தன்னை நேசிக்க ஆட்களைச் சேகரிக்கும் வித்தை சிலருக்குத்தான் வாய்க்கும். அதில் துளசி மேடம் அவர்களுக்கு முதலிடம். மார்ச் முதல் வாரத்தில் ஒரு பின்னூட்டம் ஜெய்ப்பூர் வரும் ப்ளானிருக்கிறது. உங்களைச் சந்திக்க விருப்பம் என்று. அதற்கப்புறம் மடலிலும் பேசி நாள் முடிவு செய்தவுடன் தெரிவித்து அப்புறம் ஏப்ரல் 2ம் தேதி வந்திறங்கியவுடன் நலம் விசாரித்து ப்ரோக்ராம் பற்றி அறிந்து அப்புறமாய் முக்கியமான பதிவர் சந்திப்பைப் பற்றி எப்போ எங்கே என முடிவும் செய்து கொண்டோம். ஏப்ரல் மூன்றாம் தேதி காலையிலிருந்தே ஒரு பரபரப்பில் எதிர்பார்ப்பில் இருந்தோம்.யார் வர்றாங்க யார் வர்றாங்கன்னு கேட்டு அரித்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு கூகிள் பண்ணி துளசி அவர்களின் ஃபோட்டோவைக் காட்டியாச்சு!
கொஞ்சம் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்.உடனே இவங்களை அனுப்பி ம்ம்ம் ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் துளசி மேடமும் கோபால் அவர்களும்.அப்புறமென்ன?முதல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!
கொஞ்சம் வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டார்கள்.உடனே இவங்களை அனுப்பி ம்ம்ம் ஒருவழியாக வந்து சேர்ந்தார்கள் துளசி மேடமும் கோபால் அவர்களும்.அப்புறமென்ன?முதல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!
51 comments:
//தல் முதலில் பார்க்கிறோம் என்னும் உணர்வேயில்லாத சந்திப்பு! ரொம்பப் பழகியவர்கள் போல் அவர்களும் நாங்களும் குழந்தைகளும் ஒட்டிக் கொண்டோம். ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?//
இரண்டு வருடங்களுக்கு முன்பே நவராத்திரி நாட்களில் ஒரு மாலைப்பொழுதில்
எங்கள் வீட்டுக்கு
துளசி மேடம் தன் கணவர் திரு கோபால் அவர்களுடன்
வந்து ஒரு மணி நேரம் அளவளாவிட்டுச் சென்ற பின்
இதே உணர்வுகள் தான் எங்களுக்கும் ஏற்பட்டது.
துளசி மேடம் வந்தார்கள்.
துளசி மாடத்தை வைத்துவிட்டுச் சென்றார்கள்.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
//ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.//
அவங்களெல்லாம் உறவினர்கள் தான்.
:)
மேடம் + சார் இருவருமே பழக இனியவர்கள்..
இதை உறவென்றும் சொந்தமென்றும் நட்பென்றும் சொல்லிக்கொள்ள வழியிருந்தாலும் இது புதுவகையான சந்தோஷம்.நாங்கள் ஜெய்ப்பூரில் பார்த்த இடங்களின் வரலாற்றுப்புராதனங்களையும்,பிரம்மாண்டங்களையும்,விநோதங்களையும் தாண்டி உயர்ந்து நிற்பது.அருணா வீட்டிற்குவந்த பயணமும் சந்திப்பும் தான்.க்ரேட்.அருணா.
ஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரே கலகல!கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!
..... Lovely!!!! I am happy for you.
மகிழ்ச்சி; உங்க வீடு குட்டி பசங்க வரைந்த படங்கள் எல்லாம் தொங்க, ஒரு மினி கிளாஸ் ரூமா இருக்கும் போல் தெரியுதே :))
ஏதோ நானும் அங்க உட்கார்ந்துகிட்டிருக்க மாதிரி ஓர் உணர்வு...என்ன மாயமோ தெரியலை போங்க..
அருணா,
உங்களுடைய பூங்கொத்துக்கள் நிறைய வெவ்வேறு தளங்களின் பின்னூட்டத்தில் மலர்ந்திருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது முதல்முறை உங்கள் தளத்திற்கு வருகிறேன் என்று நினைக்கிறேன். இந்த பதிவிற்கு உங்களுக்கு ஒரு பூங்கொத்து!
சந்தோசம்.
வலைப்பதிவர்கள் பின்னூட்டங்களிலேயே பேசிக் கொள்வதால், திடீரென சந்தித்தால கூட, நீண்ட நாள் பழகிய உணர்வு தோன்றுகிறது. நானும் இதை அனுபவித்திருக்கிறேன்.
ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!//
சந்தோசம்.
ம் ம் கொடுத்து வைச்சவங்க! அனுபவிங்க.
:)) அப்படியே பதிவை வரிக்கு வரி வழிமொழிகிறேன் ;)
இனி நானும் ஜெய்பூரில் ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக்கலாமா சகோதரி...?
வாழ்க வளமுடன்.
வேலன்.
sury
கோவி.கண்ணன்
எண்ணங்கள் 13189034291840215795 அனைவருக்கும் நன்றி!
எங்க வீட்டுக்கும் வந்திருந்தாங்களே!!
நீங்க சொன்ன அதே உணர்வு எனக்கும் ஏற்பட்டது. டக்குன்னு பழக ஆரம்பிச்சிடறாங்க ரெண்டு பேரும்.அதனால அந்நியமாத் தெரியலை.
வாழ்த்துக்கள் மேடம், துளசி மேடத்தை விசாரித்ததாக சொல்லுங்கள்.... :-)
நல்ல பகிர்வு அருணா. மிக்க மகிழ்ச்சி.
ரொம்ப சந்தோஷமா இருந்தது அருணா..
படிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது...
http://pudugaithendral.blogspot.com/2011/04/blog-post_07.html
aruna ithu education sampanthama oru post
// ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்.... இனி நியுசீலாந்தில் எனக்கு ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக் கொள்ளலாம்!//
சத்யமான உண்மை, அருணா!
ஒரு கேஷுவல் விசிட், நவராத்திரி விசிட், எனோட வீணைப்பெட்டியைப் பார்க்க ஒரு விசிட்ன்னு மூன்று முறை எங்கள் இல்லத்துக்கு தம்பதி சமேதராக வந்து கௌரவித்ததை மறக்க முடியாது.
அவற்றை பதியாலாம் என்று எனக்குத் தோணலையே? இப்ப என்ன கெட்டுப் போச்சு?
:) ஆமா டில்லி எப்ப வரீங்க.. நாங்களும் இப்படி உணர்வோம்ல அருணா..
அவங்களப் பத்தி நிறையப் படிச்சதால, நீங்க சொன்னதும் புதுசாத் தெரியல! ;-)))
ஆமா, நீங்க டீச்சர்ங்கிறதால, ஒரு பிரின்ஸிபால் மேடம் மாதிரி கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். பாத்தா, இப்படிச் சின்னப் பொண்ணா (என்னை மாதிரி) இருக்கீங்களே அருணா? இதுதான் சர்ப்ரைஸ் எனக்கு!! :-))))))
ஆஹா..... நன்றி அருணா.
அளவுக்கு மீறிப் புகழ்ந்துட்டீங்க......கூச்சமா இருக்கு. எல்லாம் ஒரு அன்பினால் என்னும்போது மனசுக்கு நிறைவாகவும் இருக்கு.
உங்க மகள்கள் ரெண்டுபேரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவுங்க பெயர்களும் என் ஃபேவரிட் என்றது கூடுதல் மகிழ்ச்சி. குழந்தை பிறந்தவுடன் என்ன பேரு வைக்கலாமுன்னு என்னைக் கேட்டீங்களோன்னு ஒரு சம்சயம்:-)
சந்திப்பு மனசுலே அப்படியே நிக்குது அருணா.
கூடவே என்ன ஒரு அழகான நினைவுப்பரிசு!
நன்றி நன்றி நன்றியோ நன்றி.
அன்பின் அருணா
துளசியும் கோபாலும் வீட்டிற்கு வருவது - நமக்கெல்லாம் மகிழ்ச்சியினைத் தரும் நிகழ்வு. உறவோ - நட்போ - எல்லாவற்றிற்கும் மேலானதோ - தெரியவில்லை - உலகம் சுற்றும் இவர்கள் அனைத்துப் பதிவர்களையும் சந்திப்பார்கள். எங்கள் மதுரையில் இருமுறை சந்தித்திருக்கிறோம். நேரமின்மையால் இல்லத்திற்கு வரவில்லை. இங்கு மறுமொழிகளில் எத்த்னை பேர் எங்கள் வீட்டிற்கும் வந்தார்களே ! எனப் பெருமைட்யுடன் கூறுகிறார்கள். அடுத்த முறை மதுரை வரும்போது - கடத்திச் சென்றிட வேண்டியது தான். நல்வாழ்த்துகள் அருணா - நட்புடன் சீனா
sury said...
/இதே உணர்வுகள் தான் எங்களுக்கும் ஏற்பட்டது./
நன்றி sury!
கோவி.கண்ணன் said...
/அவங்களெல்லாம் உறவினர்கள் தான்./
ரொம்ப சரி கோவி.கண்ணன்
எண்ணங்கள் 13189034291840215795 said...
/மேடம் + சார் இருவருமே பழக இனியவர்கள்../
உண்மைதாங்க!
காமராஜ் said...
/.நாங்கள் ஜெய்ப்பூரில் பார்த்த இடங்களின் வரலாற்றுப்புராதனங்களையும்,பிரம்மாண்டங்களையும்,விநோதங்களையும் தாண்டி உயர்ந்து நிற்பது.அருணா வீட்டிற்குவந்த பயணமும் சந்திப்பும் தான்.க்ரேட்.அருணா./
ஆஹா! நன்றி காமராஜ்!
Chitra said...
..... Lovely!!!! I am happy for you. /
lovely words! thanx Chitra!
மோகன் குமார் said...
/ மகிழ்ச்சி; உங்க வீடு குட்டி பசங்க வரைந்த படங்கள் எல்லாம் தொங்க, ஒரு மினி கிளாஸ் ரூமா இருக்கும் போல் தெரியுதே :))/
குட்டீஸ் செய்யறதையெல்லாம் அப்பப்போ இப்பிடி மாற்றிக்கிட்டேயிருப்பேன்! அவங்களுக்கும் ஒரு எங்கரேஜ்மென்ட்டாயிருக்குமேன்னுதான்!
மனம் திறந்து... (மதி) said...
This post has been removed by the author.
அச்சோ என்னாச்சு மதி? எதுக்கு அழிச்சிட்டீங்க? எனக்கு வேற நீங்க என்ன எழுதினீங்கன்னு மறந்திருச்சு!
பாச மலர் / Paasa Malar said...
/ ஏதோ நானும் அங்க உட்கார்ந்துகிட்டிருக்க மாதிரி ஓர் உணர்வு...என்ன மாயமோ தெரியலை போங்க../
அதேதான்!
துளசி டீச்சர் வருகை பற்றிய உங்களது பகிர்வு நன்று. நாங்களும் அவர்களது அடுத்த தில்லி வருகைக்குக் காத்திருக்கிறோம் சந்திக்க! நீங்களும் தில்லி வந்தால் தெரிவியுங்கள் – முத்துலெட்சுமி சொன்னது போல – ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்… மற்ற இடுகைகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்…….
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி sugirtha
Rathnavel
ஜிஜி
இராஜராஜேஸ்வரி அனைவருக்கும் நன்றி!
திரவிய நடராஜன் said...
/ ம் ம் கொடுத்து வைச்சவங்க! அனுபவிங்க./
சென்னைலே எலோரும் அடிக்கடி பதிவர் சந்திப்பு ப்ற்றி எழுதும் போது பொறாமையா இருக்கும்! இப்போ சந்தோஷமாயிருக்கு!
நன்றி கோபிநாத்
வேலன். said...
/இனி நானும் ஜெய்பூரில் ஒரு சொந்தம் இருக்குன்னு சொல்லிக்கலாமா சகோதரி...?/
கண்டிப்பா சொல்லிக்கலாம்!
பேரிலேயே அன்பு வைத்திருக்கும் உங்களுக்கும் துளசி ,கோபால்
இருவருக்கும் நட்புப் பூ உடனே பூத்ததில் அதிசயமே இல்லை.
இருவரின் மனதிலும் அன்பு வெள்ளம் எப்பொழுதும் தயாராகத் தளும்பிக் கொண்டே ஈர்க்கும்.
அற்புதமான தம்பதிகள்.
நீங்களும் அவர்களும் சந்தித்தது எங்களுக்குத் தான் லாபம்.
அழகான படம்.நன்றி அருணா.
புதுகைத் தென்றல்
முரளிகுமார் பத்மநாபன்
ராமலக்ஷ்மி
அமைதிச்சாரல்
கே. பி. ஜனா..அனைவருக்கும் நன்றி!
புதுகைத் தென்றல் said...
/ aruna ithu education sampanthama oru post/
படித்து அறிந்து கொண்டேன் புதுகைத் தென்றல்!
நானானி said...
/அவற்றை பதியாலாம் என்று எனக்குத் தோணலையே? இப்ப என்ன கெட்டுப் போச்சு?/
அதனாலென்ன?இப்போ எழுதிருங்க!
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/ :) ஆமா டில்லி எப்ப வரீங்க.. நாங்களும் இப்படி உணர்வோம்ல அருணா../
வெங்கட் நாகராஜ் said...
/ நீங்களும் தில்லி வந்தால் தெரிவியுங்கள் – முத்துலெட்சுமி சொன்னது போல – ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிடுவோம்… மற்ற இடுகைகளையும் ஒவ்வொன்றாய் படிக்கிறேன்……./
மே மாதக் கடைசியில் டெல்லி விசிட் இருக்கு! அரை நாளோ, ஒரு நாளோ தெரியவில்லை! கண்டிப்ப வர முயற்சி செய்கிறேன்!
happy to read such kind of posts!
மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்திருக்கும்
பகிர்வுக்கு நன்றி டீச்சர்
அருணா,
வலைத்தளத்தின் மிகப்பெரிய பயணே ’நட்பூ’க்களை மலரச் செய்த(வ)து தான்.
முதன்முறையா உங்களுக்கு ஒரு பூங்கொத்து அருணா டியர்.. துளசி உங்களுக்கும்தான்.. அவ்வளவு அழகு நீங்கள் இருவரும்.அகமும் புறமும்.!!.:))
ஹுஸைனம்மா said...
/ ஆமா, நீங்க டீச்சர்ங்கிறதால, ஒரு பிரின்ஸிபால் மேடம் மாதிரி கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். பாத்தா, இப்படிச் சின்னப் பொண்ணா (என்னை மாதிரி) இருக்கீங்களே அருணா? இதுதான் சர்ப்ரைஸ் எனக்கு!! :-))))))/
ஆஹா!!!அப்பிடியா???:)))நன்றி ஹுஸைனம்மா!
துளசி கோபால் said...
/உங்க மகள்கள் ரெண்டுபேரையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. /
இது தெரிஞ்சு அதுங்க ஆடுற ஆட்டமிருக்கே!!!!
/சந்திப்பு மனசுலே அப்படியே நிக்குது அருணா./
எனக்கும்தான் மேடம்!
/கூடவே என்ன ஒரு அழகான நினைவுப்பரிசு!/
ஐயோ...:)
cheena (சீனா) said...
அன்பின் அருணா/. அடுத்த முறை மதுரை வரும்போது - கடத்திச் சென்றிட வேண்டியது தான். /
அதைச் செய்ங்க முதல்லே!!
வல்லிசிம்ஹன் said...
/நீங்களும் அவர்களும் சந்தித்தது எங்களுக்குத் தான் லாபம்./
ஐ! இது வேறயா???
thank you ஷர்புதீன் !
ஆ.ஞானசேகரன் said...
/மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்திருக்கும்/
ரொம்ப!
சத்ரியன் said...
/வலைத்தளத்தின் மிகப்பெரிய பயணே ’நட்பூ’க்களை மலரச் செய்த(வ)து தான்./
ரொம்ப சரியாச் சொன்னீங்க!
தேனம்மை லெக்ஷ்மணன் said...
/முதன்முறையா உங்களுக்கு ஒரு பூங்கொத்து அருணா டியர்.. துளசி உங்களுக்கும்தான்.. அவ்வளவு அழகு நீங்கள் இருவரும்.அகமும் புறமும்.!!.:))/
ஹையா பூங்கொத்து!!நன்றிப்பா!
//கொஞ்சம் நேரத்துக்கு யாரோ உறவினர்கள் வந்துவிட்டுப் போன உணர்வு.இது என்ன உணர்வு?எப்படி இப்படி ஒரு ஒட்டுதல்?எப்பிடி இது சாத்தியம்?என்று நிறைய கேள்விகள். ஒரு வலைப்பூவில் எழுதுவது இப்படியெல்லாம் நட்புகளையும் உறவுகளையும் ஏற்படுத்தும் என்பது ஒரு இனிமையான உணர்வைத் தந்தது.ம்ம்ம்//
மனதில் உணர்வதை எவ்வளோ அழகா எழுதறீங்க அருணா ;இரு குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!
நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(
உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!
பதிவு ,படங்கள் அருமை .,மிக்க மகிழ்ச்சி :)
வெங்கட் நாகராஜ் வந்துட்டு போனப்ப அப்படித்தான் எங்களுக்கும் இருந்தது..
நட்பின் வாசம் எங்கே போனாலும் அழகாய் வீசும்..
/நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(/
அய்யய்யோ அநேகமா எப்பவும் நான் பதில் போடுவேனே....போடலைன்னா வேலைலே மூழ்கிட்டேன்னு அர்த்தம் பிரியா மன்னிச்சுக்குங்க!
/உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!
/
அட! இது நல்லாருக்கே!!
Thulasi medathoda serndhu ungalyum photovil parthathu romba romba sandhosam :)
Ungalukku bangalore la kuda oru sondham erukku :)
இப்போதான் துளசிதளத்துல உங்கள் மகள் கைவண்ணத்தில் ஜொலித்த ஜன்னலைப் பார்த்தேன். அருமை. அழகாய் வரைந்த உங்கள் மகளுக்கு வாழ்த்துகள்.
priya.r said...
/ நீங்க பின்னூடங்களுக்கு பல சமயம் பதில் சொல்றதே இல்லைன்னு கொஞ்சம் உங்க மேல வருத்தம்:(/
அச்சச்சோ.....அப்பிடில்லாம் கோவிக்கக் கூடாது! கொஞ்சம் வேலை...கொஞ்சம் சோம்பேரித்தனமும்தான்!!! இனி உடனே பதில் போட்டுர்றேன்!
/ உங்க எழுத்தையும் முகத்தையும் பார்த்ததும் மறைந்து போய்டுச்சு அருணா!/
ஐ! இது எனக்கு ஐஸா!!!
ஹய்! எனக்கு ரெண்டு பதில் கிடைச்சுடுச்சே!!
இதுக்கு பேரு என்ன ஐஸ் கிரீம் ங்களா அருணா :) ::)
//பிரியா மன்னிச்சுக்குங்க!//
என்ன வார்த்தை சொல்லிடீங்க அருணா !
இதெல்லாம் வேண்டாம் ;அடுத்த பதிவு தான் வேண்டும் :)
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா