நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, November 18, 2010

வழக்கத்திற்கு மாறாக.....

வழக்கத்திற்கு மாறாக அன்று
கடல் வேறு வேலையில்லாமல்
என் காலடியில் சிப்பிகளை இழுத்து
வந்து கொட்டிக் கொண்டிருந்தது......

கடலுக்குள் இது உனது
இது எனது என்று பாகம்
பிரித்துக் கொண்ட கதை போல
சிப்பிகளைக் கடலும் நானும்
பங்கிட்டுக் கொண்டோம்.....

என் பங்குச் சிப்பிகளை
யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக


வழக்கத்திற்கு மாறாக அன்று
மௌனமாக கடல் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்தது.......

29 comments:

Philosophy Prabhakaran said...

கவிதை அருமை.... இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை போல...

Philosophy Prabhakaran said...

ஓகோ... சுடச்சுட காலை காபி எனக்கே எனக்கா...

Philosophy Prabhakaran said...

நேரம் காலம் பார்த்து இணைப்பீங்கன்னு நினைக்கிறேன்... பட் சாரி எனக்கு நேரம் ஆயிடுச்சு... நான் கிளம்புறேன்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அற்புதம் அருணா.

//கடலுக்குள் இது உனது
இது எனது என்று பாகம்
பிரித்துக் கொண்ட கதை போல
சிப்பிகளைக் கடலும் நானும்
பங்கிட்டுக் கொண்டோம்.....//

மனிதனின் கசடும் உவமையானதோ?

//யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக//

ரகசியமாக ஒன்றிரண்டு என் காலடியிலும் விழுந்தது இந்தக் கவிதையாக.

ஆ.ஞானசேகரன் said...

//யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக//

அருமைங்க அருணா....

Anonymous said...

மிக அருமை :)

ராமலக்ஷ்மி said...

//யாரும் பார்க்காத போது
வானத்தில் எறிந்துவிட்டேன்.....
வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக//

ஆகாகா.

அருமையான கவிதைக்கு நன்றி அருணா.

சந்தனமுல்லை said...

wow!!! azagu! rasithen.

சாந்தி மாரியப்பன் said...

//வானம் அமைதியாக எடுத்துத்
திருப்பிக் கொடுத்தது விண்மீனாக//

அற்புதமான கற்பனையழகு அருணா மேடம்.
பிடியுங்க பூங்கொத்தை :-))

KParthasarathi said...

வளமான கற்பனை ,அருணா.மனம் நெகிழ்ந்து விட்டது.

எஸ்.கே said...

ரொம்ப நல்லா இருக்குங்க!

பத்மா said...

கடலையும் சிப்பியையும் காணும் போது இனி இந்தக் கவிதையும் தோணும் ..
very nice

அன்புடன் அருணா said...

philosophy prabhakaran said...
/ கவிதை அருமை.... இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை போல.../
காலைலே இதுக்கெல்லாம் எங்கே நேரம்...எழுதி Automatic publish set பண்ணி வச்சுட்டேன்!
/ஓகோ... சுடச்சுட காலை காபி எனக்கே எனக்கா.../
ஆமாமா உங்களுக்கேதான்!
/ நேரம் காலம் பார்த்து இணைப்பீங்கன்னு நினைக்கிறேன்... பட் சாரி எனக்கு நேரம் ஆயிடுச்சு... நான் கிளம்புறேன்.../
ரைட்டு!

Unknown said...

வந்து வந்து கரை தொடும் கடலை
உடைந்த சிப்பியென வேடிக்கை பார்க்குது
பிறைநிலா இந்தக் கவிதையிலும்..

ஹேமா said...

கடலும் நீங்களும் சிப்பியும் விண்மீன்களும் அழகோ அழகு.பூங்கொத்துத்தான் அருணா !

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

பூங்கொத்து அருணா !

Priya said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு!

skamaraj said...

ரொம்ப அருமை அருணா மேடம்.

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தர்ஜி
நன்றி ஆ.ஞானசேகரன்

அன்புடன் அருணா said...

Balaji saravana
ராமலக்ஷ்மி
சந்தனமுல்லை
அமைதிச்சாரல் அனைவருக்கும் நன்றி!

Anisha Yunus said...

//கடலுக்குள் இது உனது
இது எனது என்று பாகம்
பிரித்துக் கொண்ட கதை போல
சிப்பிகளைக் கடலும் நானும்
பங்கிட்டுக் கொண்டோம்.....//

அருமையான கற்பனை. அருகில் கடல் இருந்தால் இந்த குளிரிலும் சென்ரு ரசித்து விட்டு வரலாம்... ஹ்ம்ம்..

VELU.G said...

நல்ல கற்பனை

மிக அருமை

காமராஜ் said...

ரொம்ப அருமையான அலைகள்.

அன்புடன் அருணா said...

KParthasarathi
எஸ்.கே
பத்மா
ஹேமா
ஜெஸ்வந்தி - Jeswanthy
Priya .நன்றி அனைவருக்கும்!

Mugilan said...

அருமை

பிச்சைக்காரன் said...

மிக அருமை

Karthik said...

Beautiful. :)

Kousalya Raj said...

good one...

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா