நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, December 17, 2010

நானும்......!

ஆற்றோரம் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீனைப்
பார்த்தும் பாராதது போல் .....
கைகோர்த்து நடக்கும் போதும்.....

செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....

மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்

கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்....

கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....

இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....

நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்

ஒரு நாள் பாடியிருக்கலாம்....
நானும்......

33 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அழகாய் எழுதப்பட்டும்
அதிகம் பேரால்
வாசிக்கப்படாது
இந்த ஈரக்கவிதை
புதையும் போதும்...

என் காலைப் பொழுது இனிமையுற்றது மேலும்.
அற்புதம் அருணா.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

எது அரசியல்? அடுத்த பதிவு நேற்றுப் போட்டேன்.

நேரம் கிடைக்கும்போது நீங்கள் படிக்க விரும்புகிறேன் அருணா.

ராமலக்ஷ்மி said...

எதை என்று குறிப்பிட்டு சொல்ல? அத்தனை வரிகளும் அற்புதம். இருப்பினும்,
//செடியிலிருந்து உதிர்ந்து கிடக்கும்
கவிழ் பூக்களின் மேல் பாதம்
பதிக்க நேரும் போதும்....//
மிகப் பிடித்தன.

Chitra said...

ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எழுதி இருப்பது போல தெரிகிறது. அத்தனை அழகு!

சந்தனமுல்லை said...

Just Wonderful,Aruna madam!!

மாணவன் said...

//இருட்டுக்கு ஒளியேற்றும்
மெழுகுவர்த்தியின் சோகம் அறியாமல்
விரல் நீட்டி விளையாடும் போதும்....

நீங்களும் என்றேனும் எங்கேனும்
ஒரு சோகப் பாடலை மனதுள்

ஒரு நாள் பாடியிருக்கலாம்....//

உணர்வுகளுடன் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

ஹேமா said...

நிறைவான பூக்கொத்து தோழி.அடுத்தவர் வலியை உணராதவரை சோகப்பாடல் பாடியிருக்கவே முடியாது.கிண்டலும் விளையாட்டுமேதான் அங்கு இருக்கும் !

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்கு அருணா மேடம்..

சத்ரியன் said...

//மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்...//

நானும் அருணா.

கவர்ந்த கவிதை.

Gowripriya said...

அழகு

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இது உங்களுக்கான பிரத்யேகக் கடிதம்.

நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் அருணா.

யாரின் பின்னும் இனிச் செல்லாது நாம் முன்நின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக் காலங்களிலோ ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையும் லாப நோக்கற்ற நெடுந்தூரப் பயணத்துக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி இனம் ஜாதி இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்புதல்களுக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் தமிழகத்திலிருந்து இந்தச் சுடரை ஏற்றுவோம்.

பிற மாநிலங்களுக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன் அருமை அருணா.

ஈரோடு கதிர் said...

வாவ்!

அழகான கவிதை

vinu said...

pattaaaaaaaaaaaaaaaaaasu

arasan said...

நறுக்கென்று தெறித்து விட்டிர்கள் ...

Unknown said...

அட ஆமாங்க.....கவிதை அழகு.

பத்மா said...

அருணா
ஆமாம் ....சில சமயங்களில் சிலவற்றிலிருந்து தெரிந்தே விலகி விலகி போகிறோம் ...
அந்த சோக இசையை ignore பண்ணிக்கொண்டே ....
அழகான கவிதைங்க

ஆ.ஞானசேகரன் said...

ரசிக்குபடியா இருக்குங்க வாழ்த்துகள்

Karthik said...

மேம் ஜெய்ப்பூருக்கு டிக்கெட் போட வெக்காதீங்க. அட்டகாசம். :)

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தர்ஜி!
சுந்தர்ஜி said...
/ நேரம் கிடைக்கும்போது நீங்கள் படிக்க விரும்புகிறேன் அருணா./
படிச்சுட்டேன் சுந்தர்ஜி!!
நன்றி ராமலக்ஷ்மி !
நன்றி Chitra !
December 17, 2010 12:44 PM
Thank you so much சந்தனமுல்லை !
நன்றி மாணவன் !
உண்மைதான் ஹேமா

velanblogger said...

கண்ணாடிக் குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் தூவும் போதும்....
//

கண்ணாடிக்குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் துவாத போதும்...//

இந்த வார்த்தையின் வரிகள் சரியாக வருமா சகோதரி....
கவிதை அருமை.
வாழ்க வளமுடன்.
வேலன்.

அன்புடன் அருணா said...

சத்ரியன்
Gowripriya
ஈரோடு கதிர்
vinu நன்றி அனைவருக்கும்!

அன்புடன் அருணா said...

நன்றி கலாநேசன்
நன்றி பத்மா
நன்றி அரசன்!
நன்றி ஆ.ஞானசேகரன்!

அன்புடன் அருணா said...

Karthik said...
/ மேம் ஜெய்ப்பூருக்கு டிக்கெட் போட வெக்காதீங்க./ அட!இதுக்காகவெல்லாம் ஜெய்ப்பூர் டிக்கெட் போடுவீங்களா!!??அப்போ உடனே போடுங்க!

அன்புடன் அருணா said...

சுந்தர்ஜி said...
/முதலடி எடுத்து வைக்க முனைவோம்.நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம்.அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்./
நன்றி பிரத்தியேகக் கடிதத்துக்கு...
உங்களின் எண்ணம் புரிகிறது.....முதலடி எடுத்து வைக்க இணைகிறேன்.

சுந்தரா said...

அழகான கவிதைக்கு ஒரு ரோஜாப்பூங்கொத்து அருணா.

shardha said...

ரசிக்கும்படியான கவிதை

பூங்கொத்துக்கே பூக்கள் தரமுடியுமா :))

மரத்தினடியில் கசக்கிப் போட்ட காகிதம்
ஒரு மரம் தன் வரலாறைக்
கூறும் போதும்

கிறீச்சிடும் கதவு போடும்
கூப்பாட்டைக் கேட்டும் கேட்காமலும்
எட்டி உதைத்து மூடும் போதும்.... //

சட்டென மனதை கவர்ந்த வரிகள்

Tamil cinema said...

அழகான கவிதை

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நான்கு நாள் இடைவெளியில் யோசித்து மாற்றத்துக்கும் முதலடி எடுத்து வைக்கவும் முடிவெடுத்து நிதானம்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் திறவுகோல் அருணா.

பதட்டத்துடன் எடுக்கப்படும் முடிவுகள் இலக்கை அடையாது.

நன்றி அருணா.

மாற்றத்துக்கான வழியை விரைவில் கண்டுணர்வோம். எழுதுவோம். செயல்படுவோம்.

அன்புடன் அருணா said...

velanblogger said...
/ கண்ணாடிக்குடுவைக்குள்
முட்டி மோதும் மீனின்
குட்டி வாய்க்குத் தேவை
உணவெனத் துவாத போதும்...///
இந்த வார்த்தையின் வரிகள் சரியாக வருமா சகோதரி..../
மீனுக்கு முதலில் குடுவையிலிருந்து கடலுக்கோ ...ஆறுக்கோ போகும் சுதந்திரம் தேவையென்னும் எண்ணத்தில் எழுதியது வேலன்!

அன்புடன் அருணா said...

சுந்தரா
shardha
Tamil cinema நன்றிங்க!

Paul said...

நானும் பாடியிருக்கிறேன்..

Jobschennai said...

நல்ல கவிதை :)

bupesh said...

உங்கள் படைப்புகளை படித்தேன்...மிக அருமையாய் இருக்கின்றது
ஒவ்வொன்றும்...வாழ்த்துக்கள்.
-புபேஷ்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா