நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, September 1, 2011

தனிமை போன்ற அற்புதமும்,கொடுமையும்!

தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை.கசகசவென்று கூட்டங்களிடையே வேலை நேரம் முழுவதையும் கழிப்பவர்களுக்கு எப்போதோ கிடைக்கும் தனிமை ஒரு வரம்.தனிமையிலேயே வாழ்நாள் முழுவதும் கழிக்கும் பக்கத்து வீட்டு ஸ்டீபன் தாத்தாவிற்குக் கூட்டம் ஒரு வரமாகவும் தனிமை ஒரு சாபமாகவும் தெரிவதில் வியப்பொன்றுமில்லை.
                          
                           ஸ்டீபன் தாத்தாவை சின்னவயதிலிருந்து பார்த்திருக்கிறேன்.ஒரு ஈசிச் சேரில் கைகளிரண்டையும் தலைக்கும் மேல் தூக்கிக் கொண்டு போற வர்றவங்களைப் பார்த்துக் கொண்டே ரொம்ப வருடங்களைக் கடத்திவிட்டார்.அந்தக் காலத்து M.A.
                      
                                                    எப்போதும் ஆங்கில நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.காலையில் பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் அந்தவழியாகக் கடக்கும் போது மரத்திலிருந்து உதிர்ந்த நெல்லிக்காய்களை உப்பில் ஊறப்போட்டுக் கிண்ணத்தில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பார்.இது அந்தக்க்காலத்தில் நடந்தது....அப்போலாம் வாங்க மறுக்கும் குழந்தைகளிடம் "தாத்தா பிரியமாத் தர்றாரில்லே வாங்கிக்கோ"என்று சொல்லும் அம்மாக்கள்தான் அதிகம். இப்போலாம் மாதிரி "யார் எது கொடுத்தாலும் வாங்கித் தின்னக் கூடாது"என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எதுவுமில்லை அப்போது.
                  
                                நான் அவரைக் கடக்கும் போதெல்லாம் தாத்தாவுக்கு ஏன் யாருமேயில்லை என நினைப்பதுண்டு.அப்புறம் பள்ளியிறுதி நாட்களின் போது வாழ்வியல் புரிந்த போதும் தாத்தா யாருடனாவது போய்ச் சேர்ந்து இருக்கலாமே என நினைப்பதுண்டு.
                         
                                     எப்பவாது சிலநேரம் ஸ்டீபன் தாத்தா பக்கத்தில் உட்கார்ந்து கதைபேசுவதைக் கேட்பதுண்டு.அப்பப்போ புதுசு புதுசாய் வந்த கார்களைப்பற்றிப் பேசுவார்.கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டார்.அந்தக்காலப் பொண்ணுங்களைப் பற்றியும் அவங்க ஆத்துக்குத் தண்ணீரெடுக்கப் போகும் அழகைப் பற்றியும் வர்ணிப்பார்.
               
                                  அப்புறம் மேல்படிப்பு, வேலை என்று ஊரெல்லாம் சுற்றும் போதும் அம்மாவிடம் ஸ்டீபன் தாத்தா பற்றி விசாரிப்பதுண்டு.அம்மாதான் சொல்வாள் பேச்சுத் துணைக்குக் கூட யாருமில்லாமல் தனியே அல்லாடிக் கொண்டிருப்பதாக.தாத்தாவை நம்ம வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுவோமாம்மா என்று சின்ன வயதில் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அதையே இப்போதும் நினைத்தேன்.இருந்தாலும் இந்த உலக நடைமுறைச் சிக்கல்களையும் நினைத்துக் கொண்டேன்.
                     
                                      அப்புறமாய் சிங்கப்பூரிலிருந்து ஒரு வார விடுப்பில் வந்த போது ஒருநாள் ஸ்டீபன் தாத்தாவைப் பார்க்கப் போன போது ரொம்ப மெலிந்து போயிருந்தார்.கையைப் பிடித்துக் கொண்டு சூடான வெது வெதுப்பான கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.ஒன்றுமே பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
      
                          "என் கூட சிங்கப்பூர் வந்துர்றீங்களா தாத்தா ?" என்றதற்கு
          "இப்போலாம் ஒத்தையிலே பயமாயிருக்குடா....யாராவது கூடவேயிருக்கணும்னு தோணுதுடா...யார்கூடவாது பேசிக் கொண்டேயிருக்கணும் போலிருக்குடா..நீ கூப்பிடறப்போ உடனே வரணும்னுதான் இருக்கு....ஹூம்...அதெல்லாம் முடியாதுடா."என்றார்.

அதுக்கப்புறம் ஒரே ஸ்டீபன் தாத்தா நினைப்புதான்.என்ன செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்ததுலே திடீர்னு ஒரு பல்ப்!
                               
ம்ம்ம் இப்போலாம் ஸ்டீபன் தாத்தா ஒரே பிஸி.ஒரே சந்தோஷம்.... எப்பவும் யாருடனாவது அரட்டையில்தான்.

என்ன செஞ்சேனா??? ஜஸ்ட் ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்து ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன் அவ்வ்ளோதான்.....தாத்தா லைஃப் ஸ்டைலே மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!!

33 comments:

ஷர்புதீன் said...

:-)

காற்றில் எந்தன் கீதம் said...

தாத்தா சார்பாக உங்களுக்கு ஒரு பூங்கொத்து மட்டும் கொடுத்த பத்தாது டீச்சர் பிருந்தாவனம் அளவுக்கு ஒரு பூந்தோட்டம் தரலாம்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

Ramani said...

அடேயப்பா ஒரு ஹைக்கூ கவிதையைப்போல
கடைசி சிலவரிகளில் ஒரு மிகப் பெரிய
திருப்பத்தை ஏற்படுத்திவிட்டீர்களே
தரமான ரசிக்கத் தக்க பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 2

K.s.s.Rajh said...

தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை.//

அழகான வரிகள்..
நல்ல ஒரு அனுபவப்பகிர்வு.அதிலும் பதிவின் கடைசியில் மனதை நெருடவைத்துள்ளீர்கள்.

இன்று என் கடையில் (பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலைநாட்கள்
http://cricketnanparkal.blogspot.com/2011/09/6.html

KParthasarathi said...

உண்மைதான்.இந்த lappy,ப்ளாக் இரண்டுமே மணி போவது தெரியாமல் இருக்க உதவுகிறது.தனிமையை தேடி செல்லவேண்டி இருக்கிறது தற்காலத்தில்

kathir said...

ஆஹா!

ரிஷபன் said...

என்ன செஞ்சேனா??? ஜஸ்ட் ஒரு லாப்டாப் வாங்கிக் கொடுத்து ஒரு ஃபேஸ் புக் அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்தேன் அவ்வ்ளோதான்.....தாத்தா லைஃப் ஸ்டைலே மாறிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!!

அடடா.. தாத்தாவையும் மாட்டி விட்டாச்சா..

காமராஜ் said...

தாத்தாவின் ஓவியம் வரைந்து தந்துவிட்டீர்கள்.
லேப்டாப் நிஜமா ?
ஆச்சர்யமா இருக்கே.

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/தாத்தாவின் ஓவியம் வரைந்து தந்துவிட்டீர்கள்.
லேப்டாப் நிஜமா ?
ஆச்சர்யமா இருக்கே./
அட!நீங்க வேற! கதைன்னு லேபல் பார்க்கலியா???

அமைதிச்சாரல் said...

உங்களுக்கு பிருந்தாவனத்தையே கொடுத்துடலாம் அருணா மேடம்.

வெங்கட் நாகராஜ் said...

அட முகப்புத்தகத்தில் தாத்தா.... இது கூட நல்லாத் தான் இருக்கு! நிஜமாகவே இது இப்போ நடந்து கொண்டு தான் இருக்கிறது நிறைய வீடுகளில்... :))

நல்ல கதை சகோ.

இரசிகை said...

:)

ஹுஸைனம்மா said...

பலருக்கு சாபமா இருப்பது, சிலருக்கு வரம்!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ஹாஹாஹா சூப்பர்.. அருணா.. நல்ல வேலை செய்தீர்கள். இன்று நிறைய பேருக்கு ஃபேஸ்புக்கும் ப்லாகும்தான் புகலிடம்..

புலவர் சா இராமாநுசம் said...

அன்புள்ள அருணா!

என்னையேப் படம் பிடித்துக்
காட்டியுள்ள இப் பதிவுக்கு முதற்கண் ந்ன்றி!நன்றி!

தனிமை போன்ற அற்புதம் உலகில் வேறு எதுவுமில்லை.அதே நேரம் அதைப் போன்ற கொடுமையும் வேறொன்றுமில்லை
இதில் இரண்டாவது கருத்துக்கு
முற்றிலும் உரியவனாக இருந்தவன் நான்
நீங்கள் தாத்தாவுக்குச் செய்த உதவியை
என் இளைய மகள் இவ் வலைப் பூவைத்
தொடங்கித் தந்தாள். தற்போது முதல் கருத்துக்கு
முழுவதும் உரியவனாகி விட்டேன்
நன்றி! நன்றி!

முடித்தால் என் வலை வந்து பாருங்கள்!

புலவர் சா இராமாநுசம்

அன்புடன் அருணா said...

ஷர்புதீன் said...
/ :-)/
avvlothana?
காற்றில் எந்தன் கீதம்
"என் ராஜபாட்டை"- ராஜா
Ramani anaivarukkum nanri!

அன்புடன் அருணா said...

ரிஷபன் said...
/அடடா.. தாத்தாவையும் மாட்டி விட்டாச்சா../
நிறைய தாத்தாவுக்கு இதான் இப்போ பொழுதுபோக்கு!
ப்ருந்தாவனத்துக்கு நன்றி அமைதிச்சாரல் !
வெங்கட் நாகராஜ்
K.s.s.Rajh
KParthasarathi
kathir அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

இரசிகை
ஹுஸைனம்மா
தேனம்மை லெக்ஷ்மணன் அனைவர்க்கும் நன்றி

siva said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

siva said...

பிடிங்க பூங்கொத்தை.
ஸ்டீபென் தாத்தா உங்கfacebook அச்கோன்ட் ப்ளீஸ் ..

Mahi_Granny said...

பிள்ளைகளின் ஸ்கூல், மியூசிக் swimmimg pickup drop என எல்லோரும் எப்போதும் ஓடிகொண்டிருக்கும் போது லேப்டாப் வரம் தான் . பிடியுங்க பூங்கொத்தை

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

angelin said...

இந்தாங்க பிடிங்க பூங்கொத்தை.அருமை.

ஷர்புதீன் said...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் மரியாதைக்குரிய ஆசிரியருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

புதுகை.அப்துல்லா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா.

புதுகைத் தென்றல் said...

happy birthday aruna

அன்புடன் அருணா said...

புலவர் சா இராமாநுசம் said...

அன்புள்ள அருணா!
/என்னையேப் படம் பிடித்துக்
காட்டியுள்ள இப் பதிவுக்கு முதற்கண் ந்ன்றி!நன்றி!/
அப்பிடியா சார்?நன்றி!
/முடித்தால் என் வலை வந்து பாருங்கள்!.
வந்துட்டேன் சார்!

அன்புடன் அருணா said...

நன்றி siva !
நன்றி Mahi_Granny !

அன்புடன் அருணா said...

மாய உலகம் said...
/ இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்/
அட!அறிமுகத்துக்கு நாந்தாங்க நன்றி சொல்லணும் !
நன்றி angelin!

அன்புடன் அருணா said...

ஷர்புதீன்
புதுகை.அப்துல்லா
புதுகைத் தென்றல் Thanx all of you!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Aniruthabrammarayar said...

ஆஹா ! ! தனிமையை உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளிர்கள் .
வலைக்குள் மூழ்குவது- புகலிடமா ....? பலிகடவா...?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா