நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, January 5, 2008

நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...

பூக்கள் மலர்ந்தன.....
இதழ்களில் பனித்துளி......
சிரித்துக் கொண்டே அழ பூவால் மட்டுமே முடியும் என்றாள் அவள்..
கண்ணில் நீர் வரச் சிரிக்க பூவால் மட்டுமே முடியும் என்றேன் நான்...
பூவும்,இதழும்,பனியும் ஒன்றுதான்
நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்...
பூ மரிக்கவுமில்லை....
பூ சிரிக்கவுமில்லை...
பூ வாழத் துடிக்கிறது...
இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?
நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?

6 comments:

Dreamzz said...

//சிரித்துக் கொண்டே அழ பூவால் மட்டுமே முடியும் என்றாள் அவள்..
கண்ணில் நீர் வரச் சிரிக்க பூவால் மட்டுமே முடியும் என்றேன் நான்...//
வாவ்! வாவ்!

Dreamzz said...

//பூ மரிக்கவுமில்லை....
பூ சிரிக்கவுமில்லை...
பூ வாழத் துடிக்கிறது...
இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?
நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?////

சும்மா நச் நச்னு சொன்னீங்க.. சூப்பரு கவிதை..

Divya said...

\\பூ மரிக்கவுமில்லை....
பூ சிரிக்கவுமில்லை...
பூ வாழத் துடிக்கிறது...
இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?
நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?\\

அழகான வரிகள், ரசித்தேன்!

Aruna said...

aruna said
வருகைக்கு நன்றி திவ்யா

Dreamzz said...
//வாவ்! வாவ்!//

//சும்மா நச் நச்னு சொன்னீங்க.. சூப்பரு கவிதை..//

உங்க ப்ளாக் அப்பப்ப விசிட் பண்ணதில கிடைச்ச வித்தைதான் Dreamzz....... நன்றி

N Suresh said...

//பூக்கள் மலர்ந்தன.....
இதழ்களில் பனித்துளி......//


நல்ல வர்ணனை

//சிரித்துக் கொண்டே அழ பூவால் மட்டுமே முடியும் என்றாள் அவள்..//

மனிதர்களும் தான்

//கண்ணில் நீர் வரச் சிரிக்க பூவால் மட்டுமே முடியும் என்றேன் நான்...//

மனிதர்களும் தான்!

//பூவும்,இதழும்,பனியும் ஒன்றுதான்
நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்..//

எப்படி மூன்றும் ஒன்றாகும்!!!

//பூ மரிக்கவுமில்லை....//

பூவுக்கும் மரணமுண்டு

//பூ சிரிக்கவுமில்லை...//

சிரித்ததாய் சொன்னீர்களே

//பூ வாழத் துடிக்கிறது...//

ஆம்! ஒரு அன்புள்ளம் கொண்ட
பெண்ணின் கேசத்தில் வாழத்துடிக்கிறது
பூஜாபுஷப்பமாக துடிக்கிறது
இறுதிமரியாதைக்கும் தயராகிறது
செடியின் மடியிலேயே
இறப்பதில் பூக்களுக்கும் இன்பமில்லை


//இன்னும் ஒரு நாள் நான் செடியிலிருப்பேன் என்றால்?
ஒட்ட வைத்துக் கொள்ளுமா செடி?//

இயற்கை கொஞ்சம் அனுமதித்தால்
இதென்ன இன்னும் நடக்கும் பல

//நாம் தான் விட்டு வைத்து விடுவோமா?//

நம்மிடம் மகிழத்தான் பூக்கள் துடிக்கின்றன.

வாழ்த்துக்கள்

Aruna said...

//பூவும்,இதழும்,பனியும் ஒன்றுதான்
நீயும்,நானும் தான் பூவை வேறு வேறாய்ப் பார்த்தோம்..//

எப்படி மூன்றும் ஒன்றாகும்!!!


நன்றி,
பூவும் ,இதழும்,பனியும் ஒன்றுதான்......மூன்றையும் ஒன்று என்று சொல்லவில்லை...
ஒரே பொருள் பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து வேறு படுகிறது என்பதற்காகச் சொன்னேன்
அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா