நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, December 6, 2007

சூரியனைச் சீண்டாதீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

சூரியனைச் சீண்டாதீர்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

சூரியனைச் சீண்டாதீர்கள்
சும்மா நிற்கும் சூரியனைச் சீண்டாதீர்கள்
சும்மா பார்த்துக் கொண்டு இருந்தாலே
சுட்டு விடுவேன் எனத் தெரிந்தே
நெருப்புக்குள் நீந்தலாமோ?
நிலம் பார்த்து நிற்கும் என்னை
நிமிர்ந்து பார்க்கும்
எல்லோரையும் எப்போதும் எதிர்ப்பதில்லை.
ஆணவம் மிக்க அதிகாரிகளை
அவ்வப்போது எதிர்ப்பதுண்டு
எங்கோ நேர்மையான சிலரைப் பார்க்கும்போது
என் புன்னகையை எடுத்துக் கொண்டு
அந்த உதடுகளில் ஒட்ட வைப்பது உண்டு.
நினைத்தால் உலகம் எரிக்கும்
மந்திரக் கம்பு உண்டு என்னிடம்
ஆனாலும் எரியட்டும் இந்த பூமியென்று
சும்மா இருந்து விடமுடியாது...
அதனால்தானே சுடும் வான்வெளியாய்
நீரை உறிந்து மழையாய் அவ்வப்போது
விழுந்து குளிர்விக்கிறேன்....
அன்பெனும் மந்திரத்தால்....
அவ்வப்போது வீழ்வேன்.....
வீழ்ந்தாலும் மழையாய்தான் வீழ்வேன்................

Posted by aruna at 1:19 AM 0 comments

6 comments:

மங்களூர் சிவா said...

//
நான் இறக்கப் போகிறேன்
//
என்ன 'ப்ளாக்' ஹெட்டிங் இது

ச்சே

நல்லாவே இல்லை

மங்களூர் சிவா said...

ப்ளீஸ் மாத்தீடுங்க

மங்களூர் சிவா said...

ப்ளீஸ் மாத்தீடுங்க

N Suresh said...

மங்களூர் சிவா
என்னையும் ஒரு நாள்
புரிந்து கொள்வார்

அருணா,
உங்கள் மனதிற்கு தோன்றும் வரை
உங்களின் வலைப்பூவின்
தலைப்பை மாற்ற வேண்டாம்.

இந்த தலைப்பு
எனது ஆணவத்தை அழிக்கிறது
என்னை இன்று முழுவதுமாய்
வாழவைக்கிறது.

நானும் பஸ்மாவேன்
இன்னொரு மனிதனும்
என
இந்த ஞானமும்
என்னில் தருகிறது
அமைதி

கடமையாக செய்யாமல்
நல்லவைகளை
மகிழ்ச்சியுடன் செய்கிறேன்

இசை, கவிதை, காதல்
உதவி, என் தாயின் முத்தம்
தென்றல், பூக்கள், பூங்கா
பூங்காவில் சிரிக்கும் மஞ்சல் வெயில்
என
இன்றென்னை மகிழ வைக்க
இந்த தலைப்பு எத்தனை
அவதாரங்களில் உதயமாகிறது!

தலைப்பு மாற்ற வேண்டுமென்ற
தவிப்பு தலைக்கேறாமல்
எதற்கு மாற்றவேண்டும் தலைப்பூ

பூக்களிடம் பேசிப்பாருங்கள்
அவர்கள்
மரித்துக்கொண்டிருக்கிறார்கள்
என்ற உண்மை சொல்லும்

இதும் வலைப்பூ தானே
உண்மையே சொல்லட்டுமே!



ஓவ்வொஉ

N Suresh said...

முடியும் ஆனால்
மாட்டேன்
என்கிற சூரியன்
மேகங்கள் தரும் மழையை
தனதென சொலவதில்
பொருட்குற்றமுள்ளதே, அருணா!

மங்களூர் சிவா said...

//
என் சுரேஷ்... said...
மங்களூர் சிவா
என்னையும் ஒரு நாள்
புரிந்து கொள்வார்
//
இதுல புரிஞ்சிக்கிறதுக்கு என்ன இருக்கு??

இந்த பூமியில பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் இறக்கத்தான் வேண்டும் அதுதான் இயற்கையின் நியதி.

அது நாளையாகவும் இருக்கலாம், அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ யாருக்கும் தெரியாது ஆனால் இறப்பு என்பது மட்டும் நிச்சயம் இல்லையா?

இந்த பூமியில் யாரையாவது ஒருவரை சொல்ல சொல்லுங்கள் நான் இங்கே நிரந்தரமாக இருக்க போகிறேன் என !!

ஆடு, மாடுகளை போல பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் இதில் என்ன இருக்கிறது

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டும் அவர்களால் ஆனதை அதற்கு அவர்களுக்கு ஒரு 'பாசிடிவ் திங்கிங்' வேணும் 'என்னால் முடியும்' என.

இந்த 'வலைப்பூ'வின் தலைப்பை படிக்கும் போது ஆமாய்யா போய்சேரத்தானே போறோம் என்னத்துக்கு அதை இதை செஞ்சிகிட்டு என்ற சலிப்பு மனோபாவம்தான் ஏற்படுகிறதே தவிர நீங்கள் சொலவது போல ஆணவத்தை ஒன்றும் அழிப்பதாக தோன்றவில்லை :(

//
பூக்களிடம் பேசிப்பாருங்கள்
அவர்கள்
மரித்துக்கொண்டிருக்கிறார்கள்
//
என்ன ஒரு கொடுமையான வரிகள் இவை.

ஆழ்ந்த வருத்தங்கள்

சிவராமன்,
மங்களூர்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா