நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, June 24, 2009

யாரைத்தான் நம்புவதோ?????


அவங்க சீமா.எட்டு வருடமாக எங்கள் வீட்டில்தான் வேலை பார்க்கிறாங்க.அப்படியொரு நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது.....அவங்களை அவ்வ்ளோ நம்பினோம்....

அவங்கதான் இன்று இதைச் செய்தாங்க.அவங்க பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும்போது நான் திடீரென்று உள்ளே நுழைந்து விட்டேன் அவங்க பதட்டமாக குப்பையை ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாங்க.....எனக்கு சந்தேகமாக இருக்கவே அங்கேயே நின்று கொண்டேன்.அடிக்கடி குப்பையை அவங்களே கொண்டு வெளியில் போடுவாங்க....அன்று எனக்குச் சந்தேகமாக இருக்கவே குப்பை வண்டிக்காரன் வருவான்...நானே போட்டுக்கறேன்னு சொல்லிட்டேன்.....

அவங்க போனதும் பையைத் திறந்து ஆராய்ந்து பார்க்கையில் ஒரு பை நிறைய அரிசி............
இதற்குக் காரணம் ????
என்னுடைய கவனக் குறைவா?
அவங்களை அளவுக்கதிகமா நம்பியதாலா?
இப்போ என்ன செய்வது?
எட்டு வருட உழைப்பைப் பற்றிக் கவலைப் படாமல் அவங்களை வேலையை விட்டுத் தூக்குவதா?
இல்லை அவங்களைக் கூப்பிட்டு நீங்க செய்தது எனக்குத் தெரிந்து விட்டது...இனி அப்பிடிச் செய்யாதீங்க எனச் சொல்வதா?
இல்லை எதுவுமே சொல்லாமல் அவங்களை வேலையைத் தொடரச் சொல்லி விட்டு இனி அவங்களைக் கண்காணிப்பதா?
ஒரே குழப்பமும் வருத்தமும்..........

47 comments:

பாசகி said...

//எட்டு வருடமாக...நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது//

இது கணக்கில எடுத்துகிட்டு பாத்தோம்னா.

அவங்க நாளைக்கு வீட்டுக்கு வரும்போது நீங்களே அவங்களுக்கு ஒரு 5 கிலோ அரிசிய கொடுங்க, அதுவே அவங்களுக்கு மிகப்பெரிய தண்டனை மற்றும் மாபெறும் உதவி.

இல்லாக்கொடுமைக்குத்தான் அரிசியை திருடிருக்காங்க இல்லேன்னா வேற எதாவது காஸ்ட்லியா எடுத்திருக்கலாம்...

இப்படி சொல்லறதால, நான் திருடினது சரின்னு சொல்லறதா தப்பா புரிஞ்சுக்கமாட்டீங்கன்னு நம்பறேன்...

ராமலக்ஷ்மி said...

முடிவெடுப்பது கஷ்டமாய்தான் இருக்கும். பாசகி சொல்வதும் சரியே. இதுவரை விலையுயர்ந்த பொருட்கள் ஏதேனும் காணமல் போயிருக்கவில்லையெனில், இத்தனை வருட உழைப்பை மனதில் கொண்டு, வயிற்றுக்கு இல்லாத கொடுமைக்கு எடுத்ததாக எண்ணி மன்னிக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்து விட்டதைக் காட்டிக் கொள்வதும், வேறு ஆள் கிடைக்காது என்பதால் அல்ல.. அவர் மேல் கொண்ட கருணையால்தான் வேலையினை விட்டு எடுக்கவில்லை எனப் புரிய வைப்பதும் அவசியம். அவரும் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாரா என்பதையும் கவனியுங்கள்.

வினோத் கெளதம் said...

பாசகி அவங்க சொல்ற மாதிரி ஒரு பை நிறைய அரிசி நிரப்பி நீங்களே தாங்க..
ஆனா வேலையே விட்டு தூக்க வேண்டாம்..
ஆனால் இதை வாய்ப்பாக வைத்து கொண்டு இனிமேலும் அவர் இதே போன்று செயல்களை தொடராமல் இருக்க நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்கள்..

ஆயில்யன் said...

:(

பாசகி சொல்றதை அப்படியே ரிப்பிட்டிக்கிறேன்

முடிஞ்சா என்ன தேவை இன்று இப்படி நடக்க அப்படின்னு விசாரிச்சுடுங்க! - திருடனும்ன்னு இருந்தா ஏன் அரிசியில கை வைக்கப்போறாங்க?

ஜானி வாக்கர் said...

இது தான் முதல் திருட்டு என்பது உங்களுக்க்கு நிச்சயம் தெரியுமா?

இன்று அரிசி, நாளை என்னவோ? அரிசி பெரிய மதிப்பு மிக்க பொருள் இல்லை தான் ஆனால் திருட்டு என்பது அதுவும் உண்ட வீட்டில் திருடுவது மிகப்பெரிய நம்பிக்கை த்ரொகம்.

எதிர்காலத்தில் நீங்கள் கை மறந்து வைத்த பொருளை நீங்கள் தேடும் முன் உங்கள் மனம் அவரைநிச்சயம் சந்தேகப்படும்.

தவறு செய்தவர்கள் உடனே தண்டிக்கப்படுவதால் எதிர் காலத்தில் அவரால் நிகழும் குற்றம் தடுக்கப்படும்.

மற்றபடி மறப்பதும் மன்னிப்பதும் அல்லது வேலையை விட்டு அனுப்புவதும் நீங்கள் சொந்தமாக எடுக்க வேண்டிய முடிவு.

R.Gopi said...

A good comment from BASAKI.

Yes madam, she has done this due to her utter need, though has not informed you or taken with your consent.

Be, little liberal (thiruda vida sollala) and tell her to be open with you for her needs and help her to your potential.

The situation is very tricky, though happens in almost all houses.......

I hope you will take some wise decision to come out of this situation.

Appadiye, neenga enna decide panninennnu inga sollunga.

R.Gopi said...

//இத்தனை வருட உழைப்பை மனதில் கொண்டு, வயிற்றுக்கு இல்லாத கொடுமைக்கு எடுத்ததாக எண்ணி மன்னிக்கலாம். ஆனால் நமக்குத் தெரிந்து விட்டதைக் காட்டிக் கொள்வதும், வேறு ஆள் கிடைக்காது என்பதால் அல்ல.. அவர் மேல் கொண்ட கருணையால்தான் வேலையினை விட்டு எடுக்கவில்லை எனப் புரிய வைப்பதும் அவசியம்.//

*********

ராமலக்ஷ்மி மேடம்

சரியாக சொன்னிர்கள்........ அருணா மேடம்........ எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க.......

உங்கள் நல்ல முடிவை இங்கே தெரிவியுங்கள்........

R.Gopi said...

I remember one thing and want to share with you

TO ERR IS HUMAN
TO FORGIVE IS DIVINE

வால்பையன் said...

//இதற்குக் காரணம் ????//

சம்பளம் பத்தலை போல!
அவுங்க வீட்டு பிரச்சனை என்னான்னு பேசுங்க!

geevanathy said...

சங்கடமான நிலைதான்

//இல்லாக்கொடுமைக்குத்தான் அரிசியை திருடிருக்காங்க இல்லேன்னா வேற எதாவது காஸ்ட்லியா எடுத்திருக்கலாம்...//

பெரும்பாலும் இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என்றாலும் நம்மளவில் கவனமாக இருப்பதும் கட்டாயமாகிறது...

அப்துல்மாலிக் said...

8 வருட உழைப்பு
அவங்களீடம் மனசுவிட்டு பேசலாம், எதுக்காக இப்படி எடுக்குறே தப்புதானே, தேவைப்பட்டால் என்கிட்டே கேட்டால் நானே தருவேனே இதெல்லாம் தப்பு அப்படினு பேசினால் நிச்சயம் தான் செய்தது தப்புனு அழுதுடுவாங்க... அவங்களுக்கு தேவையறிந்து கேட்டு நிறைய கொடுங்க குடும்பத்தில் ஒருவர் போல்

அப்துல்மாலிக் said...

8 வருட உழைப்பு
அவங்களீடம் மனசுவிட்டு பேசலாம், எதுக்காக இப்படி எடுக்குறே தப்புதானே, தேவைப்பட்டால் என்கிட்டே கேட்டால் நானே தருவேனே இதெல்லாம் தப்பு அப்படினு பேசினால் நிச்சயம் தான் செய்தது தப்புனு அழுதுடுவாங்க... அவங்களுக்கு தேவையறிந்து கேட்டு நிறைய கொடுங்க குடும்பத்தில் ஒருவர் போல்

வழிப்போக்கன் said...

அது அவங்களோட குடும்ப நிலமையை பொறுத்தது...
வறுமையானவங்களா இருந்தால் எச்சரித்து விடுவது நல்லது...
:)))
வருத்தப்படாதீங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

மறப்போம் மன்னிப்போம்

அந்த பொருளின் மதிப்பு

இத்தனை வருட உழைப்பின் பரிசாய் இருந்துவிட்டு போகட்டுமே......

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்ன செய்வது.. சில சமயம் உணர்சிபூர்வமாக அணுகத்தோன்றும், சில சமயம் உணர்வுபூர்வமாக அணுகத்தோன்றும்.. நீங்க இந்த விசயத்தை எப்படி தீர்த்தீர் என்பதை எழுதவும்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாசகி சொல்வதே சரியென்று படுகிறது.

இல்லாக் கொடுமைதான் இப்படி செய்யச் சொல்லும்.

மற்ற ஏதாவது பொருளென்றால் பரவாயில்லை, அரிசி - பசிக்காகத்தானே இருக்கும்.

இளைய கவி said...

//பாசகி அவங்க சொல்ற மாதிரி ஒரு பை நிறைய அரிசி நிரப்பி நீங்களே தாங்க..
ஆனா வேலையே விட்டு தூக்க வேண்டாம்..
ஆனால் இதை வாய்ப்பாக வைத்து கொண்டு இனிமேலும் அவர் இதே போன்று செயல்களை தொடராமல் இருக்க நீங்களும் கொஞ்சம் கவனமாக இருங்கள்//

இது சரியாக இருக்கும் என்று நானும் கருதுகிறேன்

Raja said...

அவர் வேலையில் தொடர்வதும், தொடரவிடுவதும் நல்லதல்ல.
அவர் இனிமேல் எந்த தவறுமே செய்யவில்லையெனினும், நாளை உங்கள் அஜாக்கிரதையினாலோ, மறதியினாலோ தவறும் பொருட்களுக்கும் அவர் மீதுதான் உங்கள் முதல் சந்தேகம் இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//பாசகி said...

//எட்டு வருடமாக...நேரம் தவறாமை,வேலையில் சுத்தம்,அக்கறை...எந்தக் குறையும் சொல்லவே முடியாது//

இது கணக்கில எடுத்துகிட்டு பாத்தோம்னா.

அவங்க நாளைக்கு வீட்டுக்கு வரும்போது நீங்களே அவங்களுக்கு ஒரு 5 கிலோ அரிசிய கொடுங்க, அதுவே அவங்களுக்கு மிகப்பெரிய தண்டனை மற்றும் மாபெறும் உதவி.

இல்லாக்கொடுமைக்குத்தான் அரிசியை திருடிருக்காங்க இல்லேன்னா வேற எதாவது காஸ்ட்லியா எடுத்திருக்கலாம்...

இப்படி சொல்லறதால, நான் திருடினது சரின்னு சொல்லறதா தப்பா புரிஞ்சுக்கமாட்டீங்கன்னு நம்பறேன்...///


ரிபீட்ட்ட்
நானும் இதை நம்புறேன்

pudugaithendral said...

என்ன சொல்லன்னே புரியலை அருணா..

என் கருத்தை சொல்லலாம். ஆனா, 8 வருடமா
வேலை பார்த்து வந்த அவங்களின் இந்த செயல் உங்கள் மனதில் ஏற்படுத்திருக்கும் வடு???

இதுதான் முதல் தடவைன்னு நீங்க சொல்ல ஆதாரம் ஏதும் உண்டா?? ஏன் என்றால் என் வீட்டில் வேலை பார்த்த அம்மிணி ஒருவர் நான் சாமான்கள் வைக்கும் இடத்திலிருந்து குளிக்க சோப் வேண்டுமென்பதற்காக எடுத்துக்கொண்டு 3 நாள் கழித்துதான் என்னிடம் சொன்னார்.:(

அடுத்த நாளை என்னிடம் சொல்லாமல் விட்டதுமில்லாமல்,”நீங்க செக் செஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்” என்று என்னிடம் சொல்ல மனது வலித்தது.

நம்பித்தானே விட்டுவிட்டு போனோம். என்று நினைத்து வேலையை விட்டு உடனடியாக எடுத்துவிட்டேன். 20 ரூபாய் சோப்புக்காக இல்லை, நம்பிக்கைத் துரோகத்துக்காக வேலையை விட்டு எடுத்தேன்.

அன்புடன் அருணா said...

பாசகி said..
// இப்படி சொல்லறதால, நான் திருடினது சரின்னு சொல்லறதா தப்பா புரிஞ்சுக்கமாட்டீங்கன்னு நம்பறேன்...//
இல்லையில்லை தப்பாப் புரிஞ்சுக்கலை...மற்றும் கருத்துக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி,ஆயில்யன்...

அன்புடன் அருணா said...

ஜானி வாக்கர் said...
//இது தான் முதல் திருட்டு என்பது உங்களுக்க்கு நிச்சயம் தெரியுமா?//
அதுதானே தெரியலை....
//எதிர்காலத்தில் நீங்கள் கை மறந்து வைத்த பொருளை நீங்கள் தேடும் முன் உங்கள் மனம் அவரைநிச்சயம் சந்தேகப்படும்.//
அதுதான் என் கவலையும்....

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி வினோத்,ஜீவராஜ்...

அன்புடன் அருணா said...

R.Gopi said...
//I remember one thing and want to share with you
TO ERR IS HUMAN
TO FORGIVE IS DIVINE//
I understand Gobi...thanx

அன்புடன் அருணா said...

வால்பையன் said,
// அவுங்க வீட்டு பிரச்சனை என்னான்னு பேசுங்க!//
பேசிடறேன் வால்

அபி அப்பா said...

பாசகி சொன்ன தீர்ப்பு தான் 100 சதம் சரி!

Anonymous said...

ரொம்பவும் கஷ்டமாக இருக்கு படிக்கவே. முதல் தடவை என்றால்மன்னித்து விடலாம். பல நாள் திருடியாக இருந்தால் வெளியே அனுப்பி விடவேண்டியது தான்.ஏழ்மை தான் காரணம் இந்த தப்பு வழியில் செல்ல. சங்கடமான நிலை
பார்த்தசாரதி

Tech Shankar said...

Is this really happened @ your home? or Did you write a story?

Any way - Unfortunately you didnt recognize her till now. But today you found her as criminal. So, please be careful about her in future. Its enough.

sri said...

achicho, sorry about it aruna, just talk to her openly and ask her why she did that to you. But if i were u i would not let her work anymore.

sri said...

Achicho, just talk to her aruna, but i were u I would not let her work anymore. A lost trust is lost once for all!

Anonymous said...

மன்னிக்கிறவகள் சராசரியைவிட அலாதி.

உங்களின் மனசு எலிபத்தயத்துக்குள்
அலைகிற போல அலைகிறது.

நீங்களும் இப்போது அலாதி ..

ஒரு கிலோ அரிசி நமக்கு பொருட்டல்ல
ஆனால் நேர்மை ?

இது வேறு தளங்களில், காலங்களில் மாறுபடும்.
நமக்குத்தெரியாமல் சின்னச் சின்னத்திருட்டுப்
பண்ணும் குழந்தைகளிடம்
நமது அணுகுமுறை என்ன ?

மனிதர்களை அவர்களது குறை நிறைகளோடு
ஏற்றுக்கொள்வதே ஆன்மீகம் மிஞ்சும் மிகப்பெரும்
லௌகீகம்.

நீங்கள் அப்படிப்பட்டவர்கள் .. ச்சும்மா
எங்களை பாசா பெயிலா பாக்கிறீங்க
சரிதானே ?

நான் பாசா ?

"உழவன்" "Uzhavan" said...

ஒரு இக்கட்டான் சூழ்நிலைக்கு நீங்கள் ஆளானது போதாததுனு, எங்களையும் ஆக்கிட்டீங்க.
நாளைக்கு நீங்க 5 கிலோ அரிசியை அவங்களுக்கு கொடுத்த உடனே, அவங்க உடனே தன் தவற்றை உணர்ந்து, கண்ணீர்மல்க, காலில் விழாத குறையாக உங்களிடம் மன்னிப்பு கேட்பார் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.. காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு. அவர்களின் குணாதிசியம் உங்களுக்குத்தான் தெரியும். முடிவுவை யோசித்து, கலந்து பேசி எடுங்க.

அன்புடன் அருணா said...

அபுஅஃப்ஸர் said... //அவங்களுக்கு தேவையறிந்து கேட்டு நிறைய கொடுங்க குடும்பத்தில் ஒருவர் போல்//
கொடுக்கிறேனே அபுஅஃப்ஸர்...
Raja said...
//அவர் மீதுதான் உங்கள் முதல் சந்தேகம் இருக்கும்.//
அதுதான் என் கவலையும் ராஜா
வழிப்போக்கன் said...
// வருத்தப்படாதீங்க...//
கருத்துக்கு நன்றி வழிப்போக்கன்

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//மறப்போம் மன்னிப்போம்//
கருத்துக்கு நன்றி வசந்த்....

அன்புடன் அருணா said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//என்ன செய்வது.. சில சமயம் உணர்சிபூர்வமாக அணுகத்தோன்றும், சில சமயம் உணர்வுபூர்வமாக அணுகத்தோன்றும்.. நீங்க இந்த விசயத்தை எப்படி தீர்த்தீர் என்பதை எழுதவும்..//
கண்டிப்பா எழுதறேன்....
June 24, 2009 11:43 PM
அமிர்தவர்ஷினி அம்மா said...
// பாசகி சொல்வதே சரியென்று படுகிறது.//
கருத்துக்கு நன்றி..அமித்து அம்மா

Jackiesekar said...

மனிதர்கள் எப்போதும் மனிதர்கள்தான் என்பதை மறவாதீர்...

பல வருடம் எனும் போது நீங்கள் அவரை அழைத்து பேசலாம் . அதைவிட உங்களுக்கு தெரிந்து விட்டது என்பதால் அவர் மனநிலையை சற்றே யோசியுங்கள்....ஆனால் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் பிரிந்த நெல்லின் உமி மீண்டும் ஒட்ட வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம்

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி ஆ.ஞானசேகரன்
புதுகைத் தென்றல் said...
//அவங்களின் இந்த செயல் உங்கள் மனதில் ஏற்படுத்திருக்கும் வடு???//
அதுதான் நிறைய வலிக்கிறது
//இதுதான் முதல் தடவைன்னு நீங்க சொல்ல ஆதாரம் ஏதும் உண்டா?? //
இல்லியே..எத்தனை தடவை இதுபோல நடந்திருக்குமோன்னு தோன்றுகிறது..

அன்புடன் அருணா said...

அபி அப்பா said...
பாசகி சொன்ன தீர்ப்பு தான் 100 சதம் சரி!
இளைய கவி said...
இது சரியாக இருக்கும் என்று நானும் கருதுகிறேன்
கருத்துக்கு நன்றி அபி அப்பா,இளைய கவி

அன்புடன் அருணா said...

நன்றி பார்த்தசாரதி சார்.

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
// Is this really happened @ your home? or Did you write a story?//
It happened at my home தமிழ்நெஞ்சம்...

அன்புடன் அருணா said...

Srivats said...
// achicho, sorry about it aruna, just talk to her openly and ask her why she did that to you. But if i were u i would not let her work anymore.//
thanx for ur opinion Srivats....ya it's very hard and painful to take a decision at this time.

அன்புடன் அருணா said...

" உழவன் " " Uzhavan " said...
//ஒரு இக்கட்டான் சூழ்நிலைக்கு நீங்கள் ஆளானது போதாததுனு, எங்களையும் ஆக்கிட்டீங்க.//
அச்சச்சோ.....
. //அவர்களின் குணாதிசியம் உங்களுக்குத்தான் தெரியும். முடிவுவை யோசித்து, கலந்து பேசி எடுங்க.//
கண்டிப்பா....

அன்புடன் அருணா said...

skaamaraj said...

//மன்னிக்கிறவகள் சராசரியைவிட அலாதி.
உண்மை...

//உங்களின் மனசு எலிபத்தயத்துக்குள்
அலைகிற போல அலைகிறது. //
இதுவும் உண்மைதான்
//நீங்களும் இப்போது அலாதி ..//
இப்போதைக்கு அமைதியாக இருக்கிறேன்..அலாதின்னு தூக்கி வைத்துவிடாதீர்கள்..
//ஒரு கிலோ அரிசி நமக்கு பொருட்டல்ல
ஆனால் நேர்மை ?//
அதேதான் என் கவலையும்

//மனிதர்களை அவர்களது குறை நிறைகளோடு
ஏற்றுக்கொள்வதே ஆன்மீகம் மிஞ்சும் மிகப்பெரும் லௌகீகம்.//
அதுவும் உண்மை
//நீங்கள் அப்படிப்பட்டவர்கள் .. ச்சும்மா
எங்களை பாசா பெயிலா பாக்கிறீங்க
சரிதானே ?//
அய்யய்யோ...சத்தியமா பாசா ஃபெயிலான்னு பார்க்கலிங்க...நிஜம்மாவே குழம்பிப் போயிருக்கிறேன்
நான் பாசா ?
நீங்க Distinction....!!!

அன்புடன் அருணா said...

Welcome Hsinchu from thaiwan.
thanx for the comment!

சிநேகிதன் அக்பர் said...

வேலையாளுக்கு நல்லது நினைக்கும் உங்கள் எண்ணம் உயர்ந்தது.

நீங்கள் நேரடியாக அவரிடம் கேட்காமல் உங்களுக்கு தெரிந்ததை உணர்த்துங்கள்.கவனமாக இருப்பதைக் காட்டிக் கொள்ளுங்கள். அவரின் நிலையறிந்து உதவி செய்யுங்கள்.

Josephine Baba said...

பாசமிகு அருணா உங்கள் வலைப்பதிவு அழகாக உள்ளது.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா