நீ பார்க்கும்போது
நீ சிரிக்கும்போது
நீ கோபிக்கும்போது
என்று தினம் ஒன்றாகச் சேகரித்த இறகுகள்
படக்கென்று விரிந்து காதல் சிறகாயிற்று...
பறப்பது இவ்வளவு இன்பமா?
மேலும்,மேலும் உயர உயரப் பறந்தேன்..
மேகம் தொடும் தாகத்துடன் பறந்தேன்..
நீயே எறிந்த கற்களினால்
என் சிறகின் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தன..
இறகுகளின் உதிர்தலால் உன்னைத் தொலைத்தேன்...
உன்னைத் தொலைத்ததனால் நானும் தொலைந்தேன்..
என்ன செய்வதடி?இங்கே
தொலைத்ததும் நானே.!!!...
தொலைந்ததும் நானே..!!!..
10 comments:
வாவ் வாவ்! அருமை..
சோகமான கவிதை என்றாலும், பொருள் நடை அழகு.. எளிமை!
சிவா பதிவில் இருந்து இங்கு வந்தேன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!
குசும்பன் said...சிவா பதிவில் இருந்து இங்கு வந்தேன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...
வருகைக்கு நன்றி பின்னூட்டத்திற்கும் நன்றி..
அருணா
அருமையான வரிகள் அருணா..உங்கள் மற்ற சில பதிவுகளும் படித்தேன்...நன்றாக எழுதுகிறீர்கள்..
Dreamzz said...
///வாவ் வாவ்! அருமை.....///
அடிக்கடி முதல் கமென்ட் எழுதுறீங்க!!!!! சந்தோஷமாயிருக்கு!! ரொம்ப நன்றி!!!!!!
அருணா
ம்ம்ம்.... மிகவும் சரியாகச் சொன்னால்,
இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கடந்த கால நினைவுகள்...
மெல்ல வருடும் மயிலிறகாகவோ...,
இதயத்தை ஊடுருவும் வாள் போலவோ...
வந்து போயிருக்கும்.
எனக்கும் வந்தது...
வாளாக...
வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை நினைவுகூறும் விதத்தில் எழுதுவதில்தான் ஒரு எழுத்தாளரின் வெற்றியே உள்ளது.
வென்றுள்ளீர்கள் அருணா.
அன்புடன்
SAM
//வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை நினைவுகூறும் விதத்தில் எழுதுவதில்தான் ஒரு எழுத்தாளரின் வெற்றியே உள்ளது.
வென்றுள்ளீர்கள் அருணா.//
நன்றி,
அப்பிடியா?? இந்த வெற்றி எனக்கு இப்போதைக்கு ரொம்பத் தேவை!மீண்டும் நன்றி!
அருணா
யாரும் தொலைவதும் இல்லை யாரும் தொலைப்பதும் இல்லை
எல்லாம் அவரவர் மனதை பொறுத்தது. எந்த விசயத்திற்கும்
இரண்டு பக்கம் உண்டு. நீங்கள் மறு பக்கத்தைப் பாருங்கள்.
//உன்னைத் தொலைத்ததனால் நானும் தொலைந்தேன்..
என்ன செய்வதடி?இங்கே
தொலைத்ததும் நானே.!!!...
தொலைந்ததும் நானே..!!!..//
:))) அருமையா இருக்கு இந்த வரிகள் அருணா :))) அழகு...
நவீன் ப்ரகாஷ் said...
//உன்னைத் தொலைத்ததனால் நானும் தொலைந்தேன்..
என்ன செய்வதடி?இங்கே
தொலைத்ததும் நானே.!!!...
தொலைந்ததும் நானே..!!!..//
:))) அருமையா இருக்கு இந்த வரிகள் அருணா :))) அழகு...
ஐயோ....உங்கள் கிட்ட இருந்து கவிதைக்கு பாராட்டா??
நீங்கள் கவிதையிலே குருவாச்சே!!!ரொம்ப சந்தோஷமாயிருக்கிறது!!!
அன்புடன் அருணா
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா