நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Wednesday, March 25, 2009
நாம நினைக்கிற மாதிரி இல்லைங்க கடவுள்.......
அவன் செத்துவிட்டான்...ரெண்டு எமதூதர்கள் வந்தாங்க.....கையோட அவனைக் கூட்டிக் கொண்டு போனாங்க...எப்போதுமே உலகத்தைவிட்டுக் கிளம்புற நேரம் முரண்டு பிடிக்கும் இறந்தவர்களைப் போலல்லாமல் அவன் சிரித்துக் கொண்டெ கிளம்பினான்....
எமதூதர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்ததால் "என்னப்பா உனக்கு வருத்தமா இல்லையான்னு" கேட்டார்கள்....
அதுக்கு அவன் சொன்னான்"இல்லை..."என் உயிரின் மேலான அம்மாவைப் பார்க்கப் போகிறேன் அதனால் சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்றான்
அவனை சொர்க்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்...அங்கே தேடோ தேடென்று தேடினான்.அவன் அம்மாவைக் காணவில்லை.....அவன் கடவுளைக் கூப்பிட்டு "என் அம்மா எங்கே????" எனக் கேட்டான்.
அதற்கு கடவுள் "உங்க அம்மா நரகத்தில் இருக்கிறார்கள்"
என்றார்....................
அவனோ "ப்ளீஸ் என் அம்மா ரொம்ப நல்லவங்க...அவங்களையும் சொர்க்கத்திற்கு அனுப்புங்க..அப்படியில்லைன்னா என்னை நரகத்துக்கு அனுப்பிடுங்க."அப்படின்னு அழுதான்
அதற்குக் கடவுள் உங்க அம்மாவுக்கு சொர்க்கத்திற்கு வரத் தகுதியில்லை.....உனக்கு நரகத்துக்குப் போகிற தகுதியில்லை" அப்படீன்னு சொன்னார்...........
அவன் ரொம்பத் தொல்லை கொடுக்கவும்...கடவுள் சொன்னார்" சரி ஒரு தடவை உங்க அம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்....இந்த நூலேணியைப் போடுகிறேன்....உங்க அம்மா இதைப் பிடித்து மேலேறி சொர்க்கத்துக்கு வந்துவிடுவார்கள் " என்றார்.
கடவுள் நூலேணியை எடுத்து வீசினார்.....
"அட அம்மா"....அவனுக்கு சந்தோஷத்தில் அழுகையாய் வந்தது...
அவன் கத்தினான்.."பார்த்தும்மா....சீக்கிரமா வாம்மா"
அவன் அம்மாவும் சந்தோஷமாக அதைப் பிடித்து ஏறினாள்...அம்மாவுக்கும் சொர்க்கத்துக்கும் இரண்டடி தூரம்தான் இருந்தது........
அம்மா திரும்பிப் பார்த்தாள்....இன்னுமொரு பெண்மணியும் நூலேணியைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள்....அம்மா இங்கிருந்தே கேட்டாள்......."நீங்க ஏன் இதில் ஏறி வர்றீங்க?"
அதுக்கு அவங்க "என் மகனும் அங்கே சொர்க்கத்துலேதான் இருக்கான்.....நானும் அங்கே வந்துடறேன்" என்றார்கள்..
அம்மா மெதுவாகத் திரும்பி "என் மகன் எனக்கு அனுப்பிய ஏணியில் நீங்க எப்பிடி வரலாம்?????" என்றவாறு அந்தப் பெண்மணியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளி விட்டாள்.....
கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....
டிஸ்கி:1.சொந்தமா எழுதினதில்லீங்கோ......
டிஸ்கி:2எப்பவோ சின்ன வயசில எங்கேயோ கேட்ட கதைங்க....
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
s u p e r story.
You wrote it well..Thanks
I voted 4 u. thanks
சிரிக்கனும் போல இருந்தாலும்
வருத்தமாவும் இருக்கே
nallaathan irukku kathai nanpaa!!!!
maharaja
nallaathaan irukku kathai nanpare!!!!
vazhthukkal.
maharaja
முதல்ல படிச்சவுடனே இது சரியில்லையே தோணுச்சு. ஆனா யோசிச்சா இப்படித்தான் நடக்குமோன்னு தோணுது. கொஞ்சம் குழப்பமாதான் இருக்குது அருணா மேடம்
முதல்ல படிச்சவுடனே இது சரியில்லையே தோணுச்சு. ஆனா யோசிச்சா இப்படித்தான் நடக்குமோன்னு தோணுது. கொஞ்சம் குழப்பமாதான் இருக்குது அருணா மேடம்
நல்லா இருக்கு!
நமக்கு மட்டும் நல்லவங்களா இருந்தா பத்தாது!
\\\டிஸ்கி:1.சொந்தமா எழுதினதில்லீங்கோ......
டிஸ்கி:2எப்பவோ சின்ன வயசில எங்கேயோ கேட்ட கதைங்க.... \\\\
;-)) உஷராக இருக்கிங்க..;)
அவன் செத்துவிட்டான்...ரெண்டு எமதூதர்கள் வந்தாங்க.....கையோட அவனைக் கூட்டிக் கொண்டு போனாங்க...எப்போதுமே உலகத்தைவிட்டுக் கிளம்புற நேரம் முரண்டு பிடிக்கும் இறந்தவர்களைப் போலல்லாமல் அவன் சிரித்துக் கொண்டெ கிளம்பினான்.////
மனம் நிறைந்த ஞானிக்கே இந்நிலை சாத்தியம்!
கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....////
கடவுளின் கணக்கே வேறு போல!
கதை நல்லாதானிருக்கின்றது
ஒருகருத்தை சொல்ல அம்மாவை தேர்ந்தேடுத்திருப்பது எனக்கு உடன்பாடில்லை
குழப்பம்.. வருத்தம்... என்னன்னு தெரியல...
நிச்சயமாக கடவுள் நாம நினைக்கிறது மாதிரி இல்லை தான்... கருத்தாழம்மிக்க கதை. நன்றி :)
//கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....//
கற்பனைக் கதையென்றாலும் மனித மனதின் நிதர்சனத்தை சொல்கிறது...
nalla irunhtuchi pa
நல்லா இருந்தது..
typical mother thinking....உதுக்காக எல்லாம் நரகம் அனுப்பினா சொர்க்கம் யார் போவாங்க..?
நல்லா இருக்குங்க..
Thank you for the vote and the comments Tamiznenjam!!!
நட்புடன் ஜமால் said...
//சிரிக்கனும் போல இருந்தாலும்
வருத்தமாவும் இருக்கே//
எனக்கும் கூட....அம்மாவை இதில் இழுத்துவிட்டதில் வருத்தமே....
mraja1961 said...
//nallaathaan irukku kathai nanpare!!!!
vazhthukkal..//
நன்றி எம். ராஜா...முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும்.....
தாரணி பிரியா said...
// கொஞ்சம் குழப்பமாதான் இருக்குது அருணா மேடம்//
ரொம்பக் குழம்பாதீங்கப்பா...கதைதானே
நாகை சிவா said...
//நல்லா இருக்கு!
நமக்கு மட்டும் நல்லவங்களா இருந்தா பத்தாது!//
ரொம்ப சரி நாகை சிவா!!!
கோபிநாத் said...
//;-)) உஷராக இருக்கிங்க..;)//
இணையத்தில் உஷாராக இருக்கவேண்டியது கட்டாயமாக்கும்!!!!
thevanmayam said...
//கடவுளின் கணக்கே வேறு போல!//
You are right Theva....Man proposes....God disposes!!!!
ஆ.முத்துராமலிங்கம் said...
//ஒருகருத்தை சொல்ல அம்மாவை தேர்ந்தேடுத்திருப்பது எனக்கு உடன்பாடில்லை//
எனக்கும் உடன்பாடில்லைதான்.....நான் கேட்ட கதைல அம்மாதான்.....
ச்சின்னப் பையன் said...
//குழப்பம்.. வருத்தம்... என்னன்னு தெரியல...//
எழுதி முடித்ததும் எனக்கும் இப்படித்தான் இருந்தது சின்னப் பையன்!!
மகனாகவே இருந்தாலும் அளவுடன் பாசம் வைக்கச் சொல்றீங்களோ..
//"என் மகன் எனக்கு அனுப்பிய ஏணியில் நீங்க எப்பிடி வரலாம்?????" என்றவாறு அந்தப் பெண்மணியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளி விட்டாள்.....
அப்படியெல்லாம் சும்மா பார்த்துட்டுப் போகிற ஆள் நான் இல்லீங்கோ.. வந்தமா பார்த்தமா சில பின்னூட்டங்களை வழங்கினோமான்னு இருப்போம்..
தெரிஞ்சுக்கோங்க...(!)))
//சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
லாஜிக்கா பார்த்தா, இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த தாய் கண்டிப்பாக சொர்க்கத்திற்கு தகுதியானவராகவே இருப்பார்...கதையாக பார்த்தா,நீங்க சொன்ன மாதிரி, ரொம்ப குழம்பிக்க விரும்பவில்லை..,கதை தானே...
//நாகை சிவா said..
நமக்கு மட்டும் நல்லவங்களா இருந்தா பத்தாது!
Oh, எனக்கு புரிஞ்சதுப்பா. சூப்பர்ப் மெஸேஜ். :)
நன்றி ....எட்வின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்....
நன்றி ....காயத்ரி... முதல் வருகைக்கும் கருத்துக்கும்....
நன்றி...ராஜேஸ்வரி வருகைக்கும் கருத்துக்கும்....
புதியவன் said...
//கற்பனைக் கதையென்றாலும் மனித மனதின் நிதர்சனத்தை சொல்கிறது...//
உண்மைதான் புதியவன்...நன்றி...
’டொன்’ லீ said...
//typical mother thinking....உதுக்காக எல்லாம் நரகம் அனுப்பினா சொர்க்கம் யார் போவாங்க..?//
அட!! இதைப் பற்றிச் நினைக்கவேயில்லையே???
அறிவிலி said...
//நல்லா இருக்குங்க..//
வாங்க அறிவிலி...நன்றி...அதென்ன...அறிவிலின்னு பேர்???
தமிழ்நெஞ்சம் said...
//மகனாகவே இருந்தாலும் அளவுடன் பாசம் வைக்கச் சொல்றீங்களோ..//
அட அது அப்பிடி இல்லீங்கோ....மகனிடம் உள்ள பாசத்தைப் போல மற்றவங்களிடமும் கருணையாக இருக்கச் சொல்றேன்......
தமிழ்நெஞ்சம் said...
//அப்படியெல்லாம் சும்மா பார்த்துட்டுப் போகிற ஆள் நான் இல்லீங்கோ.. வந்தமா பார்த்தமா சில பின்னூட்டங்களை வழங்கினோமான்னு இருப்போம்..
தெரிஞ்சுக்கோங்க...(!)))//
ஓ அப்பிடியா??? அப்பிடியொன்றும் தெரியலியே???
கீழை ராஸா said...
//லாஜிக்கா பார்த்தா, இப்படி ஒரு பிள்ளையை வளர்த்த தாய் கண்டிப்பாக சொர்க்கத்திற்கு தகுதியானவராகவே இருப்பார்//
இந்த லாஜிக் நல்லாவே இருக்கு!!!
//நீங்க சொன்ன மாதிரி, ரொம்ப குழம்பிக்க விரும்பவில்லை..,கதை தானே...//
அதுவும் சரிதான்....கதை தானே!!!
நன்றி கீழை ராஸா....
puriyuthu..puriyala..yeppidiyo nalla irukkunga aruna madam
Karthik said...
//Oh, எனக்கு புரிஞ்சதுப்பா. சூப்பர்ப் மெஸேஜ். :)//
அப்பாடா உனக்காவது புரிஞ்சுதாப்பா???
இயற்கை said... //
puriyuthu..puriyala..yeppidiyo nalla irukkunga aruna madam//
அச்சச்சோ!!!போச்சுரா!!!!
நல்ல கதை அருணா.
நன்றி ..ராமலக்ஷ்மி....
Appo pengal dhaan pennukku edhiri yaaa ?
Ammanna saami maari apdeenu dhaaney solvaanga, avanga kudava epdi erupaanga. Ennamo kadhai nalla erundhalum, karuthu pidkkalai - Naan amma payyan dhaan :)
Srivats said...
//Ennamo kadhai nalla erundhalum, karuthu pidkkalai - Naan amma payyan dhaan :)//
ரொம்ப நாளைக்குப் பின் Srivats-n கமென்ட்!எனக்கும்தான் பிடிக்கலை...ஆனால் என்ன செய்வது? நான் கேட்ட கதை அப்படி...
இருக்கலாம். சிலர் இப்படி இருக்க வாய்ப்பு உண்டு.
என்ன இருந்தாலும் அவளும் மனுஷிதானே.
நல்ல கதை.
வாழ்த்துக்கள்.
ரங்கன் said...
//என்ன இருந்தாலும் அவளும் மனுஷிதானே.//
இது மனித இயல்புதான் என்கிறீர்களோ???
அன்புடன் அருணா
தத்துவக் கதை ரெம்ம நல்ல கதை!
//நாம நினைக்கிற மதிரி இல்லைங்க கடவுள்....... //
மதிரியா..? இல்ல மாதிரியா..?
இன்னாங்கோ வைஸ் ப்ரின்ஸியே தப்பு பண்ணலாம்ங்களாங்கோ..?
யாழினி said...
//தத்துவக் கதை ரெம்ம நல்ல கதை!//
வாங்க யாழினி....நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்!!
அன்புடன் அருணா
//மதிரியா..? இல்ல மாதிரியா..?
இன்னாங்கோ வைஸ் ப்ரின்ஸியே தப்பு பண்ணலாம்ங்களாங்கோ..?//
அட வைஸ் ப்ரின்ஸியும் மனுஷிதானேப்பா??? தப்பைத் திருத்தியாச்சுப்பா!!
உங்க அப்பா சொன்ன கதையில்லையே?
நல்லாயிருக்கு...கதை.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா