நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, March 12, 2008

ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!



திருமணமாகி ஒரு வாரம்தானிருக்கும்..மதுரைக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப் போக வேண்டியதிருந்தது....சரி..மதுரை மீனாக்ஷியையும் போய் பார்த்து என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வந்துரலாம்னு கோவிலுக்குப் போனோம்.
"மாலை வாங்கலாமா?"
"பூசைத் தட்டு வாங்கலாமா?"
என்ற ஒவ்வொரு கேள்விக்கும் பிடிக்குதோ இல்லியோ...நாய்க்குட்டி போல "ம்ம்" "ம்ம்" என்று சொல்ல வேண்டிய அழகான தருணங்கள் (அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)

மாலையும் ,பூசைத் தட்டுமாக பக்திப் பழங்களாக சன்னிதிக்குள் நுழைந்தோம்..கையில் மாலை,பூசைத் தட்டுக்களோடு பூசாரியை நோக்கி கையை நீட்டி தவமிருக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது.கூட்டமோ பயங்கரக் கூட்டம்.பூசாரிக்கு மாலையுடன் 50/- 100/- ரூபாய் நோட்டுக்கள் பிடித்திருந்த தட்டுக்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.

பொறுமையிழந்து அவரும் ஒரு 50/-ரூபாய் நோட்டை எடுக்க நான் சாமி சன்னிதியுலுமா லஞ்சம் எனத் தடுத்தேன்..இப்போ அவர் நாய்க்குட்டியாக வேண்டிய அழகான தருணம்(அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)ஒன்றும் பேசாமல் உள்ளே வைத்து விட்டார்.

இன்னும் அரை மணி நேரம் போனதுதான் மிச்சம்...எங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் மீனாக்ஷியை என்ன ஏதுன்னு விசாரித்து விட்டுப் போய்க் கொண்டே இருந்தார்கள்.ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து ....தொண்டை அடைக்க .."வாங்க போகலாம்" என்று மீனாக்ஷியின் செக்ரட்டரியுடன் கோபித்துக் கொண்டு வெளியே வந்தோம்.....

அவர் என்னை விசித்திரமாகப் பார்த்தார்....பின் "இதை என்ன செய்வது" என்பது போல மாலையையும் பூசைத் தட்டையும் பார்த்தார்.

அமைதியாக ஆனால் அடங்காத கோபத்துடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்....அங்கே ஒரு ஓரத்தில் இருட்டுக்குள் ஒரு விளக்கு கூட இல்லாமல்...ஒரு பூ கூட இல்லாமல், ஒரு பூ கூட இல்லாமல் ஒரு அம்மன் சிலை வருத்தத்துடன் இருந்தது...
அட! பளிச்சென்று ஒரு சூரியன் என் மனதில் உதித்தது...அந்தச் சிலையை நோக்கி நடக்கையில் என் எண்ணம் அவருக்கும் புரிந்தது போலும் .....புன்சிரிப்புடன் அவரும் கூடவே.....

கையால் அம்மன் சிலையைத் தூசி தட்டி, மாலையைப் போட்டு,ஊது பத்தி பொருத்தி ...விளக்கைப் ஏற்றி ....சூடத்தை ஏற்றி அம்மனுக்குக் காட்டி கண்ணில் ஒற்றிக் கொண்ட போது..."ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....

"அட அன்றைக்கு ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!

19 comments:

வினையூக்கி said...

:) அருமை.
தமிழ்மணம் திரட்டியில் அனுபவம் நிகழ்வுகளில் வகைப்படுத்தி இருக்கிறீர்கள். நடந்த நிகழ்வு என்றால் பாராட்டுக்கள்.

TBCD said...

நல்ல சிந்தனை...

புரோக்கர்களே தேவை இல்லை..

கடவுளுக்கு பக்தர்களுக்கும் இடையில்... :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கையால் அம்மன் சிலையைத் தூசி தட்டி, மாலையைப் போட்டு,ஊது பத்தி பொருத்தி ...விளக்கைப் ஏற்றி ....சூடத்தை ஏற்றி அம்மனுக்குக் காட்டி கண்ணில் ஒற்றிக் கொண்ட போது..."ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....
நன்று செய்தீர்.
பாராட்டுக்கள்.

Dreamzz said...

அழகா எழுதி இருக்கீங்க...
இப்படி ஒரு நாள்.... ஆன லிஸ்ட் இன்னும் நீளும் போல..
சூப்பரு :)

Aruna said...

வினையூக்கி said...
//:) அருமை.
தமிழ்மணம் திரட்டியில் அனுபவம் நிகழ்வுகளில் வகைப்படுத்தி இருக்கிறீர்கள். நடந்த நிகழ்வு என்றால் பாராட்டுக்கள்.//

Aruna said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வினையூக்கி!
நிஜம்மாக நடந்ததுதான் வினையூக்கி!


TBCD said...
//நல்ல சிந்தனை...

புரோக்கர்களே தேவை இல்லை..

கடவுளுக்கு பக்தர்களுக்கும் இடையில்... :)//

Aruna said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி TBCD!
கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் மட்டுமா?
இன்னும் நிறைய இடங்களில் புரோக்கர்களே தேவையில்லை!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//"ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....
நன்று செய்தீர்.
பாராட்டுக்கள்.//

Aruna said...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யோகன் பாரிஸ்!

Dreamzz said...
அழகா எழுதி இருக்கீங்க...
இப்படி ஒரு நாள்........ ஆன லிஸ்ட் இன்னும் நீளும் போல..
சூப்பரு :)

Aruna said...
நன்றி Dreamzz!!
இன்னும் கொஞ்ச நாள் ஓடும் இந்தத் தொடர்னு நினைக்கிறேன் dreamzz!!

அன்புடன் அருணா

கோபிநாத் said...

அழகாக எழுதியிருக்கிங்க..

\\கையால் அம்மன் சிலையைத் தூசி தட்டி, மாலையைப் போட்டு,ஊது பத்தி பொருத்தி ...விளக்கைப் ஏற்றி ....சூடத்தை ஏற்றி அம்மனுக்குக் காட்டி கண்ணில் ஒற்றிக் கொண்ட போது..."ஓவென்று அலறிய மனம் சட்டென்று நிசப்தமாகி....கண் ஓரம் துளிர்க்க ....

"அட அன்றைக்கு ஒருநாள் கோவில் பூசாரியாகிட்டோமில்லே!!\\

சூப்பர்...;))

ரசிகன் said...

//ஒவ்வொரு கேள்விக்கும் பிடிக்குதோ இல்லியோ...நாய்க்குட்டி போல "ம்ம்" "ம்ம்" என்று சொல்ல வேண்டிய அழகான தருணங்கள் (அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)
//

ஹா..ஹா.. இது கலக்கலு..:)))

ரசிகன் said...

//இப்போ அவர் நாய்க்குட்டியாக வேண்டிய அழகான தருணம்(அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)ஒ//

இது அவருக்கு ஆப்பு:)))))))))))

ரசிகன் said...

//அமைதியாக ஆனால் அடங்காத கோபத்துடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்....அங்கே ஒரு ஓரத்தில் இருட்டுக்குள் ஒரு விளக்கு கூட இல்லாமல்...ஒரு பூ கூட இல்லாமல், ஒரு பூ கூட இல்லாமல் ஒரு அம்மன் சிலை வருத்தத்துடன் இருந்தது...
அட! பளிச்சென்று ஒரு சூரியன் என் மனதில் உதித்தது...அந்தச் சிலையை நோக்கி நடக்கையில் என் எண்ணம் அவருக்கும் புரிந்தது போலும் .....புன்சிரிப்புடன் அவரும் கூடவே.....//

டச்சிங்.. நல்ல சிந்தனை..:)
//என் எண்ணம் அவருக்கும் புரிந்தது //
இது சூப்பர்..

அருணா...கலக்கல் ரைட்டராகிட்டேப்பா..:)

siva gnanamji(#18100882083107547329) said...

.....மில்லே எல்லாமே நல்லாயிருக்கில்லே....
தொடருங்கள்;
வாழ்த்துகள்1

வினையூக்கி said...

[நிஜம்மாக நடந்ததுதான் வினையூக்கி ]

பாராட்டுக்களைப் பதிவு செய்து கொள்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

"இம்ப்ரெஸ் பண்ணத்தாங்க.."

ஹா..ஹா...

கலக்கல்தான்..

Aruna said...

கோபிநாத் said...
அழகாக எழுதியிருக்கிங்க..
சூப்பர்...;))

Aruna said....
நன்றி கோபிநாத்!



ரசிகன் said...
//அமைதியாக ஆனால் அடங்காத கோபத்துடன் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்....அங்கே ஒரு ஓரத்தில் இருட்டுக்குள் ஒரு விளக்கு கூட இல்லாமல்...ஒரு பூ கூட இல்லாமல், ஒரு பூ கூட இல்லாமல் ஒரு அம்மன் சிலை வருத்தத்துடன் இருந்தது...
அட! பளிச்சென்று ஒரு சூரியன் என் மனதில் உதித்தது...அந்தச் சிலையை நோக்கி நடக்கையில் என் எண்ணம் அவருக்கும் புரிந்தது போலும் .....புன்சிரிப்புடன் அவரும் கூடவே.....//

டச்சிங்.. நல்ல சிந்தனை..:)
//என் எண்ணம் அவருக்கும் புரிந்தது //
இது சூப்பர்..
அருணா...கலக்கல் ரைட்டராகிட்டேப்பா..:)

Aruna said....
அப்பிடியா ரசிகன்???நீங்க சொன்னா சரிதான்! இல்லைன்னு சொல்ல முடியுமா??

siva gnanamji(#18100882083107547329) said...
.....மில்லே எல்லாமே நல்லாயிருக்கில்லே....
தொடருங்கள்;
வாழ்த்துகள்1
வினையூக்கி said...
[நிஜம்மாக நடந்ததுதான் வினையூக்கி ]
பாராட்டுக்களைப் பதிவு செய்து கொள்கிறேன்.

Aruna said....
வாழ்த்துக்களுக்கு நன்றி வினையூக்கி,siva gnanamji

பாச மலர் said...
"இம்ப்ரெஸ் பண்ணத்தாங்க.."
ஹா..ஹா...
கலக்கல்தான்..

Aruna said....
நல்லாருக்கா பாசமலர்??
நன்றி!!
அன்புடன் அருணா

sri said...

Romba nalla erukku..

Ammanukku neenga panna pujai romba pidichirukkum.

sri said...

Romba nalla erukku..

Ammanukku neenga panna pujai romba pidichirukkum.

ஸ்ரீ said...

:) நல்ல காரியம் பண்ணீங்க

மங்களூர் சிவா said...

கலக்கல்!

வாழ்த்துக்கள்.

/
ஒவ்வொரு கேள்விக்கும் பிடிக்குதோ இல்லியோ...நாய்க்குட்டி போல "ம்ம்" "ம்ம்" என்று சொல்ல வேண்டிய அழகான தருணங்கள் (அட இம்ப்ரெஸ் பண்ணத் தாங்க!!)
/

பாயிண்ட் நோட்டட்

Unknown said...

I like your approach, this is what I am expecting each one of everybody. If everybody exists the poojari will also be exited??????? How is it?

அன்புடன் அருணா said...

Thank you Srinivasan for ur first visit and that nice comment..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா