நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Monday, November 3, 2008
சொசெசூ வைத்து வசமாக மாட்டிக் கொண்டேன்!!!
என்னை இந்தக் கொலைவெறித் தொடருக்கு(பெயர் உபயம்:பொடியன் சஞ்செய்) அழைத்த
சரவணகுமாருக்கும்,கார்த்திக்கும்,அழைக்க மறந்து பின் திடீர் நினைவு வந்து அழைத்த பொடியன் சஞ்செய்க்கும் நன்றி!நன்றி!நன்றி!!
1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
அது எங்க அம்மாவைத்தான் கேட்கவேண்டும்....
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
சரியாகத் தெரியவில்லை...அடிமைப் பெண் படமாக இருக்கலாம்.முதலில் பார்த்த படமான்னு நினைவில்லை.ஆனால் மனதில் முதல்ல பதிந்த படம் குழந்தைக்காக....அதில் வரும் குழந்தை நட்சத்திரம் என்னை மாதிரியே இருப்பதாக அம்மா சொல்ல, வளர்ந்த பிறகும் அந்தப் படத்தைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட படம்.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
என்னங்க அந்த சின்னூண்டு வயசிலெ என்னா உணர முடியும்?
எப்போடா இடைவேளை வரும்....இந்த இருட்டிலிருந்து விடுதலை கிடைக்கும்? அது தவிர கொறிக்க ஏதானும் கிடைக்குமே....
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சிவாஜி...அதிசயமாக ஜெய்ப்பூரில் இனாஃஸில் தமிழ் படம்...தெரிந்தவுடன் தெரிஞ்ச எல்லோருக்கும் தொலைபேசியில் சொல்லிவிட்டு போய்ப் பார்த்த படம்....ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன்...
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன்....படம் அவ்வளவாக என்னை இம்ப்ரெஸ் செய்யாவிட்டாலும் நண்பனைப் பற்றி ரஜினி சொல்லும் காட்சிகளில் நெகிழ்ந்தேன்.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மஹாநதி
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
சும்மா அரசியலே நமக்கு ஆகாது....இதிலே சினிமா அரசியல் வேறா??
போங்கப்பா...
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
இரட்டை வேடம், மூன்று வேடப் படங்கள்,அபூர்வ சகோதரர்கள்,அப்புறம் சூர்யா ஒரு படத்தில் கூன் முதுகோட வருவாரே.(பெயர் நினைவுக்கு வரவில்லை)அந்தப் படம் இவையெல்லாம் என்னை வியக்க வைத்தவை.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
சுத்தமாக இல்லை.பயங்கர போர்.
7. தமிழ்ச்சினிமா இசை?
இசை என் சுவாசம்....என்ன கோபமாக இருந்தாலும் இசை கேட்டவுடன் மனது ஒரு உற்சாகத் துள்ளலுக்கு மாறிவிடும்.அதிகாலை அமைதியில் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்.எல்லாம் தமிழ்ச் சினிமா இசையும்,ஹிந்தி சினிமா இசையும்தான்.
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
மனதைப் பாதித்த, தொட்ட படங்கள் நிறைய....அதில் சில...நூல்வேலி,அவர்கள்,கன்னத்தில் முத்தமிட்டால்,சொல்லத்தான் நினைக்கிறேன்,ஹிந்தியில் Black,lamhe,இன்னும் நிறைய.....
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
ஹிந்திப் படம் பார்ப்பேன் ....வேற வழி.??? ஆங்கிலப் படங்கள் ரொம்ப ஸ்பெஷலான படங்கள் பார்ப்பதுண்டு....
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சினிமாத் தொடர்பு....ம்ம் என்னுடைய இந்தக் கவிதையைப் படித்துத் தான் குருவி படம் எடுத்ததாக "ஜி" அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.....
அட..நீங்க வேற...அப்பப்ப விசுவின் மக்கள் அரங்கம் பார்த்து ஒரு மெயில் அனுப்பி பதில் வாங்குறது ஒண்ணுதான் சினிமா தொடர்புடைய நபருடன் தொடர்பு.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதுக்கென்னங்க? நிறைய புதியவர்கள் புது உற்சாகத்தோடு புதுப் புது தொழ்ல் நுட்பத்தோடு வருகிறார்கள்.தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் ஜெகஜோதியாகத்தான் தெரிகிறது.
11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ம்ம்ம்...
எனக்கு ஒண்ணுமே ஆகாது.
ஆனால் அதை நம்பியிருக்கும் ஆயிரக் கணக்கானவங்க வேலையில்லாமல் போய் விடுவார்கள் எனக் கவலையாய் இருக்கும்.
தமிழர்கள் இன்னும் முழுமூச்சாக மெகா சீரியலால் அழுவார்கள்..
வேறென்ன? மொபைல் போனில் படமெடுத்து வெளியிடும் தொழில்நுட்பத்தால் எல்லோர் வீட்டிலும் ஒரு மொபைல் போன் பட டைரக்டர் உருவாகிவிடுவார்கள்.
இந்தப் பதிவைத் தொடர யாரைக் கூப்பிடுவது???
"யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறவேண்டாம்" என நினைத்து யாரையுமே கூப்பிடாமல் விடுகிறேன்......( அட நீங்க வேற கூப்பிட்டாலும் யாரும் தொடரப் போவதில்லை...நம்ம வட்டம் அப்படிப் பட்டது....)
at
9:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
என்ன அக்கா இது.. ஒரே தொடர் பதிவா போட்டு வீசிட்டு இருக்கீங்க.. இந்த பதிவு ஒரு வாரத்துக்கு முன்னாடி வர வேண்டியது..
உங்க கிட்ட இருந்து இன்னும் பெருசா எதிர்பார்கிறேன்.. :)))
//அப்புறம் சூர்யா ஒரு படத்தில் கூன் முதுகோட வருவாரே//
பேரழகன்.. :))
நிறைய வாசகர் கடிதம் அனுப்பும் பழக்கம் உங்களுக்கு உண்டு போல..
//ஆனால் அதை நம்பியிருக்கும் ஆயிரக் கணக்கானவங்க வேலையில்லாமல் போய் விடுவார்கள் எனக் கவலையாய் இருக்கும்.//
கலக்கிட்டீங்க.. U are really great.. :))
\\அது எங்க அம்மாவைத்தான் கேட்கவேண்டும்....\\
;-)))))
சூப்பர் பதில்...;)
சூப்பர் அருணா.
உங்களுக்கு பிடித்த படங்களில் கன்னத்தில் முத்தமிட்டால், Black தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை.
:)
//அப்பப்ப விசுவின் மக்கள் அரங்கம் பார்த்து ஒரு மெயில் அனுப்பி பதில் வாங்குறது ஒண்ணுதான் சினிமா தொடர்புடைய நபருடன் தொடர்பு.
//
ஆஹா... ரொம்ப பெரிய ஆளாகிட்டிங்க...:))
ரசனையா பதில் சொல்லியிருக்கிங்க:)
நல்லா நகைச்சுவையா இருந்துச்சு உங்க பதிவு...
சிம்பா கூறியது...
//என்ன அக்கா இது.. ஒரே தொடர் பதிவா போட்டு வீசிட்டு இருக்கீங்க..
என்னப்பா பண்றது? தொடர் பதிவுக்குக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்ய? போட்டுத் தானே ஆகணும்?
//இந்த பதிவு ஒரு வாரத்துக்கு முன்னாடி வர வேண்டியது..//
இடையிலே வலைச்சர ஆசிரியர் வேலை,தீபாவளி கலாட்டா,ம்ம்ம்ம் கொஞ்சம் லேட்டாயிடுச்சு....
//உங்க கிட்ட இருந்து இன்னும் பெருசா எதிர்பார்கிறேன்.. :)))//
இன்னும் பெரிய பதிவா??????
ஐயோ....எப்பிடிப்பா??????
ஹஹாஹா..
அன்புடன் அருணா
Saravana Kumar MSK கூறியது...
Saravana Kumar MSK கூறியது...
//அப்புறம் சூர்யா ஒரு படத்தில் கூன் முதுகோட வருவாரே//
பேரழகன்.. :))
கலக்கிட்டீங்க.. U are really great.. :))
Tank U...Tank U.
அன்புடன் அருணா
Saravana Kumar MSK கூறியது...
//நிறைய வாசகர் கடிதம் அனுப்பும் பழக்கம் உங்களுக்கு உண்டு போல..//
என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுறவங்களுக்கு மட்டுமே...
அன்புடன் அருணா
கோபிநாத் கூறியது...
\\அது எங்க அம்மாவைத்தான் கேட்கவேண்டும்....\\
//;-)))))
சூப்பர் பதில்...;)//
அதுதானேங்க உண்மை...
அன்புடன் அருணா
Karthik கூறியது...
//சூப்பர் அருணா.
உங்களுக்கு பிடித்த படங்களில் கன்னத்தில் முத்தமிட்டால், Black தவிர வேறு எதையும் நான் பார்த்ததில்லை.
:)//
முடிஞ்சா பாருங்க...நல்ல படங்கள்..
அன்புடன் அருணா
ரசிகன் கூறியது...
//அப்பப்ப விசுவின் மக்கள் அரங்கம் பார்த்து ஒரு மெயில் அனுப்பி பதில் வாங்குறது ஒண்ணுதான் சினிமா தொடர்புடைய நபருடன் தொடர்பு.//
//ஆஹா... ரொம்ப பெரிய ஆளாகிட்டிங்க...:))
வாப்பா ரசிகன்....ரொம்ப நாளா ஆளைக் காணோமே??
இப்பிடில்லாம் பெரியாளாகலாமா??
அன்புடன் அருணா
ரசிகன் கூறியது...
//ரசனையா பதில் சொல்லியிருக்கிங்க:)//
அப்பிடியா...நன்றி.
அன்புடன் அருணா
Divyapriya கூறியது...
//நல்லா நகைச்சுவையா இருந்துச்சு உங்க பதிவு...//
வாங்க திவ்யபிரியா.....முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா
///அதில் வரும் குழந்தை நட்சத்திரம் என்னை மாதிரியே இருப்பதாக அம்மா சொல்ல, வளர்ந்த பிறகும் அந்தப் படத்தைப் பார்த்து மனதில் பதித்துக் கொண்ட படம்.///
எல்லோரிடமும் தட்டிவிடமுடியாதபடி ஒட்டி இருக்கின்றன சிறுவயது ஞாபகங்கள்....
//இடையிலே வலைச்சர ஆசிரியர் வேலை,தீபாவளி கலாட்டா,ம்ம்ம்ம் கொஞ்சம் லேட்டாயிடுச்சு....//
எந்த வலைசரத்தில் ஆசிரியராக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆசை ! சொல்லுங்க அருணா!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா