அதிகாலை பனிச் சோலை.....பஸ் பயணம்...உயிர் உள்ளே ஊடுருவும் குளிர்...கண் விழிக்கவே கஷ்டப்படும்....மனது.ஆனாலும் நிதம் குளித்து நீண்ட பயணம் செய்து அலுவலகம் ஓடும் பணியின் தேவைக்கேற்ப குளிர் கால அதிகாலைக் கண்விழிப்பும் தவிர்க்க முடியாதது...பனிப்பத்து தவிர்க்க முடியாத முகத்தில் க்ரீம் தடவிப் பள பளக்க வைத்து,எண்ணை வடிய வைத்து அழுகுண்ணி ஆட்டம் ஆடிய பெண்ணாய் ஸ்வெட்டர், ஷால், ஸ்கார்ப், மற்றும் இத்யாதிகளையும் சுற்றி கண்ணை மட்டும் வெழியே காட்டிக் கொண்டு ஜன்னல் வழியே பார்த்தால்....அட..வரிசையாக அழகு பூக்கூடைகளுடன்
சைக்கிளில் உல்லாசமாக விசிலடித்தபடி நகரும் பூக்கூடைக்காரர்கள்.....பூக்கூடைகளைப் பார்த்தவுடன் கூரை வீட்டில் தீப்பிடித்ததைப் போல சில்லென்று சந்தோஷம் வந்து மனதில் ஒட்டிக் கொண்டது......அதை அப்படியே மனதிலும் , முகத்திலும் ஒட்டி வைத்துக் கொண்டேன். நாள் முழுவதும் அந்த ஜில்லிப்பு என்னுடன் கூடவே ஒட்டிக் கொண்டு.......
மறு நாள், நாளை மறுநாளும், தினமும் பூக்கூடைக்காரர்களும் ,நானும், கூடைப் பூக்களும் பார்த்துக் கொண்டோம்.கூடைபூக்களின் சந்தோஷத்தை கடன் வாங்கிக் கொண்டு நாள் முழுதும் அதை கொஞ்சம் கொஞ்சமாக செலவளித்துக் கொண்டு இருந்தேன்.
தினமும் அதே நேரம் பூக்கூடைக்காரர்களையும்,பூக்கூடைகளையும் பார்க்காவிட்டால் நாள் நல்லபடியாக இருக்காது என்று எண்ணும் வரை போய் விட்டேன்.அந்தக் குளிரிலும் பூக்கூடைக்காரர்களின் சந்தோஷம் என்னை என்னவெல்லாமோ எண்ண வைத்தது....பேசாமல்இந்த வேலையை விட்டு விட்டு பூக்கூடை தூக்கப் போய் விடலாமா? என்று கூட எண்ண வைத்தது.சீ... சீ இப்படிஎல்லாமா ஒருத்திக்கு பூப் பைத்தியம் பிடிக்கும்?.......
பூவே கிடைக்காத இடத்தில்தான் இருக்கப் போகிறாய்....என்ற அம்மாவின் வார்த்தைகள் அவ்வபோது நினைவுக்கு வந்து மனதைக் கஷ்டப் படுத்தியது......
நாங்கள் நான்கு பெண்கள் எப்போ பூ வாங்கும் படலம் நடந்தாலும் அது என் அழுகையில்தான் முடியும்.எப்படி அளந்து கொடுத்தாலும் எனக்கு மட்டும் நீ கொஞ்சமா கொடுக்கிறே... என்று கண்ணீருடன்தான் முடியும்.
நான்கு நாட்களாக பூக்கூடைகளையும் ,பூக்காரர்களையும் புன்னகையையும் கூட காணவில்லை...எனக்கு நாளே சரியில்லை, எதுவும்,எல்லாமும் தப்புத் தப்பாக நடப்பதாகத் தெரிந்தது..காலையில் கடன் வாங்கும் சந்தோஷம் இல்லாததால் முகத்தை நீட்டி வைத்துக் கொண்டேன். மனம் முழுவதும் பூக்கூடைக்காரர்களின் நினைவுதான்..இன்று எப்படியும் வந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.
காது பிய்த்துக் கொள்ளும் குளிரிலும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்தேன ்கைக்கடிகாரத்தை மறுபடியும் மறுபடியும் பார்த்தேன். டிரைவரை மெதுவாகப் போவதாக வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டினேன்..தினமும் நானும் பூக்கூடைகளும் சந்திக்கும் இடம் புன்னகையும் பூக்களும் இல்லாமலே கடந்தது.இன்றும் வரவில்லையா?......எனக்குப் பட பட வென்று வந்தது...இனி? இன்று என்ன செய்வது?...இன்றும் எல்லாம் தப்புத் தப்பாக நடக்கும் என்று மனம் அலறியது..பேசாமல் இறங்கி வீட்டுக்குப் போய் விடலாம என நினைத்தேன். என் கூட வருபவளிடம் புலம்பித் தீர்த்தேன்.அவள் ஒரு லூஸ் .."என்னடி பூக்கூடை கலக்குதா?இல்லை பூக்கூடைக்காரனா கலங்க வைக்கிறது" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.ஏண்டி இப்பிடி உளறுகிறாய்?.....மொத்தம் நான்கு பூக்கூடைக்காரர்கள்....அத்தனை பேரையும் எப்படிக் காதலிப்பது?....என்று பாவமாகப் பார்த்தேன்.ஒரு முடிவுடன் பஸ்ஸிலிருந்து அவளையும் இழுத்துக் கொண்டு இறங்கினேன்...
"இன்னைக்கி லீவு போட முடியாதுடி" என்ற அவள் அலறல் என் காதில் விழவே இல்லை...."இங்கதாண்டி இந்த தெருவிலிருந்துதான் வருவாங்க வா போய் என்னன்னு ஒரு தடவைப் பார்த்து வந்துரலாம்" "எனக்கு அந்த சந்தோஷமும் அந்தப் பூக்களும் தினமும் வேண்டும்"
அவளின் முகம் எரிச்சலின் உச்சத்திற்குப் போனது. ஆனலும் கிண்டலோடு நீ ஒண்ணு பண்ணுடி பேசாமல் அதுல ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கோ...அதைத் தவிர வேற வழியேயில்லை உன் பையித்தியத்தைத் தீர்ப்பதற்கு "என்று புலம்பினாள். திடுமென்று அந்தச் சந்தின் முடிவு ஒரு வீட்டின் முன்னால் விட்டிருந்தது.அங்கிருந்து ...அட அந்தப் பூக்காரர்களேதான்.....என்னம்மா என்ன வேண்டும்?
நான்....அது நீங்க பூ ....வரல........என்று உளறிக் கொண்டு இருக்க என் தோழிதான் கை கொடுத்தாள்...இல்லைபா....பூ நாலு நாள் வரல்லையா....அதான் பூ வேண்டும்.... என்று சமாளித்தாள்.
இல்லம்மா.......எங்க நாலு பேருக்கும் நேற்று கல்யாணம்......என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே போச்சுரா....... ..நாங்க ரெண்டு பேரும் ஓவென்று விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தோம்............
12 comments:
கதையா
நனவுகளின்
நினைவுதொகுப்பா????
கல்லூரி கனவுகள் முடிந்து
வாழ்க்கை புரிய தொடங்கும் நாட்களுக்கு
இடைப்பட்ட நாட்கள்
ஆம்ம்ம்ம்ம்
கனா காலங்களின்
இறுதி நாட்கள் !!!!!
கதையா
நனவுகளின்
நினைவுதொகுப்பா
கல்லூரி கனவுகள் முடிந்து
வாழ்க்கை புரிய தொடங்கும் நாட்களுக்கு
இடைப்பட்ட நாட்கள்
ஆம்ம்ம்ம்ம்
கனா காலங்களின்
இறுதி நாட்கள் !!!!!
ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?
கோபம் ஒண்ணும் இல்லைங்க !சும்மா ஒரு வித்தியாசமாக இருக்கட்டுமேன்னு தான் !!!!!
அருணா
போர் திலகம் பட்டம் வழங்கிய அருணா அவர்களுக்கு - எம்ஜியார் பழ்கலைக்கழகம் வாயிலாக டாக்டர் பட்டம் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
//
TamilNenjam said...
ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?
//
நான் கேட்ட
அதே கேள்வி
நன்றிங்க தமிழ்நெஞ்சம்
அய்யா சிவா அவர்களே பேரை விட்டு விட்டு கொஞ்சம் என் எழுத்துக்கள் பற்றி அவ்வப்போது சொன்னால் நல்லது நான் வளரும் குழந்தை.....கொஞ்சம் சத்துணவும் தேவை....... உங்களுக்குத் தெரியாததா?
அருணா
அன்பு அருணா,
உங்கள் எழுத்துத் திறம் நன்று.
வழக்கமான வழக்கமற்ற வித்தியாச நிறம் உங்கள் எழுத்தில் கண்டேன்.
நான் மிக இரசித்தது
"இதனால் அறியப்படுவது."
இன்னும் நீங்கள் நிறைய எழுதலாமே.
"பூக்களின் இரசிகைக்கு," வலைப்பூ கிரீடமாகட்டும்.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அந்தோனி முத்து.
http://anthony.azhagi.com
(எனது http://possitiveanthonytamil.blogspot.com/
வலைப்பூவிற்கான உங்களின் கருதுக்கு நனறிகள்.)
அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா..
இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..
நல்லா சுவரஸ்யமா எழுதுறிங்க.. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..
http://charu-sekar.blogspot.com/
கனா காலங்களின்
இறுதி நாட்கள் !!!!!
aruna said
"கனவு இப்பவும் காணலாம்பா"
ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?
மங்களூர் சிவா
நான் கேட்ட
அதே கேள்வி
நன்றிங்க தமிழ்நெஞ்சம்...
ரசிகன் said...
அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா..
இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..
aruna said...
"சரிங்கப்பா கொஞம் யோசிக்க விடுங்க நல்ல பேர் கிடைத்தவுடன் மற்றி விடுகிறேன்
ANTHONY MUTHU said...
"பூக்களின் இரசிகைக்கு," வலைப்பூ கிரீடமாகட்டும்."
aruna said...
தலை குனிந்து ஏற்றுக் கொள்கிறேன்
http://charu-sekar.blogspot.com/
கனா காலங்களின்
இறுதி நாட்கள் !!!!!
aruna said
"கனவு இப்பவும் காணலாம்பா"
ப்ளாக் பெயரை இப்படியா வைப்பது.... ஏனுங்க இந்தக் கோபம்?
மங்களூர் சிவா
நான் கேட்ட
அதே கேள்வி
நன்றிங்க தமிழ்நெஞ்சம்...
ரசிகன் said...
அடப்பாவமே... ஏனுங்க அருணா.. புதுசா இருக்கே உங்க பேருன்னு உங்க வலை வீட்டுக்கு வந்தாக்கா..
இப்பிடியா வெல்கம் போட்டு வச்சி பயம்புறுத்தறது..
aruna said...
"சரிங்கப்பா கொஞம் யோசிக்க விடுங்க நல்ல பேர் கிடைத்தவுடன் மற்றி விடுகிறேன்
ANTHONY MUTHU said...
"பூக்களின் இரசிகைக்கு," வலைப்பூ கிரீடமாகட்டும்."
aruna said...
தலை குனிந்து ஏற்றுக் கொள்கிறேன்
actually enkku kadisila konjam purila, nala perukkum ore datela kalyanama ? ellai kalyanathukku poo kodukka poi erundhaangalannu therla.. but adhai thavira kadhai nalla erukku, sadharana vishyathiyum interestinga ezhudha mudiyudhu ungalaala
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா