நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, May 2, 2011

நினைவு வந்து விடாமலிருக்க...

மீன் தொட்டியில் கொஞ்சம் 
ப்ளாஸ்டிக் இலைகளையும்
செயற்கை அருவியும்
கூழாங்கற்களையும்
போட்டு வைத்தாள்
மீனுக்கு ஆற்று நினைவு
வந்து விடாமலிருக்க...

குருவிக்கூண்டில்
குட்டிக் குட்டியாய்
ப்ளாஸ்டிக் மரம் நட்டு
கிளை, பூ, பழம் 
தொங்க விட்டாள்
குருவிக்குக் கூடு நினைவு
வந்து விடாமலிருக்க...

அம்மா செருப்பு 
மாட்டிக் கொண்டே 
"ஆயாம்மாகிட்டே சேட்டை
பண்ணாம, அழாம இருக்கணும்..
சாக்லேட் வச்சிருக்கேன்" என்றாள்
பாப்பாவுக்கு அம்மா நினைவு
வந்து விடாமலிருக்க...

25 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான வரிகள். கடைசி.. காலத்தின் கட்டாயமாகிக் கொண்டு வருகிறது. நல்ல கவிதை அருணா.

KParthasarathi said...

மனதை தொட்டது.கவலையை கொஞ்சம் மறக்க வழிகள் பல உண்டு போலும்.
வாட்டும் பசியை மறக்க கலர் தொலை காட்சி பெட்டி போல

Jawahar said...

வித்யாசமா யோசிக்கிறதிலே உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது.. பிரமாதம்

http://kgjawarlal.wordpress.com

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை செம.. கடைசி பஞ்ச்ல இன்னும் நச் எதிர்பார்த்தேன்

ஷர்புதீன் said...

பூங்கொத்து

சத்ரியன் said...

அருணா,

எங்க போனாலும் எல்லாருக்கும் ஒன்னு குடுப்பீங்களே, அதை இன்னைக்கு நான் உங்களுக்கு தரேன்.

“பூங்கொத்து!!!!!”

சுந்தர்ஜி said...

நினைவுகளை வந்து விடாமல் மறக்க வைப்பதை விடவும் ஒரு தண்டனை இருக்கமுடியுமா அருணா?

மிகக் குறைந்த வார்த்தைகளில் மனதை அசைத்த மாபெரும் அனுபவம்.

மனது வலிக்கும்போது எப்படிக் கொடுப்பதாம் பூங்கொத்து?

வேண்டுமானால் கண்ணீர்த் துளிகள்......

ராம்குமார் - அமுதன் said...

ந‌ல்ல‌ க‌விதை... இந்த‌க் க‌ணிணி யுக‌த்தின் ஒரு நித‌ர்ச‌ன‌த்தை எடுத்துரைத்த‌ க‌விதை....

middleclassmadhavi said...

அம்மா நினைவு போகுமா, சாக்லேட்டைப் பார்த்தவுடன் அம்மா வைத்தது என்று தானே ஞாபகம் வரும்?!! :-))

அமைதிச்சாரல் said...

அருமையான கவிதை..

ஈரோடு கதிர் said...

மிக அருமையான கவிதை!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
நன்றி KParthasarathi!
Jawahar said...
/ வித்யாசமா யோசிக்கிறதிலே உங்களை யாரும் அடிச்சிக்க முடியாது.. /
ஹை அப்பிடியா???அட!

அன்புடன் அருணா said...

சி.பி.செந்தில்குமார் said...
/கவிதை செம.. கடைசி பஞ்ச்ல இன்னும் நச் எதிர்பார்த்தேன்/
ம்ம் நானே எதிர்பார்த்தேன்!!
பூங்கொத்துக்கு நன்றி ஷர்புதீன்,சத்ரியன் !

priya.r said...

அதே பாப்பா வளர்ந்து பெரியவரானதும்
அம்மாவுக்கு தன நினைவு வாராமல் இருக்க
என்ன செய்ய போகிறதோ என்ற கவலையையும்
ஏற்படுத்துகிறதுங்க அருணா :(
மனதை பாதிக்க செய்யும் கவிதை !

priya.r said...

அதென்ன மாதத்திற்கு ஒரு பதிவு !
தேர்வினால் ஏற்பட்ட வேலைப்பளுவோ ?
ஒரு 250 பதிவுகள் வந்து இருக்கும்.,
வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு வந்தால்
இப்போ தான் 231 வந்து இருக்கு !என்ன காரணம்?

ரிஷபன் said...

சாதாரணமா சொல்றது மாதிரி கடைசில வச்சீங்க பாரு கும்மாங்குத்து..

குணசேகரன்... said...

நல்ல கருத்துள்ள கவிதை...
http://zenguna.blogspot.com

Srivats said...

elimaya solli puriya vaikaradha unga kittey dhaan kathukanum :)

...αηαη∂.... said...

//வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!//

இதுக்கு கண்டிப்பா பூங்கொத்து தான்..,

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...

/ “பூங்கொத்து!!!!!”/
வாங்கீட்டேன் சத்ரியன்!!நன்றி!

சுந்தர்ஜி said...
/ மனது வலிக்கும்போது எப்படிக் கொடுப்பதாம் பூங்கொத்து?
வேண்டுமானால் கண்ணீர்த் துளிகள்....../
அச்சச்சோ அவ்வ்ளோ நல்லாவா இருக்கு சுந்தர்ஜி???

அன்புடன் அருணா said...

ராம்குமார் - அமுதன்
middleclassmadhavi
அமைதிச்சாரல் நன்றிங்கப்பா!!!

அன்புடன் அருணா said...

priya.r said...
/அதென்ன மாதத்திற்கு ஒரு பதிவு !
தேர்வினால் ஏற்பட்ட வேலைப்பளுவோ ?
ஒரு 250 பதிவுகள் வந்து இருக்கும்.,
வாழ்த்துகள் சொல்லலாம்ன்னு வந்தால்
இப்போ தான் 231 வந்து இருக்கு !என்ன காரணம்?/
அதே அதே!!! வேலையோ வேலை பிரியா!!!!!

அன்புடன் அருணா said...

நன்றி ரிஷபன்!
நன்றி குணசேகரன்... !
Srivats said...
/ elimaya solli puriya vaikaradha unga kittey dhaan kathukanum :)/
வாங்க ஸ்ரீ! ரொம்ப நாளைக்கப்புறம்!!!நல்லாருக்கீங்களா???

மதுரை சரவணன் said...

மிக அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

JAWID RAIZ (ஜாவிட் ரயிஸ்) said...

உருக்கமான கவிதை. அழகிய வார்த்தை பிரயோகம். இதயத்திற்குள் சாட்டையால் அடித்தது போல் வலிக்கிறது. வாழ்த்துக்கள் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா