மழையுடன் ஒரு ஊடல்........
அன்று நான்
மழையுடன் பேசவில்லை
மழைக்குத் தெரியும்
ஏன் என்று?
மழைக்கு இதுவும் தெரியும்
நஷ்டம் எனக்குத்தான் என்று!
தான் வருவதைத்தான் என்னிடம் சொல்லவில்லை...
அவள் வருவதையும் கூடவா என்னிடம் சொல்லக் கூடாது?
மழையும் நானும் செல்லமாகச் சண்டை போட்டுக்
கொண்டிருக்கும் போதே........
அவள் புன்சிரிப்புடன் கடந்து விட்டாள்!!!
மீண்டும் மழையுடன் ஒரு சண்டைக்குத் தயாராகினேன் நான்!!!!
12 comments:
மழையுடனான ஊடலும் சீண்டலும் அழகான கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது.
மழை, மேகம் நிலா, மலர்கள் என இயற்கையின் அற்புதங்கள் எத்தனை எத்தனை கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது.
வாழ்த்துகள் அருணா
http://groups.google.com/group/muththamiz
//மழை, மேகம் நிலா, மலர்கள் என இயற்கையின் அற்புதங்கள் எத்தனை எத்தனை கவிஞர்களை உருவாக்கியிருக்கிறது.
வாழ்த்துகள் அருணா//
நன்றி ! சரியாகச் சொன்னீர்கள்! இவைகள் இல்லையென்றால் நம் வாழ்வு போரடித்து விடுமே!!
அன்புடன் அருணா!!
அருணா
கவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்
http://groups.google.com/group/muththamiz
வாவ்:) நல்லா இருக்குங்க கவிதை... ஷார்ட் அண்ட் நைஸ் :)
மழை.. எப்பவுமே தனி சுகம் தான் :)
ம்ம்ம்...
நல்லாத்தான் இருக்கு.
இதுக்கு நீ ரொம்ப யோசிக்கலைன்னு தோணுது...
(முந்தைய பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்....)
கவி மனம் வாழ்க...
நன்றி மஞ்சூர் ராசா,dreamz, பின்னூட்டங்களுக்கு ரொம்ப நன்றி!!!
அன்புடன் அருணா
//சாம் தாத்தா said...
ம்ம்ம்...
நல்லாத்தான் இருக்கு.
இதுக்கு நீ ரொம்ப யோசிக்கலைன்னு தோணுது...//
ரொம்ப சரியாகச் சொன்னீங்க சாம் தாத்தா! இப்போ யோசிக்கவே இல்லை இது என் பழைய கவிதைகளில் ஒன்று!!!உங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியுமா???
அன்புடன் அருணா
கவிதை அருமை - பழசோ புதிதோ - காப்பி இல்லை - உங்கள் கவிதையின் மீள் பதிவு தானே
கருத்து அருமை- எளிமையான சொற்கள்.
வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..சீனா
அன்புடன் அருணா.
குழந்தை தனமான வார்த்தை வேளையாட்டு அருமை
இந்த பதிவிற்கு
எனது பாராட்டுக்களில்லை!
மன்னிக்கவும்:-)
என் சுரேஷ்
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா