நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, November 26, 2008

இதுவும் கடந்து போகும்......

" நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....

முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?

மாயக் கண்ணாடி
அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை

தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது
அந்த அடைமழையில்
நனையும் வரை

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!

57 comments:

தமிழ் பிரியன் said...

இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிகின்றீர்கள்!

புதியவன் said...

ரொம்ப அழகா இருக்கு இந்த உலகம் இப்ப..

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
//இந்த கண்ணாடியில் நீங்கள் தெரிகின்றீர்கள்!//

அட மீண்டும் "நானா"?????????????.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//ரொம்ப அழகா இருக்கு இந்த உலகம் இப்ப..//

வாங்க புதியவன்...அழகாவா இருக்கு இப்போ??? அப்ப சரி.
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

அருமை அருமை.

//"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!//

பாராட்டுக்கள் அருணா!

Karthik said...

//தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

சூப்பர்ப் அருணா.

Saravana Kumar MSK said...

//நான்" எனும் பாதரசம் பூசிய
மாயக் கண்ணாடி மனம்.....
முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?
மாயக் கண்ணாடி அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை
தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது//

இதுவரை திருப்பி திருப்பி படித்தேன். ஏதேதோ பிம்பங்கள் நிழலாடின..

Saravana Kumar MSK said...

VP அக்கா.. சூப்பர்.. :)

dharshini said...

nice...

//முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்?//

உன் குத்தமா என் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல‌

chummaaaaa....

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
அருமை அருமை.
பாராட்டுக்கள் அருணா!

ரொம்ப நன்றிங்க...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Karthik said...
//சூப்பர்ப் அருணா.//

wow.....நிஜம்மாவா???
thanx kaarthik.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//இதுவரை திருப்பி திருப்பி படித்தேன். ஏதேதோ பிம்பங்கள் நிழலாடின....//

என்னென்ன பிம்பங்கள் சரவணன்??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//VP அக்கா.. சூப்பர்.. :)//

என்னப்பா?? புதுசா VP எல்லாம் போட்டுக்கிட்டு??? அக்கா.. சூப்பர்.. :) போதுமே???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

dharshini said...

//nice...//

Tank U....Tank U!!!

//உன் குத்தமா என் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல‌

chummaaaaa....//

சும்மான்னு தெரியுமே..
அன்புடன் அருணா

புதுகை.அப்துல்லா said...

அக்கா இதுவும் கடந்து போகும் அப்பிடிங்கிற வார்த்தை வருத்தத்தில் புலம்பும் என் நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்ற வார்த்தை.

மிகவும் அருமை :)

பாச மலர் said...

//முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்//

இந்த வரிகள் நல்லாருக்கு அருணா..

அன்புடன் அருணா said...

புதுகை.அப்துல்லா said...

//அக்கா இதுவும் கடந்து போகும் அப்பிடிங்கிற வார்த்தை வருத்தத்தில் புலம்பும் என் நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்ற வார்த்தை.

மிகவும் அருமை :)//

நன்றி அப்துல்லா..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பாச மலர் said...
//முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்//

//இந்த வரிகள் நல்லாருக்கு அருணா..//

நன்றி பாசமலர்.
அன்புடன் அருணா

நவநீதன் said...

// முகம் பார்க்கும் மாயக் கண்ணாடியில்
உலகம் பார்க்க நினைத்தது யார் குற்றம்? //
உலக உருண்டைய காமிச்சிருன்தீங்கன்னா.....
தெரிஞ்சிருக்கும்ல...?
:)

அகந்தையை அழிப்பதுங்கிறது ரொம்ப பெரிய விஷயம்...
அதை ரொம்ப அழகா சின்ன கவிதையில சொல்லியிருகீங்க...

Divyapriya said...

// அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி//

ஆஹா அருமையான கற்பனை...

அன்புடன் அருணா said...

நவநீதன் said...
//அகந்தையை அழிப்பதுங்கிறது ரொம்ப பெரிய விஷயம்...
அதை ரொம்ப அழகா சின்ன கவிதையில சொல்லியிருகீங்க...//

ஆமாமா....ரொம்பப் பெரிய விஷயம்தான்....நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Divyapriya said...
//ஆஹா அருமையான கற்பனை...//

அப்பிடியா??? ரொம்ப நன்றி...
அன்புடன் அருணா

ஸாவரியா said...

"தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........

தப்பியோட முடியாத பிம்பங்கள்
விட்டு விலகாத "நான்" பிம்பங்கள்
சுகமாய்த்தான் இருந்தது"

வெகு அருமை! உங்கள் எழுத்துக்கள்...!!!
இன்னும் முகம் பார்க்க
சாரி...சாரி
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)))

ஸாவரியா said...

BTW, நான் கொடுத்தது
பூங்கொத்து :))))

அதுல,..அந்த ரோஜா அழகா இருக்குல :)))

கபீஷ் said...

கவிதை நல்லாருக்கு (எனக்குப் புரிஞ்சவரை, எனக்குக் கொஞ்சம் ரசனை கம்மி) தலைப்பு அருமை

நட்புடன்
கபீஷ்

கபீஷ் said...

மீ த 25த்!

கபீஷ் said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க...........//


இந்தாங்க பூங்கொத்து!! :-) :-)

அன்புடன் அருணா said...

ஸாவரியா said...
//வெகு அருமை! உங்கள் எழுத்துக்கள்...!!!
இன்னும் முகம் பார்க்க
சாரி...சாரி
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் :)))//

நன்றி ஸாவரியா....முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.....மாயக்கண்ணாடிதானே ???? இன்னும் முகம் பார்க்கலாம்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ஸாவரியா said...
//BTW, நான் கொடுத்தது
பூங்கொத்து :))))

அதுல,..அந்த ரோஜா அழகா இருக்குல :)))//

எது? அந்த மஞ்சள் ரோஜாதானே??? ம்ம்ம் ரொம்ப அழகு...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கபீஷ் said...
//கவிதை நல்லாருக்கு (எனக்குப் புரிஞ்சவரை, எனக்குக் கொஞ்சம் ரசனை கம்மி) தலைப்பு அருமை//

நன்றி கபீஷ்...(எனக்குக் கொஞ்சம் ரசனை கம்மி)அப்பிடியா??
அன்புடன் அருணா

தமிழ்நெஞ்சம் said...

நான் என்கிற அகந்தையை உங்கள் கண்ணாடி பிம்பம் கலைத்துவிட்டது.

ஆகா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்பத்தான் தெளிவா தெரியுது உலகம் கண்ணாடி முன்னாடி.

நல்லா சொல்லியிருக்கீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதுவும் கடந்து போகும்

நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம்.

Aruna said...

தமிழ்நெஞ்சம் said...
//நான் என்கிற அகந்தையை உங்கள் கண்ணாடி பிம்பம் கலைத்துவிட்டது.
ஆகா!//

நன்றி தமிழ்நெஞ்சம்...நிஜம்தான்...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//இப்பத்தான் தெளிவா தெரியுது உலகம் கண்ணாடி முன்னாடி.

நல்லா சொல்லியிருக்கீங்க.//

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா ...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//இதுவும் கடந்து போகும்

நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம்.//

நான் கூட அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்ளும் ஒரு வாசகம் இதுதான் அமிர்தவர்ஷினி அம்மா ..
அன்புடன் அருணா

ஸ்ரீமதி said...

அழகு :))

ஸ்ரீமதி said...

//வந்தீங்க...படிச்சீங்க......
சும்மா பார்த்துட்டு போகாதீங்க.....
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க...........
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க....
அன்புடன் அருணா//

இந்தாங்க பூங்கொத்து.. வாங்கிக்கோங்க அக்கா.. ;))))))

அன்புடன் அருணா said...

ஸ்ரீமதி said...
//அழகு :))//
அச்சச்சோ ஸ்ரீமதி...என்னம்மா ரொம்ப நாளா ஆளையே காணோம்???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ஸ்ரீமதி said...
//இந்தாங்க பூங்கொத்து.. வாங்கிக்கோங்க அக்கா.. ;))))))//

பூங்கொத்தா??? கொடுங்க....கொடுங்க.....வாங்கிக்கிறேன்.
அன்புடன் அருணா

பொடியன்-|-SanJai said...

//தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........//

வாவ்.. அருமை.. :)

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai said...

//வாவ்.. அருமை.. :)//
வாப்பா சஞ்சய்....என்ன ஆளையே காணோம்னு பார்த்தேன்.
அன்புடன் அருணா

பொடியன்-|-SanJai said...

இப்போல்லாம் வலைப்பூக்கள் பக்கம் வர அவ்ளோ நேரம் இல்லைக்கா.. அதான் சரியா வர முடியலை.. புது பதிவு போட்டா ஒரு மெயில் தட்டி விடுங்க.. ஆஜர் ஆய்டறேன்.. நண்பர்களின் பதிவுகள் இப்போ இப்படி தான் படிக்கிறேன். :)

தங்கராசா ஜீவராஜ் said...

////மாயக் கண்ணாடி அந்தப் பாதரசம் இழக்கத் தயாராயில்லை
உலகம் காட்டவும் தயாராயில்லை
தனக்கான முகங்களை மட்டும்
தப்பிக்க விடாமல் தன்னுள்
பத்திரப் படுத்திக் கொண்டேயிருந்தது...........///

அருமையான கவிதை பாராட்டுக்கள் அருணா

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai said...
//இப்போல்லாம் வலைப்பூக்கள் பக்கம் வர அவ்ளோ நேரம் இல்லைக்கா.. அதான் சரியா வர முடியலை.. புது பதிவு போட்டா ஒரு மெயில் தட்டி விடுங்க.. ஆஜர் ஆய்டறேன்.. நண்பர்களின் பதிவுகள் இப்போ இப்படி தான் படிக்கிறேன். :)//

ok.... ok.......தட்டி விட்டுரலாமே மெயில்.....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...

//அருமையான கவிதை பாராட்டுக்கள் அருணா//

நன்றி தங்கராசா.
அன்புடன் அருணா

பிரபு said...

அந்த அன்பெனும் அடைமழையில்
நனைந்தது மாயக் கண்ணாடி
உதிர்ந்து கரைந்தது பாதரசம்
"நான்" இழந்தது மாயக் கண்ணாடி

ஹா..............
அழகிய உலகம் தெரிந்தது முன்னாடி...!!!!


///////////

நல்லாயிருக்கு

அன்புடன் அருணா said...

பிரபு said...


//நல்லாயிருக்கு//

வாங்க பிரபு....
நன்றி.
அன்புடன் அருணா

ஸ்ரீமதி said...

//அன்புடன் அருணா said...
ஸ்ரீமதி said...
//அழகு :))//
அச்சச்சோ ஸ்ரீமதி...என்னம்மா ரொம்ப நாளா ஆளையே காணோம்???
அன்புடன் அருணா//

கொஞ்சம் வேலை இருந்ததுன்னு நான் சொல்லுவேனாம்.. நீங்க நம்புவீங்கலாம் அப்பதான் சமத்து அக்கா... ஓகேவா அக்கா?? ;)))

ஸ்ரீமதி said...

'பனிவிழும் இரவு நனைந்தது நிலவு'-ன்னு பாடத் தோணுது அக்கா.. உங்க தளம் பார்த்தா.. :)) ரொம்ப அழகா இருக்கு.. :))

அன்புடன் அருணா said...

ஸ்ரீமதி said...
கொஞ்சம் வேலை இருந்ததுன்னு நான் சொல்லுவேனாம்.. நீங்க நம்புவீங்கலாம் அப்பதான் சமத்து அக்கா... ஓகேவா அக்கா?? ;)))

ok ok....நம்பிட்டேன் நம்பிட்டேன்...நான் சமத்து அக்காவா இப்போ????

அன்புடன் அருணா said...

ஸ்ரீமதி said...
//'பனிவிழும் இரவு நனைந்தது நிலவு'-ன்னு பாடத் தோணுது அக்கா.. உங்க தளம் பார்த்தா.. :)) ரொம்ப அழகா இருக்கு.. :))//

ஐ...நல்லாருக்கா? யாராவது சொல்லமாட்டாங்களான்னு நினைச்சுட்டே இருந்தேன்..

உலகத் தமிழ் வானொலி said...

பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு!

அன்புடன் அருணா said...

வாங்க உலகத் தமிழ் வானொலி....நன்றி.
அன்புடன் அருணா

T.V.Radhakrishnan said...

ரொம்ப அழகா இருக்கு

vignath said...

madem
ur blog is good.
tamil womens should be awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.
on other side of tamil medias non tamil womens{hindu,telungu,malyalam,etc} are grandly invited my tamil media persons and they earn enjoy,get fame by tamil medias.

govindaswami said...

ur bloug is good.
do u have awerness about male domination supportive psychatist doctors. their articles are often published in tamil magazeens{kumudham,vkadan,kumkumam etc}.
their opnions are often oppose to women self confidence,equality and democrasy.
tamil womens should be awer of those things .in english magazeens like cosmopolitant,feminna etc threr are psychatist doctors write supportive to women democrasy equality,and self confidence etc.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா