நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, December 12, 2008

என் மறதியும்.... 12B-யின் மறதியும்....
டூத் ப்ரஷ் எடுக்க
அடுப்படி போய்

காப்பியில் கொஞ்சம்
உப்பு போட்டு

குழம்பில் நிறைய
சீனி போட்டு

ப்ஃரிட்ஜைத் திறந்து
சீப்பைத் தேடி

முகக் க்ரீம் எடுத்து
தலையில் தடவி

தேங்காய் எண்ணையை
முகத்தில் அப்பி

நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து

ஒரு கால் செருப்பிலும்
ஒரு கால் ஷூவிலும்
நுழைத்து

ஓடிப் போய்
மூச்சு வாங்கி.....
நின்று நிமிர்ந்தால்...
ஹ்ம்ம்...

கண்ணெதிரே 12B
ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து
கடந்து சென்றது.....

76 comments:

தமிழ் பிரியன் said...

நீங்களே இப்படி மறதி கேஸா இருந்த பஸ் என்ன செய்யும் டீச்சரம்மா.. ;)

Anthony Muthu said...

அடாடா! ஒரு காலைப் பொழுதின் அவசரத்தை இப்படியும் கூட எழுத முடியுமா?

பெரும்பாலான வேலைக்குப் பொகும் நடுத்தரவர்க்கப் பெண்களின் நிலை இதுதான்.

லேசாக மனதுக்குள் வலியையும் உருவாக்குகிறது.

கவிதை அருமை.

தங்கராசா ஜீவராஜ் said...

\\\\காப்பியில் கொஞ்சம்
உப்பு போட்டு

குழம்பில் நிறைய
சீனி போட்டு\\\

பாவம்... வீட்டில் இருப்பவர்கள்

//ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து///

அருமை.... வாழ்த்துக்கள்....

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
/நீங்களே இப்படி மறதி கேஸா இருந்த பஸ் என்ன செய்யும் டீச்சரம்மா.. ;)//

அதுசரி பஸ் என்ன செய்யும்?
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Anthony Muthu said...
//லேசாக மனதுக்குள் வலியையும் உருவாக்குகிறது.
/கவிதை அருமை.//

இதுக்கெல்லாம் போய் வலிக்கலாமா மனசு?
கமென்டியதற்கு நன்றி அந்தோணி.
அன்புடன் அருணா

T.V.Radhakrishnan said...

உடன் வந்த

ஆட்டோவில் ஏறி

அலுவலகம் வந்தால்

நான் தான் முதல்.

அன்புடன் அருணா said...

தங்கராசா ஜீவராஜ் said...
\\\\காப்பியில் கொஞ்சம்
உப்பு போட்டு

குழம்பில் நிறைய
சீனி போட்டு\\\

//பாவம்... வீட்டில் இருப்பவர்கள்//
ஹாஹஹஹா.....

//ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து///

//அருமை.... வாழ்த்துக்கள்....//

நன்றி ஜீவராஜ்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
//உடன் வந்த
ஆட்டோவில் ஏறி
அலுவலகம் வந்தால்
நான் தான் முதல்.//

அட....இந்த ஐடியா மறந்து போச்சே...
அன்புடன் அருணா

Saravana Kumar MSK said...

காலை நேர படபடப்பு இப்படித்தான் இருக்கும்.. ஆனா எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை.. Mostly i'll be working in night shifts.. :)

Saravana Kumar MSK said...

பனி விழும் மலர் வனம் அழகா இருக்கே.. எப்படி பண்ணினீங்க..??

Divya said...

morning hurry burry அ ரொம்ப ரொம்ப ரியலிஸ்டிக்கா........அருமையா எழுதியிருக்கிறீங்க:))

சூப்பர்!!

goma said...

அருமையான அம்னீஷியா.அருணாவுக்கு பதில் எழுத அகரத்தில் பின்னூட்டம் சொடுக்கினேன்,எதற்கு அருணா என்று யோசித்து பதிவைப் பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்தேன்...என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் யாருக்கு செய்கிறோம் என்ற குழப்பம் வட்டமடிக்க வாழ்ந்து கொண்டிருக்கும் அழகான அம்னிஷியாவுடன்

goma said...

அருமையான அம்னீஷியா.அருணாவுக்கு பதில் எழுத அகரத்தில் பின்னூட்டம் சொடுக்கினேன்,எதற்கு அருணா என்று யோசித்து பதிவைப் பத்திரமாய் நெஞ்சினில் பதுக்கி வைத்தேன்...என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் யாருக்கு செய்கிறோம் என்ற குழப்பம் வட்டமடிக்க வாழ்ந்து கொண்டிருக்கும் அழகான அம்னிஷியாவுடன்

Karthik said...

கலக்கலா இருக்குங்க..!

இது எனக்கும் தினமும் நடக்கிறது. எனக்கு தோணலியே இப்படிலாம் கவிதைக்கலாம்னு! அதுக்கெல்லாம் ஒரு கவிஞரோட மனநிலை வேணும் போல...

நீங்க இப்படி போறதுகூட நல்லதுதான். 'ஏன் லேட்?'னு க்ளாஸ் டீச்சர் கேட்கும்போது 'ப்ரின்ஸியே இப்பதான் வராங்க'ன்னு முணுமுணுப்போம்.
:)

isakki said...

hello friend, i just come across ur page.it is really nice interesting too and this is maha

கார்க்கி said...

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க"

ஒரு பூங்கொத்து பார்ச‌ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

நான் கார்த்தி said...

அட பஸ்ஸு பூட்ட இன்னான்றேன் ...
லீவப் போடுங்க ...வூட்ல ரெஸ்ட் எடுங்க ...,
ரெடிமேடா இருக்கவே இருக்கு ,
As i am suffering from fever...an...so..an
டீச்சர் லீவு போடக் கூடாதுன்னு என்ன சட்டமா ?

கோபிநாத் said...

கவுஜ...கவுஜ...கலக்கல் கவுஜ ;))

Vishnu... said...

ரொம்ப அருமையான கவிதை அருணா ..

அவசர வாழ்கையில் மறதி
தவிர்க்கமுடியாது ஒன்று தான் ...
அனைவருக்கும் நேரும் ..

கவிதை மிக இயல்பாக இருக்கிறது ...

அன்புடன்
விஷ்ணு

MayVee said...

"நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து"

sorry.... i cant relate myself with this. i stayed in hostel from 6th std. office also not much far.
anyways it was good post.

அதிரை ஜமால் said...

\\நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து\\

சரியாத்தானே செய்திருக்கீக ...

தப்பா செய்துட்டுமோன்னு மறந்துட்டு சொல்லிட்டியளா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//காலை நேர படபடப்பு இப்படித்தான் இருக்கும்.. ஆனா எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை.. Mostly i'll be working in night shifts.. :)//

night shiftsகு கூட கிளம்பணுமே சரவணா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Divya said...
//morning hurry burry அ ரொம்ப ரொம்ப ரியலிஸ்டிக்கா........அருமையா எழுதியிருக்கிறீங்க:))

சூப்பர்!!//

அப்பிடியா TanK U திவ்யா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

goma said...
//என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் யாருக்கு செய்கிறோம் என்ற குழப்பம் வட்டமடிக்க வாழ்ந்து கொண்டிருக்கும் அழகான அம்னிஷியாவுடன்//

நன்றி goma..அப்பப்போ இந்தமாதிரி அம்னிஷியா இல்லைன்னா வாழ முடியாதே goma.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Karthik said...
//நீங்க இப்படி போறதுகூட நல்லதுதான். 'ஏன் லேட்?'னு க்ளாஸ் டீச்சர் கேட்கும்போது 'ப்ரின்ஸியே இப்பதான் வராங்க'ன்னு முணுமுணுப்போம்.
:)//

ஐயே!சும்மா கவிதை எழுதினால் அப்பிடியே லேட்டாப் போறதா அர்த்தமா???
நான் நேரம் தவறாமைக்குப் பெயர் போனவளாக்கும் ஜெய்ப்பூரில் தெரியுமா??
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

isakki said...
//hello friend, i just come across ur page.it is really nice interesting too and this is maha//

Thank you maha for the first visit and comment...
anbudan aruNaa

அன்புடன் அருணா said...

கார்க்கி said...

//ஒரு பூங்கொத்து பார்ச‌ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

பார்ச‌ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கிடைச்சுது கார்க்கி.
Tank U!!.
anbudan aruna

அன்புடன் அருணா said...

நான் கார்த்தி said...
//அட பஸ்ஸு பூட்ட இன்னான்றேன் ...
லீவப் போடுங்க ...வூட்ல ரெஸ்ட் எடுங்க ...,
ரெடிமேடா இருக்கவே இருக்கு ,
As i am suffering from fever...an...so..an
டீச்சர் லீவு போடக் கூடாதுன்னு என்ன சட்டமா ?//

அட பஸ்ஸு பூட்ட இன்னான்றேன் ....ஆட்டோ இருக்கே???அதுலே ஸ்கூல் போயிட்டேனே...
கார்த்தி...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//கவுஜ...கவுஜ...கலக்கல் கவுஜ ;))//

அச்சச்சோ கவுஜயா?? கவிதை இல்லையா?
அன்புடன் அருணா

செந்தழல் ரவி said...

12b யில போன காலத்தை நினைவுபடுத்திட்டீங்க :))

பொடியன்-|-SanJai said...

/கண்ணெதிரே 12B
ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து
கடந்து சென்றது..... //

இது படிக்கிற வரைக்கும் எதோ காதல் கிறுக்குக் கவிதைன்னு நினைச்சிட்டே படிச்சேன்.. ரகளையா இருக்குக்கா.. :))

Shakthiprabha said...

Simple n sweet.

//முகக் க்ரீம் எடுத்து
தலையில் தடவி//

இதை லிட்டெரெல் ஆக யோசித்தால் பயமாய் இருக்கிறது. :)


//நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து//

நல்லவேளை இதில் மட்டும் மறந்தும் உல்டாபுல்டா வேலை நடக்கவில்லை. :D அப்புறம் மதியம் ஹாண்ட்பேக் கதி என்ன ஆவது!

ரொம்ப ரசித்த்ப்படித்தேன்.

I could esp recollect my exp on missing those god damned ptc buses in fraction of a second. :sigh:

Shakthiprabha said...

Simple n sweet!

// முகக் க்ரீம் எடுத்து
தலையில் தடவி

தேங்காய் எண்ணையை
முகத்தில் அப்பி //

லிட்டெரெல் ஆக நினைச்சால் பயமா இருக்குங்க ! :P

//நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து//

நல்லவேளை இது மட்டும் சரியாய் அமைந்துவிட்டது. இல்லாவிட்டால் ஹேண்ட்பேக் கதி பாவம்!

__

ரொம்ப ரசித்துப் படித்தேன். ஏதோ ஒரு பழைய படத்தில் ரஜினிகாந்த்க்கு மறதி வந்துவிடுவதால், வேட்டி உடுத்தமறந்துவிடுவார். உங்கள் இடுகையைப் படித்ததும் அந்த காட்சி மனதில் வந்து போனதும்.

Also, It took me to those good old days when I had myself been in similar situation of letting those damned PTC buses go. A slip between the cup and the lip, rather, slip between the footboard and road-runner :))

அன்புடன் அருணா said...

செந்தழல் ரவி said...
//12b யில போன காலத்தை நினைவுபடுத்திட்டீங்க :))//

ஓ நீங்கள் முன்னாள் 12B பயணியா???மலரும் நினைவுகளா? வருகைக்கு நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

செந்தழல் ரவி said...
//12b யில போன காலத்தை நினைவுபடுத்திட்டீங்க :))//

ஓ நீங்க 12b பயணியா?? மலரும் நினைவுகளா???
வருகைக்கு நன்றி.
அன்புடன் அருணா

Sharepoint the Great said...

கவிதையில் நிறைந்த எதார்த்தம் வெளிப்படுகிறது.
அருமையான புகைப்படத்துடன் கூடிய அழகான கவிதை.
நன்றிகள்

வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai said...
/கண்ணெதிரே 12B
ஒரு வினாடி முன்னாடி
என்னை ஏற்ற மறந்து
கடந்து சென்றது..... //

//இது படிக்கிற வரைக்கும் எதோ காதல் கிறுக்குக் கவிதைன்னு நினைச்சிட்டே படிச்சேன்.. ரகளையா இருக்குக்கா.. :))//

அப்பாடா...நல்லவேளை கடைசி வரைக்கும் படிச்சீங்களே....நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Vishnu... said...
//ரொம்ப அருமையான கவிதை அருணா ..

அவசர வாழ்கையில் மறதி
தவிர்க்கமுடியாது ஒன்று தான் ...
அனைவருக்கும் நேரும் ..

கவிதை மிக இயல்பாக இருக்கிறது ...
//
நன்றி விஷ்ணு.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அதிரை ஜமால் said...
\\நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து\\

//சரியாத்தானே செய்திருக்கீக ...

தப்பா செய்துட்டுமோன்னு மறந்துட்டு சொல்லிட்டியளா//

ஐயய்ய்யே....நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
நேற்றே கழுவப் போட்டு இருக்கணுமே ஆதிரை.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Shakthiprabha said...
Simple n sweet.

//நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
கழுவப் போட்டு
இன்றைய டிபன் பாஃக்ஸைக்
கைப்பையில் திணித்து//

நல்லவேளை இதில் மட்டும் மறந்தும் உல்டாபுல்டா வேலை நடக்கவில்லை. :D அப்புறம் மதியம் ஹாண்ட்பேக் கதி என்ன ஆவது!
ரொம்ப ரசித்த்ப்படித்தேன்.
I could esp recollect my exp on missing those god damned ptc buses in fraction of a second. :sigh://

வருகைக்கு நன்றி சக்திப் பிரபா.
"ஐயய்ய்யே....நேற்றைய டிபன் பாஃக்ஸைக்
நேற்றே கழுவப் போட்டு இருக்கணுமே "
ரசித்து படித்ததற்கு நன்றி...
அன்புடன் அருணா

நிமல்-NiMaL said...

மிகவும் ரசித்துப் படித்தேன்.

[இது ஒரு பதில் பூங்கொத்து... :)]

gayathri said...

ivalavu kasta pattu than neengalem velaiku porengala .athuku than enna mathiri vetuku pakkathulaye vela seiyanum

kavithai nalla iruku

அன்புடன் அருணா said...

நிமல்-NiMaL said...
//மிகவும் ரசித்துப் படித்தேன்.
[இது ஒரு பதில் பூங்கொத்து... :)]//

ரசித்துப் படித்ததற்கு ரொம்ப நன்றி நிமல்..
ஓ இது பதிலுக்குப் பதிலா???

அன்புடன் அருணா said...

gayathri said...
//ivalavu kasta pattu than neengalem velaiku porengala .athuku than enna mathiri vetuku pakkathulaye vela seiyanum
வருகைக்கு நன்றி கவிதா...ஐயே...நான் இவ்வ்ளோ கஷ்டப் பட்டு வேலைக்குப் போகலை....ஜம்மென்றுதான் போகிறேன்..இவ்வ்ளோ கஷ்டப் பட்டு வேலைக்குப் போகிறவங்களைப் பற்றி நினைத்து எழுதினேன்.
அன்புடன் அருணா

இனியவள் புனிதா said...

வித்தியாசமா...இருக்கு கவிதை. :-)

SK said...

நச்

புதுகை.அப்துல்லா said...

மாநிலம் விட்டு மாநிலம் போனாலும் நீங்க இன்னும் சென்னையை மறக்காம இருக்கீங்களே அக்கா :)

அன்புடன் அருணா said...

இனியவள் புனிதா said...
//வித்தியாசமா...இருக்கு கவிதை. :-)//

வருகைக்கு நன்றி...புனிதா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

SK said...
//நச்//

உங்க கமென்ட் கூட நச்!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

புதுகை.அப்துல்லா said...
//மாநிலம் விட்டு மாநிலம் போனாலும் நீங்க இன்னும் சென்னையை மறக்காம இருக்கீங்களே அக்கா :)//

வேர்களை மறக்கமுடியுமா தம்பி அப்துல்லா???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//பனி விழும் மலர் வனம் அழகா இருக்கே.. எப்படி பண்ணினீங்க..??//

ஏதோ ஒரு சைட் போய் சைன் பண்ணி எதையோ காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணினேன்....இப்போ அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.கிடைத்தவுடன் சொல்றேன் சரியா சரவணா?
அன்புடன் அருணா

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா. காலை நேரப் பரபரப்பை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள். ஆனால் பஸ்தான் நிற்காமல் போய் விட்டது:(!

வாழ்த்துக்கள்:))!

Saravana Kumar MSK said...

ok.. thank you sis.. :)

PoornimaSaran said...

இஸ்கூல் குழந்தைகளுக்கு பாடத்தை மாத்தி சொல்லித் தராம இருந்த போதுஞ் சாமீ
:((

gayathri said...

அன்புடன் அருணா said...
gayathri said...
//ivalavu kasta pattu than neengalem velaiku porengala .athuku than enna mathiri vetuku pakkathulaye vela seiyanum
வருகைக்கு நன்றி கவிதா...ஐயே...நான் இவ்வ்ளோ கஷ்டப் பட்டு வேலைக்குப் போகலை....ஜம்மென்றுதான் போகிறேன்..இவ்வ்ளோ கஷ்டப் பட்டு வேலைக்குப் போகிறவங்களைப் பற்றி நினைத்து எழுதினேன்.
அன்புடன் அருணா

iyyo en name kavitha illa gayathri pa

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா இருக்கு அருணா. முன்னாடியே ஒரு கமெண்ட் போட்ட ஞாபகம். Lost in transit :).

அனுஜன்யா

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
///ஆனால் பஸ்தான் நிற்காமல் போய் விட்டது:(!
வாழ்த்துக்கள்:))!//

பஸ் நிற்காமல் போய் விட்டதற்கா வாழ்த்துக்கள்???
ம்ம்ம்ம் சும்மா....சும்மா.
வருகைக்கு நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//ok.. thank you sis.. :)//

My pleasure saravana!
anbudan aruna

அன்புடன் அருணா said...

PoornimaSaran said...
//இஸ்கூல் குழந்தைகளுக்கு பாடத்தை மாத்தி சொல்லித் தராம இருந்த போதுஞ் சாமீ
:((///

அச்சச்சோ...இப்பிடில்லாம் sudden conclusionக்கு வந்துரக் கூடாது....பூர்ணிமா.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

gayathri said...
//வருகைக்கு நன்றி கவிதா...//
//iyyo en name kavitha illa gayathri pa//

பார்த்தீங்களா காயத்ரி...நாந்தான் சொன்னேன்லே எனக்குக் கொஞ்சம் மறதி ஜாஸ்தின்னு....sorryppaa..
அன்புடன் அருணா

ச.முத்துவேல் said...

நடுத்தரக்குடும்ப,மாநகர வாழ்க்கைப் பதிவு.அருமை,சகோதரி.

அன்புடன் அருணா said...

அனுஜன்யா said...
//ரொம்ப நல்லா இருக்கு அருணா. முன்னாடியே ஒரு கமெண்ட் போட்ட ஞாபகம். Lost in transit :). //

அடிக்கடி transitலே கமெண்ட் தொலையுது போலிருக்கு அனுஜன்யா....hahaha..வருகைக்கு நன்றி..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ச.முத்துவேல் said...
//நடுத்தரக்குடும்ப,மாநகர வாழ்க்கைப் பதிவு.அருமை,சகோதரி.//

நன்றி முத்துவேல்.
அன்புடன் அருணா

பாச மலர் said...

கலக்கல் அருணா..

அன்புடன் அருணா said...

வாங்க பாசமலர்....வரல்லையேன்னு தேடிக்கிட்டே இருந்தேன்
அன்புடன் அருணா

சுரேகா.. said...

ஒவ்வொரு மறதியும் யதார்த்தமாக இருந்தது..!

இப்படித்தான் விடிகின்றன பல சென்னைப் பெண்களின் காலைகளும்..!

நல்ல வரிகளும் ..படமும்..!
வாழ்த்துக்கள்ங்க!

அன்புடன் அருணா said...

சுரேகா.. said...
//ஒவ்வொரு மறதியும் யதார்த்தமாக இருந்தது..!//

வாங்க சுரேகா....ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க....நன்றி.
அன்புடன் அருணா

அதிரை ஜமால் said...

மறந்திடாதீங்க

சீக்கிரம் எழுதுங்க

அதிரை ஜமால் said...

மறந்திடாதீங்க

சீக்கிரம் எழுதுங்க

அதிரை ஜமால் said...

மறந்திடாதீங்க

சீக்கிரம் எழுதுங்க

அன்புடன் அருணா said...

அதிரை ஜமால் said...
//மறந்திடாதீங்க

சீக்கிரம் எழுதுங்க//

எனக்குக் கொஞ்சம் மறதி அதிகம்தான்...அதற்காக இப்பிடியா மூன்றுதடவை நினைவு படுத்துவது?
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

அதிரை ஜமால் said...
//மறந்திடாதீங்க
சீக்கிரம் எழுதுங்க//

என்னை மறந்திடாதீங்கன்னு சொல்லிட்டு நீங்க மறந்து போய் மூன்று தடவை ஒரே கமென்ட் போட்டிருக்கீங்க?????
அன்புடன் அருணா

TKB Gandhi said...

நல்லா இருந்ததுங்க அருணா :)

அன்புடன் அருணா said...

TKB Gandhi said...
//நல்லா இருந்ததுங்க அருணா :)//

நன்றி TKB Gandhi
அன்புடன் அருணா

குடுகுடுப்பை said...

கவுஜ கவுஜ

அன்புடன் அருணா said...

குடுகுடுப்பை said...
//கவுஜ கவுஜ//

வாங்க...வாங்க குடுகுடுப்பை...
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா