நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, December 29, 2007

எனக்குத் தெரிந்த அவர்களும் அவர்களுக்குத் தெரியாத நானும்........

இது என்னப்பா எனக்கு வந்த சோதனை?
உங்களை எல்லாம் எனக்குத் தெரிகிறது

மங்களூர் சிவாவுடைய அக்கறை , கொத்தனாரோட வீடு,இம்சை அரசியோட இம்சை,பிரியமுடன் கோபியோட பிரியம், அந்தோனி முத்துவோட கஷ்டம்,என் .சுரேஷோட உதவும் பண்பு, ஸ்ரிதரோட குளிர்,கார்த்திக்கோட தூறல்கள் ,தமிழ் நெஞ்சோட தவிப்பு , தேவ் , பிரியன் ,நவீன் பிரகாஷோட ,அருட்பெருங்கோவோட, ட்ரீம்சோட காதல், சர்வேசனோட அளப்பு,கோவி கண்ணனோட எண்ணங்களும், இளாவோட பைனரி யும், நக்கல், சாருவோட கவிதைகளும் , சேவியரோட அந்த நாள் ஞாபகமும் ,சனியன்சோட பல்பும், ஓசை செல்லாவின் தமிழ் ப்ரோஜெக்டும், மற்றும் ஜியும், எலியும்,சனியும்

எல்லோரையும் எனக்குத் தெரிகிறது ............என்னை யாருக்குமே தெரியலையே? உங்களுக்குத் தெரியாத நான் என்ன செய்ய? எப்பிடி முயன்றும் என்னைத் தேன்கூட்டில் இணைக்கவே முடியவில்லை............... கொஞ்சம் பின்னுட்டம் போட்டு சொல்லிக் கொடுங்கப்பா......... அருணா

27 comments:

தேவ் | Dev said...

முதல் வணக்கம்ங்க.. நம்ம பதிவிலே பின்னூட்டம் போட்டீருந்தீங்க.. அதுக்கு நன்றி சொல்லிட்டு அப்படியே உங்கப் பதிவையும் ஒரு எட்டு பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தாப் பதிவு தலைப்பே மிரட்டுதுங்களே... ம்ம் அப்புறம் நம்ம பதிவுலகப் பங்காளிகள் எல்லார் பேரையும் போட்டு பதிவெல்லாம் வேற போட்டிருக்கீங்க... அவங்க சார்பாகவும் முதல் நன்றியைத் தெரிவிச்சுக்குறேன்ங்க... தேன் கூடு தமிழ்மணம் எல்லாத்துல்லயும் உங்கப் பதிவை இணைத்து விடுங்கள் அப்புறம் உங்களையும் எல்லாரும் தெரிஞ்சுக்குவாங்க...புத்தாண்டைப் புது மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க... தேன்கூடு..தமிழ் மணம் ..தளங்களுக்கான இணைப்பு நம்ம பதிவுல்லயும் இருக்குங்க...இது போதுங்களா..

நிலா said...

நான் சொல்லித்தரட்டுமா ஆண்ட்டி?

நிலா said...

http://poorna.rajaraman.googlepages.com/home

இந்த பக்கத்துக்கு போங்க. அவங்க சொன்னா மாதிரி செய்யுங்க.

அப்புறம் உங்க பதிவு லின்ங்கதமிழ் மணத்தில் கொடுங்க

அங்கே யுனிகோடில் இல்லை அது இதுன்னு நாலு காரணம் சொல்வாங்க

அப்படி சொல்லும் பக்கத்திலேயே மெயில் பண்ண லிங்க்க் இருக்கும்

அதுல அய்யா சாமி தமிழ்மன நிர்வாகிகளே என்னையும் உங்க கூட்டத்துல சேத்துக்கோங்கன்னு ஒரு மெயில் அடிச்சு விடுங்க.
அவ்வளவுதான் உங்களை காத்திருக்கும் லிஸ்டில் வைத்திருப்பாங்க
ஒரு சுபயோகசுபதினத்தில் போனாப்போவுதுன்னு சேத்துப்பாங்க

நிலா said...

தேன்கூட்டில் சேருவது அவ்வளவு கஷ்டம் இல்லையே.

அதைக்கூட இந்த குட்டிபாப்பாவே கத்துக்கொடுக்கனுமா ஆண்ட்டி? :P

நிலா said...

அப்புறம் இந்த தலைப்பை மாத்தீடுங்களேன் ப்ளீஸ்

அறிவன் /#11802717200764379909/ said...

நிலாப் பாப்பா சொல்ற மாதிரி சுலபமான விதயம்தான்..
அப்புறம்....
எல்லோரும்தான் இறக்கப் போகிறோம்-ஒருநாள்,அதை நித்தமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன??????

என் சுரேஷ்... said...

அன்புள்ள அருணா அவர்களுக்கு,

உங்களையும் எல்லோருக்கும் தெரியும்
உங்களைவிட உங்கள் எழுத்து அறிமுகப்படுத்தின உங்களின் அன்பு உள்ளத்தையும் எல்லோருக்கும் அறியும்.

தமிழமணத்தில் நீங்கள் மகிழ்ந்திருக்க அங்கே தேனெதற்கு ?

பரவாயில்லை. தேன், தேனை ஆசைப்படுவதில் தவறில்லை.

சரி, தமிழ்த்தேனின் வலைப்பூ சென்று நீங்கள் அனுப்பின மடலை எனக்கு அனுப்பவும்.

விரைவில் தமிழ்த்தேனில் உங்களின் வலைப்புவை இணைக்க என் இனிய வாழ்த்துக்கள்.

பலர் உங்களின் வலைப்பூவின் தலைப்பை மாற்ற வேண்டும் என்பதற்கு காரணம் அது உங்களின் உள்ளத்தை எல்லோரும் அறிந்திருப்பதாலும் நீங்கள் யாராக இருந்தாலும் அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற அன்பால் தான்.

நீங்கள் நீடூழி வாழ்க என் இனிய வாழ்த்துக்கள்.

ஆனால் உங்கள் வலைப்பூவின் தலைப்பை மாற்ற வேண்டுமென்று நான் சொல்ல மாட்டேன்.

ஏனென்றால், மரணத்தைப் பற்றின நினைவுகள் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் மனிதனை இனிமையாகவும் அமைதியாகவும் வாழவைக்க உதவும். மரணத்தை தியானித்தால் வாழ்க்கை இனிக்கும். ஞானம் பெருகும்!

நெற்றியில் திருநீர் அணியும் வழக்கம் இந்திய நாட்டில் இந்த சிந்தனையின் அடிப்படையில் தான் வந்தது.

அன்பினிய அருணா, நீங்கள் அமைதியோடு நீடூழி வாழ்க! வளர்க! மகிழக!

பாசமுடன்
என் சுரேஷ்

Dreamzz said...

//அதைக்கூட இந்த குட்டிபாப்பாவே கத்துக்கொடுக்கனுமா ஆண்ட்டி? :P//
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv!

thaangadhuda boomi.

Dreamzz said...

//நான் இறக்கப் போகிறேன்-அருணா//
அப்புறம் அருணா உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லறேன்..
எல்லாரும் தான் இறக்க போறோம்.. ஆனா பிறந்து இறக்கும்
அந்த இடை வெளி இருக்கு பாருங்க, அதுல வாழலாம் :)
நம்ம சந்தோஷமா இல்லன கூட அடுத்தவங்களை சந்தோஷ படுத்தின,
நம்ம மனசுக்கு நிம்மதியாசும் கிடைக்கும்..

சென்ஷி said...

நான் ஏதாவ‌து சொல்ல‌னும்னு வ‌ந்தா ஏற்க‌ன‌வே இங்க‌ பெருங்கூட்ட‌ம் கூடிடுச்சு.. :))

வ‌லைப்ப‌திவ‌ர் உத‌விப்ப‌க்க‌த்துல‌ மெயில் செய்யுங்க‌..

aruna said...

varugaikku nanRi,chenshi,

aruna said...

romba romba nanRi deev varugaikkum,vazhththukkum,udhavikkum!!

aruna said...

வருகைக்கு நன்றி,நிலாம்மா,என்ன பண்றது இப்போ குட்டீஸ்லாம் ரொம்ப சுட்டீஸ்னு எனக்குத் தெரியுமாக்கும் ....

நிலா said...

தமிழ்மணம் வெய்டிங் லிஸ்ட்ல வந்துட்டீங்க போல. வாழ்த்துக்கள் ஆண்ட்டி

aruna said...

//நம்ம சந்தோஷமா இல்லன கூட அடுத்தவங்களை சந்தோஷ படுத்தின,
நம்ம மனசுக்கு நிம்மதியாசும் கிடைக்கும்..//
aruna said,
பேரைப் பார்த்து நான் சந்தோஷமா இல்லைன்னு முடிவே கட்டீட்டீங்களா dreamz? and Arivan,....அது வெறும் பேர் தான் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதா?கண்டிப்பாக மாற்ற வேண்டியது தான்...

என் சுரேஷ்... said...
//ஏனென்றால், மரணத்தைப் பற்றின நினைவுகள் இவ்வுலக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் மனிதனை இனிமையாகவும் அமைதியாகவும் வாழவைக்க உதவும்.//

aruna said...

நன்றி என்.சுரேஷ்,நீங்க மட்டும்தான் சரியா புரிஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கும்,புரிந்து கொண்டதற்கும் மிக்க நன்றி...

aruna said...

நிலா said...
தமிழ்மணம் வெய்டிங் லிஸ்ட்ல வந்துட்டீங்க போல. வாழ்த்துக்கள் ஆண்ட்டி
aruna said...

உன்கிட்ட கற்றுக் கொண்ட வித்தையின் பலன்தான் கண்ணம்மா...நிலா....நன்றி

ஸ்ரீ said...

செத்து போ என்னால தடுக்கமுடியுமா? எல்லா பயபுள்ளயும் ஒரு நாளைக்கு சாக வேண்டியது தான். வாழ்றது முக்கியமில்லை ஆனா அடுத்தவனுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழணும். வெத வெதச்ச ஒடனே பழம் சாப்படுன்னா எப்படி? இன்னிக்கி நான் வெதக்கிறேன் நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ அடுத்தது உன் மவன் சாப்பிடுவான் ஆனா அதெல்லாம் பாக்க நான் இருக்க மாட்டேன் அப்பு ஆனா வெதை நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை ஒரு ஒருத்தவனோட கடமை.

போன வாரம் தேவர் மகன் பாத்த எஃபெக்டு சாரி. என்ன மேடம் இப்படி ஒரு தலைப்பு குடுத்திருக்கீங்க. மாத்துங்க முதல்ல. இந்நேரம் தமிழ்மணத்தில் சேர்ந்திருப்பீங்கன்னு நம்புறேன். என்ஜாய் பிளாகிங் :). இனிமே அடுக்கடி சந்திப்போம். வருகிறேன் வணக்கம்.

நிலா said...

தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டார்கள் உங்களை.

//உன்கிட்ட கற்றுக் கொண்ட வித்தையின் பலன்தான் கண்ணம்மா...நிலா....நன்றி//

இது நீங்க சொன்னது,

நான் குட்டிபாப்பாவா இருக்கலாம், இங்க இதுல நாந்தான் குரு,

எனக்கு குருதட்சினை வேணும்

குருதட்சினை என்ன தெரியுமா?

உங்க blog தலைப்பை மாத்துனா அதுதான் எனக்கு குருதட்சினை.

மாத்துவீங்களா? இல்ல குட்டி பாப்பா பேச்செல்லாம் கேக்கறதான்னு விட்றுவீங்களா?

Mangai said...

kootam serkka ippadi oru vazhi irukka?

theriyama poche.

appuram Then Koodu serthukittangala illaya? konjam sonneenganna vasathiya irukkum. ennaiyum serthukka mattengaranga.
konjam sibarisum pannidunga.

இறக்குவானை நிர்ஷன் said...

தேன் கூட்டில உங்கள இணைக்க நல்ல வழி சொல்றேன். கொழும்புக்கு வரும்போது சொல்லுங்க. பெரிய தேன்கூடா பார்த்து வைக்கிறேன். அப்படியே தலைய வச்சிங்கன்னா போதும்... வேறு சந்தேகங்கள்..?
( இனியும் வருமா??)

மங்களூர் சிவா said...

//
இறக்குவானை நிர்ஷன் said...
தேன் கூட்டில உங்கள இணைக்க நல்ல வழி சொல்றேன். கொழும்புக்கு வரும்போது சொல்லுங்க. பெரிய தேன்கூடா பார்த்து வைக்கிறேன். அப்படியே தலைய வச்சிங்கன்னா போதும்... வேறு சந்தேகங்கள்..?
( இனியும் வருமா??)

//
கலக்கல்

ரிப்பீட்டேய்

aruna said...

இறக்குவானை நிர்ஷன் said...
"//பெரிய தேன்கூடா பார்த்து வைக்கிறேன். அப்படியே தலைய வச்சிங்கன்னா போதும்..."//

இவ்வளவுதானா?முதல்லே சொல்லக் கூடாதா?கொழும்புக்கு டிக்கெட் போட்டாச்சுப்பா
அருணா

aruna said...

ஸ்ரீ said...
//போன வாரம் தேவர் மகன் பாத்த எஃபெக்டு சாரி. என்ன மேடம் இப்படி ஒரு தலைப்பு குடுத்திருக்கீங்க. மாத்துங்க முதல்ல. இந்நேரம் தமிழ்மணத்தில் சேர்ந்திருப்பீங்கன்னு நம்புறேன். என்ஜாய் பிளாகிங் :). இனிமே அடுக்கடி சந்திப்போம். வருகிறேன் வணக்கம்.//
தேவர் மகன் எஃபெக்டு சூப்பர்...தமிழ் மணத்தில் சேர்ந்தாயிற்று.அப்புறம் வருகைக்கு நன்றி. கண்டிப்பா சந்திப்போம்
அருணா

aruna said...

நிலா said...
//உங்க blog தலைப்பை மாத்துனா அதுதான் எனக்கு குருதட்சினை.//


நிலாம்மா உனக்கு குரு தட்சிணை கொடுப்பதற்காகவாவது பேரை மாத்தணும்.....னல்ல பேரா யோசித்துக் கொண்டே இருக்கும் அருணா

Mangai said...
appuram Then Koodu serthukittangala illaya? konjam sonneenganna vasathiya irukkum. ennaiyum serthukka mattengaranga.
konjam sibarisum pannidunga.

இறக்குவானை நிர்ஷன் சொன்ன மாதிரி கொழும்புக்கு ஒரு டிக்கெட் போடுங்க....அருணா

ச்சின்னப் பையன் said...

ஹலோ...எனக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க...
என் உரல்:
http://boochandi.blogspot.com

1. என் பக்கத்தில் 'தமிழ்மணம்' logo தெரிகிறது.
2. நான் தமிழ்மணம் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறேன்.

அப்படியென்றால், நான் செய்யவேண்டியது ஒன்றும் இல்லைதானே?

தமிழ்மணமா பார்த்து என்னை சேர்த்துக் கொள்ளவேண்டும் தானே?

ச்சின்னப் பையன்

sathish said...

உங்க கூட்டத்துல இப்ப நிறைய பேர் சேந்தாச்சு என்னையும் கொஞ்சம் சேத்துக்கோங்க :))
என் வலை பக்கம் வந்துபோனால் மகிழ்வேன்!

ரகுநாதன் said...

என்ன இப்பிடி சொல்லீட்ட அருணா.. கொஞ்சம் பாத்து தலைப்பு வக்கப்புடாதா... எங்க மனசு வலிக்கும்ல... என்று நினைத்து ஒவ்வொருவரும் பருத்திவீரன் கார்த்தி மாதிரி பின்னூட்டம் போட்டிருக்காங்க... எனக்கு புரியல... நான் வாழப்போறேன் என்று சொல்வது போல இறக்கப் போகிறேன் என்று சொல்கிறீர்கள் அது தவறா? ஆனாலும் தலைப்ப வச்சே சகலரையும் இழுத்துடீங்க அருணா... எங்களுக்கும் மன்ஸ் இருக்குதுமா... அதனால நாங்களும் பீல் பண்ணி பின்னூட்டம் போடுவோம்ல... அப்பாலிக்கா முட்ச்சிகிறேன். ஜூட்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா