நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, March 14, 2009

எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்கப்பா........


அவன் விர்ரென பைக்கைத் திருப்பினான்....அரை வட்டமடித்து என்னைக் கடந்து போகும் முன்.....

"ஹெல்மெட் செக் பண்றாங்க.....பாத்து" என்று காற்றில் கத்திவிட்டுப் போனான்.....

கொஞ்சம் ஆனந்தமாகவும் அந்த முகம் தெரியா மனிதனின் மேல் எல்லையில்லா அன்பும் ஒரு நிமிடம் வந்தது... நான் ரொம்ப அவசரத்தில் இருந்தேன்...திரும்பிப் போகவா....அல்லது தப்பிச்சுரலாமா என்ற நினைப்போடு...மேலும் என் பைக்கை ஓட்டினேன்......

மற்றுமொருவன் ......."அடத் திரும்புங்க....ஹெல்மெட் போடலையா? காக்கிச் சட்டை நிக்குது" என்று கத்திவிட்டுப் போனான்.....

இன்னும் ஆனந்தமாக இருந்தது......சக மனிதன்மேல் மனிதர்களுக்கு எவ்வ்ளோ அக்கறைன்னு.....சந்தோஷமாகவே இருந்தது........மனிதநேயம் இல்லை...இல்லைன்னு சும்மா எல்லோரும் பாட்டுப் பாடுறாங்கன்னு.....மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.....

நானும் தூரத்தில் காக்கிச் சட்டையைப் பார்த்ததும்...பைக்கைத் திருப்பினேன்........என் பங்குக்கு ரெண்டு மூணு பேருக்கு காக்கிச் சட்டையைப் பற்றித் தகவல் கொடுத்தேன்.....(ஏதோ என்னாலான உதவி!!!)

எம்.ஐ ரோடைப் பிடித்து கட் ரோட்டில் புகுந்து போய் விடலாம் என நினைத்துத் திரும்பினால் ஒரே கூட்டம்.....அடப் பாவமே ஆக்ஸிடென்ட்......பைக் பக்கத்தில் ஒரு இளைஞன் ரத்தவெள்ளத்தில் கிடந்தான்.......அதே வயதுடைய பெண் கை கால்களில் பெருங்காயத்துடன் முகமெல்லாம் ரத்தத் தீற்றல்களினுடனும்....உயிருடன்.....துடித்துக் கொண்டிருந்தாள்....

"போலீஸ் வரட்டும்."
"போலீஸ் கேஸ்..."
"பைக் கையில் கிடைத்தால் கண்மண் தெரிவதில்லை........"
"அட உயிர் இருக்குப்பா...."
".எங்கே பிழைக்கப் போவுது?...."
"யாராவது ஆட்டோ கூப்பிடுங்கப்பா..."என்றெல்லாம் பல குரல்கள்....
யாரும் அசையவில்லை...............
காக்கிச் சட்டை பற்றித் தகவல் சொன்னவர்களும் கூட அசையவில்லை.....
நானும்தான்....
தற்செயலாக அவன் தலையைப் பார்த்தேன் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.....

45 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் தான்.

இதெல்லாம் இப்படி எதுனா பார்க்கும்போது மட்டும் தோன்றுகிறது

நாளடைவில் ...

Cable சங்கர் said...

நல்ல பதிவு அருணா..

கார்க்கிபவா said...

:((((

Anonymous said...

நன்றாக சொல்லியிருக்கிங்க!

Poornima Saravana kumar said...

//காக்கிச் சட்டை பற்றித் தகவல் சொன்னவர்களும் கூட அசையவில்லை.....
நானும்தான்....
தற்செயலாக அவன் தலையைப் பார்த்தேன் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.....//

காணவில்லை மனிதநேயம்!!!

Karthik said...

wow, sounds different. cool! :)

சி தயாளன் said...

ஹெல்மேட் மட்டுமில்லை மனிதநேயம் கூட காணாமல் போய் விடுகின்றது....

அன்புடன் அருணா said...

உண்மைதான் ஜமால்....

அன்புடன் அருணா said...

வருகைக்கு நன்றி கேபிள்!!!

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//:((((//
உடம்பு சரியில்லைங்கறதனாலே இப்படி ஸ்மைலி பின்னூட்டத்தை அனுமதிக்கிறேன்....

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...

//காணவில்லை மனிதநேயம்!!!
ம்ம்ம்..வேறென்ன சொல்ல???

ஆண்ட்ரு சுபாசு said...

ஆறு முறை சிறு விபத்து பின்னர் ஏழாம் முறை சற்றே பெரிய விபத்து ,ஏழாவது முறைதான் தெரிந்தது ...விபத்து அடுத்தவர்களால் கூட நிகழும் ...எனவே நீங்கள் எத்துனை சூரராக இருந்தாலும் தலைகவசம் அணியவும்...போன மாதம் தான் எண் அறை நண்பன் ஈக்காட்டு தாங்கல் சாலையில் விபத்தில் சிதறிய "மனித மூளையை" பார்த்ததாக சொன்னான்...தயவு செய்து தலைகவசம் அணியவும்.

அன்புடன் அருணா said...

Karthik said...
//wow, sounds different. cool! :)//
Is that so???thanx karthik.

KarthigaVasudevan said...

நல்ல பதிவு .ஹெல்மெட் போடா மறக்க மாட்டோம்பா .

நாகை சிவா said...

நல்ல விசயம்.

அனைவரும் கடைப்பிடித்தால் நல்லது

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூங்கொத்து ! :)

Ungalranga said...

ஆமாங்க.. தினம் ரெண்டு மணி நேரம் ரோட்டில் சுத்துற எனக்குதான் அந்த வேதனை தெரியும்..
எப்படியும் ஒரு நாளைக்கு ரெண்டு விபத்தாச்சும் நடக்குது.
வாரத்துல 2 பேராச்சும் டிக்கெட் வாங்கிடுறாங்க.
மக்கா.. ப்ளீஸ்.. ஹெல்மெட் பொட்டுகங்க..

நல்ல பதிவு..
நன்றி.

அன்புடன் அருணா said...

ஆண்ட்ரு சுபாசு said...
//தயவு செய்து தலைகவசம் அணியவும்.//

அதைத் தாங்க நானும் சொல்றேன்....
முதல் வருகைக்கு நன்றி.

Unknown said...

ஆமாங்கோ தங்கச்சிங்க்மா.....!!! நீங்க சொல்லுறது நெம்ப கரெக்ட் ....!! ஆனா தென்னோ பண்றது.......!!! வெலைய கேட்டா 1000..... 2000 ..... ம்ம்கிரானுன்களே..!!! ஏதாவது கம்பெனிகாரணுவ.... விளம்பரத்துக்காக ப்ரீயா குடுத்தா பரவால்ல.....!!!!

நிகழ்காலத்தில்... said...

அது மட்டும் இல்லை, வெயில் தலையில் நேரடியாக
அடிக்காது. முகம் எண்ணை வழியாமல் பிகர்கள் பார்க்கும்படி இருக்கும். தொல்லை தரும் நண்பர்களிடம்
இருந்து எஸ்கேப்..............

அன்புடன் அருணா said...

உண்மைதான் நாகை சிவா!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி :)

அன்புடன் அருணா said...

வாங்க ரங்கன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Jackiesekar said...

ஹெல்மெட் அணிந்தால் உயிர் பிழைப்பு என்பது சாத்தியம்தான் அதை விட ஆப்பு என்பது ஆரம்பித்து விட்டால் ஹெல்மெட் என்ன எது போட்டாலும் தப்பிக்க முடியாது என்பத நிதர்சன உண்மை

Anonymous said...

PIDIKAMALA PADIKIROM

ஆண்ட்ரு சுபாசு said...

ஆண்ட்ரு சுபாசு said...
//தயவு செய்து தலைகவசம் அணியவும்.//

அதைத் தாங்க நானும் சொல்றேன்....
முதல் வருகைக்கு நன்றி.//

நீங்க சொல்லுறது தெரிஞ்சு தான் நானும் சொன்னேன் ...கருத்துக்கு வலுசேர்கிரேனாம்

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு அருணா.

நிஜமா நல்லவன் said...

http://youthful.vikatan.com/youth/index.asp


Intha pathivu good blogs la vanthu irukku..!

மேவி... said...

nalla solli irukkinga helmetin avasiyathai..

அன்புடன் அருணா said...

லவ்டேல் மேடி said...
//வெலைய கேட்டா 1000..... 2000 ..... ம்ம்கிரானுன்களே..!!! ஏதாவது கம்பெனிகாரணுவ.... விளம்பரத்துக்காக ப்ரீயா குடுத்தா பரவால்ல.....!!!!//

ப்ரீக்காக காத்துக்கிட்டு இருந்தா உயிர் ப்ரீயா போயிடுங்க்ணா.....

அன்புடன் அருணா said...

அறிவே தெய்வம் said...
// தொல்லை தரும் நண்பர்களிடம்
இருந்து எஸ்கேப்..............//

அட இப்படிக் கூட ஒரு பிரயோஜனம் இருக்கா???

அன்புடன் அருணா said...

jackiesekar said...
//ஹெல்மெட் அணிந்தால் உயிர் பிழைப்பு என்பது சாத்தியம்தான் அதை விட ஆப்பு என்பது ஆரம்பித்து விட்டால் ஹெல்மெட் என்ன எது போட்டாலும் தப்பிக்க முடியாது என்பத நிதர்சன உண்மை//

ஹெல்மெட் போடாததால்தான் உயிர் போச்சுன்னு ஒரு மனவலியையாவது குறைக்கலாமே???

அன்புடன் அருணா said...

சகா said...
//PIDIKAMALA PADIKIROM//

அட படிச்சாத்தானே பிடிக்கும்????

அன்புடன் அருணா said...

ஆண்ட்ரு சுபாசு said...
//நீங்க சொல்லுறது தெரிஞ்சு தான் நானும் சொன்னேன் ...கருத்துக்கு வலுசேர்கிரேனாம்//

ஓ அப்பிடியா?? சேருங்க சேருங்க....

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//மிக நல்ல பதிவு அருணா.//
நன்றி
ராமலக்ஷ்மி

அன்புடன் அருணா said...

குழலோவியம் said...
//http://youthful.vikatan.com/youth/index.asp
Intha pathivu good blogs la vanthu irukku..!//

Thank you குழலோவியம்!!உங்க பின்னூட்டம் மூலமாதான் எனக்கே தெரிய வந்தது...

அன்புடன் அருணா said...

MayVee said...
//nalla solli irukkinga helmetin avasiyathai..//
ada appidiyaa???

அறிவிலி said...

மேடத்துக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.........

தருமி said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

பிடிச்சிருக்கு.
இத்துடன் அனுப்பியுள்ள பூங்கொத்தைப் பெற்றுக் கொள்ளவும்.

பாலராஜன்கீதா said...

பூங்கொத்து 2

அன்புடன் அருணா said...

அறிவிலி said...
//மேடத்துக்கு ஒரு பூங்கொத்து பார்சல்.........//

பூங்கொத்து வந்து சேர்ந்துருச்சே அறிவிலி!!!

அன்புடன் அருணா said...

தருமி said...
//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

//பிடிச்சிருக்கு.
இத்துடன் அனுப்பியுள்ள பூங்கொத்தைப் பெற்றுக் கொள்ளவும்.//

வாங்க தருமி ஐயா...நன்றி முதல் வருகைக்கும்,பூங்கொத்துக்கும்...

அன்புடன் அருணா said...

பாலராஜன்கீதா said...
//பூங்கொத்து 2//

வாங்கிகிட்டேன் பூங்கொத்தை பாலராஜன்கீதா...

sri said...

Super!

Seriousaana vishyathai simpla solliteenga

அன்புடன் அருணா said...

Srivats said...
//Super!
Seriousaana vishyathai simpla solliteenga//
Thanx....After a loooooong time....comment from you!!!
அடிக்கடி வாப்பா!!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா