நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, September 21, 2011

இன்று சும்மாயிருக்கலாமெனத் திட்டம்!

இன்றைக்குச் சும்மாயிருக்கலாம்
என்று ஒரு சிந்தனை
வானொலிக்கும், தொலைபேசிக்கும்
தொல்லைக் காட்சிக்கும்
சும்மாயிருக்கக் கட்டளை.....

யாருமில்லாத
வீட்டினுள் வெயில்
ஜன்னல் வழியாக நகர்ந்து கொண்டே
நேர நகர்தலை உணர்த்தியது....

கொஞ்ச நேரம்
அரிசி தூக்கி நகரும்
எறும்பையும்
சுவரில் பூச்சி பிடிக்கும்
பல்லியையும்
ஜன்னல் திட்டில் அரிசி கொத்தும்
குருவியையும்
பார்த்துக் கொண்டிருந்தாயிற்று...

பூட்டிய கதவும்
அறையின் சுவர்களும்
ஜன்னலின் இடுக்குகளும்
என் சுவாசத்தைக் கடத்தாமல்
எனக்கு மூச்சு முட்டியது

யாராவது யாரையாவது கைபேசியில்
எதெதெற்கோ புதுப் புது பாடலால்
அழைத்துக்கொண்டே யிருந்தார்கள்...

எப்போதும் கூடவேயிருக்கும்
எதுவோ ஒன்று உலகத்தைத்
துண்டித்து விடாமல் என்னுடன்
இணைத்துக் கொண்டேயிருக்கிறது....

எப்படி ஒன்றும் செய்யாமல்
சும்மாயிருக்கத் தொடங்குவதென
ஒன்றும் செய்யாமல் இருக்கும்
முயற்சியில் மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டேயிருந்தேன்...

23 comments:

suryajeeva said...

உலகிலேயே மிகவும் கடினமான வேலை சும்மா இருப்பது...

கே. பி. ஜனா... said...

//எப்போதும் கூடவேயிருக்கும்
எதுவோ ஒன்று உலகத்தைத்
துண்டித்து விடாமல் என்னுடன்
இணைத்துக் கொண்டேயிருக்கிறது....//
வரிகள் அற்புதம்!

மகேந்திரன் said...

இயல்பான வார்த்தைகள் கோர்த்து
அழகிய கவிதை....

காற்றில் எந்தன் கீதம் said...

எப்படி ஒன்றும் செய்யாமல்
சும்மாயிருக்கத் தொடங்குவதென
ஒன்றும் செய்யாமல் இருக்கும்
முயற்சியில் மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டேயிருந்தேன்.//
அருமையான உண்மையான வரிகள் பூங்கொத்து உங்களுக்கு தான்...

அமைதிச்சாரல் said...

//எப்படி ஒன்றும் செய்யாமல்
சும்மாயிருக்கத் தொடங்குவதென
ஒன்றும் செய்யாமல் இருக்கும்
முயற்சியில் மீண்டும் மீண்டும்
தோற்றுக் கொண்டேயிருந்தேன்...//

அதானே.. ஒண்ணூம் செய்யாம சும்மாயிருக்கலாம்ன்னா, முடியறதில்லையே..

அற்புதமான கவிதை.. பிருந்தாவனத்தையே கொடுக்கிறேன் ;-)

K.s.s.Rajh said...

சும்மா..இருக்குறதுதான் மிகவும்ம்..கஸ்டமான விடயம்..கவிதை சூப்பர்..சகோ..

ரிஷபன் said...

யாராவது யாரையாவது கைபேசியில்
எதெதெற்கோ புதுப் புது பாடலால்
அழைத்துக்கொண்டே யிருந்தார்கள்...

எதுக்குங்க சும்மா இருக்கணும்.. அப்புறம் இப்படி ரசிக்கற மாதிரி வரிகள் வராதே..

வெங்கட் நாகராஜ் said...

ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்....

கவிதை நன்றாக வந்திருக்கிறது சகோ...

மாய உலகம் said...

கற்க கசடற வடிவேல் ஞாபகம் தான் வருகிறது... கவிதை அருமை

KParthasarathi said...

சும்மா இருப்பது என்றால் கையும் காலும் வேலை செய்யாமல் இருப்பதா அல்லது மனதை அடக்கி எதிலும் ஈடுபடாமல் இருக்க செய்வதா?முன்னதை எளிதில் செய்ய முடியும்.பின்னது லேசில் அடையக்கூடியது இல்லை. கவிதை ரூபத்தில் உங்களுடைய சிந்தனை நன்றாக உள்ளது.

இரசிகை said...

:)

ஆயிஷா அபுல் said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

தமிழ் மணம் 4

ஆயிஷா அபுல் said...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்

தமிழ் மணம் 4

ஷர்புதீன் said...

சும்மா இருப்பது என்றவுடன் , வடிவேலு நடித்த காமெடி ஒன்றுதான் ஞாபகம் வருகிறது !

:-)

புதுகைத் தென்றல் said...

சும்மானாச்சுக்கும் கூட சும்மா இருக்க முடியாது :)

கவிதை நல்லா இருக்கு

KSGOA said...

பூங்கொத்து.நாம் சும்மா இருந்தாலும் அலைபேசி இருக்க விடாது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருணா.. :) சும்மா இருப்பது என்பது என்ன அவ்வளவு ஈசியா..

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் கடினமான ஒன்ரு..சும்மா இருப்பது....ஜானி படப்பாடல் நினைவுக்கு வருகிறது...

நில் என்று சொன்னால் மனம் நின்றால் போதும்..

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றிங்கப்பா!!

சாமக்கோடங்கி said...

நல்லதொரு கவிதை... சும்மா இருப்பது என்பது தேவைஇல்லாதது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் சில சமயம் சும்மாவும் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து..

ஈரோடு கதிர் said...

அருமையான கவிதை!

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

நந்தினி மருதம் said...

கவிதையை இரசித்தேன் மிக இயல்பான மொழியில் - இயல்பான சொற்களில் -ஒரு மெல்லிய அவத்தையை- மிக இறுக்கமாகக் காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா