நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, July 13, 2009

இன்னும் எதையெல்லாம் பத்திரப் படுத்த?

அந்தக் கிணறு......
என்றேனும் நிரம்பி வழிந்திருக்கலாம்...
அந்த வற்றிய நதி
என்றேனும் சல சலத்து ஓடியிருக்கும்

அந்த ஆற்றுப் படுகையில்
என்றேனும் ஊத்துத் தோண்டித்
தண்ணீர் ஊறியிருக்கலாம்

ப்ளாஸ்டிக்  பாட்டில்
தண்ணீருக்குக் காசு கொடுத்துவிட்டு
பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்து
பெய்ய ஆரம்பித்த மழையின்

முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!

50 comments:

விக்னேஷ்வரி said...

அழகா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.

//என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!//

வரிகள் அழகு. ஆனால் பயமாய் இருக்கிறது இந்த என்றேனுமாயை சந்திக்க.

R.Gopi said...

//முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று! //

வாவ்.......தங்கள் கவிதை அருமை....

ராமலக்ஷ்மி மேடம் சொல்வது போல், இந்த "என்றேனும்" சந்தித்து விடுவோமோ என்ற பயம் நிச்சயமாக நம் அனைவரிடமும் உள்ளது......

அது போல், ஒரு நிலை வாராதிருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...... இயற்கையிடம் கையேந்துவோம்......

நட்புடன் ஜமால் said...

[[என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!]]

பயமாய் தான் இருக்கின்றது

நிச்சியம் இந்த நிலை நமக்கு வராது தான் இருப்பினும் வரும் கால சந்ததிகள் - அவர்களை நினைத்து

பயமாய் தான் இருக்கின்றது

கோபிநாத் said...

பயமாய் இருக்கு..!!

ப்ரியமுடன் வசந்த் said...

//என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!//

வார்த்தை விளையாடுகிறது கவிதையில்

சூப்பர்க்கா

சந்தனமுல்லை said...

மிக அருமை!

கார்க்கிபவா said...

பயமாத்தான் இருக்கு

ny said...

:)) back?!

நாகை சிவா said...

நியாயமான கேள்வி!

மணிநரேன் said...

நியாயமான பயம்தான் தற்போதைய சூழலில் ;(

தீப்பெட்டி said...

கவலையே கவிதையாய்..
கவிதை சிலிர்க்க..
கவலை சிந்திக்க..

Starjan (ஸ்டார்ஜன்) said...

supper

sakthi said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

நியாயமான கவலை.

காய்ந்த தரைகளோடு நதியாக இருந்த மணலைப் பார்க்கும்போது, அடுத்ததடவை அந்த மணலும் இல்லாமல் வெறும் கட்டாந்தரையைக் கண்ணுறும்போது எதை விட்டு விட்டுப் போகிறோம் அடுத்த தலைமுறைக்கு?

இந்த வருத்தம் எப்போதும் உறுத்தும்.

Thamira said...

நேர்மையான சிந்தனை.!

pudugaithendral said...

கவிதை படிக்கும்போதே பயமுறுத்துது.

இப்படி ஒரு எதிர்காலம் வரக்கூடாதுன்னு வேண்டிக்கறேன்

"உழவன்" "Uzhavan" said...

/என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று! //

பலிக்காது போகட்டுமாக!

அன்புடன் அருணா said...

நன்றி விக்ஸ்
நன்றி சக்தி
நன்றி சந்தனமுல்லை
நன்றி ஸ்டார்ஜன்

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//வரிகள் அழகு. ஆனால் பயமாய் இருக்கிறது இந்த என்றேனுமாயை சந்திக்க//
அந்த பயமே கவிதையாய் ராமலக்ஷ்மி!
நன்றி!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
//வாவ்.......தங்கள் கவிதை அருமை....//
நன்றி கோபி!

//அது போல், ஒரு நிலை வாராதிருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...... //
வணங்காவிட்டால் கூடப் பரவாயில்லை....அலட்சியப்படுத்தாமல் மதித்தாலே போதும்....

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...

//நிச்சியம் இந்த நிலை நமக்கு வராது தான் இருப்பினும் வரும் கால சந்ததிகள் - அவர்களை நினைத்து //

எனக்கும் அதே பயம்தான் !!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
பயமாய் இருக்கு..!
மணிநரேன் said...
நியாயமான பயம்தான் தற்போதைய சூழலில் ;(
கார்க்கி said...
பயமாத்தான் இருக்கு
அந்த பயம்தானே கவிதை....கார்க்கிக்குக் கூட பயமாயிருக்கா???

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//வார்த்தை விளையாடுகிறது கவிதையில்
சூப்பர்க்கா//
நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

தீப்பெட்டி said...
//கவலையே கவிதையாய்..
கவிதை சிலிர்க்க..
கவலை சிந்திக்க.//
அட இது நல்லாருக்கே!!!

அன்புடன் அருணா said...

வல்லிசிம்ஹன் said...
நியாயமான கவலை.

// எதை விட்டு விட்டுப் போகிறோம் அடுத்த தலைமுறைக்கு?இந்த வருத்தம் எப்போதும் உறுத்தும்//
வாங்க வல்லிம்மா....அடிக்கடி வாங்க!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
//நேர்மையான சிந்தனை.//
கருத்துக்கு நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//இப்படி ஒரு எதிர்காலம் வரக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன்!//
வேண்டுதல் பலிக்கட்டும் புதுகைத் தென்றல்!

அன்புடன் அருணா said...

" உழவன் " " Uzhavan " said...
//பலிக்காது போகட்டுமாக!//
அதுவேதான் என் பிரார்த்தனையும்!

sri said...

Enna azhamana varigal! periya vishyathai surukkama solliteenga, super! officela unga post comment panna mudilannu veetukku vandhu pannanumnu reminder vachikitten phonela :)

Great post please keep writing such stuff, makkalukku global warming pathi evlo easya ezhudha venum

அன்புடன் அருணா said...

Srivats said...
// super! officela unga post comment panna mudilannu veetukku vandhu pannanumnu reminder vachikitten phonela :)//
Wow! I'm honoured!

//Great post please keep writing such stuff, makkalukku global warming pathi evlo easya ezhudha venum//
Sure Srivats and thanx for the comment!

மந்திரன் said...

கவிதை ..கவிதை ..

சேமித்து வைக்கலாம் .
மழையை அல்ல ..
இந்த கவிதையை ..

அன்புடன் அருணா said...

மந்திரன் said...
// சேமித்து வைக்கலாம் .
மழையை அல்ல ..
இந்த கவிதையை ..//
ஹையா!!! அவ்வ்ளோ நல்லாவா இருக்கு???!!!

அன்புடன் அருணா said...

kartin said...
// :)) back?!//
hihihihi ....always front!!! :))

Revathyrkrishnan said...

படிக்கும் போதே இப்படி ஆகிவிடக்கூடாதே என்று பயம் வருகிறது...

Suresh Kumar said...

அருமையான கவிதை

குடந்தை அன்புமணி said...

எனது இடுகையில் இப்போதுதான் அதைப் பற்றி எழுதியிருந்தேன். வலைச்சரத்தில் ஆ.ஞானசேகரன் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தார். இங்கு வந்து பார்த்தால் உங்கள் கவிதையும் அதே கவலைப்படுகிறது. இப்படி எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலை வராது என்று நினைக்கிறேன். மரம் நடுவோம். மழை பெறுவோம்.

pudugaithendral said...

http://parentsclub08.blogspot.com/2009/07/blog-post_16.html vaishnaviku award solliunga

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை அருணா..
பிடியுங்கள் பூங்கொத்தை

Anonymous said...

//முதல் துளியுடன் கடைசித் துளியையும்
பத்திரப் படுத்தினேன்
என்றேனும் மழை கூட இப்படி
என்றேனுமாய் ஆகிவிடக் கூடுமென்று!//

கவிதைக்கு மட்டுமே
இப்படியான கூர்மை கிடைக்கும்.
நல்ல கவிதை

அன்புடன் அருணா said...

நன்றி ரீனா,சுரேஷ் குமார்!

அன்புடன் அருணா said...

குடந்தை அன்புமணி said...
// இப்படி எல்லாரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நிலை வராது என்று நினைக்கிறேன். மரம் நடுவோம். மழை பெறுவோம்.//
அதுக்குத்தானே இதெல்லாம்!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
// vaishnaviku award solliunga //
சொல்லியாச்சு!சொல்லியாச்சு!

அன்புடன் அருணா said...

நன்றி ராதாகிருஷ்ணன்,காமராஜ்!

Anonymous said...

முழுமையாக படித்த எல்லாவற்றிலும் ஒரு திருப்தி இல்லாமல் கவர்வதாக இல்லாமல் இருந்தது. உங்கள் இடம் இருக்கும் திறமை வேலை பளு காரணமாகவோ சோம்பல் காரணமாகவோ எங்கேயோ ஒளிந்து கொண்டுருப்பது போல் தெரிகிறது. சின்ன விஷயங்களில் நின்று விடாதீர்கள். உற்று நோக்குங்கள். அதற்கான தகுதி முழுமையும் உங்களிடம் இருப்பதால் இந்த வேண்டுகோள். ஆனால் உங்கள் தலைப்பில் இட்ட வார்த்தைகளின் கடைசி வரிகள் பார்த்ததும் உங்கள் சந்தோஷம் எனக்கும் வந்து விட்டது.


நட்புடன் ஜோதிஜி


http://texlords.wordpress.com

Mohan R said...

nalla irukku Appadiye namma school pasangalukku solli kuduthudunga Principal sonna kandippa kettupanga :)

karunakarasu said...

நல்லாயிருக்கு ஈரக் கவிதை.வாழ்த்துக்கள்.

சித்தன் said...

நச்!

jothig said...

உங்களைப் பொறுத்த வரையில் இது கவிதை? ஆனால் இது எதிர்கால வாழ்க்கை? ஏராளமாய் பதிலும் கேள்வியும்? கூட சற்று பயமும், வேறென்ன சொல்ல, தேவியர் இலல பூங்கொத்து, வாங்க புது வீட்டு கிரகப்பிரவேத்திற்கு, நன்றி,


ஜோதிஜி


தேவியர் இல்லம். திருப்பூர்.

http://tirupurjothigee.blog.co.in/

Anonymous said...

Aazhamaana varikal.....1pakkathu essay-va 4line la pottu nachunu mohathla aranja mathiri oru kavithai!!sindhanaiku vaalthukkal.....Poongothu

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா