Tamil

அன்புடன் அருணா said...

Mighty Maverick said...
//உங்களுக்கு ஒரு ஷொட்டு...//
ஷொட்டுக்கு ஒரு நன்றி Maverick!!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!!!

KParthasarathi said...

ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன் விகடன் ப்லாகில் இடம் பெற்றதுக்கு.இன்னும் மேல்மேலும் சிறப்பு அடைய வேண்டும். வாழ்த்துக்கள்!!

சந்திரா said...

உண்மை, சத்தியமான உண்மை, உறவுகளுக்குள் பேச்சு வார்த்தைகள் குறைந்து, சதா சர்வ காலமும் நவீன எந்திரங்களுடன் எந்த்ரங்களாக வாழ்கிறார்கள்.

சந்திரா said...

உண்மை,சத்தியமான உண்மை.குடும்ப உறவுகளுக்கு மதிப்பு தராமல், சதா சர்வ காலமும் நவீன எந்திரங்களுடன் எந்திரங்களாக வாழும் மனிதர்களை என்ன சொல்வது?

அமிர்தவர்ஷினி அம்மா said...

சின்ன கதை,, பெரிய மெசேஜ்

இப்படித்தான் போய்க்கிட்டிருக்கு உலகம்

Kavingan said...

nalla kavithai...!

Media-kkal
madigalai sooraiyaadi vittana

electronic santhosangal
pace maker iruthayam...
plastic elumbugal
cellphonil azhathaal mattum thirum uravugal ore veetil..

miga alagaana kaatchi paduthuthal kai varugiradhu ungalukku

vaazhthukkal...

-nesamithran
nesamithran.blogspot.com
(Nesamithran Kavithaigal)

Subathra said...

very nice and realistic!

RAVICHANDRAN said...

சந்தோஷமாக இவர்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்ட வெற்றி???????????????????

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா