நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 9, 2009

அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பின் சார்பாக சிறுகதை போட்டிக்கான கதை


எல்லா நாளும் நட்சத்திரம் அழகாய்த் தெரிவதில்லை.இன்றும் அப்படித்தான். எனக்கு அழகாய்த் தெரியவில்லை .என்னால் அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.அப்பாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கத் தைரியமில்லை.அப்பா நண்பர்களின் கேள்விக்குப் பயந்து லீவ் போட்டுவிட்டார்..அம்மாவும்தான்....

தொலை பேசிச் சத்தம் என்னை நடு நடுங்கச் செய்கிறது..இன்றைக்குன்னு பார்த்து எல்லோருக்கும் அவ்வ்ளோ அக்கறை...........கதவை மூடிக் கொண்டாலும் ஓயாமல் விசாரிக்கும் பக்கத்து வீட்டு நலம் விரும்பிகள்?????

சரி இன்றோடு முடியப் போகிறதா? நாளை??? கதவைத் திறந்துதானே ஆக வேண்டும்.அம்மாவும் அப்பாவும் ஆஃபீசுக்குப் போகத்தானே வேண்டும்.என்னால் எவ்வ்ளோ கஷ்டம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்....கட்டுப் படுத்த முடியாமல் கண்ணீர் கொட்டியது.

ரெண்டு பேரும் என்னைப் போட்டு நாலு அடி அடித்திருந்தாலும் நல்லாயிருந்திருக்கும்.ஆனால் இப்படி அமைதியா இருக்கறதுதான் என்னைக் கொல்லுது.....
அம்மா அம்மம்மாவிடம் ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தாங்க" நான் ஒண்ணுமே சொல்லலைம்மா....அவன் வழியில் விட்டுட்டேன்" அப்படீன்னு.....
அவ்வ்ளோதானா? கணக்கில் அந்த ஐந்து மார்க் கிடைக்காமல் நான் ஃபெயிலாகியதால் என் வாழ்க்கை இன்றோடு முடிந்ததா?அந்த ஐந்து மார்க் ஏன் என் வாழ்வை முடிக்க வேண்டும்?...நானே முடித்துக் கொள்கிறேன்.....ஆமா அது ஒன்றுதான் வழி...... நான் பரீட்சைக்குப் படிக்கும் போது பால் ஜூஸ்னு தந்த அம்மா இன்னிக்கு சாப்பிட வான்னு கூட சொல்லலியே? வாழ்நாள் முழுக்க இப்படி மௌனமா சாவுறதுக்கு ஒரேயடியாச் செத்துப் போறதுதான் நல்லது......அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்......

யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது."அவன் ரூமில் இருக்கான்"னு அம்மா சொன்னாங்க. நான் கண்களை இறுக மூடி தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன்.......... "நான் யாரையும் எப்படிப் பார்ப்பேன்???உலகமே இருண்டு விடக் கூடாதான்னு இருந்தது.....

அப்பாவும் அம்மாவும் மெல்லிய குரலில் ஏதோதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள்
"ஸ்கூல் ரிசல்ட் எப்படி??
"இவனாலெ பாஸ் பெர்சென்டேஜ் குறைந்திருக்குமே??"
"உங்க ஸ்கூல் பேரைக் கூட நாசமாக்கிட்டானே'
" 100% ரிசல்ட் இவனாலே போச்சே" "உங்க பள்ளியில் 100% ரிசல்ட் வரும்கிற பேரைக் கூடக் கெடுத்துட்டானே" வந்திருப்பவர் ஸ்கூல் ப்ரின்ஸிபல்தான்...எங்க வீட்டுக்கு அடுத்த வீடுதான் ......ஸ்கூல் ரிசல்ட் மேல் உயிரையே வைத்திருப்பவர்...
"கடவுளே! நான் எப்படி அவங்க முகத்தில் முழிப்பேன்...ஏதாவது செய்து அவங்களை இங்கிருந்து போக வைத்துவிடு.....அல்லது என் உயிரை எடுத்து விடு...தலையணையில் முகம் புதைத்து தன்னிரக்கத்தில் அழுதேன்...
இவராவது பரவாயில்லை கணக்கு ஆசிரியரை எப்படி சமாளிக்கப் போகிறேன்??? "என் சப்ஜெக்ட்லெ யாராவது ஃபெயிலாகினீங்க அவ்வ்ளோதான் உயிரை எடுத்துவிடுவேன்னு மீசை முறுக்கிக் கொண்டே மிரட்டியது கண்முன் வந்து போனது....

கோச்சிங் வகுப்பு ரமண் சார் அவரோட பேரே போச்சேன்னு கத்தப் போறார்...வகுப்பில் சேர்வதற்கு முன்பே பையன் ஆவரேஜ் சேர்த்துக்க மாட்டேன்னு அடம் பிடிச்சார்... ம்ம்ம் எல்லாம் இன்னிக்கு மட்டும்தான்....அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....இன்றோடு என்னை முடித்துக் கொள்கிறேன்.....

மறுபடியும் யாரோ வந்திருக்காங்க........
அம்மா மெதுவாக "காலையிலிருந்து ரூமை விட்டு வெளிலெ வர்லெ.....உங்களையெல்லாம் எப்பிடிப் பார்ப்பான்?...அப்புறமா வா அருண்"
"இல்லை ஆன்டி நான் அவனைப் பார்க்கணும்.....ரொம்ப அப்செட் ஆகியிருப்பான்...நான் பார்த்துட்டே போறேன் ஆன்டி....."
"சொன்னாக் கேளு அருண்.....நீங்கல்லாம் அவன் நண்பர்கள்தானே???புத்தி சொல்லிப் படிக்க வச்சுருக்கலாம்லெ???அதை விட்டுட்டு இப்போ வந்து என்ன ஆறுதல் சொல்லப் போறீங்க??? போங்க.....போங்க" அம்மா வேணும்னே சத்தமாகச் சொல்வதாகப் பட்டது....
எனக்கு அருணிடம் மட்டுமாவது பேசவேண்டும் போல இருந்தது.......

அம்மா அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் போச்சு....நண்பர்கள் எல்லோரும் என்னை விட்டு விலகி விடுவார்கள்......எல்லோரும் காலேஜ் போய் விடுவார்கள்...நான்???

டி.வி யில் அந்த மாணவி முதல் மதிப்பெண்...இந்த மாணவி இரண்டாவது மதிப்பெண்...என்று நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்...அவங்க வீட்டில் எல்லாம் கேக்கும் கொண்டாட்டமுமாக இருந்தது......எனக்கு மட்டும் ஏன் இப்படி?

குட்டிம்மா ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தது...அம்மா அப்பாவின் நடவடிக்கையால் அதுக்கும் கூட ஏதோ புரிந்தது போல பக்கத்திலேயே வராமல் ஏதோ படம் வரைந்து கொண்டிருந்தது.....குட்டிம்மா மாதிரியே இருந்திருக்கலாம் போல....ரிசல்ட் .மார்க்,பெர்ஸென்டேஜ் இப்படி எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்திருக்கலாம்....

குட்டிம்மா தான் வரைந்த பாப்பா படத்தை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் போனது...கண்ணைக் கசக்கியது...
"ம்மா......படம் நல்லால்லை தண்ணீ கொட்டிருச்சு.......படம் நல்லால்லை"
இல்லைடா செல்லம்...போனாப் போட்டும்டா செல்லம்....அடுத்த தடவை நல்லா வரை சரியா? அழாதேக் குட்டிம்மா" என்றாள்

குட்டிம்மா படத்தை எடுத்துக் கொண்டு அப்பாவிடம் போனது
"சூப்பரா இருக்குடா..... இல்லைப்பா நல்லால்ல...
"இல்லைக் குட்டிம்மா நல்லாதாண்டா இருக்கு.... "
"ம்ம்ஹுமஹஹும் ...... "
"சரிடாக் குட்டி அடுத்த தடவை குட்டிம்மா அழகா வரையுமாம் சரியா???
"அம்மா நான் கூட அடுத்த தடவை நல்லா படிச்சு நல்லா எழுதறேம்மா.....எங்கிட்டே பேசுங்கம்மா...."

"அப்பா அடுத்த தடவை நான் பாஸாகிடுவேம்பா எங்கிட்டே பேசுங்கப்பான்னு" மனசுக்குள்ளே கத்தறேன்....கத்த நினைத்ததாலே தொண்டை வலித்தது........கண்ணில் மறுபடியும் நீர் கொட்டியது....
குட்டிம்மா படத்தை என்னிடம் கொண்டு வந்தது....
அம்மா அதற்குள் கத்தினாங்க ... "குட்டிம்மா சாப்பிட வா"
குட்டிம்மா"சாப்பிடலாம் வா குட்டிப்பா "என்றது.....
அவள் என்னைக் குட்டிப்பா என்றுதான் அழைப்பாள்...குட்டிம்மா கையைப் பிடித்ததும்..துக்கம் தொண்டையை அடைக்க குமுறிக் குமுறி அழுதேன்.... அம்மா என்னைக் கூப்பிடவில்லை...... ஏதோ சாப்பிட்டேன்.

அம்மா மறுபடியும் "குட்டிம்மா வா தூங்கலாம்"என்று கூப்பிட்டாங்க... குட்டிம்மா தூங்கப் போகாமல் படம் வரையப் போனது.......... "ஏண்டா செல்லம்? தூங்கலாம் வாடா...ஏன் வரமாட்டேங்கிறே?"
"போம்மா .....நல்லா அழகா பாப்பா படம் வரைஞ்சுட்டு வர்றேன்மா அப்புறம்தான் தூங்கணும்" என்று மீண்டும் படம் வரைய உட்கார்ந்தது....
அம்மாவும் அப்பாவும் தூங்கியதும் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெளிவாகியிருந்தது இப்போது........புத்தகப் பையை ஒரு உறுதியுடன் எடுத்துக் கொண்டேன்.

33 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்

அருமையாக இருக்கிறது

நல்ல கருத்துள்ள கதை

கண்ணீர் வரவழைக்கிறது

ஆரம்பத்தில் எதிர்மறை சிந்தனையைத் தந்த போதும்
அசத்தலான முடிவைத் தந்து
அற்புதமாக முடித்துள்ளீர்கள்

மீண்டும் மீண்டும் நன்றிகள் பல
நல்ல கதையைத் தந்தமைக்கு

வெற்றி திலகமிட வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

அன்புடன் அருணா said...

ரொம்ப நன்றி திகழ்மளிர்...

*இயற்கை ராஜி* said...

அக்கா..க‌தை சூப்ப‌ர்..

*இயற்கை ராஜி* said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!///


பூங்கொத்தா? பூகூடையில்ல‌ கொடுக்க‌ணும்

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!///
//பூங்கொத்தா? பூகூடையில்ல‌ கொடுக்க‌ணும்//
ஒற்றைப் பூ கூட எனக்கு ரொம்பப் பிடிக்கும்...
பூக்கூடையே தந்தால் .....கொடுங்க...கொடுங்க!!

நாடோடி இலக்கியன் said...

நல்ல கதை,நல்ல மெஸேஜ்.

நடை இன்னும் கொஞ்சம் வேறுமாதிரியாக இருந்திருக்கலாமோ?
அப்படின்னும் ஒரு எண்ணம்.

வெற்றிபெற வாழ்த்துகள்..!

Poornima Saravana kumar said...

வாவ்! கதை சூப்பர இருக்குங்க அருணா:)
போட்டி்யில் வெறறி பெற வாழ்த்துகள:))

அன்புடன் அருணா said...

நாடோடி இலக்கியன் said...
// நல்ல கதை,நல்ல மெஸேஜ்.//
நன்றி நாடோடி!
//நடை இன்னும் கொஞ்சம் வேறுமாதிரியாக இருந்திருக்கலாமோ?//
எனக்கும் கூட அதே எண்ணாம்தான்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வெற்றிபெற வாழ்த்துகள்..!

அன்புடன் அருணா said...

நன்றி ராதாகிருஷ்ணன்...

அன்புடன் அருணா said...

நன்றி பூர்ணிமா

ராமலக்ஷ்மி said...

அருமையான கருத்து. வெற்றி பெற வாழ்த்துக்கள் அருணா!

dsfs said...

கதை அருமை.வாழ்த்துக்கள் அருணா.

புதியவன் said...

கதை ரொம்ப நல்லா இருக்கு... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி,புதியவன்,பொன்மலர்!

Gowripriya said...

நல்லா இருக்கு.. all the best :))

ப்ரியமுடன் வசந்த் said...

யக்கொவ்......

கத சூப்பரப்பு.....

Karthik said...

really superb one! :)

அன்புடன் அருணா said...

நன்றி கௌரிபிரியா

gils said...

athenanga blog name ungalthu...irakka pogiren?? btw semma heavy dose kathai..DDla drama paatha mathri iruku..kaamedia ethachum try panungalen..y so soga stories

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//யக்கொவ்......கத சூப்பரப்பு.....//
நன்றி வசந்த்!

anujanya said...

நல்லா இருக்கு. இந்த தேர்வு, ரிசல்ட், பாஸ்/பெயில் சமயத்தில் ஒரு topical கதை. ஒன்றுமே கேட்காமல், பேசாமல் இருப்பதும் சரியில்லை என்று புரிய வைக்கிறீர்கள்.

All the best.

அனுஜன்யா

அன்புடன் அருணா said...

gils said...
//athenanga blog name ungalthu...irakka pogiren?? //
அது பெரிய கதைங்க!
//btw semma heavy dose kathai..DDla drama paatha mathri iruku..kaamedia ethachum try panungalen..y so soga stories//
இது போட்டிக்கான கதைங்க! காமெடி Work out ஆகுமா???

அன்புடன் அருணா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வருகை அனுஜன்யா!!! நன்றி!

நேசமித்ரன் said...

நுண்ணிய உணர்வுகளை அழகாக மொழிப்படுத்தி உள்ளீர்கள்
கதையின் ஓட்டம் மற்றும் தடம் சற்று மாறுபட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

வாழ்த்துக்கள் !!!

கோபிநாத் said...

எங்க போட்டு தள்ளிடுவிங்களோன்னு பயந்துக்கிட்டே படிச்சேன்...கடைசியில சூப்பராக முடிச்சிட்டிங்க ;)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)

அன்புடன் அருணா said...

NESAMITHRAN said...
//கதையின் ஓட்டம் மற்றும் தடம் சற்று மாறுபட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் //
நானும் கூட அப்பிடித்தான் நினைக்கிறேன்!

Deepa said...

தோல்வியடைந்த மாணவனின் உணர்வுகளை உருக்கமாக எழுதி இருக்கிறீர்கள். முடிவும் அருமை.

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல கதை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வாங்க என் பக்கத்துக்கு

நாமக்கல் சிபி said...

இச்சிறுகதை தமிழ்மலர் நியூஸ் இதழில் வெளியிடப் பட்டிருக்கிறது!

ரோகிணிசிவா said...

பெற்றோர் அனைவரும் படிக்க வேண்டிய கதை!
சூப்பர் முடிவு ,பெயில் ஆனவனின் வலி, வேதனை, நல்ல வேளை அவன் சாகலை!
அழகா சொல்லிருக்கீங்க , சூப்பர் மேடம் !

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா