நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 5, 2011

வேறு வேறு!

                 வீடு மாற்ற வேண்டும் என்று சொன்னவுடன் மறுபடியும் மலைப்பாக இருந்தது.எதையெல்லாம் எப்படிப் பாதுகாத்துக் கொண்டு போய்ச் சேர்ப்பது என்று மனக்கணக்கு ஆரம்பித்தது.சாமான்களைக் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சேர்ப்பதா??ஒட்டு மொத்தமாக ஒரே நாளிலா?சின்ன  ட்ரக்கா???பெரிய லாரியா?ஒரு ட்ரிப்பா?ரெண்டா?மண்டை காய்ந்தது.
                                மனைவி அதைவிட மண்டையைக் குழப்பினாள்.கறுவேப்பிலைச் செடியை முதலில் காப்பாற்றவேண்டும் என்றாள்.ஸ்கூல் பக்கமா?ஆஃபீஸ் பக்கமா?பஸ் ரூட் எப்பிடி?காய்கறிக்கடை?பக்கத்துலே மளிகைக் கடை இருக்கா?இப்படி ஒவ்வொன்றுக்காக ஒருதடவையாகப் பத்து தடவை புது வீட்டைப் பார்த்து வந்தாள்.நாய்க்குட்டிக்கு  இடம் வசதிப் படுமா என்று ஒரு தடவை போய்ப் பார்த்து வந்தாள்.
சரி ஞாயிற்றுக் கிழமையன்னிக்கு மாறிடலாம்னு முடிவு செஞ்சாச்சு.
வீடு முழுக்க சாமான்கள் இறைந்து கிடந்தது.
"அய்யோ இதைக் கீழே போட்டுறாதீங்க...இது வேணும்"
"இது முதல்லெ நான் வாங்கின பூ ஜாடி..வேணும்"
அச்சோ இதை எப்பிடி மறந்தேன்?
"இந்த ரோஜாப்பூச் செடி மைசூர் போயிருக்கும் போது வாங்கியது...வேரோடு எடுத்து வைங்க"
"இந்தக் கடிகாரத்தைக் கீழே போடும்மா ஓடாது..."
"அய்யோ போட்டுடாதீங்க...அது என் சென்டிமென்ட் கடிகாரம்"
இப்பிடி ஓடி ஓடிச் சாமானைச் சேர்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.
குட்டிம்மா அவள் பங்குக்கு மயிலிறகு,செப்புச் சாமான்களையும், மிட்டாய் சுற்றிய சரிகைத் தாள்களையும்,பொம்மைகளையும் சேர்த்துக் கொண்டிருந்தாள்.
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகள் பெரியவர்கள் என ஒன்றும் வித்தியாசம் இல்லை போல.எங்களுக்குப் போட்டியாய்ச்  சேகரித்துக் கொண்டிருந்தாள் குட்டிம்மா.என் சிறிய வயது சித்திரக் கலை நோட்டையும்,படக்கதை பைண்டிங்க் புத்தகங்களையும் கூட விட மனதில்லை.நான் அதை எடுத்து வைத்துக் கொண்டால் அவள் வீடு,சூரியன் படம் வரைந்த காகிதத்தை எடுத்து வைத்தாள்.

                        கலைந்து கிடக்கும் பொருட்களில் தேடித் தேடிச்  சேகரிக்க,பழைய நினைவுகளில் மூழ்க வீடு மாற்றும் போதுதான் தோதுப் படுகிறது.இதற்கென்று தனியாக நேரமெல்லாம் ஒதுக்க முடிவதில்லை.12-ம் வகுப்பு ஃபேர்வெல் போட்டோ ஒன்று அகப்பட்டது.அதில் என்னைப் பார்த்தவுடன் எனக்கே சிரிப்பாக வந்தது.எவ்வளவு அசடாக இருந்திருக்கிறோமென்று....அந்த முன்நெற்றியில் விழும் சுருள் முடிக்காக காலையில் இருந்து கஷ்டப்பட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.கூடவே கொஞ்சம் அந்த நேரத்து உணர்வுகளும் வந்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

ஆச்சு...சாமான் எல்லாம் வண்டியில் ஏற்றியாச்சு.
என்னம்மா பக்கத்து வீட்டுலே,எதிர் வீட்டுலே எல்லாம்  சொல்லிட்டு வரலாமா? "
"ஒண்ணும் வேணாம்....ஏற்கெனவே கரிஞ்சுக்கிட்டு இருந்தா...இப்போ பெரிய வீட்டுக்குப் போறோம்னு சொன்னா இன்னும் கரிச்சுக் கொட்டுவா.....சத்தம் போடாமெக் கிளம்புங்க"
குட்டிம்மாவைக் காணோம்....
"எங்கேடி போனே?" அதட்டினாள் சாரதா.
"பாபுகிட்டே,ரகுகிட்டே,விஜிகிட்டே,ராணிகிட்டே அப்புறம் செல்வா ,புஜ்ஜிகிட்டே  சொல்லிட்டு வரப் போனேம்மா"என்றபடி குதித்து ஏறினாள் குட்டிம்மா!
பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!

26 comments:

Chitra said...

பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!


.......இரண்டே வரிகளில் ஆழமான அர்த்தங்கள்..... எதார்த்தம்!

சக்தி கல்வி மையம் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள்
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
இந்த பதிவு பலரையும் சென்றடைய ஓட்டு போடவும்....

http://sakthistudycentre.blogspot.com/

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் குழந்தைகள் நல்லவர்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சபாஷ் அருணா!

எத்தனை எளிமையாய் ஒரு வீடு மாற்றல் பின்னணியில் தொடங்கி பிரமிக்கும் வைக்கும் பிள்ளை மொழியோடு முடிந்த கதை.

நாம் போதிப்பதை நாமே பின்பற்றாத போது நம் குழந்தைகள் அதை நினைவுபடுத்துகிறார்கள்.

அணைந்த பின்னும் அறையெங்கும் வாசம் ஊதுவத்தியால்.

மனமெங்கும் வாசம் வாசித்த பின்னும் மேன்மையான வார்த்தைகளின் வாசத்தால்.

Paul said...

//பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!//

உண்மை.. :)

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு அருணா..:-)..பழசை கலெக்ட் பண்றதுலே நானும் பெரிய கலெக்டராக்கும்...lol

Anonymous said...

குழந்தைகளின் மனதில் வன்மம் குடியேறுவதேயில்லை.. :)

ராமலக்ஷ்மி said...

//என் சிறிய வயது சித்திரக் கலை நோட்டையும்,படக்கதை பைண்டிங்க் புத்தகங்களையும் கூட விட மனதில்லை.//

நானும்:)! அந்த பைண்டிங் புத்தகங்கள் மறுபடி நம்மை பால்யத்துக்கே கொண்டு செல்லுகையில் கிடைக்கிற பரவசம் இருக்கே..

அருமையான கதை. உண்மைதான்.. //பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!//தான்.

மாணவன் said...

//பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு//

குழந்தைகளாக இருக்கும் வரை எந்த பிரச்சினையுமில்லை...

யதார்த்தமான வரிகளுடன் நல்லாருக்குங்கம்மா....

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு டீச்சர்!

பூங்கொத்தை மறக்காமல் எடுத்து வச்சுட்டீங்களா? :-)

ஹேமா said...

மனம் நெகிழ்கிறது அருணா.வளர்ந்த பிறகு காலம் ஒரு மனிதனை எவ்வளவு மாற்றியெடுக்கிறது.
நிறைவான பூச்செண்டு !

தினேஷ்குமார் said...

பழமை மாற இனிமை நினைவுகள் மட்டுமே நமக்கு சொந்தம்

Philosophy Prabhakaran said...

கடைசி வரிகள் டச்சிங் :))))

அன்புடன் அருணா said...

Chitra ,sakthistudycentre.blogspot.com,
அமுதா கிருஷ்ணா,பால் [Paul]

சாந்தி மாரியப்பன் said...

பூங்கொத்து...

நிச்சயமா, குழந்தைகளுக்கும், பெரியவர்களூக்கும் இடையில் நிறையவே வித்தியாசம் இருக்குங்க..

vinu said...

neenga chinnavangalaa periyavangalaaa

pudugaithendral said...

பிள்ளைமனம் வெள்ளை குணம்

அம்பிகா said...

//பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு!//
நிஜம் தான்.
பூங்கொத்து!!

pichaikaaran said...

superb

ஆ.ஞானசேகரன் said...

//பழையவைகளை நினைவுக் கூட்டிலே சேர்த்து வைப்பதில் குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றல்ல... வேறு வேறு! //

அட ஆமாங்க

காமராஜ் said...

குழந்தை நகர்கிற வீடு.வீடு அசையாத குழந்தை.
அருமை அருணா மேடம்.புத்தாண்டுவாழ்த்துக்கள்.சாருக்கும் வைஷுவுக்கும் அன்பைச்சொல்லுங்கள்.

சிவகுமாரன் said...

ஒரு வருடத்தில் மூன்று முறை வீடு மாற்றிவிட்டேன். சிவகங்கையில் இருமுறை. மதுரைக்கு ஒருமுறை. வீட்டுக்காரர்களுக்கு குடியிருப்பவர்கள் என்னவோ இலங்கை அகதிகள் என்ற நினைப்பு.
நல்ல பகிரிவுக்கு நன்றி

அன்புடன் நான் said...

கடைசி ரெண்டு வரிகளில் தெரிகிறது... வேறு வேறு.
பாராட்டுக்கள்.

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை said...
/..பழசை கலெக்ட் பண்றதுலே நானும் பெரிய கலெக்டராக்கும்...lol/
நான் உலகமகா கலக்டர் முல்லை!
Balaji saravana said...
/குழந்தைகளின் மனதில் வன்மம் குடியேறுவதேயில்லை.. :)/
உண்மைதான் பாலாஜி!
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி மாணவன்
பா.ராஜாராம்
/ பூங்கொத்தை மறக்காமல் எடுத்து வச்சுட்டீங்களா? :-)/
ஓ பூங்கொத்து வாங்கியாச்சு!
ஹேமா said...
நிறைவான பூச்செண்டு !
பூச்செண்டுக்கு நன்றி ஹேமா!

அன்புடன் அருணா said...

dineshkumar
தமிழ் உலகம்
Philosophy Prabhakaran அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல்
vinu
புதுகைத் தென்றல்
அம்பிகா அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா