மற்றுமொரு 5 நிமிடக் காதல்
முதல் நிமிடம்
ஊர்,வயது, ஆணா பெண்ணா?
இரண்டாவது நிமிடம்
நீ என் சினேகிதியாகிறயா?
மூன்றாவது நிமிடம்
புகைப்படம் அனுப்பேன்???
நான்காவது நிமிடம்.....
நான் உன்னைக் காதலிக்கிறேன்...
ஐந்தாவது நிமிடம்
உன் மொபைல் நம்பர் கொடேன்???
ஆறாவது நிமிடத்திலிருந்து
பாவம் அந்த மொபைல்
தடங்கலில்லாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது....
ஆறாவது நாளில்
"என்னப்பா போன் பண்ணவேயில்லை"....
"என்னன்னே தெரியலை நெட் வொர்க் பிரச்சினை"
மின்னஞ்சல் கூட இல்லை...
"என்னன்னே தெரியலை நெட்
கனெக்ட் ஆக மாட்டேங்குது"
அவளுக்கெப்படித் தெரியும்?
மற்றுமொரு முதல் நிமிடத்தில்....
ஊர்,வயது, ஆணா பெண்ணா? என்று
மற்றுமொரு 5 நிமிடக் காதல் உருவாகி விட்டதென்று....
10 comments:
ஹா ஹா! யதார்த்தம்!
ரசிக்கும் படி இருந்தது!
நிஜத்தை அறியாதவர்கள் காதலை அசிங்கப்படுத்தும் அவலத்தை சில வரிகளில் சொல்லியிருப்பது அருமை!
காதல்!
பெயர், வயது, அழகு, மொழி, தாலி, பொட்டு, சிந்தூரம், பிள்ளைகள், ஆரோக்யம், சதை, துயரம், கதை இவையெல்லாம் தாண்டின ஒரு மனம் சார்ந்த இனிமையான நல்லுணர்விதை இப்படி இணையத்தில் கொச்சைப்படுத்துகிறார்களே என்ற கோபம் யாருக்குத்தான் வராது!
"நான் இறக்கப் போகிறேன்"
கவலையின் உச்சத்தில்
நான் இறந்துவிடுகிறேன்
மீண்டும் புதியவனாய்
பிறந்திட!
இப்படி என்னில்
எத்தனையெத்தனை
அவதாரங்கள்!
ஒரு கதவு இறந்ததும்
பல்லாயிரம்
பொற்கதவுகள் மங்களமாய்
திறக்கப்படுகின்றன!
இறந்துகொண்டேயிருக்கிறேன்
மீண்டும்
பிறந்துகொண்டேயிருக்க!
இன்று அஸ்தமிக்கிறேன்
நாளை உதயமாகிட!
இறப்பால்
பூமியில் ஆங்காங்கே
எழும் கவலை சத்தமெல்லாம்
அடங்கிவிடுகிறது
பிறப்பால் பூமியில் ஆர்ப்பரிப்பு
கேட்ட மகிழ்ச்சியில்!
வலைப்பூவின் தலைப்பு
மாற்ற வேண்டாம்
அது மீண்டும் ஒரு புதியபெயரில்
உதயமாகிட மகிழ்ச்சியுடன்
துடிக்கும் காலம் வரை
வாழ்த்துக்களுடன்
என் சுரேஷ்
Dreamzz said...
//ஹா ஹா! யதார்த்தம்!ரசிக்கும் படி இருந்தது!//
aruna said
அப்பாடா மோதிரக் கையால் பாராட்டா? நன்றி...நன்றி!!!!!
அருணா
//என் சுரேஷ்... said...
ஒரு மனம் சார்ந்த இனிமையான நல்லுணர்விதை இப்படி இணையத்தில் கொச்சைப்படுத்துகிறார்களே என்ற கோபம் யாருக்குத்தான் வராது!
//
aruna said:
அதே கோபம்தாங்க.....வேறென்ன?
என் சுரேஷ்... said...
இறந்துகொண்டேயிருக்கிறேன்
மீண்டும்
பிறந்துகொண்டேயிருக்க!
aruna said,
அதுவேதான் என் ஆசையும்...நன்றி
ஹா..ஹா.. ரொம்ப
நல்லாயிருக்குங்க.. இப்படியெல்லாம் நடக்குதா...செம காமெடிதான் போங்க...
//
ஆனா./.
இதை ”அவனுக்கெப்படி தெரியும்”ன்னு மாற்றிட்டா ரொம்ப பொருத்தமாவே இருக்குமுங்கோ...:)))))))
ரசிகன் said...
//ஹா..ஹா.. ரொம்ப
நல்லாயிருக்குங்க.. இப்படியெல்லாம் நடக்குதா...செம காமெடிதான் போங்க...
//
உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விஷயம் இது.சும்மா ஒண்ணும் தெரியாத மாதிரி படம் காட்டதேப்பா....
அருணா
ம்.ம்..அது ஒரு கனாக் காலம். ஏங்க அதையெல்லாம் நியாபகப்படுத்துறீங்க :)
நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..
நல்லாருக்கு...
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா