நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, January 13, 2008

பட்டத் திருவிழா

பட்டத் திருவிழா
தமிழ் நாட்டில் பொங்கல் திருவிழா வட நாட்டில் சங்க்ராந்தி பட்டத் திருவிழா.பட்டம் நிறைந்த வானத்தை பார்க்கும் போது தொன்றியதை பதிவாக்கி விட்டேன்
அளக்க முடியாத வானத்தை என் ஒற்றைப் பட்டத்தால் அடைத்து விட முடியாது தான்...இருந்தாலும் அந்த ஆசையால் ஒரு பட்டத்தைப் பறக்க விட்டேன்.ஆயிரக் கணக்கான பட்டங்களின் நடுவே என் பட்டமும் ஒரு புள்ளியாய்.....அப்பாடி எத்தனை வகை,நிறம்.வானம் பட்டப் பட்டாடை உடுத்தியது.திடும்மென்று காற்று என் பட்டத்தை கீழ் நோக்கி இழுத்தது......அதே காற்று திடீரென்று மேலே ஏற வைத்தது. இந்தப் பட்டங்கள் போல்தான் என் வாழ்விலும்தான் எத்தனை நிற வகை மனிதர்கள் என் நட்பில்...நான் நூல் ,நீ பட்டம் என்று மகிழும் ஒரு நட்பு....இன்றோ நாளையோ உன்னை விட்டுப் போய் விடுவேன் என்று அறுந்து போகத் துடிக்கும் பட்டம் போல பயமுறுத்தும் ஒரு நட்பு....உன்னை விட நான் சிறப்பு என்று ஒய்யாரம் காட்டும் பட்டம் போல ஒரு பளப் பள நட்பு.பட படவென்று சிறகடிக்கும் பட்டம் போலப் பொறிந்து கொட்டும் ஒரு நட்பு.பறக்கும் பல நிறப் பட்டங்கள் போல நட்புக்குத்தான் எத்தனை நிறங்கள்
நிமிர்ந்து பார்த்தால் அத்தனை பட்டமும் என்னைப் பார்த்துக் கொண்டு...அத்தனை பட்டங்களின் நூல் மட்டும் என் கையில்.....என் அன்பெனும் நூலில் பறக்கும் அவை அறுந்து விடக் கூடாதென்று அத்தனை அக்கறையையும் காட்டிக் கையால் இழுத்துப் பிடித்து கொஞ்சம் விட்டு ,கொஞ்சம் டீல் விட்டு,கொஞ்சம் சுண்டி அத்தனை சாகசமும் செய்தும் சில மட்டும் எப்போதும் அறுந்து விடும் துடிப்புடன் பட பட பட படவென............இப்போது அறுந்து விடப் போகிறேன் எனப் பயம் காட்டிக் கொண்டே........ம்ம்ம்ம்ம்ம்ம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.....

15 comments:

Dreamzz said...

//நான் நூல் ,நீ பட்டம் என்று மகிழும் ஒரு நட்பு....இன்றோ நாளையோ உன்னை விட்டுப் போய் விடுவேன் என்று அறுந்து போகத் துடிக்கும் பட்டம் போல பயமுறுத்தும் ஒரு நட்பு....உன்னை விட நான் சிறப்பு என்று ஒய்யாரம் காட்டும் பட்டம் போல ஒரு பளப் பள நட்பு//
ஆஹா! பட்டத்துல வாழ்க்கையின் தத்துவத்தை எல்லாம் சொல்லறீங்க :)
நைஸ்!

//சில மட்டும் எப்போதும் அறுந்து விடும் துடிப்புடன் பட பட பட படவென............இப்போது அறுந்து விடப் போகிறேன் எனப் பயம் காட்டிக் கொண்டே........ம்ம்ம்ம்ம்ம்ம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை.....//
நல்லா இருக்குது :)

நவன் said...

மொத்தமா நீங்க எத்தனை பட்டம் விட்டீங்க?

:)

aruna said...

Dreamzz said...
//ஆஹா! பட்டத்துல வாழ்க்கையின் தத்துவத்தை எல்லாம் சொல்லறீங்க :)
நைஸ்!//
இப்பவும் முதல் நீதான்பா....first prize உனக்குதான்பா....
வாழ்க்கையின் தத்துவம் இவ்வளவுதானா?நாங்க என்னமோன்னு கலங்கிகிட்டு இருக்கோமுங்கோ!
அருணா

aruna said...

நவன் said...
//மொத்தமா நீங்க எத்தனை பட்டம் விட்டீங்க?//

இந்த மாசம் முழுக்க இருக்குங்க....... மொத்தமா விட்டுட்டு ,எத்தனை கட் பண்ணினேன்னு விவரமெல்லாம் எழுதுவேங்க!
அருணா

பாச மலர் said...

அருணா,

பட்டங்களில் பட்டறிவும் வாழ்க்கையும்..சுவாரசியமான சிந்தனை.

aruna said...

பாச மலர் said...
//பட்டங்களில் பட்டறிவும் வாழ்க்கையும்..சுவாரசியமான சிந்தனை//

நன்றி..நன்றி ....பாச மலரே நன்றி
அருணா

SAM said...

குழந்தே அருணா...
உன் (நட்புப்) பட்டங்களில் ஏதாவது ஒன்றே ஒன்று அறுந்து போனால் கூட நீ, ரொம்பத் துடிச்சுப் போயிடுவேன்னு புரியுது.

நீ உன் பட்டங்களோடு எப்பவும் சந்தோஷமாய்
விளையாட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
SAM தாத்தா.

SAM said...

குழந்தே அருணா...
உன் (நட்புப்) பட்டங்களில் ஏதாவது ஒன்றே ஒன்று அறுந்து போனால் கூட நீ, ரொம்பத் துடிச்சுப் போயிடுவேன்னு புரியுது.

நீ உன் பட்டங்களோடு எப்பவும் சந்தோஷமாய்
விளையாட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
SAM தாத்தா.

aruna said...

SAM said... //குழந்தே அருணா...
உன் (நட்புப்) பட்டங்களில் ஏதாவது ஒன்றே ஒன்று அறுந்து போனால் கூட நீ, ரொம்பத் துடிச்சுப் போயிடுவேன்னு புரியுது.//

நன்றி,உண்மை அதுவே தான் ! நட்புப் பட்டங்களில் ஒன்று அறுந்தாலும் நான் துடித்துப் போவெதென்னவோ நிஜம்தான்

அருணா

ரசிகன் said...

இது வெளியிட இல்லை..."மழையுடன் ஒரு ஊடல"படிச்சு ரசிச்சாலும்,
மனது கனத்துவிட்டது... அருணா...
உன்னோட "என் வீட்டுக் கதை இது....." படிச்சு..
அப்பா மேல வைச்சிருக்குற பாசம் நெகிழ வைக்குது..
படிச்ச உடனே ஊருக்கு போன் செஞ்சு அப்பா அம்மாக்கிட்ட
பேசின அப்புறம் தான் மனசு அமைதியாச்சுப்பா...
ஏன் அந்த பதிவுகளை நீக்கினிங்கன்னு தெரியலை..
ஓருவேளை சந்தோஷங்களை மட்டும் பதிவுல பகிர்ந்துக்கலாம்ன்னு நெனச்சிட்டிங்களோ?..
உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னே தெரியலை..
எல்லாருக்குமே மனதளவுல கஷ்டங்கள் இருக்கு..
காலம்தான் நம் மனதுக்கு மருந்திடனும்...

அன்புடன் நண்பன்.

ரசிகன் said...

என்னோட ரொம்ப ரொம்ப குளோஸ் பிரண்டு இருக்காங்க.. அவங்களிடம் இது வெளியிட இல்லைன்னு சொல்லிட்டா மொதல்ல வெளியிட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க..ஒருவேளை நீங்க அவங்களுக்கும் பிரண்டாயிருப்பிங்களோ?..:P .பேசாம நானே மொத ரெண்டு வரி நீக்கிட்டு பின்னூட்டமா இட்டு இருக்கலாமோ?..:))))

ரசிகன் said...

என்னோட ரொம்ப ரொம்ப குளோஸ் பிரண்டு இருக்காங்க.. அவங்களிடம் இது வெளியிட இல்லைன்னு சொல்லிட்டா மொதல்ல வெளியிட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க..ஒருவேளை நீங்க அவங்களுக்கும் பிரண்டாயிருப்பிங்களோ?..:P .பேசாம நானே மொத ரெண்டு வரி நீக்கிட்டு பின்னூட்டமா இட்டு இருக்கலாமோ?..:))))

ரசிகன் said...

ஒன்சைடு கன்ரோல்,பட்டம் விடறதையெல்லாம் பிரண்ஷிப்புக்கு கம்பேர் பண்ண முடியாதுங்க...
நட்புல ரெண்டு பேர்க்கிட்டயும் கயிற்றின் முனை இருக்கும்.. கயிறு இழுக்கும் போட்டி மாதிரி..
ஒருத்தர் இழுக்கும் போது,இன்னொருத்தர் டீல்ல லூசா விட்டுக்கொடுக்கணும்.
பின்னாடி அந்த சைடு நார்மலாகும் போது நாம பதிலுக்கு இழுத்துக்கலாம்ல்ல...
ரெண்டுபேருமே ஒரே சமயத்துல பலமா இழுத்தா கயிறு அறுந்திரும்...
நாங்களும் சிந்திப்போம்ல்ல..ஹிஹி...

ரசிகன் said...

ஒன்சைடு கன்ரோல்,பட்டம் விடறதையெல்லாம் பிரண்ஷிப்புக்கு கம்பேர் பண்ண முடியாதுங்க...
நட்புல ரெண்டு பேர்க்கிட்டயும் கயிற்றின் முனை இருக்கும்.. கயிறு இழுக்கும் போட்டி மாதிரி..
ஒருத்தர் இழுக்கும் போது,இன்னொருத்தர் டீல்ல லூசா விட்டுக்கொடுக்கணும்.
பின்னாடி அந்த சைடு நார்மலாகும் போது நாம பதிலுக்கு இழுத்துக்கலாம்ல்ல...
ரெண்டுபேருமே ஒரே சமயத்துல பலமா இழுத்தா கயிறு அறுந்திரும்...
நாங்களும் சிந்திப்போம்ல்ல..ஹிஹி...

நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் said...

நானும் பட்டத் திருவிழாவை பார்த்திருக்கிறேன். உங்கள் எழூத்தை படிக்கும் பொழூது
மீண்டும் ஒரு முறை பட்டம் பறப்பதை நேரில் பார்த்தது போல் இருந்தது

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா