நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, February 5, 2011

பரீட்சைக்கு நேரமாச்சு!

எல்லா வருடமும் சொல்றதுதான்.ஆனா சொல்லாம விடவும் மனசில்ல!.ம்ம்ம் கடமையுணர்வு.......பரீட்சை நெருங்குதே...கொஞ்சம் சின்னதா செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை பற்றி சொல்லிரட்டுமா?
24 மணிநேரம் படிக்க வேண்டியதில்லை
குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டுப் படியுங்கள்.
தூங்காமலே படிப்பது அவசியமில்லை.எப்போதும் போல உடம்புக்குத் தேவையான நேரம் தூங்குங்கள்
எண்ணெய்ப் பலகாரங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
பச்சைக் காய்கறிப் பழங்கள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
படிக்கவேயில்லாத பாடங்களைப் புதிதாகப் பரீட்சைக்கு முந்தியநாள் படிக்காதீர்கள்.மனதிற்குக் கலக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கும்.
கடைசி நேரத்தில் ஏற்கெனவே படித்து திரும்பிப் பார்க்கவேண்டிய பாடங்களைப் படியுங்கள்.
கேபிள் டி.வி,இசை,சினிமா,போனில் அரட்டை இவை எல்லாவற்றையும் மறந்து அறவே துறந்து சன்னியாசியைப் போலப் படிக்கவேண்டியதில்லை.
அவ்வப்போது எப்போதும் போல் அளவுக்கு மிஞ்சி விடாமல் ஈடுபடுவது நல்லது.
படிக்கும் நேரத்தில் அருகினில் மொபைல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி நண்பர்களிடம் நீ அது படிச்சுட்டியா?இது முடிச்சுட்டியான்னு ஸ்டேடஸ் கேட்காமலிருப்பது நல்லது.அது மனப்பதற்றத்தை ஏற்படுத்தும்.
படிக்கும் போதே குறிப்பெடுத்துக் கொண்டால் திரும்பிப் படிக்கும் போது எளிதாக இருக்கும்.
சில ப்ராசஸ்களைப் படங்களாக மேப்பிங் செய்து வைத்துக் கொள்வது கூட நல்லது.
காலையோ மாலையோ உங்களுக்கு ஒத்து வரும் நேரத்தில் படியுங்கள்.
அட்டவணை போட்டுப் படித்தல் நல்லதுதான்.ஆனால் அதைக் கடைப் பிடிக்க முடியவில்லையெனில் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்கலாம்.அதையே நினைத்து படிக்கமுடியாமல் அவதிப் படவேண்டாம்.
பரீட்சைகள் வாழ்வின் முடிவன்று.
முடிவினைப் பற்றிக் கவலைப் படாமல் படியுங்கள்.
எல்லா விஷயமும் எல்லா வருடமும் சொல்வதுதான்.புதுசா எதுவும் இல்லையென்றாலும் சில விஷயங்கள் சில நேரங்களில் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.அப்படி ஒட்டிக் கொள்வதற்கான நேரமிது....பரீட்சைக்கு நேரமாச்சு!
நல்லா படியுங்க!பரீட்சை நல்லா எழுதுங்க!வாழ்த்துக்கள்!!!

16 comments:

Unknown said...

பூங்கொத்து!

எஸ்காமரஜ் said...

பூங்கொத்து.

அது சரி ஆசிரியப்பெருந்தகை,
இது பரீட்சைக்கு மட்டும்தானா
வலைக்கு பொருந்தாதா ?
இந்தப் பக்கமே தலைகாட்டாத
வலைச்சன்யாசியாகிட்டுவாரீங்க.
கொஞ்சம் வந்து போங்க ப்ளீஸ்.

நலமா அருணா மேடம்.
சாருக்கும் வைசுவுக்கும் அன்பைச்சொல்லுங்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களை மாதிரி ஆசிரியர்கள் ஒரு தெளிவோடிருந்தால் மாணவர்கள் தேர்வுகளைத் தாண்டி தங்கள் வாழ்க்கையைப் பார்க்க ஏதுவாயிருக்கும்.

ஆனாலும் அருணா!அறிவுரைகளுக்கும் பின்பற்றல்களுக்கும் உள்ள இடைவெளி அப்படியேதான் இருக்கு.

ராமலக்ஷ்மி said...

பரீட்சை நேரத்தில் மிக அவசியமான இடுகை அருணா.

Yaathoramani.blogspot.com said...

நல்ல சமூக அக்கறை உள்ள பதிவு
ஒவ்வொரு வருடமுமே
தயங்காமல் எழுதுங்கள்
பரிட்சை எழுதப் போகிறவர்கள்
எல்லோருமே புதியவர்கள்தான்
உறுதியாகப் பயன்படும் வாழ்த்துக்கள்

Chitra said...

படிக்கவேயில்லாத பாடங்களைப் புதிதாகப் பரீட்சைக்கு முந்தியநாள் படிக்காதீர்கள்.மனதிற்குக் கலக்கத்தையும் பயத்தையும் உண்டாக்கும்.


......எல்லாமே நல்ல டிப்ஸ்.... மாணவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

CS. Mohan Kumar said...

//பரீட்சை நேரத்தில் மிக அவசியமான இடுகை அருணா//

Repeattu...

Gowripriya said...

wishing your students all the best

ஹுஸைனம்மா said...

மிகைப்படுத்தலில்லாத அறிவுரைகள். நன்றி.

அன்புடன் அருணா said...

எஸ்காமரஜ் said...
/இந்தப் பக்கமே தலைகாட்டாத
வலைச்சன்யாசியாகிட்டுவாரீங்க.
கொஞ்சம் வந்து போங்க ப்ளீஸ்./
வர்றேன்! வர்றேன்! கொஞ்சம் வேலை வேலை!வேலை!
/நலமா அருணா மேடம்./
நலமே!
/சாருக்கும் வைசுவுக்கும் அன்பைச்சொல்லுங்கள்/
சொல்லிட்டேன்!.

KParthasarathi said...

நல்ல அறிவுரைகள். இதை பள்ளிக்கூட notice board ல் எழுதி வைத்தீர்களா?

ஈரோடு கதிர் said...

சிலருக்கு இதை மின்மடலில் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கச்சொல்லி அனுப்பியிருக்கிறேன்

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/ நல்ல அறிவுரைகள். இதை பள்ளிக்கூட notice board ல் எழுதி வைத்தீர்களா?/
முதலில் அங்கே ஆரம்பிச்சு இங்கே முடிப்பதுதானே வழக்கம்!

அன்புடன் அருணா said...

ஈரோடு கதிர் said...
/சிலருக்கு இதை மின்மடலில் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கச்சொல்லி அனுப்பியிருக்கிறேன்/
ஆஹா நன்றியோ நன்றி!

மதுரை சரவணன் said...

arumai.. vaalththukkal

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா