நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 7, 2008

குலாப்ஜாமுனும்,சாமியும்,ஒரு எறும்பும்.....




குலாப்ஜாமுனை ஜீராவுக்குள் மூழ்க வைத்து அதில் இருந்து 5 எடுத்துத் தனியாக மூடி வைத்தாள் .சின்னவள் அம்மு பக்கத்திலேயிருந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"இதெதுக்கு தனியா வைக்கிறீங்க?"

"இது சாமிக்கு"

"சாமி சாப்பிடாதே..."

"ப்ச்...சாமிக்குப் படைக்கணும்."

குலாப்ஜாமுன் இருந்த பாத்திரத்தைத் தண்ணீர் நிரம்பிய பெரிய தட்டில் வைத்தாள்.

"ஏம்மா அந்தப் பாத்திரத்தைத் தண்ணீரில் வைக்கிறீங்க?"

"அப்போதான் எறும்பு வந்து இந்த ஜாமுனைச் சாப்பிடாது....."

" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாமி குலாப் ஜாமுன் சாப்பிடவே சாப்பிடாது.....அதுக்குப் போய் குலாப் ஜாமுன் சாப்பிடக் கொடுக்குறே.....எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?"

பளாரென்று அடி வாங்கியது போலிருந்தது அவளுக்கு....

53 comments:

வீ. எம் said...

அசத்தல், அதுதாங்க
குழந்தையுள்ளம்.. என்ன ஒரு கேள்வி..

யோசிக்கவேண்டியவங்க யாரும் யோசிக்கறதில்லை..

அந்த குழந்தைக்கு ஏதேதோ சொல்லி மனச கலைச்சுடாதீங்க அருணா ப்ளீஸ்

dharshini said...

நியாயமான கேள்வி?!
ஒண்ணாவது வெச்சுடுங்கப்பா...பாவம்

அன்புடன் அருணா said...

வீ. எம் கூறியது...
//அசத்தல், அதுதாங்க
குழந்தையுள்ளம்.. என்ன ஒரு கேள்வி..

யோசிக்கவேண்டியவங்க யாரும் யோசிக்கறதில்லை..

அந்த குழந்தைக்கு ஏதேதோ சொல்லி மனச கலைச்சுடாதீங்க அருணா ப்ளீஸ்//

ok..ok..
வாங்க வி.எம்.முதல் வருகை...
வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

dharshini கூறியது...
//நியாயமான கேள்வி?!
ஒண்ணாவது வெச்சுடுங்கப்பா...பாவம்//
அதானே எறும்புக்கு தீபாவளி வேண்டாமா??
அன்புடன் அருணா

சிம்பா said...

அருமை டீச்சர்.. குழந்தை உள்ளம்னா இதான் போல.. உண்டியல்ல லட்சங்களை, கோடிகளை கொண்டு போடுவாங்க ஆனா ஒரு பத்து ரூபாய் இல்லாதவங்களுக்குபோடமாட்டாங்க..

மனுசங்க மனசுதான் கடவுள். இப்படி நம்ம உலகம் மாறினா நல்லா தான் இருக்கும்.

அன்புடன் அருணா said...

சிம்பா கூறியது...
//மனுசங்க மனசுதான் கடவுள். இப்படி நம்ம உலகம் மாறினா நல்லா தான் இருக்கும்.//

உண்மைதான் சிம்பா...மாறும் மாறும்...நம்புவோம்...
அன்புடன் அருணா

தமிழ் அமுதன் said...

எல்லாம் சரி குழந்தைகிட்ட
நீங்க என்ன பதில் சொன்னிங்க!
அதசொல்லுங்க!

MSK / Saravana said...

வாவ்..
கிரேட்..
செம செம.. நச்சுன்னு இருக்கு..

MSK / Saravana said...

//சிம்பா கூறியது...
அருமை டீச்சர்.. //

நீங்க டீச்சரா அக்கா??

கோபிநாத் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...;))

துளசி கோபால் said...

குழந்தை சொன்னது ரொம்பச் சரி.

நல்லா இருக்கானும் அந்தப் பிஞ்சு.

ஆசிகள்.

Anonymous said...

நல்ல இருக்கு இந்த கதை/கருத்து. ஒரு ச்சின்ன கேள்வி, இப்போ எல்லாம் குலாப்ஜாமுனை வெச்சு படைக்கனுமா சாமிக்கு!

gandhi

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

அக்கா ரொம்ப நல்லாயிருக்கு.

உங்க வலைப்பூ என்க்கு அந்தோனி அண்ணன் வலைப்பூ பார்க்குபோது அறிமுகம். உங்களைப்போல அவர ஊக்கப்படுத்த யாராலும் முடியாது.

வாழ்த்துகள்.....

Karthik said...

ச்ச்சூப்ப்பர்...!
:)))

அன்புடன் அருணா said...

ஜீவன் கூறியது...
//எல்லாம் சரி குழந்தைகிட்ட
நீங்க என்ன பதில் சொன்னிங்க!
அதசொல்லுங்க!//

"சரிம்மா...போய் எறும்புக்கு ஒரு குலாப்ஜாமுன் வைம்மான்னு அவள் சொன்னாள்"
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
/
/வாவ்..
கிரேட்..
செம செம.. நச்சுன்னு இருக்கு..//

அப்பிடியா?? நன்றி..

நீங்க டீச்சரா அக்கா??
நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கோபிநாத் கூறியது...
//ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...;))//

அதென்ன ஒண்ணும் சொல்றதுக்கில்லேன்னுட்டு அதை வேற மெனக்கிட்டு சொல்லிட்டுப் போறீங்க? ஏதாவது சொல்லுங்க...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

துளசி கோபால் கூறியது...
//குழந்தை சொன்னது ரொம்பச் சரி.

நல்லா இருக்கானும் அந்தப் பிஞ்சு.

ஆசிகள்.//

நன்றி...துளசி மேடம்.முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

tkbg கூறியது...
//நல்லா இருக்கு இந்த கதை/கருத்து. ஒரு ச்சின்ன கேள்வி, இப்போ எல்லாம் குலாப்ஜாமுனை வெச்சு படைக்கணுமா சாமிக்கு!//

கருத்துக்கு நன்றி....
அச்சச்சோ குலாப்ஜாமுன் வெச்சு படைக்கக் கூடாதா சாமிக்கு?? நாங்கல்லாம் தீபாவளிக்கு என்னெல்லாம் பலகாரம் பண்றாங்களோ அதையெல்லாம் படைப்போம்பா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) கூறியது...

//அக்கா ரொம்ப நல்லாயிருக்கு.//
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்...

//உங்க வலைப்பூ என்க்கு அந்தோனி அண்ணன் வலைப்பூ பார்க்குபோது அறிமுகம். உங்களைப்போல அவர ஊக்கப்படுத்த யாராலும் முடியாது.//

எவ்வ்ளோ பண்றோம்...இதைப் பண்ண முடியாதா?:))
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Karthik கூறியது...
//ச்ச்சூப்ப்பர்...!
:)))//
நன்றி கார்த்திக்..
அன்புடன் அருணா

கோபிநாத் said...

\\ Aruna கூறியது...
கோபிநாத் கூறியது...
//ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...;))//

அதென்ன ஒண்ணும் சொல்றதுக்கில்லேன்னுட்டு அதை வேற மெனக்கிட்டு சொல்லிட்டுப் போறீங்க? ஏதாவது சொல்லுங்க...
அன்புடன் அருணா
\\

அருணாக்கா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னா அந்த அளவுக்கு எனக்கும் உங்களை போல பளாரென்று அடி வாங்கியது போல இருக்குன்னு அர்த்தம்..;))

அன்புடன் அருணா said...

கோபிநாத் கூறியது...
//அருணாக்கா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னா அந்த அளவுக்கு எனக்கும் உங்களை போல பளாரென்று அடி வாங்கியது போல இருக்குன்னு அர்த்தம்..;))//

"ஓ!! அதுக்கு இப்பிடி ஒரு அர்த்தம் இருக்கா??" ok...ok..
அன்புடன் அருணா

Tech Shankar said...

அருமைங்க.. நல்ல கதை..

நாம தினமும் சாமிக்குப் படையலும், எறும்புக்கு ஏமாற்றத்தையும் தானே படைக்கிறோம்

Maximum India said...

Child is the father of man என்று சொல்வார்கள். குழந்தைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

வாழ்த்துக்கள் அருணா

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
//அருமைங்க.. நல்ல கதை..

நாம தினமும் சாமிக்குப் படையலும், எறும்புக்கு ஏமாற்றத்தையும் தானே படைக்கிறோம்//
உண்மைதான் தமிழ்நெஞ்சம்...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Maximum India கூறியது...
//Child is the father of man என்று சொல்வார்கள். குழந்தைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.

வாழ்த்துக்கள் அருணா//

உண்மைதான் Maximum India வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

MSK / Saravana said...

//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...//

ஆஹா.. அவ்ளோ பெரிய ஆளா நீங்க..
:))

Sanjai Gandhi said...

இந்த காலத்து குழந்தைங்க கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும்.. என் அடுத்த டரியல் பாருங்க.. இப்படி ஒரு குட்டி பாப்பா பத்தியும் வரும் :)

... எறும்புக்கு வைக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கும் ஒன்னு வைங்க.. குலாப் ஜாமுனுக்காக உயிரைக் கூட தருவேன்..:)

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...//

//ஆஹா.. அவ்ளோ பெரிய ஆளா நீங்க..
:))//

பின்னே சும்மாவா???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai கூறியது...
//இந்த காலத்து குழந்தைங்க கிட்ட ரொம்ப உஷாரா இருக்கனும்.. என் அடுத்த டரியல் பாருங்க.. இப்படி ஒரு குட்டி பாப்பா பத்தியும் வரும் :)

... எறும்புக்கு வைக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. எனக்கும் ஒன்னு வைங்க.. குலாப் ஜாமுனுக்காக உயிரைக் கூட தருவேன்..:)//

முதல்லே இந்த டரியல் வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க்...குட்டிப் பாப்பா பற்றி டரியலா??எழுதுங்க எழுதுங்க!!

குலாப்ஜாமுனுக்காக உயிரைத் தருவீங்களா?
ஐயோ வேண்டாம்.....ஒரு குலாப்ஜாமுன் பார்செல்........okva?
அன்புடன் அருணா

Anonymous said...

//கருத்துக்கு நன்றி....
அச்சச்சோ குலாப்ஜாமுன் வெச்சு படைக்கக் கூடாதா சாமிக்கு?? நாங்கல்லாம் தீபாவளிக்கு என்னெல்லாம் பலகாரம் பண்றாங்களோ அதையெல்லாம் படைப்போம்பா...
அன்புடன் அருணா//

:D

gandhi

அமிர்தவர்ஷினி அம்மா said...

அசத்தல், அதுதாங்க
குழந்தையுள்ளம்.. என்ன ஒரு கேள்வி..

யோசிக்கவேண்டியவங்க யாரும் யோசிக்கறதில்லை..

நான் இதையே மறுமொழிகிறேன்.
உண்மையில் குழந்தைகளின் கேள்விகளை எதிர்நோக்க நம் படிப்பறிவெல்லாம் பத்தாது என நினைக்கிறேன். பகுத்தறிவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதெல்லாம் எனக்கு இன்னும் 2 வருசத்துல யூஸ் ஆகும்.

அன்புடன் அருணா said...

tkbg கூறியது...

//:D
gandhi//

:))
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா கூறியது...
//இதெல்லாம் எனக்கு இன்னும் 2 வருசத்துல யூஸ் ஆகும்.//

இப்போ இருந்தே சேர்த்து வைங்க....தேவைப் படும்....
கருத்துக்கு நன்றி.
அன்புடன் அருணா

புதியவன் said...

//" போங்கம்மா....உங்களுக்கு ஒண்ணுமே தெரில்லை...சாமி குலாப் ஜாமுன் சாப்பிடவே சாப்பிடாது.....அதுக்குப் போய் குலாப் ஜாமுன் சாப்பிடக் கொடுக்குறே.....எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?"//

யதார்த்தமான உண்மையை இப்பவெல்லாம் குழந்தைங்க கிட்ட தாங்க கத்துக்க முடியுது

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//யதார்த்தமான உண்மையை இப்பவெல்லாம் குழந்தைங்க கிட்ட தாங்க கத்துக்க முடியுது//

வாங்க புதியவன்..உண்மைதான்.
அன்புடன் அருணா

Divya said...

நச்சுன்னு இருக்கு:))

நட்புடன் ஜமால் said...

//எறும்புக்கு குலாப்ஜாமுன் ரொம்பப் பிடிக்கும் அதைப் போய் சாப்பிட விட மாட்டேங்குறியே?//

குழந்தைக்கு உதித்தது - மிக அருமை.

இது பற்பல இடத்திற்கு பொருந்துங்க.

பண்ம் படைத்தவர்களுக்கு பல இடங்களில் சலுகைகள் கிடைக்கும், ஆனால் உண்மையிலேயே தேவையுடைய ஏழைக்கு அவை உதவியாகக்கூட போய் சேர்வதில்லை.

ஹூம்...

அன்புடன் அருணா said...

Divya said...
//நச்சுன்னு இருக்கு:))//

நன்றி திவ்யா....பிஸியா இருந்தாலும் பின்னூட்டம் போட்டதற்கு.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அதிரை ஜமால் said...

//குழந்தைக்கு உதித்தது - மிக அருமை.

இது பற்பல இடத்திற்கு பொருந்துங்க.

பண்ம் படைத்தவர்களுக்கு பல இடங்களில் சலுகைகள் கிடைக்கும், ஆனால் உண்மையிலேயே தேவையுடைய ஏழைக்கு அவை உதவியாகக்கூட போய் சேர்வதில்லை.

ஹூம்...//

அதேதாங்க....முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

Karthik said...

//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...

Whaaat???

நிஜமாவா?
தயவுசெய்து நான் மேத்ஸ் எடுக்கிறேன்னு மட்டும் சொல்லாதீங்க மேம்.
:)

அன்புடன் அருணா said...

Karthik said...
//நான் டீச்சர் + வைஸ் பிரின்ஸிபல்பா...

//Whaaat???
நிஜமாவா?
தயவுசெய்து நான் மேத்ஸ் எடுக்கிறேன்னு மட்டும் சொல்லாதீங்க மேம்.
:)//

ஐயய்யோ இதிலே போய் பொய்யெல்லாம் சொல்வேனா?

மேத்ஸ் உங்களுக்கும் பயமா?எனக்கும் ரொம்பப் பயம்...so no maths...ok va?
அன்புடன் அருணா

anujanya said...

V.P.,

சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் போடக்கூட விஷயமிலாமல் செய்துவிட்டார்கள். நல்ல, 'குட்டி' நீதிக் கதை.

ஜீராவில் ஜாமூன்
நீரில் எறும்பு
பக்தியில் மானுடம்
பின்னூட்டங்களில் பதிவு

திளைக்கின்றது

அனுஜன்யா

Karthik said...

//so no maths...ok va?

Double OK.
:)

அன்புடன் அருணா said...

V.P.,

//சும்மா 'நச்'. தாமதமாக வந்தால் பின்னோட்டம் போடக்கூட விஷயமிலாமல் செய்துவிட்டார்கள். நல்ல, 'குட்டி' நீதிக் கதை. //

ஐயே....v.pன்னெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு????.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துருக்கீங்க....நன்றி
அன்புடன் அருணா

Anonymous said...

;)

geevanathy said...

எங்கோ படித்ததாய் ஞாபகம் உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..

///குழந்தைகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. //
உண்மை
நல்ல படைப்பு

அன்புடன் அருணா said...

முகில் said...
;)
:)appidinnaa???
aruna

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...
//எங்கோ படித்ததாய் ஞாபகம் உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..

நல்ல படைப்பு//

அச்சச்சோ நானே எழுதியதுங்க...
அன்புடன் அருணா

geevanathy said...

///அச்சச்சோ நானே எழுதியதுங்க...
அன்புடன் அருணா//
ஆகா... நீங்கள் எழுதிய குட்டிக்கதை அருமை...


உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..என்று எங்கோ படித்ததாய் ஞாபகம்


< பாவம் குழந்தை >

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...
//ஆகா... நீங்கள் எழுதிய குட்டிக்கதை அருமை...


உதவி எப்போதும் வலிமை குறைந்தவர்களுக்கே தேவைப்படுகிறது...ஆனால் கிடைப்பதில்லை..என்று எங்கோ படித்ததாய் ஞாபகம் //

அப்பாடா....அப்போ சரி.
அன்புடன் அருணா

நட்புடன் ஜமால் said...

என்னது முதல் வருகையா ... ஆஆஆஆஅ

நம்ம பின்னூட்டம் உங்களுக்கு முன்னேடிய வந்திருக்கும் பாருங்க

அதிரை ஜமால் தான்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா