நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, June 17, 2010

வீழ்ந்து கிடக்கும் நிழல்கள்!

இரவில்
விளக்கின் காலடியிலும்

பகலில்
சூரியனின் காலடியிலும்

நிழல்கள் எப்போதும் போல
விழுந்து கிடந்தன....

உச்சி வெயிலில்
என் காலடியில்
நசுங்கிக் கிடந்ததுவும்
அதுவேதான்..

வெளிச்சத்தை எதிர்த்துப்
பழக்கமில்லா நிழல்கள்
எப்போதும் வீழ்ந்து
கிடந்தாலும்...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....

முகமில்லா என்னைப்
பிடித்திருக்கிறதாவென்று?

விட்டுப் போய்விடுமோவென்று
சுவற்றோடு போய் ஒட்டிக் கொண்டேன்....
சட்டெனக் காணாமல் ஓடி மறைந்தது
எப்போதும் வீழ்ந்து கிடக்கும் அது!
நன்றி யூத்ஃபுல் விகடன்!

25 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அருணா.

ஹேமா said...

நிழலையும் எங்கள் கட்டுக்குள் கொண்டு
வர முயற்சியோ !
பூங்கொத்து அருணா.

பத்மா said...

அழகான கவிதை அருணா .நிழலை நிஜமாக்கி விட்டீர்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட .. :) நல்ல கற்பனை..

Chitra said...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்


...... very nice.... super!

Karthik said...

good one! :)

Madumitha said...

...வெளிச்சத்தை எதிர்த்து பழக்கமில்லா நிழல்கள்...
இது ரொம்ப நல்லாருக்கு.

நட்புடன் ஜமால் said...

மிக அருமைங்க

பூ-பூங்கொத்து ...

நேசமித்ரன் said...

பூங்கொத்து

:)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ம் அழகான சிந்தனை .பகிர்வுக்கு நன்றி

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு டீச்சர்!

ஆ.ஞானசேகரன் said...

மிக அருமை அருணா,...

Porkodi (பொற்கொடி) said...

அப்பாடா! இதுவும் புரியாம போயிடுமோ எனக்குனு ஒரு பயத்தோட வந்தேன்.. நல்லா புரிஞ்சுது ரொம்ப சந்தோஷமா இருக்கு! அருமை! :)

ப்ரியமுடன்...வசந்த் said...

மெழுகுவர்த்தியின்
வெளிச்சத்துக்கு
மட்டும் சுவற்றில்
எழுந்தாடும்
என் நிழல்
என்னிடம் கேட்டது ....
//

சட்டென கவிதையை தூக்கி நிறுத்தும் வரிகள் பிரின்ஸ்..

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி
ஹேமா
பத்மா
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Chitra
Karthik
Madumitha
நட்புடன் ஜமால் நன்றி அனைவருக்கும்!

VELU.G said...

நல்லாயிருக்குங்க அருணா

VELU.G said...

நல்லாயிருக்குங்க அருணா

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி நேசமித்ரன் ,ஜமால்.
பனித்துளி சங்கர்
பா.ராஜாராம்
ஆ.ஞானசேகரன் அனைவருக்கும் நன்றி!

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை! பார்த்துவிட்டு மறந்துவிடும் நிழலை பற்றிய அழகான கவிதை!

Pepe444 said...

HI FRIEND :)

VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/

மாதேவி said...

நன்றாய் இருக்கின்றது.

அன்புடன் அருணா said...

Porkodi (பொற்கொடி) said...
/அப்பாடா! இதுவும் புரியாம போயிடுமோ எனக்குனு ஒரு பயத்தோட வந்தேன்../
அட இதுக்கெல்லாம் பயப்படலாமா???புரியலைன்னா ஒரு ஸ்மைலி போட்டுருங்க...நான் புரிஞ்சுப்பேன் உங்களுக்குப் புரியலைன்னு!!! ரொம்பக் குழப்பிட்டேனா பொற்கொடி???
நன்றி ப்ரியமுடன்...வசந்த்

அன்புடன் அருணா said...

நன்றி வேல், முல்லை!

அன்புடன் அருணா said...

Pepe444 said...
/ VISIT MY BLOG AND FOLLOW ME PLEASE >>> http://artmusicblog.blogspot.com/ /
visited your Portuguese blog and saw your post! Nice!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா