நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 22, 2009

இயல்புக்கு மாறாக ........

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

அடை மழையின் பெருந்துளிகளால்
உறங்கிக் கிடந்த
நீர்க் குமிழிகள் சட்டென்று
விழித்துக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....

இயல்புக்கு மாறாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!

45 comments:

பாசகி said...

//..அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!//

Awesome!!!

Unknown said...

கவிதையை finetune செய்து இன்னும் கூட மெருகூட்டலாம்.

ராமலக்ஷ்மி said...

அருணா 'இயல்புக்கு மாற்றாக' இருப்பவையாய் நீங்கள் எடுத்தாண்டிடுக்கும் அத்தனையும் அருமை.

//துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....//

அற்புதம்.

அனுபவம் said...

சூப்பர்!பூங்கொத்து வாங்கி வச்சிருக்கன் கட்டாயம் கொண்டுவருவன்.

வால்பையன் said...

ஏன் அவங்களுக்கு என்னாச்சு?

Anonymous said...

நல்லா இருக்குங்க :-)

R.Gopi said...

//இயல்புக்கு மாற்றாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!! //

********

அட்டகாசமான வரிகள்........ அவற்றுடன் போட்டியிடும் படங்கள்..........

மிக நன்றாக உள்ளது.......... வாழ்த்துக்கள்............

ஆயில்யன் said...

//அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன///


இரவில் பெய்த மழையில்,வீட்டின் முன்பு நனைந்து முழ்கி மிதந்து கிடந்த நந்தியாவட்டை மற்றும் செம்பருத்தி & மகிளம்பூ பார்த்த காட்சிகள் மனதில் ஓடின! :)

மழை பெய்யும் காட்சி ரசித்துக்கொண்டேஏஏஏஏஏஎ இருக்கிறேன் அழகு :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது..... //

அசத்தல் வரிகள்

ரொம்ப புடிச்சிருந்தது.

(ஆனா ஒரு பயம், எங்க ஆயில்ஸ் அண்ணாச்சி இதுக்கும் எதிர் கவுஜ எழுதிடுவாரோன்னு மீ த யோசிச்சிங்க்.......)

தமிழ் said...

பூங்கொத்து

KParthasarathi said...

migavum arumaiyaaga ulladhu.Basakiyum Raama lakshmiyum sonna maadhiri awesome and arpudham dhan.Kavidhai iyalbhaga nayatthudan irukkinradhu.Vaaztthukkal

விக்னேஷ்வரி said...

அழகு மழைக் கவிதை

Karthik said...

அட்டகாசம் மேம், ரியலி!! :)

*இயற்கை ராஜி* said...

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது//


Sooper....manasai thoduthu:-)

அன்புடன் அருணா said...

கே.ரவிஷங்கர் said...
//கவிதையை finetune செய்து இன்னும் கூட மெருகூட்டலாம்.//
பண்ணலாமே!!!

ப்ரியமுடன் வசந்த் said...

ஃபர்ஸ்ட் அந்த


கிளிப்ஸ்களுக்கு

ஒரு சிறந்த வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

//
இயல்புக்கு மாற்றாக ..............
அடித்துப் பெய்யும் மழையில்
குடை வைத்துக் கொண்டு
நனைந்து போகும் என்னைப்
பரிதாபமாகப் பார்த்தார்கள்
அவர்கள்!!//

அவர்களுக்கு தெரியாதுதானே மழையே உங்களுக்குத்தான் என்று

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//அருணா 'இயல்புக்கு மாற்றாக' இருப்பவையாய் நீங்கள் எடுத்தாண்டிடுக்கும் அத்தனையும் அருமை.
அற்புதம்.//
நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி பாசகி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்!

அன்புடன் அருணா said...

அனுபவம் said...
// சூப்பர்!பூங்கொத்து வாங்கி வச்சிருக்கன் கட்டாயம் கொண்டுவருவன்.//
அனுப்ப்பிடுங்கோ...வாடிடப் போகுது!

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

நசரேயன் said...

எங்க ஊரிலே மழையே இல்லை.. உங்க கவிதை மழையை தவிர

Tech Shankar said...

Great Animation


லக்கிலுக்கின் சாதனையைத் தொடர்ந்து...

கார்க்கிபவா said...

அழகு :))

pudugaithendral said...

தெறிக்கும் சாரலுடன் புகைப்படங்கள் அருமை அருணா.

எங்கேர்ந்துப்பா பிடிக்கறீங்க??!!!

இரசிகை said...

remba pidiththathu yella thulikalume..:)

கபிலன் said...

"அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன

துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....
"

நான் ரசித்த வரிகள்.
நல்லா இருக்குங்க கவிதை. வாழ்த்துக்கள்!

உடன்பிறப்பு said...

படங்கள் மற்றும் கவிதை அருமை

Rajeswari said...

கவிதையுடன் சேர்ந்த அந்த படங்கள்,மனதுக்குள் குளிர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.

நிலாரசிகன் said...

////துரத்திப் பிடித்து நெடுநாளாய்
அடைத்து வைத்த வண்ணத்துப் பூச்சி
விடுவித்த அன்று
பறக்க மறந்து போயிருந்தது.....////

இதுபோன்ற கவிதைகளால்தான் இன்னும் மழை பெய்கிறது - மனதிற்குள்.
வாழ்வியல் தத்துவம்/இயலாமை/தோல்வி/வழக்கம்/இன்னும் என்னென்னவோ தோன்றுகிறது இக்கவிதையினால்.
[பூங்கொத்து என்ன ஒரு பூங்காவனமே கொடுக்கலாம் இதைப்போன்ற கவிதைகளுக்காக]
மனமார்ந்த வாழ்த்துகள்.

(உங்கள் வலைத்தள முகவரி தவிர மற்றவை அனைத்தும் அருமை)

Rajan said...

துரத்திப் பிடித்து... lovely!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//ஏன் அவங்களுக்கு என்னாச்சு?//
அது தெரிஞ்சா எழுதிருக்க மாட்டேனா???

அன்புடன் அருணா said...

R.Gopi said..
.//அட்டகாசமான வரிகள்........ அவற்றுடன் போட்டியிடும் படங்கள்..//
நன்றி கோபி

அன்புடன் அருணா said...

புனிதா||പുനിത||Punitha said...நல்லா இருக்குங்க :-)---நன்றி புனிதா
தமிழ்நெஞ்சம் said...Great Animation---நன்றி தமிழ்நெஞ்சம்
உடன்பிறப்பு said...படங்கள் மற்றும் கவிதை அருமை----நன்றி உடன்பிறப்பு

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//தெறிக்கும் சாரலுடன் புகைப்படங்கள் அருமை அருணா.
எங்கேர்ந்துப்பா பிடிக்கறீங்க??!!!//
எல்லாம் கூகுள் ஆண்டவர்கிட்டேருந்துதாங்க....

அன்புடன் அருணா said...

இரசிகை said...remba pidiththathu yella thulikalume..:)

Rajeswari said... கவிதையுடன் சேர்ந்த அந்த படங்கள்,மனதுக்குள் குளிர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.

கபிலன் ....நல்லா இருக்குங்க கவிதை. வாழ்த்துக்கள்!

கார்க்கி said...அழகு :))
ரசிப்புக்கு நன்றி கார்க்கி, கபிலன், Rajeswari, இரசிகை.

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
//துரத்திப் பிடித்து... lovely!//
ரொம்ப நாளைக்கு அப்புறம் rajan RADHAMANALAN!!! நன்றி!

அன்புடன் அருணா said...

நசரேயன் said...
//எங்க ஊரிலே மழையே இல்லை.. உங்க கவிதை மழையை தவிர//
அட ...அப்பிடியா???இருங்க அனுப்பி வைக்கிறேன்!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
// அவர்களுக்கு தெரியாதுதானே மழையே உங்களுக்குத்தான் என்று//
அட இது நல்லாருக்கே வசந்த்!!!

நிலாரசிகன் said...

என்னங்க என் பின்னூட்டம் பார்க்கவில்லையா? :((

அன்புடன் அருணா said...

நிலாரசிகன் said...
// இதுபோன்ற கவிதைகளால்தான் இன்னும் மழை பெய்கிறது - மனதிற்குள்.
வாழ்வியல் தத்துவம்/இயலாமை/தோல்வி/வழக்கம்/இன்னும் என்னென்னவோ தோன்றுகிறது இக்கவிதையினால்.//
அடடா ரொம்பப் புகழாதீங்க! உங்க கவிதைகள் முன்னாலெ இது L.K.G கவிதைங்க....
[பூங்கொத்து என்ன ஒரு பூங்காவனமே கொடுக்கலாம் இதைப்போன்ற கவிதைகளுக்காக]
ம்ம்ம் பூங்காவனம் வாங்கிக் கொள்கிறேன்...
(உங்கள் வலைத்தள முகவரி தவிர மற்றவை அனைத்தும் அருமை)
அநேகம் பேர் சொல்லிவிட்டார்கள்
அதை மாற்றினால் இனி பல சிரமங்கள் வரும் எனத்தான் மாற்றாமலிருக்கிறேன்...
கருத்துக்கு நன்றி நிலாரசிகன்.

அன்புடன் அருணா said...

நிலாரசிகன் said...
//என்னங்க என் பின்னூட்டம் பார்க்கவில்லையா? :((//
பார்த்துட்டேன் பார்த்துட்டேன்...பதிலும் போட்டுட்டேனே!

அன்பேசிவம் said...

மழை, வெயில் இதில் எதை பற்றியும் யார், எப்போது, என்ன பேசினாலும் அழகு. நன்றி அருணா, உங்களுடைய இந்த மழைக்கவிதை அருமை. என்னுடைய வெயில் மற்றும் மழை பற்றிய பதிவுகளை படித்து பாருங்கள்.

பூங்கொத்து உங்களுக்கு

priyamudanprabu said...

அதிகாலை பெய்த
அந்தப் பெருமழையில்
உதிர்ந்து கிடந்த
இலையும் பூக்களும் திடீரென்று
நீந்தக் கற்றுக் கொண்டன
....

அழகு

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா