நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, January 24, 2008

என் வீட்டுக் கதை இது.....

என் வீட்டுக் கதை இது.....
நாங்கள் எனக்கு விபரம் தெரிந்த போது டைடஸ் வீட்டில் இருந்தோம்..சுற்றிலும் மாந்தோப்பு...கொய்யா மரங்கள்,பலா,சீதாப் பழ மரங்கள்...நினைத்த போது நினைத்த பழம்...எனக்கு நினைவு தெரிந்து நாங்கள் பழம் விலைக்கு வாங்கியதில்லை...பலாப்பழம் வேர்ப்பலா..மரத்திலிருக்கும்போதே மரத்தின் பாதத்திலேயே உட்கார்ந்து பலாச் சுளையை எடுத்துச் சாப்பிட்டிருக்கிறோம்.

அப்புறம் மாடி வீடு..அது ஏனோ அவ்வளவாக ராசி இல்லாத வீடாகவே எல்லோராலும் நினைக்கப் பட்டது.அதனால் சீக்கிரமாகவே மாற்றி விட்டோம்.அடுத்தது பங்களா வீடு..அந்த வீட்டில் ஒரே ஒரு நாள் தான் இருந்தோம்...முதல் நாள் இரவே அம்மாவுக்கு அடுப்பு உடைவது போல கனவு...அது கெட்ட சகுனம் என்று அடுத்த நாளே வேறு வீடு மாறி விட்டோம்.ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த வீடு அதுதான்..வீட்டைச் சுற்றி லில்லி செடிகள்...சின்ன நெல்லிக்காய் மரம்,பார்க் போன்ற வடிவில் ஒரு தோட்டம்..ஆளாளுக்கு ஒரு அறை என்று நாங்கள் பங்கு போட்டுக் கொள்ளும் முன்னரே வீடு பறி போயிற்று..

அடுத்தது புலி வீடு...அதுதான் நாங்கள் அந்த வீட்டிற்கு வைத்த பெயர்...காரணம் வீட்டிற்குச் சொந்தகாரர்...புலி போலவேதான் இருப்பார்..முன் மண்டையிலும்,காதோரங்களிலும்,காது மடலிலும்,மட்டும் முடி..எப்போதும் ஒரே உறுமல்தான்...அடுத்ததுதான் கொக்கு வீடு...இது எனக்குப் பிடித்த ரெண்டாவது வீடு.இந்த வீட்டுக்காரருக்கு கொக்கு மாதிரி ஒரு கழுத்து....இது ஒன்றேதான் இந்தப் பெயருக்கான காரணம்...பன்னிரெண்டு அறைகள்..ஆளுக்கு ரெண்டு அறையாகப் பிரித்துதான் பெருக்க முடியும்...கடைசியாக ஒரு கிணறு...அதற்குள்தான் என்னிடம் சண்டை போட்ட என் தம்பி என்னிடமிருந்த குட்டி குட்டி பினாகா பொம்மைகளையெல்லாம் வீசியெறிந்தான்.அந்த வீடு மாறும் போது என் உயிரே போனது போல ஒரு வலி...இப்போதும் கிணறுகள் என் குட்டி குட்டிப் பொம்மைகளைத்தான் நினைவு படுத்துகிறது.

அதற்கப்புறமும் ஓனாய் வீடு,நரி வீடு,குண்டு வீடு என எத்தனை வீடு மாறிய போதும் கலாம்மா வீடு எப்போதும் வலி கொடுக்கும் வீடாக மாறிப் போனது....அப்பாவை விழுங்கிய வீடு....அந்த வீடு மாறும் போது மறுபடி ஒருமுறை அப்பாவை இழந்தது போல ஒரு உணர்வு.அப்பா வழக்கம் போல ஈஸி சேரில் சாய்ந்து படுக்குமிடத்தில் தலைமுடியின் எண்ணை பட்டுப் பட்டு உண்டான எண்ணைக் கறையை அம்மா தடவிக் கொண்டு அங்கேயே நிற்கும் போது..
"அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்" என்று பெரிய மனுஷியாட்டம் சொல்லி விட்டேன்....

பின்பொருமுறை கலாம்மாவைப் பார்க்கப் போகும் சாக்கில் அப்பாவின் எண்ணைக்கறையைப் பார்க்க நினைத்துப் போனேன்...சுவரெல்லாம் நீலக் கலர் டிஸ்டம்பரில் பள பளத்தது...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்தும் முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கண்ணீரை உள்வாங்கினோம்.....மீண்டும் ஒரு முறை அப்பாவை இழந்தோம்.....

15 comments:

சாம் தாத்தா said...

ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.

கடைசியில அழ வச்சிட்டடா கண்ணு.
நீ பொதுவா ஜாலியாத்தான் எழுதுவே.
என்ன ஆச்சுப்பா?

எனக்கும் கூட நீ இதில் சொன்ன மாதிரி அனுபவம்
ஏற்ப்பட்டிருக்கு.
("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")

என்னென்னமோ நினைக்கிறோம்.எல்லாமே நடக்குதா என்ன?

Dreamzz said...

//ஆனந்தாமாய்த்தான் ஆரம்பிக்குதுன்னு நெனச்சேன்.

கடைசியில அழ வச்சிட்டடா கண்ணு.
நீ பொதுவா ஜாலியாத்தான் எழுதுவே.
என்ன ஆச்சுப்பா?
//
ரிப்பீட்டு...

Dreamzz said...

:( என்ன சொல்ல...

கோபிநாத் said...

ம்ம்ம்...வீட்டை பத்தி படித்தவுடன் கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சிடுச்சி..

\\("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")\\

இந்த டைலக் நானும் விட்டுயிருக்கிறேன். ;)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

வீட்டின் கதை மனதில் சோகத்தை அப்பிக் கொண்டது அருணா... நீங்கள் இந்தப் பதிவை எழுதும்பொழுது எவ்வளவு உடைந்து போயிருப்பீர்களோ அதை விட அதிக மடங்கு நான் உடைந்து போய்விட்டேன்...

cheena (சீனா) said...

ம்ம்ம் - சிறு வயது ஆசைகள் இலட்சியங்கள் பல்வேறு காரணகங்களினால் நிறைவேறாமல் போகிறது. என்ன செய்வது ?

Aruna said...

Gnaniyar @ நிலவு நண்பன் said,
//நீங்கள் இந்தப் பதிவை எழுதும்பொழுது எவ்வளவு உடைந்து போயிருப்பீர்களோ அதை விட அதிக மடங்கு நான் உடைந்து போய்விட்டேன்...//

உண்மைதான் நிலவு நண்பா....மனம் உடைந்து தொண்டை அடைக்கத்தான் எழுதினேன்...
வருகைக்கு நன்றி..
அன்புடன் அருணா.


வருகைக்கு நன்றி..cheena (சீனா)
அன்புடன் அருணா.

Divya said...

\\...நானும் அம்மாவும் ஒருவரையொருவர் பார்க்க நினைத்தும் முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே கண்ணீரை உள்வாங்கினோம்.....மீண்டும் ஒரு முறை அப்பாவை இழந்தோம்.....\\

கண்ணீரை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை அருணா.....

ரசிகன் said...

நம்பிக்கைதான் வாழ்க்கை... சாதிக்க தோழிக்கு வாழ்த்துக்கள்...
கனத்த மனதுடன் நண்பன்...

C.N.Raj said...

Aruna,

I too lost my Dad five years back.
I can feel and understand your agony and pain in your article.
Life is given to us, to be Happy.
Be Happy with your Family and Loved ones,Always. That is the Best Thing in this World.
Cheers,
Raj.

Aruna said...

சாம் தாத்தா said...
//என்னென்னமோ நினைக்கிறோம்.எல்லாமே நடக்குதா என்ன?//

உண்மைதான் தாத்தா!!
அன்புடன் அருணா

கோபிநாத் said...
\("அம்மா கவலைப் படாதேம்மா ...இதே வீட்டை நான் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வாங்கிக் கொடுத்து விடுகிறேன்")\\

//இந்த டைலக் நானும் விட்டுயிருக்கிறேன்.//

அனேகமாக எல்லோரும் எப்போவாது இந்த டயலாகைச் சொல்லியிருப்பார்கள் வாழ்க்கையில்!!
அன்புடன் அருணா

ரசிகன் said...
//நம்பிக்கைதான் வாழ்க்கை... சாதிக்க தோழிக்கு வாழ்த்துக்கள்...
கனத்த மனதுடன் நண்பன்...
//
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா!
அன்புடன் அருணா

Raj said...
//Life is given to us, to be Happy.
Be Happy with your Family and Loved ones,Always.//

I do understand but at times memories take us back behind the lane and make us feel sad...
anbudan aruna

sri said...

Romba azhuthama erundhadhu, romba kastama erukku edhai padicha udaney ..neenga neraya ezhudhanum

Aruna said...

வருகைக்கு நன்றி! கண்டிப்பா நிறைய எழுத முயற்சிகிறேன்
அன்புடன் அருணா

Unknown said...

ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு நினைவ கொடுக்கும். சிலது பசுமையான நினைவுகள். சிலது துயரமான நிகழ்வுகள். இழப்பைத் தந்த வீட்டை கொஞ்சம் வெறுப்போடுதான் பார்க்கிறோம் இல்லையா?

ஆ.கோகுலன் said...

அட..! இவ்வளவு வீடுகளா..?

பதிவின் ஆரம்பத்தை பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்குமென்று தோன்றியது.
ஆனால் இறுதிப்பகுதி.. :((

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா