1.ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வில் மதிப்பெண்கள் இடுகிறார்கள்!எப்பவாச்சும் ஆசிரியர்கள் எப்படின்னு மாணவர்களிடம் கேட்டிருக்கீங்களா?(கேட்டிருக்கீங்களா என்றால் நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் பள்ளி நிர்வாகத்தில் வேறு எவரேனும் கூட)
அச்சச்சோ எந்த உலகத்துலே இருக்கீங்க?
என் வேலையே இதுதான்......ஆசிரியர்கள் appoint செய்யும் முன் டெமோ வைத்து ஒரு வாரம் பாடம் நடத்தச் சொல்லி மாணவர்கள் புரியுதுன்னு ok சொன்ன பின்தான் வேலைக்கு ஆர்டர்...அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்.
என் வேலையே இதுதான்......ஆசிரியர்கள் appoint செய்யும் முன் டெமோ வைத்து ஒரு வாரம் பாடம் நடத்தச் சொல்லி மாணவர்கள் புரியுதுன்னு ok சொன்ன பின்தான் வேலைக்கு ஆர்டர்...அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்.
2.குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்கும் அதே வேளையில் அவர்கள் அதிகபட்சமாய் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் பாடங்களைப் பற்றி அங்கே ஓரிரு வார்த்தைகள் என்கரேஜ் செய்யும் விதமாக பேசுவீர்களா?/பேஎசியதுண்டா? (ஏன் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பசங்களை நிக்க வெச்சி கிளளப் பண்ணுவோம்னெல்லாம் சொல்லக் கூடாது)
இது தனித் தனி அணுகுமுறையைப் பொறுத்தது.....என் அணுகுமுறையே குறைவான மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளிடம் அவர்களின் மற்ற திறமைகளை சிலாகித்துப் பேசுவதுதான்.....
3. எப்பாவாவது எந்தப் பாடம் உங்களுக்கு பிடித்தது? எதெல்லாம் பிடிக்கலை? ஏன்? போன்ற கேள்விகளை மாணவர்களிடம் கேட்டறிந்ததுண்டா?
இதெல்லாம் ஆசிரியர் தினம்,குழந்தைகள் தினம் எப்போதும் நடக்கும் ஒரு மிகச் சாதாரணமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள்.
4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?
கண்டிப்பாக இருக்கிறது.
5.பாடத்தைத் தவிர மாணவர்கள் வேற ஏதாவது பேச வகுப்பில் அனுமதிப்பதுண்டா? (தினசரி செய்தி/பொது அறிவு இப்படி அவர்கள் விருப்பம் போல்)
எங்க ஸ்கூலில் ஒவ்வொரு மீட்டிங்கிலும் இப்படித் தினமும் பேச வேண்டும் என்ற அன்புக் கட்டளையே உண்டு.
6. அது போல அவர்களாக முன்வந்து செய்கிறார்களா? (முதல் முறை மட்டும் நீங்கள் சொல்லி ஆரம்பித்த பிறகு) அல்லது தினமும்/வாரம் ஒரு மாணவன் என்று நீங்களாகவே தேர்ந்தெடுத்து செய்யச் சொல்வீர்களா?
இதெல்லாம் வகுப்பறைக் குழுக்கள் (மாணவர்கள்) கவனித்து வாராவாரம் பிரித்துக் கொண்டு செய்பவை.
7. வகுப்பறையில் எப்போதேனும் மாணவர்களுக்கு பாட்டுப் பாட அனுமதித்ததுண்டா? (ஹேப்பி பர்த்டே அல்ல)
பாடச் சொல்லி அடிக்கடி ரசித்ததுண்டு.பாடம் நடத்தும் போது இது சாத்தியமல்ல என்றாலும் ஒரு ஆசிரியை விடுப்பில் இருக்கும் போது....அந்த வகுப்பை இதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு...
8. வகுப்பிற்குள் ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்களா? அல்லது அதற்கு முன்பே அமைதியாக இருக்கிறார்களா?
ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்கள்
9. எப்போதேனும் எந்த வகுப்பிலிருந்தேனும் கொல்லென்று அனைத்து மாணவர்களும் சிரிக்கும் சப்தம் கேட்டதுண்டா?
உண்டு...உண்டு...என் வகுப்பில் அடிக்கடி நடக்கும்
10. மாணவர்களின் பொழுது போக்குகள் என்னவென்று கேட்டறிந்ததுண்டா?
ஒவ்வொரு நீள் விடுப்புக்குப் பின்னும் முதல் நாட்கள் இப்படித்தான் போகின்றன.
11. மாணவர்கள் எவரேனும் கதை/கவிதை என்று எழுதுகிறார்களா என்று கவனித்ததுண்டா? (தமிழ் இரண்டாம் தாளில்) ஏதேனும் ஒரு வினாவிற்கு விடையளிக்கும் விதமாக அவர்களாகவே (உரையில் இல்லாத) கதை/கவிதை எழுதி இருந்தால் அது குறித்து அவர்களை ஊக்கப் படுத்தியதுண்டா? (படிச்சிப் பார்த்து திருத்தினாத்தானே என்கிறீர்கள் என்றால் இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டாம் :))
சி.பி.எஸ்.இ கல்வி முறையில் முதல்,இரண்டாம் தாள் கிடையாது.....மேலும் நான் அறிவியல் ...இருந்தாலும் அறிவியலில் கூடக் கதை எழுதிக் கலக்கும் மாணவர்கள் கூட உண்டு....படித்து "இந்தத் திறமையை ஆங்கிலம் ஹிந்திப் பேப்பரில் காட்டலாமே" என்பதுண்டு.
12. என்.சி.சி/என்.எஸ்.எஸ் போன்ற மாணவர் அமைப்புகளில் 10,12 ம் வகுப்பு மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்வது உண்டா?
இல்லை. ஈடுபடுத்த பெற்றோர்கள் அனுமதிப்பது இல்லை.
13. சினிமா/தொலைக்காட்சி/ பொதுநிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்க மாணவர்களை எப்போதேனும் அனுமதிப்பதுண்டா?
அவ்வப்போது என் வகுப்புகளில் உண்டு...அப்பப்பா அவர்கள் அதில் காட்டும் ஆர்வம் இருக்கே....முகமெல்லாம் பல்லாக....
14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரைடாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும் உண்டா?உண்டு.....
15. மாணவர்களின் பொது அறிவு எந்த அளவில் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?
க்விஸ் , மற்றும் அஸெம்ப்ளியில் கேள்வி நேரங்களின் போதும்....
என் பள்ளியில் நடப்பவை பற்றியும் என் வகுப்பைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன்...அது தவிர ஒவ்வொரு வகுப்பும் அந்த 40 நிமிடங்கள் அந்த ஆசிரியையின் கையில்.அதை எப்படி உபயோகபடுத்திக் கொள்வதென்பது ஒவ்வொரு ஆசிரியையின் ஆட்டிடியுட் (attitude ) பொறுத்தது.
ஒவ்வொரு வகுப்பிலும் ப்ளாஸ்மா டி. வி.....டிஜிட்டல் அனிமேட்டெட் படங்களுடன் படிப்பு.....எனக்குப் புரியாத பல நான் இந்த முறையில் பாடம் நடத்தும் போது புரிந்திருக்கிறது.இப்போ வகுப்பறை முன்பு போல வெறும் பாடம் நடத்தும் இடமல்ல சிபி சார்....இத்தனை கொடுத்தாலும் இத்தனை கொடுத்தாலும் புரிய மாட்டேங்குதுன்னு சொல்ற பசங்களும் இருக்காங்க என்பதுதான் உண்மை.......
48 comments:
இறக்கப்போகிறேன்னு ஒரு தலைப்பு வெச்சிருந்தீங்களே அதை எடுத்ததுக்கு ஒரு நன்னி சொல்லிக்குறேன்
பதிலெல்லாம் சரி தான்
பாக்கலாம் சிபி (வாத்தியாரு ?) என்ன மார்க் போடுறாருன்னு !
// 14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரைடாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும்
உண்டா?உண்டு.....//
அது ஏங்க அப்படி ?
அக்கா நான் பள்ளிக்கு போன காலத்தில் இருந்து என்னோட சித்தி தான் எனக்கு வகுப்பு ஆசிரியை.. என்னமோ தெரியல பொதுவா மத்த மாணவர்களோட நல்லா பழகின அவங்க, என்கிட்டே மட்டும் ரொம்ப கடுமையா இருந்தாங்க.. அவங்கள மாதிரியே தான் மத்த ஆசிரியர்களும்.. ஒழுக்கம் ஒழுக்கம்ன்னு சொல்லி, நீங்க பதிவுல சொன்ன விஷயங்கள் எனக்கு கிடைக்க பத்து வருஷம் ஆச்சு...
விடைத்தாளைத் திருத்துவதற்கு முன்னால்!
படம் அழகா இருக்கு! நீங்களே வரைஞ்சதா?
(இது போன்ற கலைகளில் ஆர்வமுடைய ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி நடத்துவார்கள் என்று உளவியல் ரீதியாக ஓரளவு உணர முடியும், அந்த விதத்துலே உங்க ஸ்டூடண்ட்ஸ் லக்கி, நீங்க வரைஞ்ச படம் என்றால்)
விடைத்தாளுக்கு வருவோம்!
1. 0 மதிப்பெண்கள்!
முதல் ஒரு வாரம் (வேலையைத் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள ரொம்ப பொறுப்பாத்தான் நடந்துக்குவாங்க! இது செல்லாது! செல்லாது!
//அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்//
பசங்களா வந்து சொன்னாதான் நடவடிப்பை எடுப்பீங்களா? நீங்களே அப்பப்போ பசங்ககிட்டே கேப்பீங்களான்னு சொல்ல்வே இல்லை!
முன்னது சரி என்றால் -5 மதிப்பெண்கள்! பின்னது சரியென்றால் +5
ஆன்சர் சரியா வராததாலே 0 போட்டுக்கிறேன்!
2. 5 மதிப்பெண்கள்!
//குறைவான மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளிடம் அவர்களின் மற்ற திறமைகளை சிலாகித்துப் பேசுவதுதான்.....
//
இதனால் இந்தப் பாடத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று தொடர்-கண்காணிப்பு நடக்குமா?(அதாவது அடுத்த டெஸ்ட் தொடரில் அப்ரைசல்)
நடக்குமெனில் குட்!
3. மதிப்பெண்கள் : 0
//இதெல்லாம் ஆசிரியர் தினம்,குழந்தைகள் தினம் எப்போதும் நடக்கும் ஒரு மிகச் சாதாரணமான கேள்வி பதில் நிகழ்ச்சிகள்//
விசேஷ நாட்களில் மட்டும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள்! ம்ஹூம்!
4. மதிப்பெண்கள் : 0
//4. மாணவர்களிடம் இந்த மாதிரி கேட்பதற்கெல்லாம் அவர்களுக்கோ/உங்களுக்கோ நேரம் இருந்ததுண்டா?
கண்டிப்பாக இருக்கிறது//
மூன்றாவது கேள்விக்கு 0 என்பதால் இதற்கும் 0 தான்!
5. மதிப்பெண்கள் : 5
//எங்க ஸ்கூலில் ஒவ்வொரு மீட்டிங்கிலும் இப்படித் தினமும் பேச வேண்டும் என்ற அன்புக் கட்டளையே உண்டு.//
குட்!
6. மதிப்பெண்கள் : 5
//இதெல்லாம் வகுப்பறைக் குழுக்கள் (மாணவர்கள்) கவனித்து வாராவாரம் பிரித்துக் கொண்டு செய்பவை.
//
வெரி குட்! இதைத்தான் எதிர்பார்த்தேன்!
7. மதிப்பெண்கள் : 5
//பாடச் சொல்லி அடிக்கடி ரசித்ததுண்டு.பாடம் நடத்தும் போது இது சாத்தியமல்ல என்றாலும் ஒரு ஆசிரியை விடுப்பில் இருக்கும் போது....அந்த வகுப்பை இதற்குப் பயன்படுத்திக் கொள்வதுண்டு...
//
இது எனக்கு ஓகேதான்!
8. மதிப்பெண்கள் : 5
//ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்கள்//
அப்படித்தான் இருக்கணும்!
9. மதிப்பெண்கள் : 5
10. மதிப்பெண்கள் : 5
//ஒவ்வொரு நீள் விடுப்புக்குப் பின்னும் முதல் நாட்கள் இப்படித்தான் போகின்றன//
முதல் நாள் நீங்களும் தயாரா வந்திருக்க மாட்டீங்க! அதனால பசங்ககிட்டே அரட்டை அடிச்சிட்டு முதல் நாள் என்பதால் பாடம் எதுவும் எடுக்கலைன்னு சொல்லிடுவீங்க! (அல்லது நீள்விடுப்புக்குப் பிறகு வரும் முதல் நாளில் ஆசிரியர்களுக்கும் அலுவலகப் பணிகள் கொஞ்சம் இருக்கும், டைம் டேபிள் பிரிப்பரேஷன், நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதுதல் போன்றவை)
11. மதிப்பெண்கள் : 5
12. மதிப்பெண்கள் : 0
(பெற்றவர்களைக் கை காட்டுவதால், ஆர்வமுடைய மாணவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டறிந்து கொள்ளல் வேண்டும்)
13. மதிப்பெண்கள் : 5
14. மதிப்பெண்கள் : 0
15. மதிப்பெண்கள் : 0
(குவிஸ் போட்டிகள், அஸெம்ப்ளி கேள்வி நேரங்கள் போன்றவை நீங்களே தீர்மானிப்பவை!
வெளி பள்ளிகளில்/அமைப்புகளில் நடக்கும் குவிஸ் போட்டி ஒன்றில்
கலந்து கொள்ள ஒரு மாணவன் விரும்புகின்றார். அது புதன் கிழமை நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அனுமதிப்பீர்களா?
//இறக்கப்போகிறேன்னு ஒரு தலைப்பு வெச்சிருந்தீங்களே அதை எடுத்ததுக்கு ஒரு நன்னி சொல்லிக்குறேன்//
இதை நான் வழிமொழிகிறேன்!
மொத்த் மதிப்பெண்கள் 45/75.
(இது ஒரு மாணவனா இருந்து நான் போட்ட மார்க்குகள்! பெற்றொராக இருந்து போட்டது அல்ல)
அருணா உங்க ஸ்கூல்ல எங்கஊர்லயும் ஒரு ப்ரான்ச் ஆரம்பிக்க சொல்லுங்க. அப்படியே நீங்களும் ராஜஸ்தான்ல இருந்து இங்க ட்ரான்ஸ்பர் பண்ணிகிட்டு வந்துடுங்க.
இந்த மாதிரி ஸ்கூலையும் டீச்சரையும் தான் இங்கே தேடோதேடுன்னு தேடிகிட்டு இருக்கேன்.
sibil kelvi ketta kettukitte irukkalam.
neenga teachers solratha othukara mathiri illa.
parents side lerntum support varanum. Teachrsum olunga irukkanum. Ithu kulanthayin nyayamana valarchiku miga miga athiyavasiyam.
ella schoolum ore mathiri irukkathu. All depends upon management.
ithai nalla purinjukonga.
இதைப் பத்தி நிறைய பேசியாச்சு.
அருமையான பதில்கள் அருணா,
ஒரு ஆசிரியையாக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
வெளி பள்ளிகளில்/அமைப்புகளில் நடக்கும் குவிஸ் போட்டி ஒன்றில்
கலந்து கொள்ள ஒரு மாணவன் விரும்புகின்றார். அது புதன் கிழமை நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அனுமதிப்பீர்களா?//
க்விஸ், ஸ்போர்ட்ஸ், கலை நிகழ்ச்சிகள்னு பசங்க போய் மெடல் வாங்கிகிட்டு வருவது நிறைய்ய.
கார்த்திக் said...
//பதிலெல்லாம் சரி தான்
பாக்கலாம் சிபி (வாத்தியாரு ?) என்ன மார்க் போடுறாருன்னு !//
சிபி சார் 45/75 மார்க் போட்டிருக்கிறார் கார்த்திக்..!!!
அன்புடன் அருணா
கார்த்திக் said...
// 14. பள்ளி வளாகத்திற்குள் குறிப்பிட்ட மொழியில்தான் மாணவர்கள் உரையாடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதேனும்
உண்டா?உண்டு.....//
//அது ஏங்க அப்படி ?//
அட என்னங்க புரியாத மாதிரி ...
படித்து முடித்தவுடன் ஆங்கிலம் பேசத் தெரியவில்லையென்றால் வேலை இல்லைங்க......ஆங்கிலம் பேசக் கட்டாயப் படுத்தாத பள்ளியைப் பள்ளின்னே ஒத்துக் கொள்வதில்லை பெற்றோர்கள்...
அன்புடன் அருணா
சிம்பா said...
//நீங்க பதிவுல சொன்ன விஷயங்கள் எனக்கு கிடைக்க பத்து வருஷம் ஆச்சு...//
சில சமயங்களில் இப்படி ஆகிவிடுவதுண்டு சிம்பா.
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
விடைத்தாளைத் திருத்துவதற்கு முன்னால்!
படம் அழகா இருக்கு! நீங்களே வரைஞ்சதா?
(இது போன்ற கலைகளில் ஆர்வமுடைய ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி நடத்துவார்கள் என்று உளவியல் ரீதியாக ஓரளவு உணர முடியும், அந்த விதத்துலே உங்க ஸ்டூடண்ட்ஸ் லக்கி, நீங்க வரைஞ்ச படம் என்றால்)
இது நான் வரைந்த படம் அல்ல...ஆனால் படம் வரைவேன்...
இங்கே போய்ப் பாருங்களேன்...
http://oviyaaruna.blogspot.com/
என் ஸ்டூடண்ட்ஸை விட நான் ரொம்ப லக்கி ...எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் அப்படி....
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
விடைத்தாளுக்கு வருவோம்!
//1. 0 மதிப்பெண்கள்!
முதல் ஒரு வாரம் (வேலையைத் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள ரொம்ப பொறுப்பாத்தான் நடந்துக்குவாங்க! இது செல்லாது! செல்லாது! //
ஐயய்யே ?? என்னா இது இப்பிடி இன்னொசென்டா இருக்கீங்களே....appointmentE இப்பிடின்னா regular checking இருக்காதா?
//அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்//
பசங்களா வந்து சொன்னாதான் நடவடிப்பை எடுப்பீங்களா? நீங்களே அப்பப்போ பசங்ககிட்டே கேப்பீங்களான்னு சொல்ல்வே இல்லை!
அடப்பாவமே? எனக்கு இதை விட்டா வேற வேலையே இல்லைன்னு சொல்றேன்....திரும்பவும் பசங்க கிட்டே கேட்பீங்களான்னு சின்னப்புள்ளைத்தனமா கேட்டுக்கிட்டே இருக்கீங்களே???
//குறைவான மதிப்பெண்கள் வாங்கும் குழந்தைகளிடம் அவர்களின் மற்ற திறமைகளை சிலாகித்துப் பேசுவதுதான்.....
//
//இதனால் இந்தப் பாடத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று தொடர்-கண்காணிப்பு நடக்குமா?(அதாவது அடுத்த டெஸ்ட் தொடரில் அப்ரைசல்)//
இவ்வ்ளோ செய்றோம் இதைச் செய்ய மாட்டோமா?
அன்புடன் அருணா
//ஒவ்வொரு நீள் விடுப்புக்குப் பின்னும் முதல் நாட்கள் இப்படித்தான் போகின்றன//
//முதல் நாள் நீங்களும் தயாரா வந்திருக்க மாட்டீங்க! அதனால பசங்ககிட்டே அரட்டை அடிச்சிட்டு முதல் நாள் என்பதால் பாடம் எதுவும் எடுக்கலைன்னு சொல்லிடுவீங்க! (அல்லது நீள்விடுப்புக்குப் பிறகு வரும் முதல் நாளில் ஆசிரியர்களுக்கும் அலுவலகப் பணிகள் கொஞ்சம் இருக்கும், டைம் டேபிள் பிரிப்பரேஷன், நோட்ஸ் ஆஃப் லெசன் எழுதுதல் போன்றவை)//
அச்சச்சோ ஸ்கூல் பற்றி அதிகமாத் தெரிலியே உங்களுக்கு?
குழந்தைகள் ஸ்கூல் வருவதற்கு ஒருவாரம் முன்னாடியே ஆசிரியர்கள் ஸ்கூல் போய் இந்த வேலையெல்லாம் முடிச்சுட்டு ரெடியா இருப்பாங்க தெரியுமா?
அதனாலே ப்ரிப்பேர் பண்ணாததனாலே இல்லை குழந்தைகளுடன் பேசி நேரம் செலவிடவேண்டும் என்பதற்காகப் பேசுவார்கள்.
அன்புடன் அருணா
//குவிஸ் போட்டிகள், அஸெம்ப்ளி கேள்வி நேரங்கள் போன்றவை நீங்களே தீர்மானிப்பவை! //
அட ...அப்புறம் இதெல்லாம் குழந்தைகளா தீர்மானிப்பாங்க?
//வெளி பள்ளிகளில்/அமைப்புகளில் நடக்கும் குவிஸ் போட்டி ஒன்றில்
கலந்து கொள்ள ஒரு மாணவன் விரும்புகின்றார். அது புதன் கிழமை நடைபெறும் நிகழ்ச்சி என்றால் அனுமதிப்பீர்களா?//
அதென்னங்க புதன்கிழமை ஸ்பெஷல்?எனக்குப் புரியலியே?நாங்க எல்லா கிழமைகளிலும் அனுப்புவதுண்டு...
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
//மொத்த் மதிப்பெண்கள் 45/75.
(இது ஒரு மாணவனா இருந்து நான் போட்ட மார்க்குகள்! பெற்றொராக இருந்து போட்டது அல்ல)//
பெற்றோரா இருந்தும் மார்க் போட்டிருக்கலாமே.ஒரு self analysis செய்ய உதவியாயிருந்திருக்குமே....
அன்புடன் அருணா
நந்து f/o நிலா said...
//அருணா உங்க ஸ்கூல்ல எங்கஊர்லயும் ஒரு ப்ரான்ச் ஆரம்பிக்க சொல்லுங்க. அப்படியே நீங்களும் ராஜஸ்தான்ல இருந்து இங்க ட்ரான்ஸ்பர் பண்ணிகிட்டு வந்துடுங்க.
இந்த மாதிரி ஸ்கூலையும் டீச்சரையும் தான் இங்கே தேடோதேடுன்னு தேடிகிட்டு இருக்கேன்.//
ரொம்ப நன்றி நந்து.நீங்க எந்த ஊரு?எனக்கும் கூட இப்படி ஒரு கனவு உண்டு....அது இங்கே....
http://blogintamil.blogspot.com/2008/10/blog-post_23.html
அன்புடன் அருணா
புதுகைத் தென்றல் said...
//ella schoolum ore mathiri irukkathu. All depends upon management.//
நூற்றுக்கு நூறு உண்மை இதுதான்.
அன்புடன் அருணா
புதுகைத் தென்றல் said...
//அருமையான பதில்கள் அருணா,
ஒரு ஆசிரியையாக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.//
மிக்க நன்றி புதுகை.
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி, கார்த்திக் said...
//இறக்கப்போகிறேன்னு ஒரு தலைப்பு வெச்சிருந்தீங்களே அதை எடுத்ததுக்கு ஒரு நன்னி சொல்லிக்குறேன்//
அது ரொம்பப் பழைய கதையாச்சே...
அன்புடன் அருணா
\\8. வகுப்பிற்குள் ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்களா? அல்லது அதற்கு முன்பே அமைதியாக இருக்கிறார்களா?
ஆசிரியர்கள் நுழைந்த பிறகுதான் மாணவர்கள் அமைதி காக்கிறார்கள்
\\
ஆகா....பயலுங்க இன்னும் அப்படியே தான் இருக்காங்களா...சூப்பரு ;))
ஒவ்வொரு பதிலையும் படிக்கும் போது நிறைவாக இருக்கு...வாழ்த்துக்கள் அக்கா ;))
வைஸ் பிரின்சிபல்..
ஸ்கூல ஞாபக படுத்துறீங்க..
உங்களோட ஒவ்வொரு பதிவும் ரொம்ப நல்லா இருக்கு அக்கா..
இந்த பதிவை படிக்கும் போது, ஒரு ஸ்கூல் பையனா மாறி படித்தேன்..
Saravana Kumar MSK said...
//உங்களோட ஒவ்வொரு பதிவும் ரொம்ப நல்லா இருக்கு அக்கா..
இந்த பதிவை படிக்கும் போது, ஒரு ஸ்கூல் பையனா மாறி படித்தேன்..//
அப்பிடியா சரவணன்.....ரொம்ப நன்றி...
அன்புடன் அருணா
V.P.,
சிபி உங்கள இந்த அளவு கலாய்க்கிறார்; ஆனாலும் பொறுமை காக்கும் உங்களுக்கு நான் இன்னும் அதிக மார்க்ஸ் கொடுப்பேன். உங்கள் மாணவர்கள் லக்கி தான்.
அனுஜன்யா
//அதே போல எந்த ஆசிரியரையும் மாணவர்கள் நல்லா பாடம் நடத்தலைன்னு சொன்னா மாற்றவும் செய்கிறது மேனேஜ்மென்ட்.
பாடம் நடத்துவதில் பெரிசா பிரச்சனை இல்லை மேம். எல்லா ஸ்டுடென்ஸுக்கும் ஒருத்தரை பிடிக்காமல் போவதும் இல்லை. எனக்கு எங்க மேத்ஸ் மேம் பிடிக்காதுன்னா, என் ப்ரெண்டுக்கு கெமிஸ்ட்ரி மாஸ்டர். அதுக்கு நீங்க எதுவும் செய்யவும் முடியாது.
//அறிவியலில் கூடக் கதை எழுதிக் கலக்கும் மாணவர்கள் கூட உண்டு
ஹி..ஹி.
ஆஹா, கார்த்திக்னு முன்னாடியே யாரோ இருக்காங்க.
This is Karthik Narayan. Ok?
அனுஜன்யா said...
V.P.,
//சிபி உங்கள இந்த அளவு கலாய்க்கிறார்; ஆனாலும் பொறுமை காக்கும் உங்களுக்கு நான் இன்னும் அதிக மார்க்ஸ் கொடுப்பேன். உங்கள் மாணவர்கள் லக்கி தான். //
அதெல்லாம் சரி.....அதென்ன V.Pன்னெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு...
அன்புடன் அருணா
Karthik said...
//அறிவியலில் கூடக் கதை எழுதிக் கலக்கும் மாணவர்கள் கூட உண்டு//
//ஹி..ஹி.//
அசடு வழிவதைப் பார்த்தால் நிறைய கதை எழுதிக் கலக்கிருக்கீங்க போலிருக்கே.!!!!
அன்புடன் அருணா
Karthik said...
//ஆஹா, கார்த்திக்னு முன்னாடியே யாரோ இருக்காங்க.
This is Karthik Narayan. Ok?//
ஐயே இது கூடத் தெரியாதா Karthik Narayan??
அன்புடன் அருணா
நல்ல கேள்வி பதில்! கேள்வி கேட்ட ’தள’ ஐக்கும், பதில் சொன்ன அக்காவுக்கும் நன்றிகள்!
அக்கா! எனக்கு ஒரு சின்ன கேள்வி... நல்லா படிக்கிற பசங்கன்னா பீஸ் வாங்கிக்காம சேர்ப்பீர்களா?
நல்ல பரீட்சை நல்ல பதில்கள்
புடிங்க, நல்லாசிரியர் விருதை.
//பெற்றோரா இருந்தும் மார்க் போட்டிருக்கலாமே.ஒரு self analysis செய்ய உதவியாயிருந்திருக்குமே....
அன்புடன் அருணா//
மாணவனா இருந்திருக்கேன்!
ஆனா இன்னும் பெற்றோரா ஆகலையே!
:)
தமிழ் பிரியன் said...
//நல்ல கேள்வி பதில்! கேள்வி கேட்ட ’தள’ ஐக்கும், பதில் சொன்ன அக்காவுக்கும் நன்றிகள்!//
வாங்க தமிழ் பிரியன்.....
சிபி சார் தள?ஆ??
எனக்குத் தெரியாதே....
தமிழ் பிரியன் said...
//அக்கா! எனக்கு ஒரு சின்ன கேள்வி... நல்லா படிக்கிற பசங்கன்னா பீஸ் வாங்கிக்காம சேர்ப்பீர்களா?//
என் பள்ளிக்கூடத்தில் கண்டிப்பாகச் சேர்த்துப்பேன் தமிழ் பிரியன்...நான் இப்போ வேறொருவர் மேனேஜ்மென்டில் வேலை பார்க்கிறேன்.
அன்புடன் அருணா
அமிர்தவர்ஷினி அம்மா said...
//நல்ல பரீட்சை நல்ல பதில்கள்
புடிங்க, நல்லாசிரியர் விருதை.//
ஐயோ....எனக்கா?? ரொம்ப நன்றிங்க...
அன்புடன் அருணா
நாமக்கல் சிபி said...
//பெற்றோரா இருந்தும் மார்க் போட்டிருக்கலாமே.ஒரு self analysis செய்ய உதவியாயிருந்திருக்குமே....
அன்புடன் அருணா//
//மாணவனா இருந்திருக்கேன்!
ஆனா இன்னும் பெற்றோரா ஆகலையே!
:)//
ஓ...அதுக்குள்ளே பெற்றோருக்கு இவ்வ்ளோ சப்போர்ட்டா???
அன்புடன் அருணா
ஆஹா! இப்படி ஒரு டீச்சரா, என வியக்க வைத்த, நமக்கு இப்படி ஒரு டீச்சர் கிடைக்கலையே என என்னை ஆதங்கப் பட வைத்த, உலகத்தில நல்லவங்களும் இருக்கத் தான் செய்றாங்க என நிம்மதி கொள்ள வைத்த, ஒரு பதிவு.
வாழ்த்துகள்!
(ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல!)
அருமை மிக மகிழ்ச்சி. பூங்கொத்து பதிவிற்கல்ல. இவற்றை செய்யும் உங்கள் பள்ளிக்கு
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா