நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, January 29, 2008

"என்னடா செல்லம்?"

நான் சுக்கு நூறாய் உடைந்தேன்.என் கண்ணிலிருந்து கண்ணீர் என்னையறியாமலே வழிந்தது..நான் உனக்காக அழுதேனா?எனக்காக அழுதேனா?எனக்கே புரியவில்லை.நீ சொன்னதெல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் மின்னலடித்தது..மனது திடீரென்று "கனவிலிருந்து விழித்துக் கொள்ள மாட்டேனா" என்று அநியாயத்துக்கு ஆசைப் பட்டது.
எனக்கு உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....என் மேலேயேதான் கோபம் கோபமாக வந்தது...அவ்வளவுதான் வாழ்ந்தது போதும் என்று நினைத்தேன்.தொண்டை அடைத்துக் கொண்டது...கால் போன போக்கில் வேக வேகமாக நடந்தேன்.மழைக்காக வானம் கருப்புக் கொடி காட்டியது....அந்த முதல் மழைத் துளி என் கைக்ளில் பட்டுத் தெறித்தது.எப்போதும் மழைத் துளி என்னில் கொண்டு வரும் சந்தோஷச் சில்லிப்பு வரவேயில்லை.மண்வாசனை என் மூளைக்குள் பதிய மறுத்தது...வழியெங்கும் உள்ள பூக்களையெல்லாம் கூட மனதிற்குள் சீ... போ...என்று கோபித்துக் கொண்டேன்..கால்கள் தன்னையறியாமல் அந்தப் புல்வெளியில் கொண்டு சேர்த்திருந்தது...வேக வேகமாக நடந்ததில் அந்த மழையிலும் கூட வேர்த்திருந்தது."இனி நான் உன்னிடம் பேசப் போவதில்லை...இன்று மட்டுமில்லை வாழ்நாள் முழுவதும்தான் உன்னிடம் பேசப் போவதில்லை...."இன்றோடு வாழ்க்கையை முடித்துக் கொண்டால் என்ன........ என்று மனதில் நினைத்தவாறு ஆயாசத்துடன் புல்தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினேன்..கண் ஓரங்களில் எனக்கென்ன என்று கண்ணீர் கோடு போட்டது.என்மேல் நானே இரக்கப் பட்டேன்.இனி கவிதாவைக் கண்டால் யாரோ எவளோ என்பது போல கண்டுக்காமல் இருக்க வேண்டியதுதான் என்று வைராக்கியதுடன் அழுகையை நிறுத்தினேன்.....அருகில் எதோ சலனம்...கண்திறக்காமல் இருந்தேன்.முன் நெற்றியின் முடிக் கற்றையை யாரோ ஒதுக்கி விடுவது போல ஒரு உணர்வு...நம்பிக்கையில்லாமல் கண்திறந்தேன்...ஐயோ...."கவிதா" வாழ்நாள் முழுவதும் பேசவே மாட்டேன் என்ற அத்தனை வைராக்கியமும் தூள் தூளாகி "என்னடா செல்லம்?" என்று பளீரென்று சிரித்து 178-வது முறையாக மீண்டும் வாழும் ஆசையுடன் எழுந்து உட்கார்ந்தேன்....

10 comments:

நிவிஷா..... said...

nalla irukku... unga short story kinda writing :)

நட்போடு
நிவிஷா

Dreamzz said...

நான் தாம் பர்ஸ்ட்டா?

Dreamzz said...

//உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....//
ஆஹா ஆஹா! அசத்தல் கட்டுரை :)
கலக்கறீங்க... என்ன சோகமா இருக்கு..

Aruna said...

நன்றி நிவிஷா!!!
அன்புடன் அருணா

Dreamzz said...
நான் தாம் பர்ஸ்ட்டா?

இல்லை Dreamz...உங்களைவிட வேக கமென்டாளர்கள் பெருகி விட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன் அருணா

கோபிநாத் said...

\\வாழ்நாள் முழுவதும் பேசவே மாட்டேன் என்ற அத்தனை வைராக்கியமும் தூள் தூளாகி "என்னடா செல்லம்?" என்று பளீரென்று சிரித்து 178-வது முறையாக மீண்டும் வாழும் ஆசையுடன் எழுந்து உட்கார்ந்தேன்....\\\

ஆஹா..இயல்பாக முடிச்சிட்டிங்க...நன்றாக இருக்கு ;)

சாம் தாத்தா said...

//இனி நான் உன்னிடம் பேசப் போவதில்லை...//

எதைச் செய்யவே கூடாது என்று நினைக்கிறோமோ,
அதைத்தான் மனம் ரொம்பவும் விரும்மிச் செய்ய நினைக்கும்.

நீல நிறத்தை நினைக்கவே கூடாதென்று நினைத்தோமானால், முதலில் நீல நிறம் மனக்கண்ணில் வந்துவிட்டுத்தான், பிறகு அதைத் தவிற்போம்.

ஒரு வகையில் தோற்றுப் போய் விடுவோம்.

இந்தக் கதை நாயகன் கூட அப்படித்தானென்று நினைக்கிறேன். (அந்தப் பெண் கவிதா நிச்சயமாய் அவனுடைய காதலியாய்த்தான் இருக்கணும். சரியா..?)

இந்த மனசு இருக்கே அது ரொம்பப் பொல்லாதது அருணா.

(பெருசுக்கு இதெல்லாம் வேற தெரியுமான்னு யாரும் புலம்ப வேணாம்.)

எனக்குப் பிடித்த வரிகள்...

//எனக்கு உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....என் மேலேயேதான் கோபம் கோபமாக வந்தது//

//முன் நெற்றியின் முடிக் கற்றையை யாரோ ஒதுக்கி விடுவது போல ஒரு உணர்வு...//

ஹ்ம்.....

KARTHIK said...

//எனக்கு உன் மேல் கோபம் வரவில்லை...கோபத்தைதான் உன்னைப் பார்த்த நாளிலே தொலைத்து விட்டேனே....என் மேலேயேதான் கோபம் கோபமாக வந்தது//

நல்லாருக்கு.

Aruna said...

சாம் தாத்தா said...
//இந்த மனசு இருக்கே அது ரொம்பப் பொல்லாதது அருணா.//

தாத்தா என்ன் இவ்வளவு லேட்டா வர்றீங்க?மனசு பொல்லாததா??
அப்பிடியா தாத்தா??

//முன் நெற்றியின் முடிக் கற்றையை யாரோ ஒதுக்கி விடுவது போல ஒரு உணர்வு...//

ஹ்ம்.....

என்ன தாத்தா மலரும் நினைவுகளா??
அன்புடன் அருணா

பாச மலர் / Paasa Malar said...

பிரசவ வைராக்கியம் போலத்தான் இதுவும்..இயல்னான உணர்வுகளின் பிரதிபலிப்பு..

N Suresh said...

புரிந்துகொள்ள முடியாத
விடைதெரியாத
கேள்விகள்
நம்மை தொடர்ந்து
வாழவைத்துக்கொண்டே
மகிழ்கிறது!

பாசமுடன்
என் சுரேஷ்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா