நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, January 19, 2008

மூடிய புத்தக மயிலிறகாய்.......அருணா

மூடிய புத்தக மயிலிறகாய்.......
புதுப் புத்தக வாசனை...அந்தப் புத்தகத்தை திறந்து மூடினேன்..முகத்தோடு வைத்துத் தேய்த்தேன்....அந்தப் பள பள அட்டை என் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டுவிடமாட்டேன் என்றது...எனக்கு புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை.... எல்லாம் இப்போ......புதுசாய் ஆரம்பித்ததுதான்......அது அவள் எனக்கே எனக்காய் கொடுத்த புத்தகம்.

ஒரு துளி மழைத் துளி என் கன்னத்தில் பட்டுத் தெறித்தது.... மழையின் முதல் துளி ...அப்படியே பதறிப் போய் புத்தகத்தை சட்டைக்குள் நுழைத்து பத்திரப் படுத்தினேன்....சட சடவென்று மழைத் துளி என் சட்டையையும் கூட நனைத்தது....எப்போதும் மழைத் துளியில் மகிழ்ந்து நனையும் நான்...புத்தகத்தைப் பாதுகாப்பதற்காக ஓடிப் போய் அந்தக் கடைக்குள் நின்றேன்..கும்மென்று மண் வாசனை ஆளை அசரடித்தது..

இந்தப் புத்தக வாசனை, மழையின் மண்வாசனை இவையெல்லாம் மனதின் சந்தோஷச் சாரல்களையெல்லாம்எப்படித்தான் நினைவுபடுத்துகிறதோஎனக்கு....ஓடிப் போய் மழைத் தூறலின் சாலையின் நடுவே போய் நின்று சினிமாக் கதாநாயகன் போலக் கை விரித்து நின்று சத்தமாகப் பாட வேண்டும் போலத் தோன்றியது ......

"என்னடா கார்த்திக் இங்க நிற்கிறே?" என்றபடி வந்தான் ரவி.அவ்வளவுதான் இந்தத் தனிமை, இனிமை எல்லாவற்றையும் ஒரெயடியாக அடித்துக் கொண்டு போகும் சுனாமி.....பேய் மழை பெய்தால் கூட அவன் அரட்டையில் அடங்கி விடும்..."சும்மாதான்" என்று சிரித்து வைத்தேன்...என் சட்டையை உற்று உற்றுப் பார்த்தான்.. .என் கை என்ன என்னையறியாமல் புத்தகத்தின் மேல் சென்றது...

"என்னடா கார்த்திக் அதுக்குள்ளே தொப்பையா ?இன்னும் கல்யாணம் கூட ஆகலை? என்றவாறு வயிற்றில் ஓங்கிக்குத்தினான்...."
என்னமோஇருக்கு"என்றான்."ஒண்ணுமில்லைடா புத்தகம்" என்றவாறு சட்டயினுள் கையை விட்டு எடுத்தேன்....இழுத்துப்பறித்தான்...உள்ளே திறந்து பார்த்தான்....
"கிருத்திகா கொடுத்தாளா?"என்றான். ஐயையோ....இவனுக்கு எப்படித் தெரியும்?...என்று நினைக்கும் போதே சொன்னான்...

"அவங்க அப்பா அப்பா ஒரு காலத்தில் நிறைய எழுதுவார்..அவரே புத்தகம் வெளியிட்டார்...ஒன்றும் சரியாப் போகலைடா..இந்தக் கிருத்திகாப் பொண்ணு பார்க்கிறவங்க பழகினவங்க எல்லோருக்கும் அன்புடன் கிருத்திகா என்று எழுதிக் கொடுத்துட்டு இருக்கா....நான் மெல்லத் திறந்து பார்த்தேன்

"அன்புடன் கிருத்திகா" என்று இருந்தது."எனக்குக் கூட ரெண்டு கொடுத்திருக்காடா "என்றான்.நான் உணர்ச்சிகளை எதுவும் வெளிக் காட்டாமல் வானம் வெறித்து விட்டதா என்பத் போல மேலே வானத்தைப்
பார்த்தேன்..மழைதான் எவ்வளவு ஆறுதல்..அதுவும் என்னுடன் சேர்ந்து அழுவது
போல் இருந்தது.....
"நான் கிளம்புறேன்டா"...என்று வந்த வேலை முடிந்தது போல ரவி கிளம்பி
விட்டான் என் மனதில் ஒரு சுனாமியை உருவாக்கி விட்டு...... அந்தப் புத்தகம் இப்போ சுமக்கவே முடியாத பாரமாகிப் போனது.அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது "சே சே...இந்த ஆம்பிள்ளைங்களே ரொம்ப மோசம்" என்று ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ரகசியம் போல உலகத்துகே கேட்கும் படி சொல்லிக் கொண்டு போனாள்.."நாங்களாடி மோசம்" என்று மனதிற்குள் கறுவினேன்.....

கொஞ்ச தூரத்தில் ரவி ஒரு கனவைக் கலைத்ததற்காகவோ அல்லது ஒரு உண்மையை நண்பனுக்கு சொல்லிவிட்டதற்காகவோ விசிலடித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷமாக மழையில் நனைந்தான்........

21 comments:

SAM said...

இங்க பாரும்மா அருணா,
இது கொஞ்சம் கூட நல்லாயில்ல.
திரும்ப திரும்ப நீ என் வாழ்க்கையில நடந்ததைப் பத்தியே எழுதறே.

ஆமா.. சொல்லிப்புட்டேன்.
இது ரொம்ப சமீபத்தில், என் வாழ்வில் அப்படியே நடந்துச்சுப்பா.

இதுல வர ரவி பரவாயில்லை.

சில நேரங்களில், சம்பந்தப்பட்டப் பெண்களே, இது போலச் செய்வார்கள்.
(நாம நம்பளுக்கு மட்டும்தான் கிடைசிருக்குன்னு நினைப்போம். இல்லடா இவனே, இதே போல அவனுக்கும் கொடுத்திருக்கேன்னு சொல்லி நம்ம கனவை, சிதைச்சுடுவாங்க)

எப்படியோ...
எழுத்துக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க! வளர்க!

பிரியமுடன்
SAM தாத்தா

Dreamzz said...

இப்பவும் நாந்தான் first :)

Dreamzz said...

பிடிங்க பூங்கொத்து! இந்த பதிவு சூப்பர்!

Dreamzz said...

//கொஞ்ச தூரத்தில் ரவி ஒரு கனவைக் கலைத்ததற்காகவோ அல்லது ஒரு உண்மையை நண்பனுக்கு சொல்லிவிட்டதற்காகவோ விசிலடித்துக் கொண்டே ரொம்ப சந்தோஷமாக மழையில் நனைந்தான்........//
ஹாஹா!இப்படி தான் பிடித்துபோகின்றது.. மீண்டும் மழை பைத்தியம்....

ஆழமா, அழகா சொல்லி இருக்கீங்க அருணா..

aruna said...

Dreamzz said...
இப்பவும் நாந்தான் first :)

பூங்கொத்துக்கு நன்றி.....உன் முதல் இடத்தை ஒரு நிமிட வித்தியாசத்தில் சாம் தாத்தா தட்டிப் பறித்து விட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்...நன்றியுடனும் வாழ்த்துக்களுடன்....அருணா

சாம் தத்தா.,
உங்கள் மலரும் நினைவுகளைப் பதிய முடிவது கூட சந்தோஷம்தான்
நன்றி
அருணா

ரசிகன் said...

அவ்வ்வ்வ்......ஏனுங்க அருணா.. எப்படிங்க இதெல்லாம்.. சூப்பரேய்ய்ய்ய்.....

பொண்ணுங்க மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்பாங்க..
உங்க எல்லா பதிவுலயும் சேம் சைடு கோல் போடறிங்க..

ரசிகன் said...

என்ன இருந்தாலும் எங்கள மாதிரி பசங்க மனச புரிஞ்சுக்கிட்டு சப்போர்ட் பண்ண
பெண்கள் சைடுலயும் ஆட்கள் இருக்காங்கன்னு ஒரு சந்தோஷம் தான்...
வாழ்க உஙக பதிவுகள் ,வளர்க உங்க சேவை...:)))))))

ரசிகன் said...

//வந்தீங்க...படிச்சீங்க......
சும்மா பார்த்துட்டு போகாதீங்க.....
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க...........
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க....

அன்புடன் அருணா//

அப்போ அது நீங்க தானா?..அவ்வ்வ்வ்வ்வ்வ்:P

aruna said...

ரசிகன் said...
//பொண்ணுங்க மனசு இன்னொரு பொண்ணுக்குத்தான் தெரியும்பாங்க..
உங்க எல்லா பதிவுலயும் சேம் சைடு கோல் போடறிங்க..//

aruna said
கொஞ்சம் பொறுங்க உங்களுக்கெல்லாம் ஆப்பு வைக்கிறதுக்குக் கூட பதிவு வைச்சு இருக்கேங்க.!!!

ரசிகன் said...
//பெண்கள் சைடுலயும் ஆட்கள் இருக்காங்கன்னு ஒரு சந்தோஷம் தான்...
வாழ்க உஙக பதிவுகள் ,வளர்க உங்க சேவை...:)))))))//

aruna said
நன்றி...நன்றி...நன்றி...

ரசிகன் said...
//அன்புடன் அருணா

அப்போ அது நீங்க தானா?..அவ்வ்வ்வ்வ்வ்வ்:P//

aruna said
அவ்வளவு சுலபமா கண்டுபிடிக்க விட்டிருவோமா?

அன்புடன் அருணா

பாச மலர் said...

நல்லாருந்துச்சு அருணா...பாவம் கார்த்திக்

enRenRum-anbudan.BALA said...

அருணா,
கதை ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துகள் :)
எ.அ.பாலா

aruna said...

பாச மலர் said...
நல்லாருந்துச்சு அருணா...பாவம் கார்த்திக்

நன்றி பாசமலர்!
அன்புடன் அருணா

enRenRum-anbudan.BALA said...
அருணா,
கதை ரொம்ப நல்லா இருக்கு, வாழ்த்துகள் :)

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாலா!
அன்புடன் அருணா

சாம் தாத்தா said...

கண்ணுங்களா,
நாங்களும் ஒரு Blog ஆரம்பிச்கிட்டமுல்ல.
சும்மா வந்து எட்டி பார்ககறது.

வயசானவன்ப்பா.

யாரும் அடிச்சி, கிடிச்சிப் புடாதீங்க.

ஏற்கெனவே இந்த Dreamzz பய என்னைக் கறுவிக்கிட்டுருக்கறதா
சைதாப்பேட்டைல சொனனாங்க.

ஒரு நிமிஷம் முந்திக்கிட்டனாம்.

அடுத்த முறை கொஞ்சம் லேட்டாவே வரேன்.

என்னை விட்டுருப்பா Dreamzz

My days(Gops) said...

முதல் தபா இங்க, அதுவும் உங்கள் வித்தியாசமான " நான் இறக்கப் போகிறேன்" பார்த்துட்டு :)

நல்லா எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்...

Divya said...

கதை நல்லா இருந்தது அருணா!

அன்புடன் என்று கையோப்பமிடுவது கூட இப்படி தவறாக புரிந்துக்கொள்ளபடுகிறதே!!!

aruna said...

//சாம் தாத்தா said...
கண்ணுங்களா,
நாங்களும் ஒரு Blog ஆரம்பிச்கிட்டமுல்ல.
சும்மா வந்து எட்டி பார்ககறது.//

என்ன தாத்தா ஆரம்பிச்சு ரெண்டு நாள்லே என்ன வரவேற்பு...ரொம்ப பொறாமையா இருக்கு தாத்தா....ஆளாளுக்கு கமென்ட் என்ன? முதல் பக்க அறிமுகத் தோரணம் என்ன?
இதுக்கெல்லாம் மச்சம் வேணும்பா!!!!
அன்புடன் அருணா

aruna said...

//My days(Gops) said...
முதல் தபா இங்க, அதுவும் உங்கள் வித்தியாசமான " நான் இறக்கப் போகிறேன்" பார்த்துட்டு :)//

//நல்லா எழுதுறீங்க.... வாழ்த்துக்கள்...//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!
அன்புடன் அருணா

Divya said...
//அன்புடன் என்று கையோப்பமிடுவது கூட இப்படி தவறாக புரிந்துக்கொள்ளபடுகிறதே!!!//

அட நீங்க வேற நூல் இல்லாமலே பட்டம் எல்லாம் விட்டிருவாங்க தெரியுமா??

அன்புடன் அருணா

கோபிநாத் said...

சூப்பர் கதை :)

\\Divya said...
//அன்புடன் என்று கையோப்பமிடுவது கூட இப்படி தவறாக புரிந்துக்கொள்ளபடுகிறதே!!!//

அட நீங்க வேற நூல் இல்லாமலே பட்டம் எல்லாம் விட்டிருவாங்க தெரியுமா??\\

:)))))

நிலாரசிகன் said...

கண்டிப்பாக பூங்கொத்து உங்கள் எழுத்திற்கு உண்டு.

வலைப்பூவின் முகவரியைத் தவிர அனைத்தும் நன்று.

teachtech said...

பெரிய எழுத்தாளர்......நீங்க. வந்திருக்கீங்க ....வாழ்த்துக்கும்...
வருகைக்கும் நன்றி..
அன்புடன் அருணா

கவிநயா said...

50-வது பதிவுக்கு வாழ்த்துகள்! அங்க இருந்துதான் இங்க வந்தேன். ரொம்ப நல்லா எழுதறீங்க!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா