நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, April 29, 2009

சேகரித்த அன்பு = செலவழித்த அன்பு

மேகம்
உள்வாங்கிச் சேகரித்த நீரும்
செலவழித்த சில்லறை மழையும்

கடல்
கொண்டு சேர்க்கும் அலையும்
திருப்பி எடுத்துப் போகும் அலையும்

பேசிச் சேகரித்த நேரமும்
சண்டையில் தொலைத்த நேரமும்

தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்

சிரித்துச் சேகரித்த நட்புகளும்
அழுது தொலைத்த உறவுகளும்

மனம்
அள்ளிச் சேகரித்த அன்பும்
துள்ளிச் செலவழித்த அன்பும்

கடந்து போன பகல்களும்
கரைந்து போன இரவுகளும்

போல் எப்போதும்
சமன்பாடு சரியாகுவதில்லை!!

ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்......

இது யூத்ஃபுல் விகடனில்.....

50 comments:

Divya said...

வரிகள் அனைத்தும் வெகு அருமை அருணா:))

இரண்டு முறை படித்து ரசித்தேன்!

சூப்பர்ப்!

ம்ம்ம் கலக்குங்க.... கலக்குங்க!!!

கோபிநாத் said...

யதார்த்தமாக இருக்கு கவிதை..;)

ராமலக்ஷ்மி said...

அத்தனை வரிகளும் அருமை அருணா.

Divya said...
// இரண்டு முறை படித்து ரசித்தேன்!//

நானும்:)!

வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

நன்றி திவ்யா...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

நன்றி கோபிநாத்!!!!

புதுகைத் தென்றல் said...

ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்...... //

ஹைலைட்டே இந்த வரிகள் தான்.

பாராட்டிக்கறேன்.

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல வரிகள் அத்தனையும்
பிடித்திருந்தது.
|ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்...... |

இப்படிதானே வாழ்க்கை நம்மிற்கு கற்றுதருகிறது
வெகு யதார்த்தம் அருனா.அருமையா எழுதியிருக்கீங்க

புதியவன் said...

எளிமையான அருமையான கவிதை நல்லா இருக்கு...

Srivats said...

Wow, that was wonderful!!

Masterpiece

கார்க்கி said...

கவித கவித

sakthi said...

alagana kavithai ma

keep it up

Karthik said...

SuPeRb PoEm.. SuPeRb TiTlE.. ! :)

GOWRI said...

நல்லாருக்கு அருணா
அன்பு மட்டுமே சேகரித்ததை விட அதிகம் செலவு பண்ண முடியும், அதுவும் சந்தோஷமாக.. இல்லையா??

reena said...

அழகிய கவிதை அருணா... உணர்ந்து படித்தேன்

Anonymous said...

நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது
ஒரு காத்திரமான கவிதை.

//தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்//

நான் ஒரு வங்கி ஊழியன்.
கனவுகளையும் சேகரிக்க முடியும் என்பது
அர்த்தபூர்வமான வரிகள்.
நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது
ஒரு காத்திரமான கவிதை.

//தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்//

நான் ஒரு வங்கி ஊழியன்.
கனவுகளையும் சேகரிக்க முடியும் என்பது
அர்த்தபூர்வமான வரிகள்.

’டொன்’ லீ said...

தூங்கிச் சேகரித்த கனவுகளும்
தூங்காமல் தொலைத்த இரவுகளும்....

ஆகா....எத்தனை அர்த்தங்கள்...அழகாக சொல்லிவிடுகின்றது இயல்பு நிலையை...

ஒரு பரிந்துரை

கடந்து போன பகல்களும்
கரைந்து போன இரவுகளும்என்று “போல் எப்போதும் சமன்பாடு சரியாகுவதில்லை.” இன்னொரு வரியில் வந்தா முழுமையா இருக்குமோ....?

சும்மா ஒரு பரிந்துரை தான்...கோவிச்சுடாதீங்கோ..:-))))

அன்புடன் அருணா said...

// “போல் எப்போதும் சமன்பாடு சரியாகுவதில்லை.” இன்னொரு வரியில் வந்தா முழுமையா இருக்குமோ....?//

அட ஆமா இப்போதான் முழுமையா இருக்கு!!! நன்றி டோன்'லீ

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//சும்மா ஒரு பரிந்துரை தான்...கோவிச்சுடாதீங்கோ..:-))))//

அட பரிந்துரைக்கெல்லாம் கோவிப்பாங்களா??? மறுபடியும் நன்றி டோன்'லீ!!!

அன்புடன் அருணா said...

ரெண்டு முறை படித்து ரசித்தததற்கு நனறி ராமலக்ஷ்மி!!!

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//இப்படிதானே வாழ்க்கை நம்மிற்கு கற்றுதருகிறது//

உண்மைதான் இப்படித்தானே நாம் கற்றுக் கொள்கிறோம்???

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//ஹைலைட்டே இந்த வரிகள் தான்.
பாராட்டிக்கறேன்.//

நண்றி சொல்லிக்கிறேன் புதுகை!

அன்புடன் அருணா said...

நன்றி புதியவன்....

kartin said...

// இரண்டு முறை படித்து ரசித்தேன்!//

sorry!!

தெளிவான பதிவு...
so
நான் ஒரு தடவை படித்ததுமே ரசிச்சேன்ங்க :))

தமிழ் விரும்பி said...

:)

KParthasarathi said...

tamizhil ezhudha aasai.Teriyavillai.
migavum nerthiyagavum padippadharkku inimaiyaagavum ulladhu.
marubadiyum marubadiyum varuven

அன்புடன் அருணா said...

Karthik said...
//SuPeRb PoEm.. SuPeRb TiTlE.. ! :)//
thanx karthik!!!இந்த ஸ்டைல் நல்லாருக்கே!!!

அன்புடன் அருணா said...

GOWRI said...
//நல்லாருக்கு அருணா
அன்பு மட்டுமே சேகரித்ததை விட அதிகம் செலவு பண்ண முடியும், அதுவும் சந்தோஷமாக.. இல்லையா??//

இதிலே மட்டும்தான் Equation balance ஆகலைன்னாலும் சந்தோஷம்தான்!!!!

அன்புடன் அருணா said...

Srivats said...
//Wow, that was wonderful!!
Masterpiece//

Is that so Srivats???
thanx!!

சந்தனமுல்லை said...

அழகான கவிதை அருணா..நம்பிக்கை இழக்காத மனித மனம்தான் எத்தனை அழகானது!

T.V.Radhakrishnan said...

கலக்குங்க!!!

வழிப்போக்கன் said...

போல் எப்போதும்
சமன்பாடு சரியாகுவதில்லை!!//

இதுன்னா சத்தியமா உண்மை..
அனுபவித்தவன்..

கவித சூப்பர்....
வாழ்த்துகள்..

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//கவித கவித//

வாங்க கார்க்கி...எப்போவாவது வர்றீங்க...அடிக்கடி வாங்க...

அன்புடன் அருணா said...

sakthi said...
//alagana kavithai ma
keep it up//
thanx sakthi!!!

அன்புடன் அருணா said...

reena said...
//அழகிய கவிதை அருணா... உணர்ந்து படித்தேன்//
நன்றி ரீனா!!!

அன்புடன் அருணா said...

skaamaraj said...
//நான் ஒரு வங்கி ஊழியன்.
கனவுகளையும் சேகரிக்க முடியும் என்பது
அர்த்தபூர்வமான வரிகள். //

நன்றி காமராஜ்!!!வங்கி ஊழியன் மட்டுமல்ல அனைவருமே கனவுகளைச் சேகரிக்க முடியும் !!!

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
//அழகான கவிதை அருணா..நம்பிக்கை இழக்காத மனித மனம்தான் எத்தனை அழகானது!//
வாங்க சந்தனமுல்லை...எப்போவாவது வர்றீங்க...அடிக்கடி வாங்க....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

T.V.Radhakrishnan said...
//கலக்குங்க!!!//

நன்றி டி.வி!!!

தமிழ்ப்பறவை said...

சிம்ப்ள் பட் சூப்பர்ப்...
நல்லாருக்கு தலைப்பும், கவிதையும் அருணா மேடம்..

அன்புடன் அருணா said...

kartin said...
// இரண்டு முறை படித்து ரசித்தேன்!//
sorry!!
தெளிவான பதிவு...
so
நான் ஒரு தடவை படித்ததுமே ரசிச்சேன்ங்க :))//

நன்றி kartin!!

அன்புடன் அருணா said...

தமிழ் விரும்பி said...
//:)//

வெறும் ஸ்மைலியா?? :((

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//tamizhil ezhudha aasai.Teriyavillai.
migavum nerthiyagavum padippadharkku inimaiyaagavum ulladhu.
marubadiyum marubadiyum varuven//

மீண்டும் மீண்டும் வாங்க!!! தமிழ் எழுத visit...
www.azhagi.com/

thevanmayam said...

ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்.....///

வாழ்க்கை சுழற்சியை அருமையாக எழுதியுள்ளீர்கள்!!

மண்குதிரை said...

//ஆனாலும்
எப்போதும் போல் மீண்டும்
செலவழிக்கவும் சேகரிக்கவும்
தயாராகினேன்...... //
நல்லா இருக்கு.

கவிக்கிழவன் said...

அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...

கடைக்குட்டி said...

நல்லா இருக்குங்க...

அன்புடன் அருணா said...

நன்றி தமிழ்ப் பறவை.....!

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//வாழ்க்கை சுழற்சியை அருமையாக எழுதியுள்ளீர்கள்!!//

அப்பிடியா? நன்றி thevanmayam!

அன்புடன் அருணா said...

மண்குதிரை said...
//நல்லா இருக்கு.//

நன்றி மண்குதிரை!!!

அன்புடன் அருணா said...

கடைக்குட்டி said...
//நல்லா இருக்குங்க...//
நன்றி கடைக் குட்டி...

அன்புடன் அருணா said...

கவிக்கிழவன் said...
//அருமையான படைப்பு...//

வாங்க கவிக்கிழவன்....நன்றி

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா