நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, April 7, 2009

கடிகார முட்களிடம் சிக்கிக் கொள்ளாமல்.............ஒருநாள்....


ஐந்தரை மணிக்கு வேலைக்காரி...
ஆறு மணிக்குப் பால்காரன்...
ஆறரைக்குக் காய்கறி....
ஏழு மணிக்குக் குக்கர்...
எட்டு மணிக்கு வண்டியில்...
எட்டரைக்கு ஆஃபீஸ்..பத்து மணிக்கு டீ....
பன்னிரண்டு மணிக்கு லன்ச்...
மூணு மணிக்கு காப்பி...
ஐந்து மணி...வண்டியில்...
அப்புறம் அதே வரிசையில் குக்கர்...
சாப்பாடு..பத்திரிக்கை .....தூக்கம்...
கழுத்து நெறிபடுவது போலிருந்தது...அவளுக்கு...

மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது...
கொஞ்ச நாளாகவே இந்த மாதிரிதான் அவஸ்தையாய் இருந்தது....
இப்படி நேரத்துக்குள் மாட்டிக் கொண்டு முழிப்பது பிடிக்கவில்லை....

கொஞ்சம் ஆனந்தமாக மணித்துளிகளை ரசிக்க வேண்டும் போலிருந்தது...எப்படித் தப்பிப்பது....?இந்த ஓட்டத்திலிருந்து விடுதலை வேண்டும்....சில நாட்களுக்காவது.....நாட்கள்???

சரி...சரி..ஒரு நாளைக்காவது.....ஒன்றுமே செய்யாமல்...ஆமாம் எதுவுமே செய்யாமல்...கடிகாரம் பார்க்காமல்

எப்படி? எப்படி?இவங்களும் பிள்ளைகளும் இருந்தால் இதெப்படிச் சாத்தியமாகும்???
கொஞ்சம் குற்ற உணர்ச்சியாகவே இருந்தது...இப்படி நினைப்பதற்கு....ஆனாலும் தேவைப் பட்டது......அந்த விடுதலை...

நல்லவேளையாக இவங்க தூரத்துச் சொந்தத்தில் ஒரு கல்யாணம்..எல்லோரையும் அனுப்பி வைத்தாயிற்று....உடம்பு சரியில்லையென்று லீவு போட்டாயிற்று....ஒரு முழுப் பகல் கிடைக்கலாம்.......கதவை மூடி விட்டு வந்து படுத்தாள்..சுவர்க் கடிகாரம் மணி எட்டானதைச் சங்கீதமெழுப்பிச் சொன்னது..

மெல்ல எழுந்து எல்லாக் கடிகாரங்களையும் நிறுத்தி வைத்தாள்.....ரொம்ப நாளைக்கப்புறம் டி.வி ரிமோட் கையில்.....ஏதோ சேனலில் ...நேரம் எட்டு...இன்றைய செய்திகள்....என்று ஒரு பெண் சிரித்தாள்...மீண்டும் நேரம்...படக்கென்று பட்டனை அணைத்தாள்........

யார் வீட்டிலோ எஃப்.எம் ரேடியோ நேரம் இப்பொழுது...என்று அலறியது...காதைத் தலையணையில் அழுந்தப் பதித்து மற்றொரு தலையணையால் இன்னொரு காதையும் மூடிக் கொண்டாள்.

நாம் எப்போதிருந்து இப்படி ஆனோம்???ஏனிப்படி???? என யோசிக்க ஆரம்பித்தாள்......

அந்தத் திறந்த பரந்த வெளியில் அலையலையாக மக்கள் கூட்டம் தங்கள் வீட்டுக் கடிகாரங்களைக் கொண்டு வந்து ஒரு பெரிய குழியில் குவித்துக் கொண்டிருந்தார்கள்.அவளுக்குப் பெருமையாக இருந்தது...."அவள் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து இப்படி ஒரு சட்டமா என்று..."

" இனிமேல் கடிகாரமே இருக்காது யாரும் நேரத்தின் பின்னால் பேயாக அலைந்து நிகழ்காலத்தைத் தொலைக்க மாட்டார்கள்." ஓட்டமாக ஓடி வாழ்வை வினாடிகளில் தொலைக்க மாட்டார்கள்...

நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....

கிணி..கிணியென்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள்...அட செல் போன் ...

"ஹல்லோ"

என்னம்மா இவ்வ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தே??? இந்த நேரத்துலேயா தூங்கறது...? பதினொன்றரை மணிக்குத்தானே முகூர்த்தம்னு நினைச்சோம்....பத்தரை மணிக்கே முகூர்த்தம்...பஸ்காரன் வேற பத்து மணிக்கே கொண்டு வந்துட்டான்....வொர்க்கிங் டேங்கறதனாலே எல்லாரும் பதினொரு மணிக்கெல்லாம் கிளம்புறாங்க...நானும் பதினொன்றரை மணிக்கெல்லாம் கிளம்புறேன்...ஒரு ரெண்டுமணி போல வந்தாச்சுன்னா கொஞ்ச நேரம் ஆஃபீஸ் போயிட்டு வந்துடலாம்...அரை நாள் லீவை மிச்சப் படுத்திடலாம் OK வா? என்று பதிலுக்குக் காத்திராமல் வைத்தான்...

அத்தனை கடிகாரங்களின் முட்களும் இவள் தலையைப் பார்த்துக் குறிவைத்துப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன.......

57 comments:

ஆ.சுதா said...

கடிகாரத்திற்குள் சிக்கி கிடக்குது வாழ்க்கை..
நல்ல எழுதியிருக்கீங்க.

KarthigaVasudevan said...

நல்லா இருக்குங்க ...கவிதையா...உரைநடையான்னு ஒரு சின்ன சந்தேகம் !? தவிர வித்யாசமா நிதர்சனத்தை சொல்லியிருக்கிங்க.

அன்புடன் அருணா said...

கருத்துக்கு நன்றி முத்துராமலிங்கம்!

அன்புடன் அருணா said...

மிஸஸ்.தேவ் said...
//நல்லா இருக்குங்க ...கவிதையா...உரைநடையான்னு ஒரு சின்ன சந்தேகம் !?//

அச்சச்சோ டவுட் தேவதையே!!! இது கண்டிப்பா கவிதையில்லீங்கோ...கதை மாதிரி சரியா???

T.V.ராதாகிருஷ்ணன் said...

கடிகாரத்தைப் பார்க்காமல் இன்னும் சற்று மெனக்கட்டிருந்தால்...இன்னும் அருமையாக எழுதி இருக்கலாம் அருணா...

Tech Shankar said...

அருமைங்க. உண்மையிலே உக்காந்து யோசிச்சு ரொம்ப டேஸ்ட்டா எழுதி இருக்கீங்க.

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்த திருப்தி.

நன்றியுடன் நானே

சதங்கா (Sathanga) said...

//அச்சச்சோ டவுட் தேவதையே!!! இது கண்டிப்பா கவிதையில்லீங்கோ...கதை மாதிரி சரியா???//

அப்பாடா, நல்ல வேளைக்கு என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தீர்கள்.

கவிதை நல்லாயிருக்குனு பின்னூட்டிட்டு, விழி பிதுங்கி நின்னிருப்பேன் :))))

ஜோக்ஸ் அபார்ட், வித்தியாசமா இருக்கு பதிவு. வாழ்த்துக்கள்.

கார்க்கிபவா said...

//அச்சச்சோ டவுட் தேவதையே//

இதுவும் கவிதை இல்லையா? ’கதை’யா? :)))))

நட்புடன் ஜமால் said...

நல்லா எழுதியிருக்கீங்க

எல்லோருக்கும் தினமும் நடக்கும் விடயம் என்றாலும் அதை வார்த்தைகள் ஆக்கியிருப்பது அழகு.

ராமலக்ஷ்மி said...

கடிகார முட்களைக் குழியிலே வீசி விடுவாதால் நிற்கப் போவதில்லை காலத்தின் துரத்துகின்ற ஓட்டம் என்பதை அருமையாகச் சொல்கிறது இந்தக் கவிதையான கதை.

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
//கடிகாரத்தைப் பார்க்காமல் இன்னும் சற்று மெனக்கட்டிருந்தால்...//
அது முடியலைங்கறதுதானே வருத்தமே!!!

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்த திருப்தி.//

நன்றியுடன் நானே!!!

அன்புடன் அருணா said...

சதங்கா (Sathanga) said...
//கவிதை நல்லாயிருக்குனு பின்னூட்டிட்டு, விழி பிதுங்கி நின்னிருப்பேன் :))))//
இதை எப்படி கைவிதை categoryலெ வைக்கிறீங்கன்னே தெரிலைப்பா!!

Anonymous said...

அத்தனையும் நிஜம், எல்லோரும் ஏங்கும் பொருள் நேரம் - தனிமையான அழகான நேரங்கள் ..

அழகு.

ராமலக்ஷ்மி said...

கடிகார முட்களையெல்லாம் காணாது ஆக்கினாலும்
காலத்தின் ஓட்டத்தை நம்மால் நிறுத்தவே முடியாது எனக் காட்டும் அருமையான பதிவு அருணா.

Anonymous said...

எல்லாம் கற்பனை தான், only fiction :D
இயற்கைப்பற்றி வருபவை தவிற பிற கவிதைகள் அனைத்தும் கற்பனை தான் தோழி.. :)

கோபிநாத் said...

நன்றாக வந்திருக்கு...;)

கலகலப்ரியா said...

இதோ பிடிங்கோ பூங்கொத்து.. நிறைய்ய்ய்ய்ய எழுதி இருக்கீங்க.. நிதானமா ஒரு நாள் கடிகாரத்தை ஒழித்து விட்டு வந்து ஒவ்வொண்ணா படிக்கிறேன்.. ஹிஹி..

அன்புடன் அருணா said...

பதுமை said...
//அத்தனையும் நிஜம், எல்லோரும் ஏங்கும் பொருள் நேரம் - தனிமையான அழகான நேரங்கள் ..//
சரியா புரிந்து கொண்டீர்கள் பதுமை...!!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//கடிகார முட்களைக் குழியிலே வீசி விடுவாதால் நிற்கப் போவதில்லை காலத்தின் துரத்துகின்ற ஓட்டம் என்பதை அருமையாகச் சொல்கிறது இந்தக் கவிதையான கதை.//

அட அப்பிடியா?? நீங்க சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்!!!

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//அச்சச்சோ டவுட் தேவதையே//

//இதுவும் கவிதை இல்லையா? ’கதை’யா? :)))))//

ஹஹாஹாஹா ரசித்தேன்...நன்றி கார்க்கி!!

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//எல்லோருக்கும் தினமும் நடக்கும் விடயம் என்றாலும் அதை வார்த்தைகள் ஆக்கியிருப்பது அழகு.//

நன்றி ஜமால்!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கதையின் முதல் பத்தி அருமையா இருந்துதுங்க,
முடிவும்...

தேவன் மாயம் said...

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

இந்தாங்க பூங்கொத்து!!

தேவன் மாயம் said...

கடிகாரமும், வாழ்வும் பிரிக்கமுடியாதவை!!

*இயற்கை ராஜி* said...

nalla irukunga...vithiyasamana nitharsanam..

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//நன்றாக வந்திருக்கு...;)//

வாங்க கோபிநாத்!!!நன்றி..

அன்புடன் அருணா said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
//கதையின் முதல் பத்தி அருமையா இருந்துதுங்க,
முடிவும்...//

ரசித்ததற்கு நன்றி....அமித்தும்மா!!!

அன்புடன் அருணா said...

கலகலப்ரியா said...
//இதோ பிடிங்கோ பூங்கொத்து.. நிறைய்ய்ய்ய்ய எழுதி இருக்கீங்க.. நிதானமா ஒரு நாள் கடிகாரத்தை ஒழித்து விட்டு வந்து ஒவ்வொண்ணா படிக்கிறேன்.. ஹிஹி..//

வாங்க..வாங்க..கலகலப்பிரியா... கடிகாரத்தை மறந்து விட்டுப் படிங்க....உங்க கருத்துக்குக் காத்துக்கிட்டு இருக்கேன்...

அன்புடன் அருணா said...

thevanmayam said...

//இந்தாங்க பூங்கொத்து!!//

வாங்கிட்டேன் பூங்கொத்தை...நன்றி...!!!

மண்குதிரை said...

நானும் படிக்கும் போது கவிதைதான் என்று நினைத்தேன். இது குறுங்கதைதான். ரசித்தேன்.

Rajeswari said...

நல்லா இருக்கு...ஆமா என்ன இது "cursor" க்கு பூ!! அழகா இருக்கு

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//கடிகாரமும், வாழ்வும் பிரிக்கமுடியாதவை!!//

ம்ம்ம்..உண்மைதான்..

sakthi said...

மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது...
கொஞ்ச நாளாகவே இந்த மாதிரிதான் அவஸ்தையாய் இருந்தது....
இப்படி நேரத்துக்குள் மாட்டிக் கொண்டு முழிப்பது பிடிக்கவில்லை....

ippadi than neraya per life eruku mam

சி தயாளன் said...

கடிகார முட்களுடன் கடுப்புடன் நாமும் ஓடுகிறோம் :(

அன்புடன் அருணா said...

மண்குதிரை said...
//நானும் படிக்கும் போது கவிதைதான் என்று நினைத்தேன். இது குறுங்கதைதான். ரசித்தேன்.//

அச்சச்சோ ....கவிதைக்குரிய அறிகுறியே இல்லையேப்பா???? சரி...சரி...ரசித்ததற்கு நன்றி...

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//நல்லா இருக்கு...ஆமா என்ன இது "cursor" க்கு பூ!! அழகா இருக்கு//

வாங்க ராஜேஸ்வரி..பூ அழகாருக்கா???எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு!!

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க.. :)

Divya said...

எழுத்துநடை சூப்பர்ப்:))

கவிநடையில் ஒரு கதை....ரொம்ப நல்லாயிருக்குங்க அருணா:))

மணிநரேன் said...

நிதர்சனம்.
நேரம் நம்மை ஓடவைத்துக்கொண்டிருக்கிறது.

நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

புதியவன் said...

//நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....//

நான் ரசித்த வரிகள்...கவிதை நடையில் கதை அருமை...

Rajan said...

poongothu........

அன்புடன் அருணா said...

sakthi said...
//ippadi than neraya per life eruku mam//

அதை உடைக்கத்தான் இந்தக் கடிகார உடைப்புப் போராட்டம்!!!!

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//கடிகார முட்களுடன் கடுப்புடன் நாமும் ஓடுகிறோம் :(//

கருத்துக்கு நன்றி டொன்'லீ!

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//nalla irukunga...vithiyasamana nitharsanam..//

நன்றி இயற்கை!!!

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
//நல்லா எழுதி இருக்கீங்க.. :)//
Tank U தமிழ்பிரியன்!!!

அன்புடன் அருணா said...

Divya said...
//எழுத்துநடை சூப்பர்ப்:))
கவிநடையில் ஒரு கதை//
Thanx Divya!!!

அன்புடன் அருணா said...

மணிநரேன் said...
//நிதர்சனம்.
நேரம் நம்மை ஓடவைத்துக்கொண்டிருக்கிறது.
நன்றாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.//
வாங்க மணிநேரன்....முதல் வருகை+கருத்துக்கு நன்றி!!!

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....//
//நான் ரசித்த வரிகள்//

ரசித்தமைக்கு நன்றி ஆதவன்..

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
//poongothu........//
கிடைச்சது...நன்றி!!!

Gowripriya said...

நல்லா இருக்கு அருணா மேடம் :)))

அன்புடன் அருணா said...

GOWRI said...
//நல்லா இருக்கு அருணா மேடம் :)))//

நன்றி கௌரி மேடம்....

kankaatchi.blogspot.com said...

வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவனுக்கு கடிகார முட்களின் தொல்லை இருக்காது
தனக்காக என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே கடிகார முட்களின் உதவி தேவை
பிறருக்காக உழைப்பவர்களுக்கும் கடிகார முட்களின் தொல்லை கிடையாது
எனினும் கடிகார முட்கள் ரோஜா மலர் செடியில் உள்ள முட்களைபோன்றது
அறிவுடையவன் மலரைபறித்து மகிழ்வான்
அறிவற்றவன் கண்களுக்கு முட்கள்தான் தெரியும்
அவசரப்பட்டு தன்னை காயப்படுத்தி கொள்ளவும் செய்வான்.
வாழ்க்கை என்பது நாம் அதை எந்த நோக்கத்தில் அணுகுகிறோமோ அந்த வழியில் அது நம்மை பாதிக்கும் .இன்பமோ துன்பமோ எதுவானாலும்.

Vijayasarathi said...

"அத்தனை கடிகாரங்களின் முட்களும் இவள் தலையைப் பார்த்துக் குறிவைத்துப் பாய்ந்து வந்து கொண்டிருந்தன....... "

இந்த நிலை பழகிவிட்டது. எனினும் மகிழ்வுக்கு குரைவில்லை..

ரோகிணிசிவா said...

அரை நாள் லீவை மிச்சப் படுத்திடலாம் OK வா? என்று பதிலுக்குக் காத்திராமல் வைத்தான்...

எங்கும் எதிலும் நேரம்!

நான் நிறைய தடவ உங்கள மாதிரி யோசிச்சு சண்டே வொர்க் பண்ணிட்டு வேலை நாட்களில் விடுப்பு எடுத்து வீட்டின் தனிமையை,என் சுதந்தரத்தை அனுபவித்து இருக்கேன் !

"தாரிஸன் " said...

//நிதானமாக நிலா பார்ப்பார்கள் .....நட்சத்திரம் எண்ணுவார்கள்....மழைத் தண்ணி கையில் பிடித்து விசிறுவார்கள்..இன்னும் நிறைய....//
இதெல்லாம் பண்ணனும்னு எனக்கும் ஆச்யாதான் இருக்கு.... அஆனா..... முடியல.....

Unknown said...

VERY NICE

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா