நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, March 4, 2011

பேனாக் காலம்!

               எங்க அம்மா காலத்தில் மைக்கூடும் மரக்கட்டைப் பேனாவும்....மையைத் தொட்டுத் தொட்டு எழுதவேண்டும். ஆறாம் வகுப்புக்கு மேல்தான் மை பேனா. தினமும் அம்மாவின் அம்மாவிடம் இருந்து அம்ம்மாவுக்குத் திட்டு விழும். ஒரு நாளாவது சட்டையை மையாக்காமல் வர்றியா? அப்படீன்னு....காலையில் எழுந்ததும் குடத்தைத் தூக்கிட்டு ஆற்றுக்குப் போகணும் தண்ணி கொண்டுவர.....வரும் போதே ஆற்றில் குளித்து விட்டு வர வேண்டும்....வந்ததும் தீக்குச்சிக் கட்டை அடுக்கவேண்டும்...குறைந்தது பத்துக் கட்டையாவது அடுக்கவேண்டும்....அப்புறம்தான் பள்ளிக்கு....

             அதுவும் இப்போ மாதிரி வீட்டு முன்னாலெல்லாம் எந்த வாகனமும் வந்து ஏற்றிச் செல்லாது.லொங்கு லொங்கு என்று பள்ளிக்கு ஓடவேண்டும்.அப்படி ஓடும் போது மைக்கூட்டிலிருந்து மை கொட்டிக் கறையாக்காமல் எப்படிப் போக?பள்ளியில் ஏன் இப்பிடி மைக்கறையோடு வர்றேன்னு கேம்ஸ் ஆசிரியர் தோலை உரிப்பார்.வீட்டுக்குப் போனா அம்மாவின் வசவுகள்....இப்படித்தான் நகர்ந்தது பேனாக்காலம் அம்மாவுக்கு...

          அப்புறம் என் காலம். ஐந்தாம் வகுப்பிலேயே மை பேனா.ஆனால் மைக்கூடெலாம் இல்லை..மரக்கட்டைப்பேனாவும் இல்லை.நல்ல அழகான குண்டு பேனா.கேம்லின் பேனாக்கள்...புதுசு புதுசான நிறங்களிலும் தங்க நிற வளையம் மூடியின் மேல்.மை பாட்டில்,மை நிரப்ப ரப்பர் ஃபில்லர்....அந்த ஃபில்லரை உபயோகிக்க நடக்கும் போட்டியோ போட்டி!

                 அப்புறம் அழகழகான ஹீரோ பேனாக்கள்.தங்க நிற மூடியுடன்.அப்பொவெல்லாம் "அதுமட்டும் கிடைச்சுடணும் சாமி உலகத்துலே எதுவும் வேண்டாம்"னு வேண்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க. எனக்கு ஒரு பேனா வாங்கித் தந்தால் அது எவ்வளவு ஒழுகினாலும் நூல் சுற்றி எடுத்துப் போகவேண்டும். அதைத் துடைப்பதற்காகத் தனியே துணி ஒன்று ஜாமெட்ரி பாஃக்ஸில் ஒளிந்திருக்கும்.நிப் உடைந்தால் நிப் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் புதுப் பேனா ஒரு வருடத்திற்கு ஒன்று கிடைத்தாலே அதிகம்.

                பொண்ணுங்க எல்லம் பேனாக்களை டப்பாவுக்குள் பூட்டி வைக்க ஒழுகும் பேனாக்கள் பையன்களின் சட்டைப்பையை நீலமாக்கி அப்போதும் பி.டி வாத்தியாரிடம் அடிவாங்க வைத்தது. வாத்தியாரெல்லாம் ஹீரோ பேனாக்களுக்கு மாறி விட்டிருந்தார்கள். பால் பாயின்ட் பேனா பழக்கத்திற்கு வந்திருந்தது. அதன் லீக் ஆகாத தன்மை,நோட்டில் மை கொட்டாத வித்தை பள்ளிக் கூடத்தில் அனைவரையும் ஒன்று சேரத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

     இப்போ என் பொண்ணுங்க மை பேனாவா?அய்யே...என்கிறார்கள்.பால் பாயின்ட் பேனாவா.....போங்கம்மா....ரோட் ப்ரேக்கர் என்கிறார்கள். இப்போலாம் வழ வழன்னு எழுதும் ஜெல் பேனாதான்.வாங்கிட்டு வரும்போதே பத்து இருபது ஒரு சேர வாங்கிக் கொள்கிறார்கள். இன்னமும் என்னிடம் ஒரு பத்து மைப்பேனா பத்திரமாக வைத்திருக்கிறேன் சில நினைவுகளின் உறைவிடமாக.....அவ்வப்போது கன்னத்தில் அது தரும் சில்லிப்புக்காக உரசிக் கொள்கிறேன். இது முதல்லே வாங்கின பேனா..இது மாமா வாங்கித் தந்தது, இது பரிசு கிடைத்தது அப்படீன்னு வரிசைப் படுத்த முடியும்.

           இப்போதும் யாராவது பேனா கேட்டால் மூடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு கொடுப்பேன்....கண்டிப்பாகப் பேனா திரும்பி வந்துவிடும் என்ற நினைப்பில்தான்...புதுப் பேனாவும் அதால் முதல் முதல் நம்ம பெயரை எழுதி எழுதிப் பார்ப்பதே ஒரு ஆனந்தம்.இப்போ யாருக்காவது பேனா பரிசாகக் கொடுக்கச் சொன்னால்...ஐயே பேனாவெல்லாம் யாராவது வாங்கிக் கொடுப்பாங்களா? போங்கம்மா...என்னும் போதும்...................

           எழுதி முடிந்த பேனாக்களை நிமிடத்தில் குப்பைக் கூடைக்குள் "Use and throwமா" என்று தூக்கியெறியும் போதும் கொஞ்சம் மனது வலிக்கத்தான் செய்கிறது!
                  பேனாக்காலம் பற்றிப் பேசும் போது பேனா நட்பும் நினைவுக்கு வருகிறது. எங்கேயோ இருப்பவர்களிடம் கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்ட நாட்களும், விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட நாட்களும், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அந்த நட்பைப் போற்றித் தொடர்ந்த கடிதங்களும், ஒரு மாதத்துக்கு ஒன்றாய் வந்தாலும் அந்தக் கடிதம் கொண்டு வரும் உறவுப் பாலத்துக்காய்க் காத்துக் கிடந்ததுவும் ஒவ்வொன்றாய் மனதுக்குள் ஊஞ்சலாடுகிறது.

ம்ம்ம்...இப்போலாம் நாளுக்கு ஐம்பது நட்புகள் நட்புக் கணக்கில் ஏறிக் கொள்கிறது! இந்தக் கூட்டத்தில் உன்னைத் தொலைத்து விட்டேன் கேதெரீன் டௌஷ் (Catherine Douche) பேனா நட்பே எங்கிருக்கிறாய் நீ???

31 comments:

Unknown said...

என் பள்ளிக்காலத்தை நினைவுபடுத்தியது உங்களின் பேனாக்காலம்

Shanmugam Rajamanickam said...

//"அதுமட்டும் கிடைச்சுடணும் சாமி உலகத்துலே எதுவும் வேண்டாம்"னு வேண்டியிருக்கேன்னா பார்த்துக்கோங்க.//

"சேம் ப்ளட்"

ப.கந்தசாமி said...

நான் கவர்மென்ட் வேலைக்கு சேர்ந்த புதிதில் (1956) மைக்கூடு ஸ்டேண்டு,இரண்டு கட்டைப்பேனா, சிகப்பு ஒன்று, நீலம் ஒன்று, இங்க் பாட்டில்கள், மைஒற்றும் பிளாட்டிங்க் பேப்பர், அதற்கு ஒரு அரை வட்ட வடிவில் ஒரு உபகரணம், இவைகளைக் கையெழுத்து வாங்கிக்கொண்டு கொடுத்தார்கள். இவைகளையெல்லாம் இப்போது ம்யூசியத்தில்தான் பார்க்க முடியும். அந்தப் பேனாக்களில் கையில் மை படாமல் எழுதுவதே தனிக்கலை.

pudugaithendral said...

நல்ல கொசுவத்தி

Yaathoramani.blogspot.com said...

அது ஒரு நிலாக் காலம் என்பதைப்போல
அந்த பேனாக் காலத்தை மிக அழகாக
நினைவுறுத்தியது உங்கள் பதிவு
நானும் சில நேரம் அந்த பசுமை நினைவுகளில்
ஊறித் திளைத்தேன்.நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மாணவன் said...

அழகான நினைவலைகளின் தொகுப்பு பேனா காலம்...
எங்களது பள்ளிக்காலங்களையும் நினைவுபடுத்துகிறது
:)

மாணவன் said...

//இப்போதும் யாராவது பேனா கேட்டால் மூடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு கொடுப்பேன்....கண்டிப்பாகப் பேனா திரும்பி வந்துவிடும் என்ற நினைப்பில்தான்..//

இது சூப்பர்... :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஜெல்பேனா தொல்லை தாங்கலைங்க..

:) நல்லா இருக்கு போஸ்ட்..

ரெனால்ட்ஸ் மாறிடாம இருக்க எங்க கல்லூரியில் ஒரு சின்ன பேப்பரில் பேரோ முதல் எழுத்தோ எழுதி ரீபிளைசுத்தி இருக்கிறமாதிரி வச்சிருப்போம் :)))

CS. Mohan Kumar said...

ஒரே மலரும் நினைவுகளா இருக்கு டீச்சர்

Chitra said...

கேதெரீன் டௌஷ் (Catherine Douche) பேனா நட்பே எங்கிருக்கிறாய் நீ???


....Did you try it in Facebook? அவர்களுடன் விரைவில் நட்பை புதுப்பித்துக் கொள்ள வாழ்த்துக்கள்!

மனம் திறந்து... (மதி) said...

நட்சத்திர வாரத்தில் நன்றாகவே கலக்கிய உங்களை மறப்"பேனா?" டீச்சர்! :))))

கோமதி அரசு said...

தமிழ்மணநட்சத்திரத்திறகும், பேனா பற்றிய விபரம் அருமையாக பகிர்ந்து கொண்டதற்கும் பிடிங்க பூங்கொத்தை அருணா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என் பள்ளிக் காலத்தில் இலங்கையில் பைலட் எனும் ஊற்றுப்பேனா; குயிங் மைக்கூடு .பின்பு மலிவாக கேபி இன்டஸ் ரீஸ் எனும் இலங்கை நிறுவனம் தயாரித்த சியால் எனும் பேனையிலே உறுஞ்சியும் பொருத்தப்பட்ட பேனா.
வேலைக்குச் சென்றபோது பால்பொயின்ற். ஆனாலும் இப்போதும் ஊற்றுப் பேனாவில் எழுத மிக விருப்பம்.
இந்த பேனா பற்றி ஜாக்கி சேகரும் பல மாதங்களுக்கு முன் ஒரு பதிவிட்டிருந்தார்.

சாந்தி மாரியப்பன் said...

எத்தனை பேனாக்கள் வந்தாலும், ஹீரோவுக்கு அடுத்தபடியா ரெனால்ட்ஸ்தான் இன்னிவரைக்கும் ரொம்ப பிடித்தமானது..

மூடியை வெச்சுக்கிட்டு பேனாவை கொடுக்கறது நல்ல ஐடியாதான் :-))

காமராஜ் said...

அடடா ஆஹா..
மேடம், பாலசந்தர் படங்களில் வரும் கதாபாத்திரங்களைப்போல( அலை,மலை,ஆறு,குன்று)
நீங்கள் ஒரு பெரும் பட்டியலைக்கொண்டுவந்து குமித்துவிட்டீர்கள். பேசாமல் பேசும் அவற்றின் நினைவுகள் வந்துபோகிறது.

vivasayee said...

பள்ளி மற்றும் கல்லூரி கால நினைவுகளை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்துவிட்டீர்கள் அருணா.

ஜியோமெட்ரி டப்பாவில் வைத்து போகும் பென்சில் ஊக்கை சீவிய துணுக்குகளை கூட விட மனமில்லாமல் அவற்றை பொறுக்கி எடுத்தெல்லாம் கொண்டு வந்ததுண்டு.

பள்ளியிலும், கல்லூரி தேர்வுகளை எழுதிய பேனாக்கள் இன்னும் எனது மேஜை டிராயரில் ஓய்வெடுக்கின்றன.

சாத்தூர் நிப்பு தயாரிப்பு கம்பெனிகள் மூச்சை நிறுத்திக் கொண்டு விட்டன. அவை இயங்கும சப்தம் ஒரு அழகு. அது அந்தக்காலம்!

இன்றைக்கு எல்லமே யூஸ் அண்டு துரோ...கூடவே உறவுகளும்...அந்த பால்பாயிண்ட் பேனாக்கள் சொல்லாமல் சொல்கின்றன மனித வளர்ச்சியை???

ஈரோடு கதிர் said...

பேனாக்காலம் + பேனா நட்பு ...

நமக்கெல்லாம் வயசாயிடுசுங்க! :)))

குட்டிப்பையா|Kutipaiya said...

அழகாக நினைவுகள்!!! பேனா பற்றி ஃப்ளாஷ்பாக்’கை ஆன் பண்ணீட்டிங்க அருணா!

ராமலக்ஷ்மி said...

பேனாக்காலம் மறக்கமுடியுமா? நல்ல பதிவு அருணா.

அமுதா கிருஷ்ணா said...

பேனாக்காலம் அருமை.ஏனோ தெரியவில்லை என்னோட பேனாக்கள் எல்லாம் எப்பவும் அழுதுக்(மை ஒழுகி) கொண்டே தான் இருக்கும்.இரண்டு விரலிலும் மையுடன் இருப்பேன். சாப்பிடும் போது பக்கத்து சுவரில், கல்லில் தேய்த்து தேய்த்து கழுவுவேன்.

கார்க்கிபவா said...

அடடே டீச்சர்.. லேட்டா வந்துட்டேனே..

நட்சத்திர வாழ்த்துகள்

கார்க்கிபவா said...

அப்புறம் இதாங்க பூங்கொத்து

ஹேமா said...

நினைவலைகளை பேனாவால் நிறைத்துவிட்டீர்கள் டீச்ச்ர் !

சத்ரியன் said...

’செண்ட்’ மை பேனா குடுத்தாங்க. .........


அருணா, பழைய ஞாபகம் வந்துடுச்சி போங்க.

தாராபுரத்தான் said...

இன்னைக்கே ஒரு பேனா வாங்கனும் போல உள்ளதுங்க.

Unknown said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

கலாநேசன்
ஆர்.சண்முகம்
DrPKandaswamyPhD said...
/இவைகளையெல்லாம் இப்போது ம்யூசியத்தில்தான் பார்க்க முடியும்./
நிஜம்தான்!
/அந்தப் பேனாக்களில் கையில் மை படாமல் எழுதுவதே தனிக்கலை./
இதுவரை அந்த வித்தையைக் கற்றுக் கொள்ளவேயில்லை!
புதுகைத் தென்றல்
Ramani
மாணவன் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Chitra said...

கேதெரீன் டௌஷ் (Catherine Douche) பேனா நட்பே எங்கிருக்கிறாய் நீ???
/.Did you try it in Facebook? அவர்களுடன் விரைவில் நட்பை புதுப்பித்துக் கொள்ள வாழ்த்துக்கள்!/
Still trying :(
மனம் திறந்து... (மதி) said...
/நட்சத்திர வாரத்தில் நன்றாகவே கலக்கிய உங்களை மறப்"பேனா?" டீச்சர்! :))))/
அங்கேயும் பேனாவா???
கோமதி அரசு
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
/ இப்போதும் ஊற்றுப் பேனாவில் எழுத மிக விருப்பம்./
எனக்கும்!
அமைதிச்சாரல் said...
/எத்தனை பேனாக்கள் வந்தாலும், ஹீரோவுக்கு அடுத்தபடியா ரெனால்ட்ஸ்தான் இன்னிவரைக்கும் ரொம்ப பிடித்தமானது../
உண்மைதான் அமைதிச்சாரல்
முத்துலெட்சுமி/muthuletchumi
மோகன் குமார் நன்றிப்பா!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ நீங்கள் ஒரு பெரும் பட்டியலைக்கொண்டுவந்து குமித்துவிட்டீர்கள். பேசாமல் பேசும் அவற்றின் நினைவுகள் வந்துபோகிறது./
எனக்கு வந்த நினைவுகளைத்தான் பகிர்ந்தேன் காமராஜ்!
கிரீன்இந்தியா said...
/ இன்றைக்கு எல்லமே யூஸ் அண்டு துரோ...கூடவே உறவுகளும்...அந்த பால்பாயிண்ட் பேனாக்கள் சொல்லாமல் சொல்கின்றன மனித வளர்ச்சியை???/
ரொம்ப சரி!
March 4, 2011 5:26 PM
ஈரோடு கதிர் said...
/ நமக்கெல்லாம் வயசாயிடுசுங்க! :)))/
வயசாச்சுன்னா பேனா பற்றி எழுதக் கூடாதா என்ன? அதெல்லாம் எழுதலாம் கதிர்!

அன்புடன் அருணா said...

குட்டிப்பையா|Kutipaiya said...

அழகாக நினைவுகள்!!! பேனா பற்றி ஃப்ளாஷ்பாக்’கை ஆன் பண்ணீட்டிங்க அருணா!
March 4, 2011 8:49 PM
ராமலக்ஷ்மி said...

பேனாக்காலம் மறக்கமுடியுமா? நல்ல பதிவு அருணா.
March 4, 2011 8:54 PM
அமுதா கிருஷ்ணா said...
/இரண்டு விரலிலும் மையுடன் இருப்பேன். சாப்பிடும் போது பக்கத்து சுவரில், கல்லில் தேய்த்து தேய்த்து கழுவுவேன்./
சேம் ப்ளட்!!
கார்க்கி
ஹேமா
சத்ரியன்
தாராபுரத்தான்
Dhushi நன்றிப்பா!

Anonymous said...

oru nimidam palaya ninaivukalukke poivitten.
(Ippavum en kitta ink pen irukku)

- Vishwa Ganapathi

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா