நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, January 14, 2008

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்......

பாவம்.... அந்தப் பறவைகளுக்கொரு மின்னஞ்சல்

பட்டத் திருவிழா....
மாஞ்சா நூலின் நுனியில் கட்டிப் பறக்கும் பட்டம்....
என் கையின் இழுப்பில் மேலும்,கீழும் அங்கும் ,இங்கும்
முடிவே இல்லாத தேடலில் .....
வான் வெளியின் எந்த காற்றைத் தேடி
இந்தப் பயணம்?

உனக்கெங்கே தெரிய போகிறது?
உன் பயணத்தின் பாதையில்
பாவம் அந்தப் பறவைகளின்
இறகுகளிலோ,சிறகுகளிலோ,
கால்களிலோ,கழுத்தினிலோ
சிக்கி சின்னா பின்னமாகப்போகிறதென்று?

நிலத்தையும்,நீரையும்
சூறையாடிய மனிதர்களுக்கு
வானமென்ன பெரிய விஷயமா?
குட்டிப் பறவையே.....
"இன்று மட்டும் வெளியே வராதே....
நாளையிலிருந்து நீ உன்
செல்லச் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்"
என்று உனக்கொரு மின்னஞ்சல்.....
அனுப்பிப் பின் தூங்கினேன்

11 comments:

Dreamzz said...

//இன்று மட்டும் வெளியே வராதே....
நாளையிலிருந்து நீ உன்
செல்லச் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்"
என்று உனக்கொரு மின்னஞ்சல்.....
அனுப்பிப் பின் தூங்கினேன்
//
நல்லா இருக்கு கவிதை :)

aruna said...

Dreamzz said...
//நல்லா இருக்கு கவிதை :)//

மறுபடியும் முதல் கமென்ட்.....
ரொம்ப நன்றி dreamz
aruna

பாச மலர் said...

அழகிய கடைசி வரிகள்..

aruna said...

நன்றி பாசமலர்.....வருகைக்கு நன்றி...
அருணா

SanJai said...

ஐ.. அழகான கவிதை :-)
இன்னும் எழுதுங்க அருணா அக்கா.

பட்டம் said...

//பட்டத் திருவிழா....
மாஞ்சா நூலின் நுனியில் கட்டிப் பறக்கும் பட்டம்....
என் கையின் இழுப்பில் மேலும்,கீழும் அங்கும் ,இங்கும்
முடிவே இல்லாத தேடலில் .....
வான் வெளியின் எந்த காற்றைத் தேடி
இந்தப் பயணம்?/

உங்க கார்ல இருந்து வர CO2, உங்க ஃப்ரிட்ஜ்ல இருந்து வர CFC .. இதெல்லாம் இல்லாம கொஞ்சம் நல்ல காத்து தேடித் தான் போறேன்... மொதல்ல அந்த மாஞ்சாவ விட்டுட்டு கவிதை எழுதறிங்களா ப்ளீஸ்..?

லாஸ்ட் பென்ச் ரெளடி said...

//உனக்கெங்கே தெரிய போகிறது?
உன் பயணத்தின் பாதையில்
பாவம் அந்தப் பறவைகளின்
இறகுகளிலோ,சிறகுகளிலோ,
கால்களிலோ,கழுத்தினிலோ
சிக்கி சின்னா பின்னமாகப்போகிறதென்று?//

என்னாது சின்னாபின்னமாகும்? பட்டமா இல்லை பறவைகளின் இறகுகளா, சிறகுகளா( ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? :( ), கால்களா, கழுத்தா?

வானம் said...

//நிலத்தையும்,நீரையும்
சூறையாடிய மனிதர்களுக்கு
வானமென்ன பெரிய விஷயமா?//
ஹல்லோ மனிதர்களே.. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதிங்க.. சொல்லிபுட்டேன் ஆமா... :)

குட்டிப்பறவை said...

//குட்டிப் பறவையே.....
"இன்று மட்டும் வெளியே வராதே....
நாளையிலிருந்து நீ உன்
செல்லச் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்"
என்று உனக்கொரு மின்னஞ்சல்.....
அனுப்பிப் பின் தூங்கினேன்//

என்ன அருணா அக்கா ..கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இப்டி இருக்கிங்க.. மெயில் ஐடி சரியா டைப் பண்ணிங்களா? இன்னும் எனக்கு வரவே இல்ல. டெலிவரி ரிப்போர்ட் பாக்காம தூங்கிட்டிங்களே. :(

Mail Delivery Subsystem said...

மன்னிக்கவும்... நீங்கள் அனுப்பிய மெயில் உரியவரை சென்றடையவில்லை. அந்த குட்டிப் பறவை வாழ்ந்த மரம் ஒரு அரசியல் கட்சியின் போராட்டத்தில் வெட்டி சாய்க்கப் பட்டுவிட்டதால் , அந்த குட்டிப் பறாவை வேறு இடத்திற்கு சென்றுவிட்டது. Please try again some other place. :P

aruna said...

இது சஞ்சய்க்கு...
வருகைக்கு நன்றி தம்பி...எழுதும்போதெல்லாம் படிங்க தம்பி...
அருணா

இது பட்டத்துக்கு...
//உங்க கார்ல இருந்து வர Cஓ2, உங்க ஃப்ரிட்ஜ்ல இருந்து வர CFC .. இதெல்லாம் இல்லாம கொஞ்சம் நல்ல காத்து தேடித் தான் போறேன்...//

சரி சரி கொஞ்ச நேரம் நல்ல காத்துல பறந்துட்டு வாங்க....
அருணா

இது லாஸ்ட் பென்ச் ரெளடிக்கு....
//என்னாது சின்னாபின்னமாகும்? பட்டமா இல்லை பறவைகளின் இறகுகளா, சிறகுகளா( ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? :( ), கால்களா, கழுத்தா?//

இறகுகள் ஒன்றாகச் சேர்ந்து தான் சிறகு ஆகும் என்பது என் நினைப்பு..... தப்பா?
அருணா

இது வானத்துக்கு....
ஹல்லோ மனிதர்களே.. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதிங்க.. சொல்லிபுட்டேன் ஆமா... :)
ஆமா ஆமா நீ சொன்ன உடனே கேட்டு விடுவார்கள் இந்த மனிதர்கள்....!!
அருணா


இது குட்டிப்பறவைக்காக....

//என்ன அருணா அக்கா ..கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இப்டி இருக்கிங்க.. மெயில் ஐடி சரியா டைப் பண்ணிங்களா? இன்னும் எனக்கு வரவே இல்ல. டெலிவரி ரிப்போர்ட் பாக்காம தூங்கிட்டிங்களே. :(//
அருணா


அடடா அடுத்த தடவை கண்டிப்பா மெயில் ஐடி சரியா டைப் பண்றேன்....
அருணா
Mail Delivery Subsystem said...
//மன்னிக்கவும்... நீங்கள் அனுப்பிய மெயில் உரியவரை சென்றடையவில்லை. அந்த குட்டிப் பறவை வாழ்ந்த மரம் ஒரு அரசியல் கட்சியின் போராட்டத்தில் வெட்டி சாய்க்கப் பட்டுவிட்டதால் , அந்த குட்டிப் பறாவை வேறு இடத்திற்கு சென்றுவிட்டது.Please try again some other place. :P//
அச்சச்சசோ....இப்போ என்ன பண்ணுவேன்????????????
அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா