மூடித் திறந்த பூ இதழ்களிருந்து
விடுதலையாகியது
தேனீ
தீப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட
கூட்டுப் புழு உயிர்த்தெழுந்தது
வண்ணத்துப் பூச்சியாய்
நிழல் தேடி ஒடுங்கிக் கொண்ட
இடம் விட்டு மரத்தினடியில்
ஒடுங்கியது நாய்
மத்தியானத்துக்கு மட்டும்
சுகமாகத் தூங்க அடுப்பங்கரையில்
இடம் மாறியது பூனை..
சில மாதம் மட்டும்
இந்தியாவிலிருந்து சைபீரியாவுக்குப்
பறந்து கொண்டிருந்தன
சில பறவைகள்...
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!
விடுதலையாகியது
தேனீ
தீப்பெட்டிக்குள் ஒளிந்து கொண்ட
கூட்டுப் புழு உயிர்த்தெழுந்தது
வண்ணத்துப் பூச்சியாய்
நிழல் தேடி ஒடுங்கிக் கொண்ட
இடம் விட்டு மரத்தினடியில்
ஒடுங்கியது நாய்
மத்தியானத்துக்கு மட்டும்
சுகமாகத் தூங்க அடுப்பங்கரையில்
இடம் மாறியது பூனை..
சில மாதம் மட்டும்
இந்தியாவிலிருந்து சைபீரியாவுக்குப்
பறந்து கொண்டிருந்தன
சில பறவைகள்...
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!
13 comments:
மிக அருமை வித்தியாசமான சிந்தனை
கலைந்து செல்லுகிற வீட்டில் வாழ்பவை எல்லாம்
நிம்மதியாகத்தான் இருக்கின்றன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
யதார்த்தமாய் மிளிரும் வரிகள்
அருமை
டீச்சர்...கலைதல் நிரந்தமற்றதாக இருக்கவேண்டும்.
நிரந்தரத்திற்குக் கூடு திரும்புதலே சந்தோஷம் !
வாழ்த்துக்கள் நண்பரே!
Alagana kavidai valltukkal
beautiful aruna akka
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Start to post Here ------ > www.classiindia.com
புலம்பெயர் வாழ்வுக்கும் கூட இது பொருந்துகிறது அருணா...
பூங்கொத்து!
அருமையான வரிகள் அருணா.
மாறுபட்ட சிந்தனை!! வாழ்த்துக்கள்!!
வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!
தங்களது கவிதை மூலம் அருமையான
கருத்தை சொல்லியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகான கவிதைகள்
ம்ம்ம்..வாழ்த்துக்கள்.
பூங்கொத்து
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா