மழைக் காலத்தில் குருவியையும்
குருவிக் கூட்டையும் காப்பாற்ற
முடியாவிட்டாலும் முனை திரும்பும
பேருந்துகளைக் காப்பாற்றி விடுகிறேனாம்...
குருவிக் கூட்டையும் காப்பாற்ற
முடியாவிட்டாலும் முனை திரும்பும
பேருந்துகளைக் காப்பாற்றி விடுகிறேனாம்...
காலடியில் தாமரையுமில்லை
கையிலிருந்து பொற்காசுகள்
கொட்டவுமில்லை...
இருந்தாலும் விளக்கேற்றிக்
கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...
கடந்து செல்லும் ஒவ்வொரு
பேருந்தும் சாலை முனை விபத்திலிருந்து
தப்பித்துக் கொள்ளத் தன் கடவுளிடம்
வேண்டிக் கொண்டது புளியமரம்...
கடவுளாசை யாரை விட்டது?
நன்றி யூத்ஃபுல் விகடன்!
19 comments:
அங்கேயும் படித்தேன். :(
நல்ல கவிதை.
விகடனில் வாசித்தேன் அருணா. கவிதை அருமை.
கடவுளாகும் ஆசை யாரை விட்டது..
அட்லீஸ்ட் சாமியார் ஆவது உத்தமம்..
ஆமா...கடவுளாசை யாரை விட்டது?
கவிதை நச்!
இவ்வளவு நாள் காத்திருந்தது. இதற்குத்தானா ?
நல்லாருக்கு அருணா.
///கடவுளாக்கி விட்டார்கள்...
புலம்பியது சாலையோரப
புளியமரம்...//
nalla velai.. aani adikkaama vittaangale!!
nallaarukku aruna. :)
உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு. :)
ரசித்து வாசித்தேன்.
அசத்தல் சிந்தனை அருணா.
வேற வழி...பூங்கொத்துத்தான் !
பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
நல்ல வந்துருக்குங்க அருணா
கடைசி வரிகளில் மெல்லிய புன்னகை வந்ததென்னவோ உண்மை பிரின்ஸ்...
நன்றி +Ve Anthony Muthu
நன்றி ராமலக்ஷ்மி
June 8, 2010 7:25 AM
கே.ஆர்.பி.செந்தில் said...
/ அட்லீஸ்ட் சாமியார் ஆவது உத்தமம்../
அய்யய்யோ!
சி. கருணாகரசு
காமராஜ் said...
/இவ்வளவு நாள் காத்திருந்தது. இதற்குத்தானா ?/
நல்லா எழுத முயற்சிக்கிறேன் காமராஜ்!
Vidhoosh(விதூஷ்) said...
nalla velai.. aani adikkaama vittaangale!!
ஆணி அடிச்சு மாலையெல்லாம் போட்டாச்சு வித்யா!
நன்றி Karthik !
நன்றி Chitra !
நன்றி ஹேமா !
ரொம்ப நல்லா இருக்குங்க...பூங்கொத்து
நன்றி padma !
நன்றி ப்ரியமுடன்...வசந்த் !
நன்றி கமலேஷ்!
நல்லாருக்கு அருணா...
நன்றி பாசமலர்!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா